இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உண்மையாய் வாழமுடியுமா...!


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
உண்மையாய் வாழமுடியுமா...!
Permalink  
 


இந்த பொல்லாத பிரபஞ்சத்தில் ஒருமணுசனால் உண்மையாய் வாழ முடியுமா.........?
 
வேதம் சொல்கிறது. உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசிர்வாதங்களை பெறுவான் என்று...!
 
ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒருமணுசனால் இது சாத்தியமா..! அப்படி சாத்தியமென்றால் இந்த உலகத்தில் அன்றாட தேவைகளை கூட சரிவர நிறைவேற்ற முடியாமல் வாழவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுகிறான்.

இப்படி இந்த உலகத்தில உள்ள எந்த காரியங்களையும் சரிவர அனுபவிக்காமல் பரலோகம் போனால் போதும் என்றும் அங்கே நமக்கு எல்லாமே கிடைக்கும் என்று என்ன்னுவதினால் அவனுக்கு இந்த உலகத்தில் பிறந்ததினால் லாபம் என்ன.  ?
 
எல்லாருமே பவுலை போல எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு அனால் எல்லாம் தகுதியை இராது என்று எல்லாருமே எல்லாவற்றையும் இழந்தும் , லாபமான அனைத்தையும் நஷ்டமென்று கருதமுடியுமோ...!
 
ஒருமனுஷன் உண்மையாய் இருந்தால் அவனை யாருமே கண்டுகொள்வதில்லை அவனை ஏமாற்றத்தான் நினைகிறார்களே தவிர அவர்கள் உண்மையாய் இல்லாதபடியால் அற்பமாய் எண்ணுகிறார்களே.
 
ஒரு தகப்பன் பெரிய பணக்காரனாய் இருந்தால் தன் பிள்ளைக்கு வேண்டிய எல்ல காரியங்களையும் நிச்சயமாய் தருவாரே.... ஆனால் இன்றைய ஆவிக்குரிய வாழ்கையின் நிலைமை என்ன மிகவம் சாதரணமாக ஒரு அலுவலகத்தில் இருந்து இன்னொரு அலுவலகத்திற்கு செல்லும் போது உண்மையாய் சொல்ல முடியவில்லை காரணம் உண்மையை சொன்னால் குறைவான சம்பளமே கிடைக்கும் இதற்காகவே அநேகர் கொஞ்சம் கூடி சொல்லவேண்டியுள்ளது.  எல்லாராலும் குறைந்த சம்பளத்தில் உண்மையாக வாழ முடியுமா..! 

ஒருவேளை நான் சந்திக்கும் ஒருவர் உண்மையுள்ளவரை இருந்தால் நான் உண்மையாய் இருக்க முடியும் ஆனால் இந்த உலகமே ஒருவரை ஒருவர் எப்படி ஏமாற்றலாம் என்று காத்து கொண்டிருக்கும் போது எப்படி ஒருமணுசனால் உண்மையாய் வாழ்வது ..!
 
நான் இங்கு சொல்லவருவது என்னவெனில்  என்னையும் சேர்த்து அநேகர் அனேக காரியங்களில் உலகத்தோடு ஒத்து போகவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர் எனவே எப்படி இந்த வசனத்தை நிறைவேற்றுவது. 
 
உண்மையுள்ள மனுஷனுக்கு பரிபூரண...... ஆசீர்வாதம் இந்த உலகதிலேயா....! அல்லது பரலோகதிலையா..... !


-- Edited by Stephen on Monday 27th of September 2010 10:43:31 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Bro. Stephen wrote
////இந்த பொல்லாத பிரபஞ்சத்தில் ஒருமணுசனால் உண்மையாய் வாழ முடியுமா.........?////
 
சகோதரரே இந்த கேள்வி மிக முக்கியமான ஒரு கேள்வி!
 
தேவனாகிய கர்த்தர் நோவாவை பற்றி சொல்லும்போது 
 
ஆதியாகமம் 6:9  நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்;  
 
என்றும், ஆபிரஹாமை பார்த்து  
 
ஆதியாகமம் 17:1 , கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
 
என்று சொன்ன வார்த்தைகளையும் இன்று பலருக்கு தேவன் சொன்னதாக நான் கேட்ட வார்த்தைகளை வைத்து பார்க்கும்போதும், தேவன் உத்தமத்தை ஒவ்வொரு மனிதனிடமும் எதிர்பார்க்கிறார் என்பதை அறியமுடியும்.  
 
செய்யமுடியாத எதையும் தேவன் செய்யசொல்லி நம்மை கட்டாயப்படுத்தவில்லை பெரிய பாரத்தை நம்மேல் சுமத்தி அதை சுமக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்க வில்லை! 
 
உபாகமம் 30:14 நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.

இந்நிலையில்  ஒரு மனிதன் உத்தமமாக நடக்க முடியுமா?  என்று கேட்டால்:
 
ஆம்! இருதய  நிலையில்  மிக உறுதியாக இருந்து முயன்றால்   நிச்சயமாக முடியும்!   என்பதே எனது பதில்!   
 
உத்தமமாக நடக்கவேண்டும் என்று  நமது இருதயத்தில் தாகம் வரவேண்டும். உடனே முடியாதுதான்!  கஷ்டமான காரியம்தான்! ஆனால் கஷ்டம் என்று கருதி நிர்விசாரமாக விட்டுவிட கூடாது. தவறும்போது மிகுந்த மனஸ்தாபத்தோடு மன்னிப்பு கோரி மீண்டும் அந்த தவறை செய்யாதபடிக்கு உறுதியான மனம் திரும்புதல் வேண்டும்.
 
உத்தமத்தில் இருந்து விலகவேண்டிய நிர்பந்தமான நிலை வரும்போல இருந்தால் முன்கூட்டியே "ஆண்டவரே இன்று நான் இந்த காரியத்தை செய்யும் நிலையில் நிர்பந்திக்கப்படுகிறேன் எனக்கு துணை நிற்று இதுபோன்ற காரியங்களை  செய்து விடாதபடிக்கு என்னை பாதுகாத்தருளும்" என்று  தேவனின் கரத்தில் அந்த பொறுப்பை ஒப்புகொடுக்கலாம். தேவன் நிச்சயம் அந்த சூழ்நிலையில் இருந்து நம்மை தற்காக்க வல்லவர்.
 
நீதிமொழிகள் 2:7  உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.

ஆனால் மீறுதல் நடைபெறும் முன்னரே அதுபோல் ஒரு சூழ்நிலை வரும்போதே தேவனை நாம் துணைக்கு அழைத்துவிட  வேண்டும். மீறுதல் செய்துவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்டாலும் தண்டணையோடுதான்  மன்னிப்பு கிடைக்கும்.   
 
பணம் உலகப்பொருள் மாம்ச இச்ச்சை இவைகளால் ஆட்கொள்ளப்பட்டு அதக்காக நமது தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினாலும் பயன்இருக்காது இந்நேரங்களில் உத்தமத்தில் தவறுவோமானால் அதற்க்கு தேவன் பொறுப்பாக முடியாது. மேலும் உத்தமமாக நடந்து நமக்கு அதிகம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படவும் கூடாது.
 
ஆனால் இந்த உலகத்தில் வாழும் காலம் வரை நமக்கு தேவனான அடிப்படை தேவைகளாகிய உண்ண உணவு / உடுக்க உடை / இருப்பிடம் /தண்ணீர் போன்றவைகள் மட்டும் கிடைத்தல் போதும் என்ற நிலையிலேயே வாழ வேண்டும். அதற்க்கு கர்த்தராகிய தேவன் நமக்கு உத்திரவாதம் தருகிறார்    
 
ஏசாயா 33:15 நீதியாய் நடந்து, ......பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ, 16. அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.

நாம் உண்மையான ஒரு தகவலை கொடுப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் ஒரு பணஉதவி கிடைக்காமல் போகுமானால் துணிந்து விட்டுவிட வேண்டும். அதைவிட அதிகமாக கர்த்தரால் நமக்கு தரமுடியும் என்பதை விசுவாசிக்க வேண்டும். அப்படியே தராவிட்டாலும் நான் இதுபோல் உத்தமத்தைவிட்டு விலக மாட்டேன் என்று உறுதியான முடிவு எடுக்கவேண்டும்.   
 
தவம் செய்யும் முனிவர்களை சுற்றி ஒரு ஒளிவட்டம் உண்டாகி தீமைகள் வர்களை நெருங்கமுடியாமல் பாதுகாப்பது போல உத்தமமாக நடப்பவர்களை சுற்றி தேவனின் பாதுகாவல் நிச்சயம் உண்டு! உத்தமமாய் நடப்பவர்களை சுற்றிதான் கர்த்தரின் கண்ணும் இருக்கும் சாத்தானின் கண்ணும் இருக்கும் மற்றெல்லோருமே  வீண்!  
 
II நாளாகமம் 16:9 தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது
 
எனவே நாம் உத்தமமாக நடந்தால் கீழே தள்ளப்பட்டு விடுவோமோ என்று பயம் கொள்ளவேண்டிய தேவை இல்லை. அப்படியே கீழே தள்ளப்பட்டு போனாலும் அதுவும்கூட  ஒரு நன்மைக்க்காகதான் இருக்கும்.
 
அன்பு சகோதரர்களே இந்த உலகம் உங்களை எப்படியாவது ஏதாவது ஒரு விதத்தில் உத்தமத்தில் இருந்து விலக வைக்க முயன்று கொண்டேதான்  இருக்கும் அது நமதுவீட்டார் மூலமாக  இருக்கலாம் அயல்வீட்டார் மூலமாகவும் இருக்கலாம் அலுவலகம் மூலமாகவும் இருக்கலாம் அல்லது அரசாங்கம் மூலமாகக்கூட இருக்கலாம்  ஆகினும் உங்கள் உத்தமத்தில்  உறுதியாக நில்லுங்கள் கர்த்தர் உடனிருந்து நம்மை பாதுகாப்பார்!
 
II நாளாகமம் 19:11  ; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை
 
ஆயிரம் எழுதலாம், அளவற்று பேசலாம், ஊர் முழுக்க உபதேசம் செய்யலாம்  அதனால் பெரிய பயனேதும் இல்லை! உத்தமமும் உண்மையும் மட்டுமே சாத்தானிடமிருந்து  நம்மை நம்மை தற்காக்கும் கேடகங்கள்!   

 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard