வேதத்திலே தீர்கதரிசனங்கள் ஒன்றும் சுயதோற்றம் உடையதாய் இராமல் தேவனுடைய ஊழியகார்கள் தேவ ஆவியினால் ஏவப்பட்டு தீர்கதரிசனங்கள் சொன்னார்கள் என்று குரிபிடபட்டுள்ளதே.
நான் ஒரு விடுதலை நற்செய்தி கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அந்த கூட்டத்தின் இறுதியில் ஒரு ஊழியக்காரர் ஜெபிக்கும்போது அநேகருடைய பெயரை சொல்லி அனேக காரியங்களை சொன்னார். அனேக தரிசனங்களையும் சொன்னார்.
எனக்கு அவரிடத்தில் ஒரு கேள்விகேக்க வேண்டும் என்று இருந்தது ஒருவேளை நான் நான் கேட்பதை அவர் தவறாக புரிந்துகொண்டால் நான் பரியாசம் செய்கிறவனாய் தோன்றுமோ என்று எண்ணி கேட்கவில்லை எனக்கு ஏற்பட்ட இந்த சந்தேகத்தை இங்கே பதிவிட்டால் அதற்கான பதிலை தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறன்.
தல சகோதர்கள் தங்களுக்கு தெரிந்த விளக்கத்தை வசன ஆதாரத்துடன் தந்தால் என்னை போன்ற அநேகருக்கு பயன்படும் என்று நினைக்கிறன்.
என்னுடைய சந்தேகம்
பெயர் சொல்லி அழைகிரார்களே..! இந்த பெயர் எப்படி அவர்களுக்கு தெரியும் ..? அது அவர்களுக்கு முன்பாக எழுதபட்டு இருக்குமோ ..! அல்லது தங்களை அறியாமலே தங்கள் நாவில் இருந்து வருமா...? அல்லது தேவன் அவர்களுக்கு சொல்லுவாரோ...?
நான் இப்போது இதை காண்கிறேன். என்று சொல்லுகிற காரியங்கள் சில உண்மையாகவும் இருக்கிறது சிலது பொய்யாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதை எப்படி இனம்கண்டுகொள்வது.
முக்கிய குறிப்பு :
நான் எந்த நோக்கதுடன் இதை பதிவிடுகிறேன் என்பதை கர்த்தர் அறிவர் (இருதயங்களை ஆராய்கிறவர்) பரியாசம் செய்வதற்காக இல்லை ..! குற்றம் சொல்ல்வதர்காகவும் இல்லை,..! எனக்கு நீண்ட நாட்களாக இதை பற்றி அறிந்து கொள்ள ஆவல் யாரிடதிலாகிலும் கேட்டால் நம்மை தவறாக புரிந்து கொள்வார்களோ என்று எண்ணி அமைதியாக இருந்து விட்டேன்.
ஆனால் இத்தளத்தில் பதிவிடும் சகோதர்கள் அனேக காரியங்களை மிக தெளிவாக அன்போடு சொல்லுகிரபடியல் நான் இங்கு ஏன் சந்தேகத்தை முன் வைக்கிறேன்.
பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
அன்பு சகோதரர் ஸ்டீபன் அவர்களுக்கு கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துக்கள்!
தீர்க்கதரிசனம் சொல்லுதல்பற்றிய அனுபவம் எனக்கு இல்லாத காரணத்தால், தெரியாத காரியங்களை பற்றி துணிந்து கருத்து சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. தரிசனம் எவ்வாறு வருகிறது மற்றும் அந்நேரத்தில் சொல்பவர்களின் நிலை என்னவென்பது எல்லாம் அனுபவப்பட்டவர்கள் மட்டுமே சொல்லமுடியும்.
எல்லோருக்கும் மிகுந்த சாந்தத்துடன் உத்தரவு சொல்லும் நமது அருமை சகோதரர் தளத்தில் அதற்க்கான பதில் இருக்கிறது வாசித்து வாருங்கள். அதற்க்கான தொடுப்பு இதோ.
அதுஒரு விசேஷித்த வரமாக இருப்பதால் ஒருசிலருக்குத்தான் அதுவும் மிகமிக முக்கியமானவர்களுக்குதான்(?) கிடைக்கும் என்று கருதுகிறேன்.
தீர்க்கதரிசனம் எவரும் கூறிவிடலாம் (ஏனெனில் அதற்க்கு நேர்மையாக நடத்தல் சாந்தமாக இருத்தல் தேவ வார்த்தைகள்படி வாழ்தல் போன்ற எந்த சிரமமும் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை) ஆனால் ஒருவர் சொல்வது கர்த்தரின் வார்த்தையா அல்லது கள்ள தீர்க்கதரிசனமா என்பதை நிதானிப்பது மிக மிக கடினம்.
என்று வேதம் எச்சரிப்பதால் தனிநபர் குறித்த தீர்க்கதரிசன விஷயத்தில் அதிகம் அக்கறை காட்டுவது நல்லதல்ல என்றே கருதுகிறேன். ஏனெனில் ஒரு குறிசொல்பவன் உங்களின் ஆதியோடு அந்த காரியங்களை சொல்லிவிட முடியும்
ஆகினும்
நீதிமொழிகள் 29:18தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்
என்று வசனம் சொல்வதால். தீர்க்கதரிசனம் என்பது மிகவும் முக்கியமானது என்பது எனது கருத்து நான் மதிக்கிறேன். எனக்கு இவ்விஷயத்தில் அனுபவ அறிவு இல்லை என்றாலும் வேத வசனங்களின் அடிப்படையிலான உண்மைகளை கர்த்தருக்கு சித்தமானால் விரைவில் பதிவிட முயல்கிறேன்.
-- Edited by SUNDAR on Wednesday 29th of September 2010 10:22:00 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)