என்ற வசனத்தின்படி கர்த்தரே அங்கு மீதியானியரை கொள்ளையிட்டு இஸ்ரவேலரை பங்கிட்டுகொள்ள சொல்வதால், தேவன் ஏதோ கொள்ளையில் பிரியப்படுபவர் போலவும் பிறரை பழிவாங்கும் நோக்கில் செயல்படுபவர் போலவும் பிறரை நியாயம்தீர்ப்பதில் குறியாய் இருப்பது போலவும் பொதுவாக தோன்ற வாய்ப்பு இருக்கிறது. இதை வியாக்கீனம் செய்யும்போது சற்று மாற்றினாலும் நமது தேவன் மேல் ஒரு தவறான அபிப்ராயத்தை பிறருக்கு கொண்டுவரலாம்.
உண்மையில் நமது தேவன் பழிவாங்குகிறவர் அல்ல ஜனங்களுக்காக பரிதபிப்பவர் !
யோனா 4:11இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.
கொள்ளையிடுதல் என்பது தண்டனைக்கு உரியது அதை செய்தவர்களுக்கு அது திருப்பி செய்யப்படும் என்றும் நம் கர்த்தர் அனேக இடங்களில் எச்சரித்துள்ளார்.
ஏசாயா 33:1உனக்கு ஐயோ! நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்;
ஆபகூக் 2:8நீ அநேகம் ஜாதிகளைக் கொள்ளையிட்டபடியினால் ஜனங்களில் மீதியான யாவரும் நீ சிந்தின மனுஷரத்தத்தினிமித்தமும் நீ செய்த கொடுமையினிமித்தமும் உன்னைக் கொள்ளையிடுவார்கள்
அவர் கொள்ளை பொருளை விரும்புகிற தேவன் அல்ல என்றும் கூறியிருக்கிறார்:
ஏசாயா 61:8கர்த்தராகிய நான் நியாயத்தை விரும்பி, கொள்ளைப்பொருளினால் இடப்பட்ட தகனபலியை வெறுக்கிறேன்
இவ்வாறு கொள்ளயிடுதலை வெறுக்கும் கர்த்தர் சில இடங்களில் கொள்ளையிடவும் சூறையாடவும் ஏன் அனுமதித்தார்?என்பதை நாம் சற்று ஆராய வேண்டும்
பாவம் மிகக்கொடியது என்ற உண்மையை அறிந்தவர் நம் தேவன். எனவே பாவம் எங்கு இருந்தாலும் அது கடும் தண்டனைக்குரியதும் தேவனுக்கு சிறிதும் பிடிக்காததும் ஆகும். தேவன் பாவத்தோடு ஒத்துபோகிறவர் அல்ல! பாவகாரியங்கள் எங்கு செய்யபட்டலும் அங்கு தண்டனை உண்டு. அது மீதியானியராக இருந்தாலும் சரி இஸ்ரவேலியராக இருந்தாலும் சரி.
மீதியானியரின் கையில் கொள்ளையிட்டு பங்குபோட்ட அதே இஸ்ரவேலியர் செய்த பாவத்தினிமித்தம் எத்தனையோமுறைஎத்தனையோ ஜாதியினர் இஸ்ரவேலரை கொள்ளையிட ஒடுக்க அனுமதித்தது உண்டு!
எனவே பாவம் மற்றும் மீறுதல் எங்கு இருந்தாலும் யாரிடம் காணப்பட்டாலும் தண்டிக்ககூடிவர் அவர் பட்சபாதம் பார்ப்பவர் அல்ல மற்றபடி அத்தண்டனைகளின் தன்மை பட்டயம் பஞ்சம் கொள்ளைநோய் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவ்வாறு பாவத்துக்கான தண்டனையில் ஒருவகைதான் இப்படி கொள்ளையிடபட அனுமதித்தல் என்ற கருத்திலேயே எடுத்துகொள்வது நல்லது.
கொள்ளயிடகூடாது என்றும் கொள்ளை இடுவபவன் தேவனுடய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்றும் திட்டமாக எச்சரிக்கிறார்
I கொரிந்தியர் 6:10திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும்தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
இவ்வாறு சொல்லும் தேவன் சில இடங்களில் கொள்ளையிட அனுமதித்ததன் காரணம் தேவனின் எச்சரிக்கையே!
சில இடங்களில் "பழிவாங்குதல் எனக்கே உரியது" என்றும் "நான் பழிவாங்குவேன்" என்றும் அவர் சொல்லியிருந்தாலும் அவர் மிகுந்த இரக்கம் உள்ளவர் என்றும் வேதம் நமக்கு போதிக்கிறது. பாவம் செய்யும் மனிதன் எச்சரிப்பின் செய்தியை கேட்டும் மனம் திரும்பாமல் துணித்து தன் செயல்களில் உறுதியாக தொடர்ந்து பாவம் செய்யும் பட்சத்தில் அவனுக்கு கடுமையான தண்டனை உண்டு என்பதை உணர்த்தவே தேவன் பல இடங்களில் தண்டனைகளை அனுமதித்துள்ளார்
அந்நிய ஜாதிக்காரராகிய மீதியானியரைபோல நீயும் பாவம் செய்தால் ஒருநாளில் நீயும் கொள்ளயிடப்பட்டுபோவாய் என்பதை உணர்த்துவேதே தேவனின் நோக்கமேயன்றி யாரையும் கொள்ளையிட்டு பங்குபோடுவது தேவனின் நோக்கமல்ல!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)