சுவிசேஷம் சொல்வது என்பது "ஆண்டவராகிய இயேசுவின் சிலுவை மரணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஒருவரை இரட்சிப்புக்குள் வழி நடத்துவது" என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பணியை கிறிஸ்தவர்களாகிய ஒவ்வொரும் செய்யவேண்டும் என்று ஆண்டவராகிய இயேசு கட்டளையிட்டுள்ளார்.
16:15. பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
பவுல் கூட சுவிசேஷம் பிரசங்கித்தலை என்மேல் விழுந்த கடமை என்று குறிப்பிடுகிறார். இந்நிலையில் இப்படித்தான் அல்லது இந்த வழி முறைப்படிதான் சுவிசேஷம் சொல்லவேண்டும் என்று ஏதாவது வரைமுறை இருக்கிறதா என்பதை ஆராயவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
ஒருவர் கொட்டடித்து கூட்டம் கூட்டி சுவிசேஷம் சொல்லலாம் ஒருவர் பெரிய ஸ்பீக்கரை வைத்து பாட்டுபோட்டு சொல்லலாம் ஒருவர் தெருவில் நின்று பொதுவாக பேசலாம் ஒருவர் இயேசுவை பற்றி வலைதளங்களில் எழுதலாம் சிலர் கைப்பிரதி ஊளியங்க்ளை செய்யலாம் இப்படி எந்தவிதத்தில் சுவிசேஷத்தை சொன்னாலும் சொல்லப்படும் அடிப்படை கருத்து என்ன வென்பதைதான் பார்க்க வேண்டுமே தவிர, அவர் கொட்டடிக்கிறார் இவர் பாட்டு பாடுகிறார் இவர் புதிதாக ஏதோ கதை சொல்லி பிரசங்கிக்கிறார் என்று பார்ப்போமானால் இன்று எல்லோர் மேலும் குற்றம் சுமர வாய்ப்பிருக்கிறது.
அதுபோல் "தேவர்கள்" என்று வேதம் குறிப்பிடும் ஜீவிகளைபற்றி தேவன் எனக்கு அருளிய ஞானத்தின்படியே சில கருத்துக்களை தொகுத்து யாரையும் புண்படுத்தாத விதத்தில் நான் சுவிஷேசம் சொல்ல விளைகிறேன்.
ஆனால் நான் வேதத்துக்கு புறம்பான முறையில் கருத்துக்களை சொல்வதாக பலர் கருதுகின்றனர். ஏனெனில் நான் சொல்லும் கருத்துக்கள் அவர்களுக்கு புரியவில்லையாம்! அப்படிஎன்றால் அதன் பொருள் என்ன? "நாங்கள் அனைத்தும் அறிந்தவர்கள் எங்களுக்கு தெரியாமல் ஒரு கருத்தும் இல்லை, நீ சுவிசேஷம் சொல்வதாக இருந்தால் எங்களுக்கு ஏற்றபடி சொல்லவேண்டும்" என்பதுதான் இவர்களின் எதிர்பார்ப்பு.
அவர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதத்தில் 7,8 வசனங்களை ஆதாரமாக காட்டி ஒருவர் இந்த உலக மரணத்தையே ஜெயிக்க முடியும் என்று குறிப்பிட்டால் அதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு மனதில்லை மற்றும் அவர்களுக்கு அது புரிவதும் இல்லை ஏனெனில் அவர்களது மனதில் ஏற்கெனவே எல்லாம் அறிந்த பரிசேய தன்மை இருக்கும்போது இதுபோன்ற உண்மை கருத்துக்களை எவ்வாறு ஏற்க்கமுடியும்?
அன்று இயேசு வாழ்ந்தகாலத்தில் அனேக நல்ல காரியங்களை செய்தபோதெல்லாம் மூச்சுவிடாத பரிசேயகூட்டத்தார் அவர்களுக்கு புரியாத ஒரு வார்த்தையை இயேசு சொல்லிவிட்டால் "நீ பெரியவனோ" என்று கேட்டு அவர்மேல் எறிவதற்கு கல்லுகளை எடுத்துகொள்வார்கள். காரணம் அவர்களைவிட பெரியவர்கள் யாரும் இருக்க முடியாது என்ற எண்ணம்தான்! "நாங்கள் நியாயபிரமாணத்தை கரைத்து குடித்து எல்லாவற்றையும் அறிந்துவிட்டோம், நீ என்ன புதியதாக சொல்கிராய்" என்ற மேட்டிமைதான். அதுபோல் இங்கு "எனக்கு பைபிளை பற்றியும் அதில் உள்ள கருத்துக்கள் மற்றும் மறைபொருள்கள் பற்றியும் அனைத்தும் தெரியும் அவ்வாறிருக்க நீ என்ன புதுகருத்தை சொல்லி இயேசுவை அறிவிப்பது" என்பது போன்ற ஒரு மனநிலையில் பேசுவதை அறியமுடிகிறது.
ஆனால் எனக்கு தேவன் கட்டளையிட்டதை நான் செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன், நாளை ஆண்டவர் முன்னால் நிற்கும்போது அவர்கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். அல்லது எனக்கு கொடுத்த தாலந்துகள் தரிசனங்களுக்கு மற்றவர்கள் பதில் சொல்லமுடியாது. சகோதரர் சிலர் என்னை மனமடிவாக்கியதால் நான் உங்கள் பணியை செய்யவில்லை என்று தேவனிடம் சாக்குசொல்லவும் நான் விரும்பவில்லை! எனவே எனது பணியை தொடர்கிறேன்.
நான் இந்த தளத்தில் எழுதுவது எதுவும் புரியவில்லை என்றால் இங்கு கேட்கலாம் அதற்க்கு வசன ஆதாராத்துடன் பதில் தருகிறேன் (வெளிப்பாடுகள் தரிசனங்கள் என்ற பகுதியில் எழுதுவதை தவிர்த்து - அதை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்) மற்றபடி இப்படிதான் எழுதவேடும் இதற்குள்தான் நமது எழுத்து இருக்க வேண்டும், எல்லோருக்கும் இசைந்ததாகவே நமது கருத்து இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை!
பிலிப்பியர் 1:18 இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.
இவ்வசனத்தில் எப்படியாவது கிறிஸ்த்து பிறருக்கு அறிவிக்கப்படுவதில் சந்தோசம் என்றே கூறுகிறார். ஆனால் நமது சகோதரர்களுக்குதான் அதில் ஏனோ சந்தோசம் இல்லை. ஆகினும் நான் அப்படி கூட செய்வதில்லை "உள்ளதை உள்ளது என்றும் இல்லதை இல்லது" என்று மட்டுமே சொல்ல விழைபவன். இந்நிலையில் நான் எனக்கு உணர்த்தப்பட்டவைகளை மட்டுமே எழுதி இந்து சகோதரர்களுக்கு விளங்க வைக்க முயல்கிறேன்.
கிறிஸ்த்துவையும் அவர் உபதேசங்களையும் கிறிஸ்த்தவத்தின் அடிப்படை கொள்கைகளையும் மறுதலிக்காமல் யாரையும் புண்படுத்தாமல் எவர் கொள்கைகளையும் பரியாசம் பண்ணாமல் எவ்விதத்திலாவது சுவிசேஷம் சொல்வதில் எந்த தவறும் இல்லை என்பதே எனது கருத்து!
-- Edited by SUNDAR on Friday 8th of October 2010 04:36:41 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)