இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாபர் மசூதி இடிப்பும் ஆவிக்குரிய விளக்கங்களும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
பாபர் மசூதி இடிப்பும் ஆவிக்குரிய விளக்கங்களும்!
Permalink  
 


1992 ம வருடம் டிசம்பர் மாதம் 6 ம தேதி பாபர் மசூதி இடிப்பும் தினமாகும். அந்த நாள்தான் எனது வாழ்விலும் மறக்க முடியாத ஒரு மேன்மையான நாள். ஆம்! இறைவனின் ஆவியின் மொத்த வல்லமையாலும் நான் நிரப்பபட்ட நாள்.  எனது ஆவிக்குரிய வாழ்வின் வயதும் சுமார் 18 வருடங்கள். அன்று நடந்த அந்த சம்பவத்துக்கும் இன்று தீர்ப்பு வர இருக்கிறது.   
 
எத்தனையோ நூற்றாண்டுகளாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்தும் எந்த இந்துவாலும் இடிக்கமுடியாமல் இருந்த அந்த மசூதி அன்றைய தினம் இந்துக்களால் இடிக்கப்பட்டதற்கு ஒரு மிகப்பெரிய ஆவிக்குரிய காரணம் உண்டு.
 
நமது இந்தியா என்பது ஒரு சாதாரண நாடும் அல்ல, நமது ஆதி மதமாகிய இந்து மதம் ஒரு சாதாரண மதமும் அல்ல! நீதிக்கும் நேர்மைக்கும் கற்ப்புக்கும் பண்பாட்டுக்கும்  பாடம் சொல்லும் அனேக உயர்ந்த மனிதர்களை கண்டது நமது பாரத நாடு!  
 
உலகில் இருக்கும்  மதங்களுக்கும் மார்க்கங்களுக்கும் பிரிவினைகளுக்கும் ஒவ்வொரு வல்லமை மிக்க ஆவியே காரணமாக இருக்கிறது. அதுபோல் முப்பெரும் மதங்களாகிய   இந்து இஸ்லாம் கிறிஸ்த்தவம் ஆகியவற்றையும் மூன்று யுகங்களின் முக்கிய ஆவிகள் வழி நடத்துகின்றன. மிக பழமையானதும் செல்வம் செழிப்போடும் இருந்த இந்து மதமானது அசுத்த ஆவிகளின் பிடியால் ஆட்கொள்ளப்பட்டு  அதில் உள்ள  தேவர்களின் வரையறையற்ற பாவங்களால் இறை பாதுகாப்பை இழந்து இஸ்லாம் ஆவிக்கு அடிமையானது. 
 
அதை தொடர்ந்து இஸ்லாத்தியர் வல்லமைக்கு  முன்னால் இந்து மதம் நிற்க முடியாமல் போய் இமயமலை லிங்கசாமியின் பாதுகாவலை உடைத்து உள்ளே நுழைந்த முகம்மதியர் இந்தியர்களை   கடுமையாக சுரண்டியதோடு இந்தியாவை பல நூற்றாண்டு  காலம் அடிமைபடுத்தி வைத்திருந்தனர். 

அதன் பின்னர் கிறிஸ்த்துவின்  உயிர்தெழுந்த வல்லமையுடைய  ஆவியின் பலத்துடன் உள்ளே நுழைந்த கிறிஸ்த்தவர்களுக்கு முன்னால் இஸ்லாம் ஆவியால் நிற்கமுடியாத காரணத்தால் 
இஸ்லாத்தை மேற்கொண்டு கிறிஸ்த்தவம் இந்தியாமை அடிமை கொண்டது.

அதன்பின்னர் கிறிஸ்த்தவத்தின் தனது நடைமுறை வாழ்வில் நிறைவேற்றி காட்டிய மகாத்மாவின்
வேறுபட்ட விசேஷித்த  ஆவியின் முன்னால் நிற்கமுடியாத ஆங்கிலேயர் இந்தியாவுக்கு சுதந்திரத்தை கொடுத்துவிட்டு கடந்து சென்றனர்.
 
இவ்வாறு இந்துவை அடிமைபடுத்திய இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவம் இந்தியாவை விட்டு கடந்து சென்றாலும் அவர்களோடு வந்த ஆவிகள் இந்தியாவை விட்டு செல்லவில்லை காரணம் அவைகளின் முக்கிய நோக்கமே இந்தியாவும் இந்துக்களும்தான்.  
 
எனவே இந்தியா கீழ்கண்ட நிலையில் இருந்தது
 
இந்துக்கள் (+ அசுத்த ஆவிகள்)  > இஸ்லாமியர் (+ விழுந்துபோன தூதன்) > கிறிஸ்த்தவர்(அசுத்த ஆவிகள்+விழுந்துபோன தூதன்)  
 
இதில் இந்துக்களோடு கூடிய அசுத்தாவிகளின் வல்லமையை இஸ்லாமியரோடு கூடிய விழுந்துபோன தூதன் அமுக்க இஸ்லாமியரின் வல்லமையை கிறிஸ்தவர்கள் அமுக்க ஒன்றன்மேல் ஒன்றாக அனேக நூன்றண்டுகள் இந்தியா போராடி கடந்து வந்தது.
 
1996 டிசம்பர் 6 ம தேதி இந்துக்களில் பிறந்த ஒருவர் பரிசுத்த ஆவியின் துணையுடன் இஸ்லாத்தின் ஆவியுடன் நடந்த மிகப்பெரிய ஆவிக்குரிய யுத்தத்தில் மிகுந்த தாழ்மையின் மூலம்  தன்னை அமுக்கியிருக்கும் இஸ்லாத்தின் ஆவியை மேற்கொள்ளவே, இந்துமதம் இஸ்லாத்தின் பிடியில் இருந்து விடுதலை ஆனது. அதை தொடர்ந்து இந்துக்களுடன் சேர்ந்திருக்கும்  அசுத்த ஆவியால் இஸ்லாத்தியரின் அந்த மசூதி இடிக்கப்ட்டு மிகப்பெரிய கலவரம் மூண்டது.

இன்றுவரை அந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்டமுடியாமல் போனதற்கு காரணம் தற்ச்சமயம் இந்துமத வல்லமை விடுதலை பெற்று, அசுத்த ஆவிகளுடன் கூடி 
கிரிஸ்த்தவத்தையும்  கூட துன்புறுத்தி வருகிறது  அந்த மிகப்பெரிய வல்லமையை
முறியடிப்பது கடினம்!
 
இந்நிலையை  மாற்றி  அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவர  ஒரு இந்துவாலேயே முடியும்!
 
அந்த இந்து, இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவ மன்னிப்பை பெற்று, தேவ ஆவியின் வல்லமையால் அபிஷேகித்து நடத்தப்பட்டு,  இந்துஆவியை பிடித்து வைத்திருக்கும் அசுத்த சக்திகளை மேற்கொண்டு ஜெயம்கொள்ள வேண்டும்  அதன் பின்னரே கிறிஸ்த்துவின் வருகை   உலக முடிவு மற்றும் நித்திய நியாயதீர்ப்பு நடைபெறும்!
 
சகரியா 4:6   பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

(இவை எல்லாம் ஒரு அடையாளமாகவே நான் எழுதியிருக்கிறேன். ஞானம் உள்ளவர்கள்
இதை சிந்திக்க கடவர்கள்)     
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: பாபர் மசூதி இடிப்பும் ஆவிக்குரிய விளக்கங்களும்!
Permalink  
 


வேதபுத்தகத்தில் "பொய்யின்  ஆவி" வேசித்தன ஆவி" "பொல்லாத ஆவி" "அந்தகார ஆவி"  "ஆவிகளின் சேனை"  "கள்ளதீர்க்கதரிசன ஆவி" போன்ற அனேக ஆவிகளை பற்றிய குறிப்பு இருக்கிறது. அதுபோல் "கிரேக்குதேசத்து அதிபதி " "பெர்சிய அதிபதி" என்றும் ஆவிகளை பற்றிய குறிப்பு இருக்கிறது! அதேபோல் இன்றும் உலகை பல்வேறு விதமான ஆவிகள்தான்  அரசாண்டு வருகின்றன. அவைகள் எல்கைவாரியாக தேசத்தை துண்டுபோட்டு வைத்துள்ளன. நமது கண்கள் மற்றும் இருதயம் செவிகள் திறக்கப்பட்டால் அவைகளின் செயல்பாடுகள் மற்றும் எல்கை இவற்றை நம்மால் அறிந்துகொள்ள முடியும். அவற்றை கட்டி ஜெபித்தால் அனேக காரியங்களை மேற்கொள்ள முடியும்!      
 
யாருக்குள் எவ்வித ஆவி கிரியை செய்கிறது என்பதை ஓரளவுக்கு என்னால் அறியமுடியும் எனவே  அந்த ஆவிகளை காட்டி ஜெபிப்பதே தீமைகளை மேற்கொள்ள  சரியான வழியேஅன்றி யாரையும் குறைகூறி எந்த பலனும் இல்லை! 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

/////////////////
1996 டிசம்பர் 6 ம தேதி இந்துக்களில் பிறந்த ஒருவர் பரிசுத்த ஆவியின் துணையுடன் இஸ்லாத்தின் ஆவியுடன் நடந்த மிகப்பெரிய ஆவிக்குரிய யுத்தத்தில் மிகுந்த தாழ்மையின் மூலம்  தன்னை அமுக்கியிருக்கும் இஸ்லாத்தின் ஆவியை மேற்கொள்ளவே, இந்துமதம் இஸ்லாத்தின் பிடியில் இருந்து விடுதலை ஆனது /////////////////
 
இந்த சிறு வயதில் எப்படி இந்த நபர் ஆவிக்குரிய இந்த யுத்தத்தில் வென்றார்
இதை தெளிவாக எழுதவேண்டும் என்று தங்களை கேட்டு கொள்கின்றேன்


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

/////////////////
1996 டிசம்பர் 6 ம தேதி இந்துக்களில் பிறந்த ஒருவர் பரிசுத்த ஆவியின் துணையுடன் இஸ்லாத்தின் ஆவியுடன் நடந்த மிகப்பெரிய ஆவிக்குரிய யுத்தத்தில் மிகுந்த தாழ்மையின் மூலம்  தன்னை அமுக்கியிருக்கும் இஸ்லாத்தின் ஆவியை மேற்கொள்ளவே, இந்துமதம் இஸ்லாத்தின் பிடியில் இருந்து விடுதலை ஆனது /////////////////
 
இந்த சிறு வயதில் எப்படி இந்த நபர் ஆவிக்குரிய இந்த யுத்தத்தில் வென்றார்
இதை தெளிவாக எழுதவேண்டும் என்று தங்களை கேட்டு கொள்கின்றேன்


சகோதரரே அந்த வரியில் ஒரு கமா மிஸ்ஆவதால் சற்று மாறுபட்ட பொருள் வருவதுபோல் தெரிகிறது 
 
1996 டிசம்பர் 6 ம தேதி,  இந்துக்களின் வழி வந்த ஒருவர் பரிசுத்த ஆவியின் துணையுடன் இஸ்லாத்தின் ஆவியுடன் நடந்த மிகப்பெரிய ஆவிக்குரிய யுத்தத்தில் மிகுந்த தாழ்மையின் மூலம் தன்னை அமுக்கியிருக்கும் இஸ்லாத்தின் ஆவியை மேற்கொள்ளவே,  
 
(சற்று மாற்றியிருக்கிறேன்  திருத்தி வாசிக்கவும், பிழைக்கு வருந்துகிறேன்)   
 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
பாபர் மசூதி இடிப்பும் ஆவிக்குரிய விளக்கங்களும்!
Permalink  
 


தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் இந்த திரி சம்பந்தமாக  நடந்த உரையாடல்
 
Bro.rajkumar_s Wrote 
அன்பு சகோதரர் என்ன சொல்ல வருகிறார்? ஒரு இந்து கிறிஸ்தவனாக மாறிவிட்டால் அயோத்தியில் மசூதியைக் கட்டிவிடலாம் என்றா?
அல்லது இந்துக் கடவுளர்கள் கிறிஸ்துவை விட வல்லமையுடையவர்கள் என்றா? இந்துஆவி? அப்படி ஒன்று இருக்கிறதா? அந்த ஆவியை ஏன் அசுத்த ஆவிகள் பிடித்துக் கொண்டிருக்கின்றன? ஒன்றுமே புரியவில்லை...............

நான் எழுதியது  
சகோதரர் அவர்களே! என்னுடைய அந்த பதிவு சில இந்து சகோதரர்கள் கேட்டு கொண்டதநிமித்தம் எனது தளத்தில்  பதிவிடப்பட்டது. கிறிஸ்தவத்தை பற்றி மட்டும் மேன்மையாக எடுத்துரைக்கும் அநேகர் வந்துபோகும் தங்கள் தளத்தில் இதுபோன்ற சில புரியாத விஷயங்களை பதிவிடக்கூடாது என்று கருதியே, எல்லா மத கருத்துக்களையும் பதிவிடும் இறைவன் தளத்தில் பதிவிட்டேன்.

இதுபோல் எனக்கு ஓரளவு புரிந்த, ஆனால் எல்லோருக்கும் புரியவைக்க முடியாத அனேக கருத்துக்கள் எனது இருதயத்துக்குள் புகுத்தப்பட்டு இருக்கிறது அவ்வப்போது ஆண்டவரின் அனுமதியுடன் ஒவ்வொன்று வெளியில் வரும். அவைகளை எழுதி வைக்க வேண்டியது எனது கடமையாக உள்ளது. ஆனால் அவைகளை இங்கு பதிவிட்டு இந்த தளத்தின் நன்மதிப்பை கெடுக்க நான் விரும்பவில்லை. அதற்க்கான விளக்கம் கொடுத்தாலும் கிறிஸ்த்தவ சகோதரர்கள் யாரும் ஏற்க்கப்போவது இல்லை. எனவே தேவையற்ற விவாதங்களை தவிர்ப்போம். யாருக்கு புரியவேண்டுமோ அவர்களுக்கு அது நிச்சயம் புரியும்.


Bro. rajkumar_s Wrote 
 /// quote SundarP Wrote on 04-10-2010 23:42:18:
இதுபோல் எனக்கு ஓரளவு புரிந்த, ஆனால் எல்லோருக்கும் புரியவைக்க முடியாத அனேக கருத்துக்கள் எனது இருதயத்துக்குள் புகுத்தப்பட்டு இருக்கிறது. அவ்வப்போது ஆண்டவரின் அனுமதியுடன் ஒவ்வொன்று வெளியில் வரும். அவைகளை எழுதி வைக்க வேண்டியது எனது கடமையாக உள்ளது.///

இந்த விசயத்தை இப்போது தான் முதல்முறையாகக் கேள்விப்படுகிறேன். கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்
 
 
நான் எழுதியது:
அன்பு சகோதரர் அவர்களே!
உலகில் நடக்கும் துன்பங்களையும் கொடூரங்களையும் கண்டு மனம் நொந்து, "கடவுள் என்ற ஒருவரே இல்லை" என்ற முடிவில் மனம்போன போக்கில் வாழ்ந்த நான் ஒரு இக்கட்டான நிலையில் "கடவுள் இருக்கிறார்" என்பதை அறிந்து கொண்டேன்.

அதன்பின் நான் எனக்காக என்னுடைய வாழ்வுக்காக எதுவும் கேட்காமல், முதல் முதலில் அவரிடம் பிடிவாதமாக கேட்ட கேள்வி "இந்த உலகத்தில் இருந்து துன்பமும் துயரமும் ஒழிய வேண்டும் அதற்க்கு நான் என்ன செய்யவேண்டும்? என்பதுதான்.

அப்போது ஆண்டவர் இந்த உலகில் ஈ கொசு ஏன் உருவானது என்பது முதல் கொண்டு உலகில் உயிரினங்களின் இறுதி முடிவாகிய மரணம் வரை ஒவ்வொரு துன்பமும் ஏன் வருகிறது என்பதையும் அதை மேற்கொள்ள என்ன வழி என்றும் இருதயத்தில் தெரிவித்தார். அவைகளே எனது இருதயத்தில் புகுத்தபட்டது என்று நான் சொல்லும் கருத்துக்கள்.

துன்பத்தை முடிவுக்கும் கொண்டுவருவதர்க்கான நேர் வழியும் அடிப்படை உண்மைகளும் நமது வேதாகத்தில் இருந்தாலும் அனேக காரியங்கள் எல்லோரும் அறியக்கூடாதபடிக்கு மறைக்கப்பட்டிருக்கின்றன. நமது சகோதரர்கள் வேதத்தில் இல்லாத விஷயங்களை ஏற்ப்பது இல்லை, வேதத்தில் இருப்பதையும் சிலவற்றை ஏற்ப்பது இல்லை. (நான் யாரையும் குறைகூறவோ நியாயம்தீர்க்கவோ குழப்பத்தில்
விளைவிக்கவோ விரும்பவில்லை. யாருக்குள் எவ்வித ஆவி கிரியை செய்கிறது என்பதை ஓரளவுக்கு என்னால் அறியமுடியும். ஆகினும் சில உண்மையான இந்து சகோதரர்கள் ஆண்டவரை நம்பவேண்டும் என்பதற்காக சில விஷயங்களை அவ்வபோது இடையிடையே வெளிட்யிடுகிறேன்.
 
நான் ஒரு சாதாரண மனிதன்! என்னிடம் எந்த வல்லமையும்இல்லை எந்த சொத்து சுகமும் இல்லை. ஆனால் இந்த ஒன்றுமில்லா நிலையிலேயே உத்தமமாக வாழ்ந்தால் மட்டுமே துன்பங்களை முடிவுக்க கொண்டுவர முடியும் என்று கட்டளையிட்டுள்ளார்.

முயற்ச்சிக்கிறேன்! எனக்காக ஜெபித்துகொள்ளுங்கள்.
 


-- Edited by SUNDAR on Thursday 7th of October 2010 08:58:26 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சகோ: ராஜ்குமார் அவர்களின் கேள்விகளும் எனது பதிலும்  

சகோதரர்    அவர்களே!
மறைவான கருத்துக்கள்பற்றி அறியாதவர்களிடம் விவாதிக்க கூடாது என்ற நோக்கில் நான் எவ்வளவோ விலகி விலகி சென்றும், உண்மையை அறிய வாஞ்சிப்பவர்போல சில கேள்விகளை எழுப்பி இப்பொழுது நாசூக்காக  கூரான கேள்வி ஊசியால் குத்தியிருக்கிரீர்கள். (அதாவது நான் ஒரு மாறுபாடான உபதேசகாரன் என்ற எண்ணம் யாரோ ஒருவர் சொல்லி தங்கள்  ஆள் மனதில் பதிந்துவிட்டது என்பது மட்டும் என்னால் புரியமுடிகிறது)  இல்லையெனில் உள்ளங்கை  நெல்லிகனிபோல தெளிவாக நான் குறிப்பிட்டுள்ள பல காரியங்களுக்குகூட நீங்கள்  கேட்டிருக்கும் கேள்விகளில் இருந்தே தங்களின்  நோக்கம் புரிகிறது. இம்மட்டுமாவது மறைமுகமாக இங்கிதமான முறையில் சுட்டியமைக்கு மிக்க நன்றி!
 
உங்கள் குற்றச்சாட்டில் எந்த நியாயமும் இல்லை என்பதை என்னால் வரிக்கு வரி விளக்க முடியும். ஆகினும் எனது நேரத்தில்  அதிகம் வீணடிக்க விரும்பாமல் , என் கருத்துக்கு இசைவான சில வசன ஆதாரத்துடன் கூடிய  விளக்கங்களை  மட்டும் தர விரும்புகிறேன். 
 
SundarP Wrote on 06-10-2010 19:04:46:
துன்பத்தை முடிவுக்கும் கொண்டுவருவதர்க்கான நேர் வழியும் அடிப்படை உண்மைகளும் நமது வேதாகத்தில் இருந்தாலும் அனேக காரியங்கள் எல்லோரும் அறியக்கூடாதபடிக்கு மறைக்கப்பட்டிருக்கின்றன.  
 
rajkumar_s Wrote on 05-10-2010 22:30:13:
வேதத்தில் புரியாத படிக்கு மறைக்கப்பட்ட செய்திகள் எதுவும் இல்லை என்பது தான் உண்மை, ஒருவேளை நம் சிற்றறிவுக்கு அவை எட்டாமல் போகலாமே ஒழிய வேதத்தில் மறைக்கப்பட்டுவிட்டது என்று எப்படி வேதத்தைக் குறை சொல்ல முடியும்?
 
"எல்லோரும் அறியக்கூடாதபடிக்கு மறைக்கப்பட்டிருக்கின்றன" என்பது எனது கருத்து. "மறைக்கப்பட்டு விட்டது" என்று நான் எழுதவில்லை.
 
நான் ஒரு பொருளை உங்களுக்கு தெரியாமல்  மறைத்து வைத்தால்  அதை உங்களால் பார்க்க முடியாது  ஆனால் அந்த பொருள் என்னிடம் இருக்கிறது என்றே பொருள்படும். அதேபோல் உண்மைகள் வேதத்தினுள்தான் இருக்கிறது ஆனால்
அதை எல்லோரும் அறிய முடியாதபடி  எல்லோர்  அறிவுக்கும்  எட்டாதபடி மறைவாக இருக்கிறது  என்பதே அதன் பொருள். அதே நீங்களேநம் சிற்றறிவுக்கு அவை எட்டாமல் போகலாமே ஒழிய" என்று  சொல்கிறீர்கள் பிறகு நான்சொன்னதில்
என்ன தவறு என்பது புரியவில்லை. நமது சிற்றறிவுக்கு எட்டாததுதான் மறைபொருள் அல்லது மறைவான பொருள்.  
 
உபாகமம் 29:29 மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்;
என்றும்
தானியேல் 2:22 அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்
 
என்று வசனம் குறிப்பிடுவதால் இவ்வுலகில்  மறைபொருள்கள் உண்டு என்பதை நம்மால் அறியமுடியும்
 
லூக்கா 8:17 வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்கு வராத மறைபொருளுமில்லை.
 
என்று இயேசு குறிப்பிட்டிருந்தாலும், எல்லா மறைபொருளும் எல்லோருக்கும் வெளிப்படுத்தப்படவில்லை என்பதை கீழ்கண்ட வசனம் மூலம் அறியமுடியும்.
 
லூக்கா 8:10 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
 
அதுபோல் பவுலுக்கு அறிவிக்கப்பட்ட பல ரகசியங்கள் வேறு  யாருக்கும்
அருளப்படவில்லை.  மேலும்  வெளிப்படுத்தின விசேஷத்தின் மறைபொருளை யாராலும் தெளிவாக விளக்கிவிட முடியாது. ஒருவர் ஏதாவது ஒருபொருளை தன் இருதயத்தில் நினைத்துகொண்டு இதுதான் உண்மை எனக்கு எல்லாம் புரிந்து விட்டது  என்று தவறாக வேண்டுமானால் எண்ணிக்கொண்டு இருக்கலாம் மற்றபடி 
வெளிப்படுத்தின விசேஷம் முழுமையும் மறைபொருளாகவே உள்ளது. எல்லோராலும் அதை படித்து சரியான பொருள் கொண்டுவிடமுடியாது
 
இந்நிலையில் வேத புத்தகத்தில் அனேக காரியங்கள் மறைவாக இருக்கிறது என்று நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.  
 
rajkumar_s Wrote on 05-10-2010 22:30:13:
பாப‌ர் ம‌சூதி இடிக்க‌ப்ப‌ட்ட‌ விவ‌கார‌த்துக்கும் ந‌ம‌க்கும் முத‌லாவ‌து என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? அதாவ‌து வேத‌ம் ந‌ம‌க்கு ஒன்றைத் தெளிவாக‌ ந‌ம‌க்குச் சொல்லுகிற‌து, ந‌ம்முடைய‌ தேவ‌ன் எங்கும் நிறைன்த‌வ‌ர்
 
"நம்முடைய தேவன் எங்கும் நிறைத்தவர் அவர் கட்டளையிடாமல் எந்த காரியமும் சம்பவிக்காது" என்பதை ஏற்றுக்கொண்டாலே பாபர்மசூதி இடிப்புக்கும் தேவனுக்கும் சம்பந்தம் உண்டு என்பதை அறியமுடியும். தேவனுக்கு சம்பந்தம் இருந்தால் தேவனை அறிந்த தேவ பிள்ளைகளாக மாற்றப்பட்டுள்ள  நமக்கும் அத்தோடு நிச்சயம் சம்பந்தம் இருக்கத்தானே செய்யும்.?   இதில் என்ன குழப்பம்.
 
rajkumar_s Wrote on 05-10-2010 22:30:13:
அப்ப‌டியானால் நாம் என்ன‌ செய்ய‌வேண்டும்? ப‌வுலைப்போல‌ அப்போஸ்தலர் 18:6 சொல்ல‌ப்ப‌ட்ட‌ ப‌டி ந‌ம் வ‌ஸ்திர‌த்தை உத‌றிவிட்டு நாம் ந‌ம்முடைய‌ விசுவாச‌ப்பாதையில் அடுத்த‌வ‌ருக்கு ச‌த்திய‌த்தை அறிவிக்க‌ச் சென்றுவிடுவ‌து தான் ந‌ல்ல‌து 
 
பொதுவாக எல்லா  இந்துக்களுக்காககவும்   சில விசேஷித்த காரியங்களை எழுதிக் கொண்டு இருக்கும் எனக்கு "அடுத்தவர்" என்பவர் யார் என்று புரியவில்லை. அடுத்தவரும் ஒரு இந்துவாகத்தான் இருப்ப்பார். மற்றபடி  இஸ்லாமியருக்கு சொல்ல தேவன் வேறு சிலரை அபிஷேகித்திருப்பார் எனவே எனது வேலையை நான் செய்ய வேண்டியது என் மேல் விழுந்த  கடமை. 

அத்தோடு யாரையும் நான் "இவர்கள் தேற மாட்டார்கள்" என்று விட்டுவிட விரும்ப வில்லை. ஏனெனில் ஒருவரும் கெட்டுபோவது எனது விருப்பம் அல்ல.
நாளை தேறமாட்டார்கள் என்று ஓதிக்கியவர்கள் பரலோகத்திற்கு போய் ஆகாதவர்கள் என்று தேவன் நம்மை தள்ளிவிடவும் வாய்ப்பு இருக்கிறது
 
மத்தேயு 21:31  இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 8:12
ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; .

என்றும் வசனம் சொல்கிறதே! எனவே எவர் தேறாதவர்கள் என்பது தேவனுக்கு மட்டுமே தெரியும் நம்மால் தீர்மானிக்க முடியாது. முடிந்தவரை நாம் நமது கடமையை செய்வோம்.     
 
rajkumar_s Wrote on 05-10-2010 22:30:13:
தகவல் தொடர்பு எனபற்கு முதலாவது சொல்பவர் ஒருவரும், கேட்பவர் ஒருவரும் வேண்டும்.
 
அப்படிதான் இருக்கவேண்டும் என்று  கட்டாயம் இல்லை சகோதரரே. சில செய்திகளை நாம் பொதுவாக எழுதி வைக்கலாம் எந்த தவறும் இல்லை.
"வானங்கள் திறக்கப்பட நான் தேவ தரிசனங்களை கண்டேன்" என்று எசேக்கியேல் எழுதுவது  தன் அனுபவத்தைதான். அவர் யாருக்கும்
அதை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எழுதவில்லை ஆனால் அதற்க்கு எத்தனையோ ஆண்டுகள் கழித்து வந்த எனக்கு இன்று அது புரிகிறது. எனவே எழுதிவைப்பது மட்டுமே நமதுவேலை.
 
ஆபகூக் 2:2 அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.
 
கடந்தோடும் எல்லோரும் வாசிக்கும்படி எழுதிவைக்கத்தான்  தேவன் கட்டளை யிட்டிருக்கிறார் அது யாருக்கு எப்பொழுது புரியவேண்டுமோ அப்பொழுது நிச்சயம் புரியும்.  ஒருவருக்கு  புரியுமா புரியாத என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது.
 
rajkumar_s Wrote on 05-10-2010 22:30:13:
உங்களுடைய கட்டுரை கிறிஸ்தவ நண்பர்களுக்கே புரியாமல் இருக்க புறஜாதி நண்பர்களுக்கு எங்கே புரியும்?
 
எனது எழுத்துக்கள் பல கிறிஸ்த்தவர்களுக்கு மட்டும்தான் புரியாது சகோதரரே காரணம் தாங்கள் அறிந்ததர்க்குமேல் ஒன்றுமில்லை என்ற அவர்களது பரிசேய நிலையே
 
இயேசு அனேக நல்ல காரியங்களை செய்தபோதெல்லாம் மூச்சுவிடாத அவர்கள் அவர்களுக்கு புரியாத ஒரு வார்த்தையை சொல்லிவிட்டால் உடனே எறிவதற்கு கல்லுகளை எடுத்துகொள்வார்கள் அல்லவா? காரணம் "நான்  நியாயபிரமாணத்தை கரைத்து குடித்து   எல்லாவற்றையும் அறிந்துவிட்டேன் இவன் என்ன புதியதாக சொல்கிறான்" என்ற மேட்டிமைதான்.  எனவே பலபுறஜாதியாருக்கு நான் விளக்கம் கொடுத்து புரியவைக்க முடியும்! ஆனால் நமது கிறிஸ்த்தவ சகோதரர்களுக்கு மட்டும்தான் விளக்கம் கொடுத்தால் புரியாது.
 
rajkumar_s Wrote on 05-10-2010 22:30:13:
மேலும் சாத்தானைக் குறித்து வேதம் இந்த உலகத்தின் அதிபதி என வர்னிக்க அவன் என்ன இந்தியாவில் மட்டும் தான் வல்லமையுள்ளவனாக இருக்கிறானா? கிறிஸ்தவ நாடு என்று அறிவித்துக் கொண்ட அமெரிக்காவில் இல்லையா? (நான் விபச்சாரம் வேசித்தனங்களைக் குறித்துச் சொல்லுகிறேன்).
 
சகோதரரே இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இந்தியாவை முழுவதற்கும் பிரதமராக இருந்தாலும்   அவருக்கென்று ஒரு தலைமை இடம் உண்டு அல்லவா?  அவர் எல்லா நாட்டுக்கும் போய் வந்தாலும் எந்த நேரத்தில் எங்கு  அவர் தங்கினாலும் திரும்ப அவரது தலைமை இடத்துக்கு வந்தே தீருவார். அதுபோல் சாத்தானும் உலகம் முழுவதும் சுற்றினாலும்  ஏன் தேவ ச்ன்னிதிவரை  போய் வந்தாலும் அவனது தலைமை இடத்தில்தான் தங்கி இருப்பான். அதை பற்றித்தான் எழுதினேன்
 
வெளி 2:13  சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும் நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும்
  
என்று பெர்கமு சபைக்கு மட்டும் செய்தி வருகிறது. அப்படிஎன்றால் மற்றசபையில் சாத்தான் கிரியை செய்யமுடியாது என்ற பொருள்படுமா?  அதேபோல் ஒரு செய்தியைத்தான் நானும் சொன்னேன்.
 
rajkumar_s Wrote on 05-10-2010 22:30:13:
தாங்கள் ஏன் தங்கள் இருதயத்தில் புகுத்தப்பட்ட கருவிற்கு ஒரு சரியான உரு கொடுத்து அதை பிரசவிக்கக்கூடாது?
 
இது ஒரு நல்ல கேள்வி.  என்னில் உள்ள கருவுக்கு சரியான உரு என்னிடம் இருக்கிறது அதை எழுதினால் தங்கள்போன்ற பல கிறிஸ்த்தவர்களுக்கு என்னால் பதில் சொல்லி முடியாது எனவே தயங்குகிறேன்.  
 
SundarP Wrote on 06-10-2010 19:04:46:
என்னிடம் எந்த வல்லமையும் இல்லை எந்த சொத்து சுகமும் இல்லை
rajkumar_s Wrote on 05-10-2010 22:30:13:
இந்த உலகத்தின் சொத்து சுகங்கள் தான் உண்மையான சொத்து சுகம் என்று நம்பி இதை எழுதினீர்களா? அல்லது தங்களுக்குப் பரலோகத்தில் எந்த சொத்து சுகத்தையும் சேர்த்து வைக்கவில்லை என்று அறிக்கையிடுகிறீர்களா? அல்லது உங்களையும் என்னையும் (பரலோகத்திலும், பூலோகத்திலும்) ஐஸ்வரியனாக்கவே அவர் தரித்திரர் ஆனார் என்பதை விசுவாசிக்காமல் எழுதினீர்களா

"என்னிடம் எந்த சொத்தும் இல்லை" என்றால் என்னுடைய பொசெசனில் இருப்பதையே அது குறிக்கும்.  இந்த உலகத்தில் இருக்கும் நான், இங்கு உள்ளவைகளை பற்றிதான் எழுதினேன் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும் உங்களுக்கும் நிச்சயம் புரிந்திருக்கும் ஆனால் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் எல்லோருடைய வார்த்தையிலும் குற்றம் கண்டுபிடிக்க முடியும்..
 
யோவான் 14:30  இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
 
என்ற பொருளில்தான் இவ்வார்த்தையை குறிப்பிட்டேன்  
 
ஆனால் "சாத்தான் பிடுங்கிகோள்ள இயேசு உடுத்தியிருந்த  அங்கி  இருந்ததே அவர் ஒன்றும் இல்லை என்று சொல்கிறாரே" என்று விவாதிப்பது சிறுபிள்ளைத்தனமே. பரலோகத்தில் என்ன இருக்கிறது என்பதுபற்றி எனக்கு எந்த வெளிப்பாடும் இல்லை.  சகோ. அன்பு கூறுவது கூறுவதுபோல அது ஆண்டவருக்கே தெரியும்     
   
SundarP Wrote on 06-10-2010 19:04:46:
என்னிடம் எந்த வல்லமையும் இல்லை
rajkumar_s Wrote on 05-10-2010 22:30:13:
வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய சர்வவல்லவர் பெந்தகோஸ்தே நாளில் நமக்கெல்லோருக்கும் அருளிய பரிசுத்த ஆவியானவரின் வல்லமை கூடவா இல்லை?
 
பரிசுத்தஆவி என்பது வேறு அவரின் வல்லமை எம்பது வேறு சகோதரரே.
 
அப்போஸ்தலர் 1:8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, .

பரிசுத்தத் ஆவி வரும்போது "பெலனடைவீர்கள்" என்றுதான் வசனம் சொல்கிறதே தவிர "வல்லமை அடைவீர்கள்" என்று எங்கும் சொல்லவில்லை.  
   
 
பரிசுத்தத் ஆவி பெற்றவர் எல்லோரும் வல்லமை பெற்றவர் என்று யாரும் பொருள்கொள்ள முடியாது. பரிசுத்த ஆவி தனி வல்லமை தனி என்பதை கீழ்கண்ட வசனம் தனித்தனியே குறிப்பிடுவதை அறியலாம்  
 
அப்போஸ்தலர் 10:38 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்
 
I தெசலோனிக்கேயர் 1:5 எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும்
 
வல்லமை என்ற வார்த்தை பொதுவாக அதிசய செயல்கள் செய்வதை குறிக்கவே அனேக இடங்களில்  வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது
 
லூக்கா 6:19 அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே
 
அந்த பொருளிலேயே நானும் என்னிடம் எந்தபொரு அதிசயம் செய்யும் வல்லமையும் என்னிடம்  இல்லை என்று குறிப்பிட்டேன்.
 
rajkumar_s Wrote on 05-10-2010 22:30:13:
இப்படிக் கேட்பதற்கு தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் ஆனாலும் கேட்கிறேன்: தாங்கள் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டவரா?
 
நல்ல கேள்வியை கேட்டீர்கள்! வேத வசனங்களின் அடிப்படையில் பார்த்தால் நான் ரட்சிக்கப்பட்டு விட்டேன்  என்றுதான் இன்றுவரை விசுவாசித்துகொண்டு இருக்கிறேன். ஆனால் நான் எந்த நிலையில் இருக்கிறேன் என்பது தேவன் ஒருவருக்கே தெரியும்.  நாளை நியாய தீர்ப்பின்போது தேவனிடம் "வேத வார்த்தைகள்படி நான் சரியாக செய்து ரட்சிக்கப்பட்டுவிட்டேன் அதனால் என்னை
நீங்கள் தள்ளிவிட முடியாது" என்று அவரிடம் விவாதிக்க முடியாது. "அவரே  இறுதியான
முடிவான மேல் அப்பீல் செய்யமுடியாத நியாதிபதி".  எனவே என்னால் தற்போது  முடிவாக எதுவும் சொல்ல இயலவில்லை முடிந்தவரை என்னை ஒடுக்கி அவர் வார்த்தைகளுக்கு கீழ்படிகிறேன்.     
  
நான் CULTS இல்லை என்பதை தங்களிடம்  நிரூப்பதின் மூலம் எனக்கு எந்த பயனும் ஏற்ப்படபோவது இல்லை அல்லது நான் என்னதான் சொன்னாலும் நீங்களும் நம்பிவிடபோவது இல்லை அதனால் . நேரமும் உழைப்பும்தான் விரையமாகும். 
 
எனக்கு தேவன் கட்டளையிட்டதை நான் செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன், நாளை ஆண்டவர் முன்னால் நிற்கும்போது அவர் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் அல்லவா? எனவே எனது வழியில் தொடர்கிறேன். நன்றி!
  
 

-- Edited by SUNDAR on Friday 8th of October 2010 11:19:41 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard