இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சில பாஸ்டர்களின் பொறுப்பற்ற செயல்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
சில பாஸ்டர்களின் பொறுப்பற்ற செயல்கள்!
Permalink  
 


பொதுவாக  பாஸ்டர்களையும்  தேவ ஊழியர்களையும் மிகவும் மதிப்பவன்  நான் ஆனால் சில பாஸ்டர்களின் பண ஆசை மற்றும் பொறுப்பற்ற  செயல்களின் காரணமாக கிறிஸ்த்துவின் நாமம் மற்றும் சபையின் முழு பெயரும் கெடும் நிலை ஏற்ப்படுவதால், இச்செய்தியை இங்கு பதிவிடும் நிலையில் உள்ளேன்:
  
நேற்று ஒரு குடும்பத்தின் செய்தி ஒன்றை கேள்விபட்டேன். 
 
ஜெபிக்கிறேன் என்று கொஞ்சம் வசதியுள்ள  அந்த வீட்டுக்குள் நுழைந்த பாஸ்டர் பல முறை ஜெபிக்க வந்தும் சரியான பணம் எதுவும் கிடைக்காத காரணத்தால்  அவர்களிடம் நேரடியாகவே "சிஸ்டர் நான் ஜெபிக்க வரும்ப்போதேல்லாம்  ஒரு 500௦௦/- ரூபாய் எனது கையில் கொடுத்துவிட வேண்டும்" என்றாராம்.
 
அவர்களும் எந்த மறுப்பும் சொல்லாமல் வரும்போதெல்லாம் அவர்கேட்ட பணத்தை கொடுக்க ஆரம்பித்தனர். சில நாட்கள் கழித்து அதில் திருப்தியடையாத அவர் " சிஸ்டர் நான் வாடகை வீட்டில் இருந்து மிகவும் கஷ்டப்படுகிறேன்,  எனது வீட்டு வாடகை செலவை மட்டும் நீங்கள் மாத மாதம் கொடுத்து விடுங்கள்" என்றாராம். அவர் கேடடுகொண்டதின் அடிப்படையில் அந்த பாஸ்டரின் வீட்டு வாடகையையும் இவர்களே கொடுத்து வருகிறார்களாம்.
 
பின்னர் சில நாட்கள் கழித்து "உங்களுக்குத்தான் இவ்வளவு பெரிய சொந்த வீடு இருக்கிறதே நான் வரும்போதெல்லாம் தங்கி ரெஸ்ட் எடுக்க எனக்கு ஒரு இடம் 
ஒதுக்கி  தாருங்கள்"  என்றாரார் அதையும்
இவர்கள் செய்து வருகிறார்களாம்.  
 
அந்த பாஸ்டர் ஒரு சபையில் முழுநேர  ஊழியர் சபையில் இருந்து அவருக்கு மாத சம்பளம் கிடைக்கும். அத்தோடு இதுபோன்ற வருமானங்களையும் பெருக்கிக்கொண்டு வாழ்கிறார்.
 
அவரின் செயல்களால் அவரை  ஏற்க்கவும் முடியாமல் ஒரு ஆண்டவரின் ஊழியர் என்ற முறையில் அவரை  தூரத்தையும் முடியாமல் தத்தளிக்கும்  அந்த குடும்பத்தார் ஆதங்கத்துடன் சொல்வது "யார் ஜெபிக்க வந்தாலும் எவ்வாறு பணம் பிடுங்கலாம் என்ற நோக்கிலேயே கேள்விகளை கேட்கின்றனர். ஒரு இந்துவை கூட நம்பிவிடலாம் போல இருக்கிறது இந்த கிறிஸ்தவ பாஸ்டர்களை நம்பவே முடியவில்லை. அதுவும் அந்த பாஸ்டரின்  சபையின் பெயரை சொல்லி அந்த சபையில் உள்ளவர்களை  நம்பவே கூடாது"  என்று சுமார் 40000 பேருக்கு  மேல் விசுவாசிகளை  கொண்ட  எங்கள் சபையின் மொத்த விசுவாசிகளையும் குற்றப்படுத்தும் நோக்கில் பேசுகிறார்    
 
பாஸ்டர் சகோதரர்களே  
 
ஓன்று பண ஆசையை வெறுத்து பாஸ்டராக ஆண்டவருக்காக உண்மையாக  ஊழியம் செய்யுங்கள் உங்கள் தேவைகளை சந்திக்க நமதுதேவன் போதுமானவராக இருக்கிறார். ஒருவேளை அவர் ஏற்றநேரத்தில் உங்கள் தேவையை சந்திக்கவில்லை என்றாலும்  அதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் இருந்தால் பாஸ்டராக இருங்கள் அல்லது பாஸ்டர் தொழிலை விட்டுவிட்டு நல்ல உலக  வேலையோ அல்லது வியாபாரமோ  செய்து உங்களுக்கு  தேவையான பணத்தை சம்பாதியுங்கள் உங்கள் இஸ்டப்படி  நன்றாக வாழுங்கள். யாரும் உங்களை குறைகூற முடியாது  
 
தயவு செய்து உலகத்தின் மேல் பற்றும் இச்சையும் பண ஆசையும் நிறைந்த இருதயத்தை வைத்த்கொண்டு, பணம் பணம் என்று விசிட் அடிக்கும் வீடுகளில் எல்லாம் பிடுங்கி  கிறிஸ்தவத்தையும்  கிறிஸ்த்துவின் நாமத்தையும்  கெடுக்காதீர்கள் அதற்க்கு கடுமையான தண்டனை உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

பல மாதங்களுக்கு முன் போதகர் ஒருவர் ஒரு சகோதரன் இடத்தில் நான் உங்கள் வீட்டில் ஜெப கூட்டம் வைக்கின்றேன் என்று கூறி
நாங்கள் ஒரு 30 அல்லது 40 நபர்கள் வருவோம் நீங்கள் எங்களுக்கு உணவு தயார் செய்து விடுங்கள் என்று கூறினார்

ஆனால் உண்மையாகவே அவருக்கு 5 நபர்கள் மட்டுமே இருந்தார்கள் (என்னையும் சேர்த்து )
 
அந்த நாள் வர நாங்கள் அந்த சகோதரன்  வீட்டு ஜெப கூட்டத்திற்கு சென்றோம்

நாங்கள் மொத்தம் மூன்று நபர்கள் தான் சென்றோம்

ஜெபம் முடிந்த பிறகு அவர்கள்  உணவு பரிமாறின போது  போதகரே 30 நபர்கள் வருவோம் என்று சொன்னீர்கள்  ஆனால் மூன்று பேர் மட்டும் தான் வந்து இருக்கின்றீர்கள் என்று கேட்டார்கள் அதற்க்கு போதகர் எல்லோருக்கும் வேலை இருந்ததால் வர முடிய வில்லை என்று கூறினார் அதற்க்கு அவர்கள் நீங்கள் 40 நபர்கள் வருவோம் என்று கூறியதால் நாற்பது  பேருக்கு  தேவையான உணவை சமைத்தேன் என்று கூறி பரவா இல்லை என்று சொன்னார்கள் ஆனால் எனக்கோ மனதில் ஒரே கவலை ஏழை குடும்பம் இப்படி அதிகமாய் பணம் கொடுத்து செய்திருக்கிறார்களே என்று அந்த கவலை எனக்கு மிகவும் அதிகமாய் இருந்து
ஆவியானவர் என் இதயத்தை பிழிந்தார அல்லது அந்த கவலை என்னை பிளிந்ததா எனக்கு தெரிய வில்லை (போதகர்மேல் கோவமாய் இருந்தேன்  ) அந்த நேரத்தில் அவரும் மனம் வருந்தினார்


 இதை ஏன் நான் சொல்கின்றேன் என்றால் அந்த போதகருக்கு இது ஒரு பழக்கமாய் இருந்தது
ஒரு வீட்டில் ஜெப கூட்டம் வைக்க வேண்டும் என்றால் இத்தனை   நபர் வருவோம் உணவு தயார் செய்து விடுங்கள் என்று கூறி விடுவார்
போதகர்களை குறை கூற வில்லை இந்த தளத்தை போதகர்கள் பார்வை இடும் போது அவர்களுக்குள் இப்படி பட்ட சுபாவம் தெரியாமல் செயல்  பட்டு கொண்டு இறுக்கலாம்  அதினால் அவர்கள் உணரலாம் என்றே இதை எழுதிகின்றேன்
 
போதகர் : விசுவாசியின் கஷ்டங்களை அறிந்தவனாய் இருக்க வேண்டும்
போதகர் : விசுவாசியின் மீது அளவு கடந்த அன்பு வைத்து இருக்க வேண்டும்
                      அவர்களுக்கு ஒரு சிறு கஷ்டம் என்றால் இவர் இருதயம் துடிக்க    வேண்டும் தேவனிடத்தில் புலம்ப வேண்டும்


-- Edited by EDWIN SUDHAKAR on Monday 11th of October 2010 10:20:19 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard