இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இணை வசனங்கள் இருந்தால் தெரிவிக்கவும்!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
இணை வசனங்கள் இருந்தால் தெரிவிக்கவும்!
Permalink  
 


இந்த வினாவை  நான் எழுப்புவதற்கு  முக்கிய  காரணம் இணையத்தில் 
நான் படித்த சில விவாதங்களில் .ஒருவர் பல  வசனங்களின் அடிப்படையில் எழுதும்  ஒரு முக்கிய  கருத்தை  சிலர்  ஒரே ஒரு வசனத்தை காட்டி நிராகரிப்பதும் அதன் மூலம் வேதபுத்தகம் சொல்லும் சத்தியத்தை தங்களுக்கு ஏற்றபடி  புரட்டி புதுபாடம் போதிப்பதும்தான்   
   
விவிலியம்  நமக்கு கீழ்க்கண்ட செய்தியினை தருகிறது:
 
II கொரிந்தியர் 13:1  சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.
மத்தேயு 18:16  இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்.
யோவான் 8:17 இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.
உபாகமம் 19:15  ; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும்.

எந்தஒரு வார்த்தையுமே குறைந்தபட்சம்  இரண்டு பேருடைய சாட்சிகளின் அடிப்படையிலேயே நிலைவரப்படும் என்பதை
வசனம்  நமக்கு தீர்க்கமாக இயம்புகிறது அதற்க்கு இணையாக கர்த்தருடைய வசனம் எதுவும் ஜோடில்லாமல் இராது என்றும் விவிலியம் போதிக்கிறது.
 
ஏசாயா 34:16 கர்த்தருடைய புஸ்தகத்திலேதேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று  
 
இந்நிலையில்  சில முக்கியமான வசனங்களுக்கு என்னால் ஜோடு கண்டுபிடிக்க முடியவில்லை  அவைகளை இங்கு பதிவிடுகிறேன். இதற்க்கு ஜோடுவசனம் தெரிந்த சகோதரர்கள் தயவு செய்து எனக்கு கொஞ்சம் தெரிவிக்கவும். எனது சந்தேகங்களை   நிவர்த்தி செய்துகொள்ளவே இந்த கேள்வியை  கேட்கிறேன் சற்று உதவவும்

ரோமர் 10:4
விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
 
எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
 
I கொரிந்தியர் 13:8 . தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம்,
 
I கொரிந்தியர் 4:6  எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும்
   
ஜோடுஎன்பது பவுல் அப்போஸ்த்தலர் எழுதியதில் அல்லாமல்
மற்ற அப்போஸ்தலர்கள் எழுதிய நிரூபங்களில் சுவிஷேஷங்களில் இருந்தோ அல்லது பழைய  ஏற்பாட்டில் இருந்தோ தரலாம். 

 


__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

1.  ஆதி 15.6. அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.
மத் 5.17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

2.  வெளி 20.12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

SANDOSH wrote:

1.  ஆதி 15.6. அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.
 


ஆதியாகமம் 15:6 அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.

இவ்வசனம  "ஆபிரஹாம் கர்த்தரை விசுவாசித்தான் அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் என்றுதான் சொல்கிறது. நியாயபிரமாணமோ கட்டளைகளோ கொடுக்கப்பட்டிறாத அந்த கால கட்டங்களில் அவன் கர்த்தரை விசுவாசித்தல் ஓன்று மட்டுமே போதுமானதாக இருந்தது. எனவே 
அக்காலத்தில் அவனுக்கு அவனுடைய "விசுவாசத்தை மட்டுமே" தேவன்  நீதியாக எண்ணினார். 
 
 அனால்  "தாவீதை" பற்றி கர்த்தர்  கூறும்போது "
 
I இராஜாக்கள் 15:5 தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.
 
என்று கூறி  அவன்  "என் இருதயத்துக்கு ஏற்றவன்" என்று கூறுகிறார். இதில் எதை எடுத்த்க்கொள்வது? ஆபிரகாம் காலத்தில் நியாயபிரமாணம் இல்லை எனவே அவருக்கு "விசுவாசம்"மாத்திரம் நீதியாக எண்ணப்பட்டது . 
 
தாவீது காலத்தில் கட்டளைகள்  இருந்தது எனவே தை கைகொள்வதை தேவன் விரும்பினார் ன்பதை  அறியமுடிகிறது.   
 
எனவே அதை இணைவசனமாக ஏற்ப்பது ஏற்றதல்ல
என்றே நான் கருதுகிறேன்.


SANDOSH wrote: 
////மத் 5.17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.///

சகோ. சந்தோஷ் மேல்கண்ட இவ்வசனத்தை சொல்லி இந்த வசனம் நியாய பிரமாணம் முடிந்தது என்பதற்கு இணை வசனம் என்று குறிப்பிட்டிருக்கிறார்:
  
அதன் தொடர்ச்சி!

18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 
இயேசுவின் இந்த வார்த்தைகள் நியாயபிரமாணத்தின் வலிமையை
காட்டுகிறதேயன்றி  அதன் முடிவை பற்றி கூறவில்லை.
 
ரோமர் 10:4 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
 
10:4  For Christ is the end of the law for righteousness to everyone who has faith.
 
END என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் முடிவுக்கும் FULFILLMENT என்று சொல்லப்படும் நிறைவேற்றுதலுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு! .  
 
உதாரணமாக:ஒருவர் செய்த கொலை குற்றத்தி நிமித்தம் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டால், அந்த குறிப்பிட்ட மனிதரைப் பற்றிய திட்டம்தான் நிறைவேறுமே தவிர தூக்கு தண்டனையே முடிவுக்கு வந்துவிடாது.
 
 
5:17  Let there be no thought that I have come to put an end to the law or the prophets. I have not come for destruction, but to make complete
 
"ஒழிந்து போகுதல"அல்லது "முடிவுக்கு கொண்டு வருதல்"
என்பதே END என்ற வார்த்தைக்கு சமமானதாகும். இங்கு இயேசு  அவ்வாறு முடிப்பதற்கு  நான் வரவில்லை என்று கூறிவிட்டார்
 
இங்கு ஒருவசனம் இயேசுவே தனது வாயால் there be no thought I have come to put an end to the LAW என்று சொல்ல இன்னொரு வசனம் Christ is the end of the law என்று எதிர்மறையான கூற்றைத்தான் தருகிறதே அன்றி அவ்வார்தைக்கு  இணைவசனம் இது என்று கொள்வது சரியான நிலை அல்ல
 
ஓன்று, நியாயபிரமாணத்தில் ஏதாவது ஒரு பகுதியில் இவ்வாறு "இயேசு பாவங்களுக்கு பலியானபின் நியாயபிரமாணம் முடிவுக்கு வரும்" என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும். அல்லது இயேசு தனது உபதேசத்தில் "என் மரணத்துக்கு பிறகு நியாயபிரமாணம் முடிந்து விடும்" என்று கூறியிருக்க வேண்டும்.அல்லது மற்ற அப்போஸ்தலர்கள் யாராவது இவ்வாறு "நியாயபிரமாணம் முடிந்து விட்டது" என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
 
இதுபோன்ற இணை வசனங்கள் இருதால் தெரிவிக்கவும்  
 
"விசுவாசத்தால் நீதி வருகிறது" என்பதற்கு அனேக இணை வசனங்கள் இருக்கிறது! ஆனால் நியாய பிரமாணம் முடிந்துவிட்டது என்பதற்க்கே எனக்கு இணைவசனம் தேவை.  ஏனெனில்  இதற்க்கான உண்மை பொருள் தெரியாமல் இவ்வசனம் புரட்டப்படுகிறது என்றே நான் கருதுகிறேன்.


SANDOSH wrote: 
///2.  வெளி 20.12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.///

இங்கும் கிரியைக்கு தகுந்த நியாயதீப்பு என்றுதான் வசனம் சொல்கிறதே தவிர அவரவர் விசுவாசத்துக்கு தகுந்த நியாயதீர்ப்பு என்று சொல்லவில்லை.  




__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

BRO. CHILLSAM wrote:

 

 
http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=38657785

மேற்காணும் தொடுப்புக்கு பதிலளிக்க எண்ணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அந்த குறிப்பிட்ட ஜன்னலை மூடாமல் எனது உலாவியில் அப்படியே வைத்திருக்கிறேன்




தாங்கள் சுட்டியுள்ள தொடுப்பு இதுதான்.

தாங்கள்  இந்த  தொடுப்புக்கு  பதில்  தர விரும்பியதற்கு மிக்க நன்றி சகோதரரே. 
 
இப்பொழுதும் ஒன்றும் காலம் தாமதமாகிவிடவில்லை தங்களுக்கு தெரிந்த இணை வசனங்கள் இருந்தால்
தயவு செய்து தாருங்கள்.
 
மேலே நான் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொன்றுமே 
வேதாகமத்தில் முக்கிய கருத்துக்கள் தாங்கள்
கொடுக்கும் சரியான பதில் எனக்கு பேருதவியாக இருக்கும்.
    
அத்தோடு சம்பந்தமுள்ள சம்பவங்களாக இருந்தால்கூட பரவாயில்லை. சிலருக்கு பதிலளிக்க எனக்கு அது அவசியம் தேவைப்படுகிறது.  
  


 



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

சகோதரர் சுந்தர் அவர்களே,

நியாயப்பிராமணம் முடிந்து விட்டது என்பதற்க்கு இணையான வசனம் இல்லை என்று சொல்லியிருந்தீர்கள். அதைப் பற்றி,

நிறைவேறின நியாயப் பிராமணம் :

வேதத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. இயேசுவுக்கு முன்பான காலம்
2. இயேசு இருந்த காலம்
3. இயேசு பரலோகத்திற்க்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு உள்ள காலம்

1. பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,
2. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.

பிதாவாகிய தேவன் தன்னுடைய சித்தத்தை இந்த பூமியில் வாழும் மனிதர்களின் தகுதிகேற்ற வகையிலும் அவர்கள் முன்னேற்றத்தின் அடிப்படையிலும்  வெளிப்படுத்தியும் / நிறைவேற்றியும் வருகிறார். இங்கே முன்னேற்றம் என்னும் போது இந்த உலகில் வாழ்ந்த / வாழும் மக்களின் நல்வினை, தீவினை, அறிவு என்று அனைத்தின் முன்னேற்றமும் அடங்கும்.

இந்த வகையில் தேவன் இந்த உலகில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்ய வேண்டுமானால், அதற்கு ஏற்ற வகையில் மனிதர்கள் முன்னேறியிருக்க வேண்டும். அதாவது அதற்கு ஏற்ற தகுதி மனிதர்களுக்கு வந்தால் மட்டுமே அந்த காரியத்தை செய்ய முடியும்.

இயேசு இந்த பூமிக்கு வருவார் என்று ஏவாளுக்கு வாக்களிக்கப்பட்டும் அவர் இந்த பூமியில் வர 48 தலைமுறைகள் ஆனது. ஏன் என்றால் இந்த 48 தலைமுறைகளுக்கு பிறகு வந்த உலகமே இயேசுவை ஏற்று கொள்ள தகுதி படைத்ததாக இருந்தது.

ஒரு உதாரணத்தோடு இதை சொல்ல வேண்டுமென்றால், ஆதிவாசிகளிடமிருத்து ஒரு ஐன்ஸ்டீனோ, ஐசக் நியூட்டனோ உண்டாக முடியாது. இவர்கள் உண்டாக மனித இனம் அறிவில் ஒரு குறிப்பிட்ட அளவில் முன்னேறியிருக்க வேண்டும்.

இயேசுவின் இரண்டாவது வருகைக்கு கூட மனித இனத்தின் நல்வினைகள், தீவினைகள் ஒரு குறிப்பிட்ட அளவை அடைய வேண்டும். அதனாலேயே இயேசுவும்,

வெளி.22.11. அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
என்றார்.  அது மட்டுமல்லாது

இரத்த சாட்சிகளின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவை எட்ட வேண்டும்.
இரண்டாம் வருகைக்கான மனிதர்களின் வேண்டுதல், எதிர்பார்ப்பு, அவர்களின் பொறுமை ஒரு குறிப்பிட்ட அளவை எட்ட வேண்டும்.
தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் நிமித்தம் இந்த காலம் குறைக்கப்பட்டுள்ளது

இந்த வகையில் தேவன் மனிதர்களின் ஏற்றுக் கொள்ளும் தன்மைக்கு ஏற்ப, முதலில் நியாயப்பிராமணத்தை கொடுத்தார். இவ்வாறு நியாயப் பிராமணம் கொடுத்தற்க்கு இன்னொரு காரணமும் உண்டு
அது மனிதர்களை நியாயத்தீர்ப்பு காலத்திலும் / இந்த உலகிலும் நியாயம் தீர்க்கவே. இந்த நியாயப்பிராமணத்தை கொடுக்காமல் மனிதனை தண்டனைக்கு உட்படுத்தினால் மனிதன் தேவனை நோக்கி

நான் செய்தது தவறு என்பதை முதலில் நீர் சொல்லவேயில்லை பின்னர் நீர் எப்படி என்னை தண்டிக்க முடியும் என்று நியாயமான கேள்வி கேட்க வாய்ப்புண்டு. இதற்காகவும் நியாயப்பிராமணம் கொடுக்கப்பட்டது.

இது ஒரு அரசாங்கம் இயற்றும் சட்டத்தை போன்றதாகும்.
ஒரு அரசாங்கம் சட்டம் இல்லாமல் குற்றவாளியை தண்டிக்க முடியாது. இந்த சட்டங்கள் மனிதனுக்கு தண்டனையை காட்டி பயமுறுத்துவதின் மூலமாக அனேகரை பாவம் செய்வதிலிருந்து தடுக்கின்றன.

இந்த தண்டனைக்கு பயந்து கொண்டு பிறனை கொலை செய்ய முடியாதவன், தன் மனதில் அவனை பல தடவை கொலை செய்து மகிழ்ந்து கொள்கிறான். இதன் மூலம் அவன் சாத்தானின் கருவியாகிறான். ஒரு சிலர் சாட்சி இருந்தால்தானே கொலை செய்தது உண்மையாகும் என்று சொல்லி சாட்சி இல்லாமல் கொலை செய்கின்றனர்.

ஆக சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவு வரையில் பாவம் செய்வதை தடுக்கவும், அவ்வாறு பாவம் செய்தால் தண்டனை பெற்று தருவதற்க்கு ஒரு அமைப்பாகவும் உள்ளது.
இதன் மூலம் அன்பானது தேவனால் மக்களுக்கு கட்டளையாக மற்றும் தேவனின் வாக்காக சொல்லப்பட்டது.

அடுத்ததாக நியாயப் பிராமணத்தை மீறினதால் தண்டனைக்கு உள்ளாகும் மனிதன் அந்த தண்டனையிலிருந்து தப்பிக்க தேவனை நோக்கி பார்க்கவும் ஒரு வாய்ப்பாய் அமைகிறது.
இந்த நியாயப் பிரமாணம் என்பது தேவன் அருளிய இஸ்ரேல் நாட்டிற்க்குரிய அரசாங்க சட்டங்கள் ஆகும்.

அதில் அனைத்து உலக மக்களுக்கும் பொதுவான பகுதிகள் கட்டளைகள் எனப்படுகின்றன.
உதாரணமாக கொலை செய்யாதிருப்பாயாக என்பது கட்டளை. அமலேக்கியன் பேரை வானத்தின் கீழ் இராதபடி நாசமாக்குங்கள் என்பது நியாயப் பிராமணம்.

இந்த நியாய பிராமணத்தை நிறைவேற்ற முடியாமல் இஸ்ரவேல் மக்கள் தோற்று போனார்கள். மனிதர்களுக்குள் அன்பை உருவாக்குவதில் தேவையான அளவு நியாயப் பிரமாணம் வெற்றிய்டையவில்லை.

உலக மக்களும் சாத்தானுக்கு (பாவத்துக்கு) எதிர்த்து நிற்க்கக் கூடிய வல்லைமையை கொஞ்சம் கொஞசமாக இழந்து போனார்கள்.
இப்படிப்பட்ட பாவம் பெருகின நிலையில், அதை ஈடுகட்ட தேவனுடைய கிருபையும் பெருக வேண்டியிருந்தது. அதற்காக இயேசு இந்த பூமிக்கு வர வேண்டியதாய் இருந்தது.

இந்த கால கட்டத்தில் உலகமெங்கும் உள்ள மக்கள் பின்னர் வரப் போகும் இயேசுவை ஏற்று கொள்ளும் பொருட்டு கி.மு 500 ல் அன்பை பற்றின போதனைகள் உலகமெங்கும் பரவியது. அந்த கால கட்டத்தில் தான் மனித சமுதாயம் ஒரு ஆன்மிக புரட்சியை சந்தித்தது.

இந்த போதனைகளின் நிறைவாக வந்தவரே இயேசு கிருஸ்து. இவர் இஸ்ரவேலுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பிரமாணங்களையும் மாற்றி இரண்டே இரண்டு கற்பனைகளாக கொடுத்தார்.
அதாவது நியாயப் பிரமாணத்தின் நிறைவாக அன்பை பற்றி போதித்தார். நியாயப் பிராணம் அன்பாக பரிணாமம் அடைந்தது.

இதுவே நியாயப் பிரமாணத்தின் நிறைவேறுதல். இது எதற்க்கு ஒப்பானதென்றால் ஒரு பூ காயாகி கனிவதற்க்கு சமமானதாகும்.
ஒரு புறத்தில் பார்த்தால் பூ காய் அல்ல. வேறு வகையில் பார்த்தால் பூ தான் உருமாறி காயாக உள்ளது ஆகவே பூ தான் காய். இந்த வகையில் இயேசு பூவை காயாக மாற்றினார்.

இவ்வாறு மாற்றப்பட்ட நியாயப் பிராமணம் அன்பை அடிப்படையாக கொண்டது ஆதலால் அது ஒரு காலும் ஒழியாது. ஏனெனில் எப்போதும் ஒழியாதது அன்பு ஒன்றே.

இயேசு இந்த உலகில் இருந்த போது அவர் நியாயப் பிராணத்தை பின்பற்றின மக்களுக்கு அனபை பற்றி போதித்தார். ஆனால் நியாயப் பிராணம் பூரணப்படவில்லை. அதாவது இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய காலம். இந்த காலத்தில் இரண்டும் வழக்கத்தில் இருந்தது. அதனாலேயே இதனையும் விடாதிருக்க வேண்டும், அதனையும் விடாதிருக்க வேண்டும் என தசம பாகத்தை பற்றி கூறினார்.  அது மட்டுமல்லாது அந்த நேரத்திலே கர்த்தருடைய ஆலயமும் இருந்தது.

இயேசுவின் மூலம் அன்பை பற்றின உபதேசம் வார்த்தையாக மட்டுமல்லாமல், செயல்படுத்தியும் தேவனால் உலக மக்களுக்கு உணர்த்தப்பட்டது.

இயேசு பரமேறிய பிறகே நியாயப் பிராணம் பூரணப்பட்டது. ஆகவே அதன் பிறகு வந்தவர்கள் நியாயப் பிராணம் அன்பாக மாறினதால் நியாயப் பிராணம் முடிந்தது என்ற செய்தியை அறிவித்தனர். இதை இயேசுவே சொல்ல முடியாது ஏனெனில் அவர் அதை மாற்ற வந்தவர். அவர் இருந்த காலம் மாறிக் கொண்டிருந்த காலம்.

இயேசுக்கு பிறகு மனிதனே தேவனுடைய ஆலயமாக மாறினான். நியாயப் பிராணம் அன்பாக மாறியது. ஆகவே மனிதன் தசம பாகம் கொடுக்க வேண்டும் என்ற கட்டளையிலிருந்து விடுபடுகிறான்.

தசம பாக கட்டளையிலிருந்து அன்பின் பிரமாணத்தை (அன்பு கட்டளை அல்ல) ஏற்று கொண்ட மக்கள் தங்கள் செல்வத்தை எல்லாம் தாங்களாகவே அப்போஸ்தலரின் பாதத்தில் கொண்டு வந்து வைத்தனர். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருந்தது.

இயேசு சொன்ன அன்பின் பிரமாணத்தில் எல்லா நியாயப் பிரமாணங்களும் அடங்கி உள்ளதால் தனியாக நியாயப் பிராணம் தேவையில்லை.

ஆனால்,

அன்பின் பிரமாணத்தை பற்றின போதனையை செய்ல்படுத்தும் அளவுக்கு இன்று உள்ள மக்கள் தேவனோடு ஐக்கியப்படவோ அல்லது அந்த அளவுக்கு தேவ்னின் கருவியாக மாறவோ விருப்பமில்லாது இருக்கிறார்கள்.

அனேகர் பண ஆசை, இச்சை போன்ற பாவத்தில் விழுந்து கிடக்கின்றனர். சபைகளில் நியாயப் பிரமாணம் முடிந்து விட்டது என்று சொல்லி பாவத்தை உணர்த்தும் அனேக வார்த்தைகள் பழைய ஏற்பாட்டில் இருந்து போதிக்கப்படுவதில்லை. இயேசுவை பற்றின அன்பின் உபதேசம் மனிதர்களுக்கு உறைப்பதில்லை.

ஆகவே இன்றைய நிலைமையில் நியாயப் பிராணம் முடிந்து விட்டாலும் கூட பாவத்தை குறித்ததான அனேக நியாயப் பிரமாண வசனங்கள் (தசம பாகம் போன்றவைகள் நீங்கலாக) சபைகளில் போதிக்கபட வேண்டியது அவசியமாகிறது.

இயேசுவின் போதனைகளுக்கும், பவுலின் போதனைகளுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. அது என்னவெனில்,

இயேசுவின் போதனை : பரிசுத்தமாய் வாழ்ந்து தேவனை நோக்கி பார்ப்பது
(இதை நிறைவேற்ற அனேகரால் முடியாது. உதாரணம் இச்சையோடு ஸ்திரியை பார்ப்பதுவும் பாவம் போன்ற உபதேசங்கள் ஏனெனில் மனிதன் அந்த அளவு பலமுள்ளவன் அல்ல. தன் பலவீனத்தை மனிதன் உணர்ந்து தேவனை நோக்கி பார்க்க வேண்டும் என்பதும், தனக்கு பிறகு வரப்போகும் பரிசுத்த ஆவியானவரின் அவசியத்தை மனிதனுக்கு உணர வைப்பதுவுமே இதன் நோக்கமாகும்)

பவுலின், பிற அப்போஸ்தலர்களின் போதனை : தேவனோடு ஐக்கியம் கொள்ளுவதால் பரிசுத்தம் அடைவது.
(இவர்களின் கால கட்டத்தில் மனிதனுக்குள் வாசம் செய்ய பிதா மற்றும் குமாரனின் அம்சமான பரிசுத்த ஆவியானவர் (ஒரு சிலர் சொல்வது போல இவர் மூன்றாவது தேவன் அல்ல) அருளப்பட்டு விட்டார் ஆகவே இவர்களின் போதனை இவ்வாறாக இருந்தது)
பவுலின் போதனையை இயேசு சொல்ல முடியாது. இயேசுவின் போதனையை பவுல் சொல்ல முடியாது. ஏனெனில் அது அது அந்த அந்த கால கட்டத்துக்கானது.

கிருபையே முக்கியம். கிரியை தேவையில்லை என்று சிலர் சொல்கின்றனர். ஆதலால் கிரியைகள் பற்றியும் போதிக்கபடுவதில்லை. கிருபை என்பது ஒரு நொடியில் அல்லது நிமிடத்தில் நடந்து விடும் காரியமாகும். அது மட்டும் போதும் என்றால் என்னை மன்னியும் என்று வேண்டின உடனேயே இரட்சிப்பை கொடுத்து நீ அடைய வேண்டியதை அடைந்து விட்டாய் உன்னை எடுத்து கொள்ளுகிறேன் என்று தேவன் எடுத்து கொள்ளலாம்.

ஆனால் அவர் அதன் பிறகும் மனிதனுக்கு ஒரு வாழ்க்கையை தருகிறார் என்றால் அவனிடம் ஏதோ ஒன்றை எதிர் பார்க்கிறார் என்றே அர்த்தம்.

இரட்சிக்கப்பட்ட பிறகு தேவன் வாழ்னாளை தருவது தேவனுக்கேற்ற காரியங்களை, கனிகளை அவரோடு ஐக்கியப்படுவதால் நாம் செய்வோம் என்று அவர் நம்மை நம்புவதாலேயே. அவரின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் மனிதன் மட்டுமே (மனிதனின் எல்லைகளை தேவன் அறிவார். அவர் அவனுக்கு மிஞ்சினது ஒன்றையும் அவன் மேல் சுமத்த மாட்டார்) எந்த துன்பமும் இல்லாமல் இக, பர சுகங்களை அனுபவிக்க முடியும். இதை புரிந்து கொள்ள லாசரு-ஐஸ்வரியவான் உவமையை பார்ப்போம்.

பாதாளத்தில் வேதனை அனுபவிக்கும் ஐஸ்வரியவான் கூட இயேவை அறிந்திருப்பான் என்றால், நரகத்துக்கு தப்பி புதிய பூமிக்கு செல்ல முடியும். அதுதான் கிருபை.

ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பாதாளத்தில் அவன் அனுபவிக்கும் வேதனை அவன் செய்த / செய்யாத கிரியைகளின் விளைவால் அவன் பெற்று கொண்டது.

அது போலவே

தேற்றப்பட்ட லாசரு இயேசுவை அறியாதவன் என்றால் அவன் நரகத்திற்க்கு செல்பவனாக இருப்பான் ஏனெனில் அவன் இரட்சிக்கபடவில்லை.
ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பாதாளத்தில் அவன் அனுபவிக்கும் ஆறுதல் அவன் செய்த / செய்யாத கிரியைகளின் விளைவால் அவன் பெற்று கொண்டது.

(இவ்வாறு பாதாளத்தில் இயேசுவை அறியாதவர்களுக்கு அவர்கள் அறிந்து கொள்ளும்படி ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என நான் கருதுகிறேன். அங்கும் மறுதலிப்பவர்கள் நரகத்துக்கு மட்டுமே செல்ல முடியும். அவன் எவ்வளவு நல்லது செய்திருந்தாலும் அதன் பலன் பாதாளத்திலேயே அவனுக்கு சரிகட்டப்படும்)


-- Edited by SANDOSH on Thursday 18th of November 2010 03:14:48 AM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

MOSES GIVEN LAW

JESUS SHOWS LOVE

JESUS CONVERTS LAW TO LOVE

AND THERE IS NO END FOR LOVE

THESE ARE ALL PLAN OF FATHER IN HEAVEN

AS PER THE REQUIREMENT OF HUMAN AT EVERY AGE





__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard