இந்த உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும் இறுதிநாளில் ஆண்டவரிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை நாம் திட்டவட்டமாக அறிந்துகொள்ள வேண்டும். அதில்இருந்து யாரும் தப்பவே முடியாது. எந்த சாக்கு போக்கும் ஆண்டவரிடம் எடுபடாது.
யோபு 10:14நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்.
அந்நேரங்களில் ஆண்டவர் ஒருவரை பார்த்து "இந்த காரியத்தை நீ எதன் அடிப்படையில் செய்தாய்" என்று கேட்கும்போது "அவன் சொன்னான்" "இவன் சொன்னான்' என்று ஆண்டவரிடம் பதில் சொல்ல முடியாது என்பதை ஒவ்வொருவரும் நிச்சயம் அறிய வேண்டும். ஒரே ஒரு வசனத்தை எடுத்து ஒன்பது விதமான வியாக்கீனம் செய்துகொண்டு, தாங்கள் தாங்கள் செய்கைகளை மனிதர்கள் நியாயப்படுத்தி வருவதால், ஒரு வசனத்தின் உண்மை தன்மையை ஆண்டவரிடம் உள்ள தொடர்பின் மூலம் மட்டுமே அறியமுடியும்.
அதற்க்கு முன் எச்சரிக்கையாகவே தேவன்:
ஏசாயா 2:22நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம். எரேமியா 9:4நீங்கள் அவனவன் தன் தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; ரோமர் 3:4 , தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
என்றும் வேதத்தில் பதிந்து வைத்துள்ளார். ஒவ்வொருவனும் தன்னை நோக்கி பார்த்து பிரகாசம் அடைந்து உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதுவே தேவனின் விருப்பம்.
அதற்காக பிறரின் போதனைகளையோ அல்லது வியாக்கீனங்களையோ கேட்கவே கூடாது என்பது பொருள் அல்ல!. எல்லோருடைய செய்திகளும் உண்மையாகவே நம்பி கேளுங்கள் ஆனால் எந்த ஒரு செய்தியை கேட்டாலும் அதை ஆண்டவரிடம் அமர்ந்து கன்பார்ம் பண்ணி அதன் உண்மை தன்மையை அறிந்துகொள்ளுங்கள். (நான் எழுதுவதையும் சேர்த்துதான்).
எந்த மனிதனையும் நோக்கி ஓடாதீர்கள் தேவனை நோக்கிபாருங்கள் அவரோடு உள்ள உறவு நிலையை செவ்வை செய்யுங்கள் அவர் உங்களுக்காக ஏங்கி காத்துகொண்டு இருக்கிறார். நான் தவறாக எதுவும் எழுதினால் எனக்கு நிச்சயம் அதற்க்கு தண்டனை உண்டு. அதில் இருந்து நான் தப்பவே முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், நான் ஒன்றை தவறாக எழுதினால் அதை ஆண்டவரிடம் விசாரிக்காமல் ஏற்றுகொண்டது உங்கள் தவறு! ஏனெனில் என்னை போலவே நீங்களும் மனிதர்கள் எனக்கு உள்ள அறிவு ஞானம் எல்லாமே முயன்றால் உங்களாலும் பெற்றுக்கொள்ள முடியும்.
"நீர் தந்த ஸ்திரி கனியை கொடுத்தாள் புசித்தேன்" என்று சொன்ன ஆதமையோ அல்லது "இந்த சர்ப்பம் என்னை வஞ்சித்தது" என்றுசொன்ன ஏவாளையோ தேவன் தண்டிக்காமல் விடவில்லை என்பதை கருத்தில் கொள்க! எனவே அன்பானவர்களே எவரையும் சாக்கு சொல்லி ஒருவரும் தேவனிடமிருந்து தப்பித்துவிட் முடியாது.
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் "நமது தேவன் ஜீவனுள்ளவர்" தன்னிடத்தில் வாஞ்சையாக கேட்பவர்களுக்கு பதில் கொடுக்க தயாராக இருக்கிறார்.
எரேமியா 33:3என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
ஏசாயா 45:11இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்;
என்று நமக்கு போதித்திருப்பதால் "என்னிடம் அமர்ந்து நீ ஏன் உண்மையை விசாரிக்கவில்லை" என்ற கேள்வி நிச்சயம் அங்கே எழுப்பப்படும்!
ஒருவேளை "நான் பல முறை விசாரித்தேன் எனக்கு பதில் கிடைக்கவில்லை என்றால்" உன் விசாரிப்பை கேட்ககூடாதபடி என் செவி மந்தமானதா? என்ற கேள்வி எழுப்பப்படும்!
ஏசாயா 59:1இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. 2. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
தேவன் நமக்கு முகத்தை காட்டாமுடியாதபடி நமது வார்த்தைகளுக்கு செவி கொடுக்க முடியாதபடிக்கு மறைப்பது நமது பாவங்களே! அதை வேதவெளிச்சத்தில் அமர்ந்து ஆராய்ந்து அறிந்து, சிறிய மற்றும் பெரியபாவங்களை நீக்கினால் நிச்சயம் அவரிடம் ஒரு தப்பனைபோல உறவாடி மகிழமுடியும்! அனைத்து உண்மைகளையும் அறிந்துகொள்ள முடியும். மற்றபடி இன்னொருவரை காரணம் காட்டி தப்பித்து விடலாம் என்று எண்ணி மோசம்போகாதீர்கள்!
இன்று சாத்தான் எல்லா இடங்களிலும் குழப்பத்தையும் கெடுதல்களையும் ஏற்ப்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஆவியினால் பீடிக்கப்பட்டு அடைக்கப்பட்ட இருதயத்தோடு எதையோ நோக்கி ஓடிக்கொண்டு இருக்கின்றனர். உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன தேவையற்றது எல்லா இடங்களிலும் அதிகமதிகமாய் பிரசங்கிக்கப்படுகின்றன.
ஆவியானவரிடம் உள்ள இடைவெளியற்ற தொடர்பு ஒன்றே சரியான வழியில் ஒருவரை நடத்த முடியும்! எனவே ஒவ்வொருவரும் ஆவியான தேவனை அதிகமதிகமாய் சார்ந்து கொள்ளவேண்டும் என்பதே எனது வாஞ்சை!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சாத்தான் மனிதனை வசனத்துக்கு விரோதமான பல தவறான போதனைகளில் நிறைத்து, இறைவன் மீதான விசுவாசத்தை குறைத்து அதனால் இறைவனின் செயல்பாட்டையும் மட்டுபடுத்தி வைத்துள்ளான்.
அவற்றுள் ஓன்று "இறைவன் இக்காலங்களில் மனுஷனுடன் இடைபட்டு பேசமாட்டார்" என்று போதிப்பது.
அனேக இந்து சகோதரர்கள் தாங்கள் வணங்கும் தெய்வத்தின்மீதே தங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லாமல் ஒரு நாஸ்திக நிலையில் இருக்கின்றனர். அவர்களை நடத்தில் செல்லவும் சரியான ஆட்கள் இல்லை.
கொஞ்சம் ஞானமுள்ள விசுவாசிகள் எனப்பட்டுபவர்களோ
"ஒரு காலத்தின் பேசினார் இப்போது பேசமாட்டார்"
என்றும் "பேசுவார் ஆனா பேசமாட்டார்" என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை கூறிவருகிறார்கள்.
இவ்வாறு ஒரு தவறான செய்தியை பரப்புவதன் மூலம், மிகசுலபமாக "எல்லா மனுஷனும் பொய்யன்" என்ற வார்த்தையை சாத்தான் மறைத்து, ஒரு மனுஷன் தேவனிடம் அமர்ந்து ஒரு உண்மையை அறிவதைவிட அல்லது தேவனோடு தான் தனிப்பட்ட தொடர்புநிலையில் இருப்பதைவிட யாராவது பெரிய ஆள், மூத்த ஆள் அல்லது போதகர் சொல்லிய கருத்தை அப்படியே நம்பவேண்டிய கட்டாயநிலைக்கு தள்ளிவிடுகிறான்.
இவர்களும் விசுவாசிகளை "இறைவனிடம் கேள்" என்று சொல்வதற்கு பதிலாக "என்னை கேள் நான் சொல்வது தான் உண்மை" என்று போதித்து தங்களை நோக்கி திருப்புகின்றனர். இவ்வாறு இவர்கள் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஒரு இடைதரகராகி தங்கள் கொள்கைகளையும் கருத்துக்களையும் சுலபமாக விசுவாசிகளின் இருதயத்தில் பதித்து உண்மையை தேவனிடமிருந்து அறியவிடாதபடிக்கு தடுத்து விடுகிறார்கள்.
கேட்டுக்கு போகும் வாசல் விசாலமாக இருப்பதால் அநேகர் அதில்தான் பயணிக்கின்றனர்.
நாளை இறைவனிடம் நியாயதீப்புக்கு நிற்கும்போது, இவர் அவரை பார்த்து அவரால்தான் நான் திசை வழி மாறினேன் என்று கையை நீட்டுவார், அவர் இவரை பார்த்து அவர்தான் என்னை தவறான பாதையில் அழைத்து சென்றார் கையை நீட்டுவார் இறுதியில் எல்லோர் நிலையும் ஆதாம் ஏவாள் நிலையை போலவே ஆகிவிடலாம்.
கிறிஸ்த்து ஒருவரே நமக்கு போதகர். ஆவியானவர் ஒருவரே நமக்கு வேத வசனங்களை புரியவைக்கும் ஆசான். மற்ற எல்லோர் சொல்வதையும் நாம் கேட்கலாம் ஆனால் நமது நடத்தைகளுக்கு நாமே உத்திரவாதி.
ஒருவர் நல்ல விசுவாசத்துடன் தேவனோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர்க்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது.
நமக்கு ஒரு நல்ல வேலை இருந்தாய் இன்னும் அநேகருக்கு உதவலாமே என்று எனவே அவர் ஒரு நல்ல வேலைக்காக தினமும் ஜெபிக்கிறார். கர்த்தர் பொறுமையாய் இருக்கிறார் ஆனால் அவரோ தொடர்ந்து விடாமல் கேட்டுகொண்டே இருந்தபடியால் அவர் விரும்பின படியே ஒருவேலையை கர்த்தரும் கொடுக்கிறார்.
கொஞ்ச நாளைக்கு பிறகு தன் கையில் பணம் வந்ததும் அதை எப்படி பெருக்குவது அதை எப்படி கையாளுவது என்று எண்ணி பல்வேறு திட்டத்தில் அதை பயன்படுத்துகிறார். இப்போதோ நிறைய வேலையின் நிமித்தமாக தன்னுடைய விசுவாசம் குறைந்து கொண்டே வருகிறது என்பதயும் மறந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
கையில் நிறைய பணம் உள்ளதால் அனேக தீமையான காரியங்களில் இடுபடுவதருக்கு பணமே காரணமாகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தேவனை விட்டு பின்வாங்கி முழுவதுமாக அவரை மறந்து விருப்பம்போல் வாழ ஆரம்பித்துவிட்டார்.
ஒரு நாள் மரித்து தேவனுக்கு முன்பாக நிற்கும்போது ஏன் இப்படி மாறிபோனாய் என்று தேவன் கேட்டதற்கு ஆண்டவரே நீர் எனக்கு ஒரு வேலையை கொடுத்தீர் அதினால் எனக்கு நிறைய பணம் கிடைத்தது அந்த பணமே நான் தீமையில் இடுபடுவதற்கு காரணமாயிற்று என்று கூறினார்.
தேவன் அந்த முட்டாளை நோக்கி மகனே நீ விரும்புகிறபடி நான் உனக்கு கொடுத்தல் நீ இப்படி போய் விடுவாய் என்று எண்ணித்தான் நான் அமைதியாக இருந்தேன்.
ஆனால் நீயோ விடாபிடியாக மற்றவர்களுக்கு நன்மை செய்யவே கேட்கிறேன். என்று சொல்லி பெற்று கொண்டாய் நீ சொன்னபடி செய்யாமல் உன் விருப்பம்போல் நடந்து கொண்டு இப்போது என்மீதே பழியை போடுகிறாரே என்று சொல்லி தக்க தண்டனையை கொடுத்தார்.
இது என் சிந்தனையில் தோன்றிய ஒரு சிறிய சம்பவம்.
நாம் ஒவ்வொன்றையும் கேட்டு பெற்றுக்கொண்ட விதம் தேவனுக்கு நன்றாய் தெரியும் அதின்படி நடக்காமல் இருந்துவிட்டு கடைசியில் அவரால்தான் இப்படி ஆயிற்று அல்லது இவரால்தான் இப்படி ஆயிற்று என்று சொல்வோமாகில் நாம் கட்டாயம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் சர்வவல்ல தேவனிடம்...!
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )