"பரியாசம் செய்தல்" என்ற வார்த்தை "கேலி கிண்டல்செய்தல்" என்ற வார்த்தைக்கு ஒத்ததாய் வேதத்தில் அனேக இடங்களில் வருவதை காண முடிகிறது. தற்காலங்களில் நடைபெறும் ஈவ் டீசிங் போன்ற கொடும் செய்கைகளும் அதனால் அடிக்கடி சிலர் தற்கொலை செய்துகொள்வதாக நாம் கேள்விப்படுவதும் அதனுடன் சேர்ந்த ஒன்றே.
வேத புத்தகத்தை ஆராய்ந்தால் முதல் முதலில் பரியாசம் பண்ணியவன் இஸ்மாவேல்தான் என்பதை அறிய முடியும்.
ஆதியாகமம் 21:9 பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு,
இந்த இஸ்மவேல் யாரை பணியாசம் பண்ணினான் என்றுபார்த்தால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததியை! அதாவது இந்த அழிவுக்கு நேரான மாமிசசந்ததி தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியை பரியாசம் பண்ணியிருபதை அறிய முடியும்.
ஆதியில் இருந்து இன்றுவரை இந்த உலகில் அதுதான் நடந்து வருகிறது அதாவது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட்வர்களை பிசாசின் கூட்டங்கள் பரியாசம் பண்ணுவதும் கேலி கிண்டல் செய்வது இந்த உலகில் வாடிக்கையான ஓன்று.
தாழ்மையான உள்ளம் கொண்ட எந்த ஒரு மனிதனும் தன்னைபோன்ற சக மனிதனை எவ்விதத்திலும் பரியாசம் பண்ண துணிய மாட்டான். ஒருவேளை அவன் ஒரு கள்ள மனிதனாக இருந்தாலும் கூட அவனை பரியாசம் செய்வது என்பது ஒரு ஒரு சரியான செயலே அல்ல!
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து மனுஷர்கள் கையில் சிலுவை மரணத்துக்கு ஒப்பு கொடுக்கப்பட்டபோது அந்த பிசாசின் ஆவிபிடித்த மனிதர்கள் செய்த முக்கிய வேலை அவரை பரியாசம் பண்ணி குட்டி துப்பியதுதான்
மத்தேயு 27:41அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி:
மத்தேயு 27:29முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக்கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,
இவ்வாறு ஆரம்பித்த யூதர்கள் அவரின் கடைசி மூச்சுவரை அவரை பரியாசம் பண்ணிக்கொண்டே இருந்ததை அறியமுடிகிறது.
லூக்கா 23:37நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்னினார்கள்
இவ்வாறு பரியாசம் கேலி கிண்டல் பண்ணி பிசாசானது தனது இச்சையையும் தேவன்மேலுள்ள கோபத்தையும் தீர்த்துகொண்டது என்றே சொல்லலாம்.
என்று வேதம் எச்சரிப்பதோடு இதுபோன்ற பரியாசக்காரன்உட்காரும் இடங்களில் உட்காரக்கூட கூடாதுஎன்று நமக்கு போதிப்பதால் இந்த "பரியாசம் செய்தல்" என்ற மிக மோசமான பிரறரை மனமடிவாக்கும் குணம் மனிதனுக்கு எதன் அடிப்படையில் வருகிறது என்பதை நாம் ஆராய்வது அவசியமாகியது அதன் மூலம் அது பிசாசின் அடிப்படை குணம் என்ப்னத்தை கண்கூடாக அறிந்துகொள்ள முடியும்
அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்....
-- Edited by SUNDAR on Wednesday 1st of December 2010 03:59:32 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பொதுவாக ஒரு மனிதன் தன்னைபோலுள்ள சக மனிதனை பரியாசம் செய்ய துணிவதற்கு மூன்று முக்கிய காரணங்களை சொல்ல முடியும். அவைகளை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.
1. பெருமை மற்றும் அகம்பாவம்!
தன்னை பற்றிய ஒரு மேன்மையான நினைப்பு, அதாவது "நான் பெரியவன் நீ சிறியவன்" என்ற நினைப்பே இன்று தன்னைவிட தாழ்மையான நிலையில் உள்ள ஒருவரை பரியாசம் பண்ண தூண்டுகிறது.
இஸ்மவேல் ஏன் பரியாசம் பண்ணினான் ஈசாக்கு அவனைவிட சிறியவனும் அற்ப்பமானவனுமாக இருந்தான்
பெநின்னாள் அந்நாளை ஏன் மனமடிவாக்கினாள் அவளுக்கு குழந்தைகள் இருந்ததால் குழநதைகள் இல்லாத அன்னாளை அற்பமாக எண்ணி மனமடிவாக்கினாள்.
இப்படி பெருமையின் அடிப்படையில் பிறரை மனமடிவாக்குவது பெருமையில் விழுந்துபோன லூசிபரின் செயல் என்பதில் நிச்சயம் சந்தேகம் இல்லை.
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து மரணபரியந்தம் தாழ்மையோடும் கீழ்படிதலோடும் நடந்துகொண்டார். அவர் ஆண்டவராக இருந்தும் சீஷர்களின் கால்களை கழுவியதொடு நம்மையும் அவ்வாறு செய்யும்படி கட்டளையிட்டு சென்றார்.
இவ்வாறு மற்றவருக்கு பணிவிடை செய்வதிலும் மற்றவர் நலனிலும் அக்கறை உள்ள ஒருவர் பிறருடைய தாழ்ந்த நிலைக்காக பரிதாபபடுவாரேயன்றி யாரையும் ஒருகாலும் பரியாசம் பண்ணவே மாட்டார்.
லூக்கா 14:11தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
இந்த உலகத்தில் வேண்டுமானால் ஒருவர் பெரியவராகவும் வசதி படைத்தவராகளும் அனைத்தும் அறிந்த ஞாநியாகவும் இருக்கலாம் அனால் அதனால் பரலோகத்தில் அவருக்கு எந்த பலனும் இல்லை.
எவ்வளவு மேன்மைகள் தன்னிடம் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தன்னை எல்லோரிலும் சிரியவனாகவும் அற்ப்பமானவனாகவும் எண்ணி பிறரை எவ்விதத்திலும் மேன்மையாக கருதி தாழ்மையாக இருப்பவனே பரலோகத்தில் பெரியவனாக இருப்பான் என்று இயேசு குறிப்பிட்டுருக்கிறார்
இதுபோன்ற பெருமையான நினைப்பின் காரணமாகத்தான் தன் முன்னால் நிற்கும் தேவ குமாரனாகிய இயேசுவையே பரியாசம் பண்ணும் அளவுக்கு குருட்டாட்டம் பிடித்த ஒரு மோசமான நிலையில் அன்றைய பரிசேயர்கள் இருந்தார்கள் என்பதை கருத்தில் கொள்க!
எனவே பிறரை பரியாசம் பண்ண தூண்டும் முதல் காரணி "பெருமை என்னும் மேட்டிமையே" என்பதை அறிந்து தன்னை பெரியவனாக எண்ணிக்கொண்டு பிறரை அற்பமாக எண்ணுவதையும் பரியாசம் கேலி செய்வதையும் முற்றிலும் தவிர்ப்போமாக!
-- Edited by SUNDAR on Tuesday 12th of October 2010 10:53:54 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஒருவர் தான் வேத வசனங்களின்படியோ அல்லது உத்தமமான வழியிலோ நடக்க முடியாமல் தவறான சில காரியங்களை செய்து கொண்டு இருக்கும்போது, இன்னொருவர் அதைசெய்வதையும் அதை செய்யும்படி போதிப்பதையும் கேட்டால் அவரை பரியாசம் பண்ணி தங்களுக்குள் திருப்தியடைவது ஒருவித குரூர நிலை!
உதாரணமாக உத்தமனாக நடக்க முடியாத ஒருவன் அவ்வாறு நல்லவனாகவும் உத்தமனாகவும் நடப்பவனை பார்த்து "ஏமாளி" "இளிச்சவாயன்" "வாழ தெரியாதவன்" "பிழைக்க தெரியாதவன்" அவன் இவன் என்று என்னென்னே அடை மொழியிலோ அவனை பரியாசம் பண்ணி, தங்கள் இயலாமையை மறைத்து தாங்கள் நிலைக்கு நியாயம்கற்ப்பித்து தங்களுக்குள் ஒரு திருப்தியடைந்து கொள்வது ஒரு இயல்பு.
இதே சம்பவம் ஆண்டவராகிய இயேசுவின் விஷயத்திலும் நடந்தது.
உண்மை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்றும் பணத்தின் மீதும் உலக பொருட்களின் மீதும் பற்றிருக்க கூடாது என்பதை நமது ஆண்டவர் திட்டமாக போதித்தார்:
லூக்கா 16: 10. கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான். 11. அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள் 13. எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது,...... தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.
இதை கேட்ட உலக போருட்களுகாகவே ஆண்டவர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்திகொண்டிருந்த பரிசேயருக்கு பற்றிக்கொண்டு வந்தது எனவே அவரை பரியாசம் பண்ணினார்கள் என்று வேதம் சொல்கிறது
லூக்கா 16:14 இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
ஒருவர் பேசுவதிலும் எழுதுவதிலும் என்னஉண்மை இருக்கிறது என்பதை மட்டுமே ஆராய்து பாருங்கள். உங்கள் மனசாட்சிக்கு தவறுபோல் நிச்சயமாக தெரியும் பட்ச்சத்தில் உங்களுக்கு தெரிந்த உண்மையை சரியான முறையில் எடுத்து சொல்லலாம்! கேட்கவில்லை என்றால் விட்டு விடுங்கள். உங்கள் நிலைக்கு மேலான கருத்துகளாகவோ அல்லது உங்களால் செய்யமுடியாத போதனைகளாகவோ இருந்து அதை கேட்க விருப்பம் இல்லை என்றால் விட்டுவிடுங்கள் தவறில்லை.
ஆனால் யாரையும் பரியாசம் செய்வது எவ்விதத்திலும் தகாது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பரியாசம் (கேலி செய்தல்) செய்பவரின் முக்கிய இரண்டு நோக்கங்களை முந்தய பதிவுகளில் பார்த்தோம். அடுத்து
தேவனுடைய திட்டங்கள் நிறைவேறாமல் தடுப்பது அல்லதுஅதை முடிந்த அளவு தாமதப்படுத்துவதுவே பரியாசம் செய்பவனின் மூன்றாவது முக்கிய நோக்கம் ஆகும்!
தேவன் தனக்கு முழுமையாக கீழ்படியவிரும்பும் மனிதர்களை தெரிந்துகொண்டு அவர்கள்மூலம் இவ்வுலகில் தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இவ்வாறு தேவனுடய சித்தம் நிறைவேறவிடாமல் தடுப்பதற்கு முடிந்த அளவு கேலி கிண்டல் செய்து தேவன் தெரிந்துகொண்ட நபருக்கு மனமடிவையோ அல்லது சுயத்தையோ உருவாக்கி தேவனுடய வேலையை செய்யவிடாமல் நிருத்தி போடுவதே இந்த பரியாசக்காரனின் அடுத்த நோக்கம்:
நெகேமியாவின் சம்பவத்தை எடுத்துகொள்வோம்:
பாபிலோனின் சிறையிருப்பில் நல்ல ஒரு உத்தியோகத்தில் இருந்த நெகேமியா தேவனின் நகரமாகிய எருசலேமின் அலங்கத்தை கட்டும்படிக்கு அனேக பிரயாசங்களை எடுத்து முயற்ச்சிக்கிறான். அதில் எரிச்சலடைந்த புரஜாதிக் காரனாகிய சன்பல்லாத்து, கேஷேம் தொபியா, அரபியரும், அம்மோநியர் போன்றவர்கள் தேவனின் இந்த வேலையை எப்படியாது தடுத்துவிட வேண்டும் என்று முயற்ச்சிக்கின்றனர். அம்முயர்ச்சியில் ஒன்றுதான் நெகேமியாவின் பிரயாசங்களை பரியாசம் செய்தது!
நெகே 219.ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களைப் பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள்.
அத்தோடு
நெகேமியா 4:3அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல் மதில் இடிந்துபோகும் என்றான்
அதாவது ஒருவர் பிரயாசபட்டு ஆண்டவருக்காக செய்யும் செயலை"இதெல்லாம் ஒரு வேலையா? நீ செய்வதெல்லாம் ஒன்றுக்கும் உதவாது, அதில் அங்கே குறை இங்கே குறை இது தவறு அது தவறு என்பதுபோன்று வார்த்தைகளை உபயோகித்து நானும் செய்யமாட்டேன் உன்னையும் செய்ய விடமாட்டேன் என்பதுபோன்ற காரியங்களை செய்வதன் நோக்கம் தேவனின்திட்டம் நிறைவேற விடாமல் தடுப்பதே
உதாரணமாக ஆண்டவராகிய இயேசு சிலுவையில் தொங்கும்போது சிலர் வந்து அவரை கீழ்கண்டவாறு பரியாசம் பண்ணினார்கள்
மாற்கு 15:30உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.
ஒருவேளை இந்த பரியாச வார்த்தைகளை கேட்டு இயேசு கோபமாகி "நான் தேவனுடய குமாரன் என்னால் எல்லாம் செய்யமுடியும்" என்று சிலுவையில் இருந்து இரங்கி வந்திருந்தால் தேவனின் திட்டம் அனைத்தும் பாழாகி போயிருக்கும்! அதுபோல் நடந்துவிடாதா என்ற நப்பாசையில்தான் சாத்தான் இயேசுவிடம் மரணம்வரை பரியாசம் செய்து எரிச்சல் மூட்டினான்.
ஆனால் நமதாண்டவர் எதையுமே கண்டுகொள்ளவில்லை பிதாவின் சித்தத்தை சரியாக நிறைவேற்றி சிலுவையில் வெற்றிசிறந்து தேவனின் கரத்தில் தனது ஆவியை ஒப்புகொடுத்தார்.
எனவே அன்பானவர்களே! மன தாழ்மையும் இரக்கமும் அன்பும் நிறைந்த ஒருவர் பிறரை ஒருபோதும் பரியாசம்பண்ண துணியமாட்டார்!அப்படி ஒருவர் துணிந்து பரியாசம்பண்ணுகிறார் என்றால் அது எதிரியின் சூழ்ச்சி எனவே அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் ஆண்டவருக்கடுத்த நமது பணியை தொடர்வோமாக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பரியாசக்காரர்களின் பண்புகள்பற்றி முன்பு எழுதப்பட்ட இந்த கட்டுரையை மீண்டும் ஒருமுறை நாம் வாசித்துகொள்வது நமக்கு அவசியமாகப்படுகிறது.
முக்கியமாக, இந்த பரியாசம்பண்ணும் பண்புள்ளவர்களுக்கு என்னதான் புத்தி சொன்னாலும் அவரது மண்டையில் ஏறுவது இல்லை. இவர்களின் குரூர புத்தியரிந்து தேவனே அவரை அவ்வாறு செய்து திசைமாற ஒப்புகொடுத்துவிட்ட பிறகு, இவர்களை யார் எவ்வளவு திட்டினாலும் ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டுவிடுவார்கள். எதையும் கண்டுகொள்ளவும் மாட்டார்கள். தனது பிழைப்பு நடந்தால் சரி. முடிந்த அளவுக்கு எத்தனைபேரை வசைமாரி பொழிய முடியுமோ அத்தனபேரை தனது வாய்க்கு வந்தபடி சொல்லி தீர்ப்பார்கள். காசா பணமா?
ஆனால் அன்பினால் நிறையப்பட்ட ஆண்டவரின் பிள்ளைகள் இந்த பரியாசக் காரர்களால் அதிகமதிகமாக பரியாசம்பண்ணப்ப்டுபோது சொர்ந்துபோவது உண்டு. இந்த பணி தேவைதானா என்றேகூட கருதும் நிலைக்கு தள்ளப்படுவது உண்டு. அதுபோல் அதிக பிரயாசத்துடன் செயல்பட்டு ஏஞ்சல் TV நடத்தும் சாது சுந்தர் செல்வராஜ் ஐயாகூட சமீபத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதை நாம் அறியமுடியும்.
எப்படியாவது முயன்று தேவபணிகளை தடை செய்வதுதானே சாத்தானின் வேலை அவனுக்கு மானம் மரியாதையா முக்கியம்.
எனவே அன்பானவர்களே சிலுவையில் தொங்கிய இயேசு எப்படி அவமானங்களையும் பரியாசங்களையும் தாங்கிக்கொண்டு தேவனின் சித்தத்தை செய்து முடித்தாரோ அதேமோல் நாமும் நம்மேல் வீசப்படும் பரியாசங்களை தாங்கிக்கொண்டு நமக்கு நியமிக்கப்பட்ட பணியை தொடர்வோமாக!
புலம்பல் 3: 28. அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மௌனமாயிருக்கக்கடவன். 30. தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக. 31. ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். 32. அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)