நீதிமொழிகள் 22:10 பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.
தேவஜனங்களான இஸ்ரவேலர்கள், தங்கள் தீர்க்கதரிசிகளை நிந்தித்து பரியாசம் பண்ணினதினிமித்தம் தேவகோபம் இஸ்ரவேலர் மீது எவ்வளவாய் இறங்கியது என்பதை பின்வரும் வசனம் கூறுகிறது.
2 நாளாகமம் 36:16 ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.