இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எமது அடிப்படை விசுவாசமும் விளக்கமும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
எமது அடிப்படை விசுவாசமும் விளக்கமும்!
Permalink  
 


எந்த ஒரு மனிதன் மூலமாகவும் இறைவனைபற்றி அறியாமல் அவர் தம்மை வெளிப்படுத்தியதன் மூலமே ஆண்டவரை அறிந்துகொண்டாதால்  அதன் அடிப்படையிலேயே எமது விசுவாசம்  உள்ளது. அவ்விசுவாசம் வேதாகம வசனங்களுக்கு இசைந்ததாகவே உள்ளது 

எமது விசுவாசம்:

வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவனாகிய ஏக இறைவனை நாம் விசுவாசிக்கிறோம். அவரே எல்லாவற்றிலும் எல்லாமாய் இருக்கிறவர். யூதனானாலும்  கிரேக்கனானாலும் எந்த மதத்தை  சார்ந்தவர்களானாலும் அவர்கள்  எல்லோருக்கும்  அவரே இறைவன்!  இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் எந்த ஒரு காரியனாமனாலும் அவருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை!
 
அவர் மிகுந்த அன்புள்ளவர், இரக்கமும் மனதுருக்கமும் நிறைந்தவர் ஆவார், நீடிய சாந்தம் மற்றும் பொறுமையுள்ளவர்  மிகுந்த தாழ்மை உள்ளவர், ஜனங்களுக்காக பரிதபிப்பவர்,  பட்சபாதம் பார்க்காதவர், பரிசுத்தவமானவர், பாவங்கள் அண்டமுடியாதவர், நீதி/
நேர்மை என்னும் சிங்காசனத்தில் வீற்றிருப்பவர். துதிகளின் மத்தியில் வாசம்செய்பவர், ஆனால் பாவத்தை
கடுமையாக வெறுப்பவர் பாவத்தின் கொடூர தன்மையை முழுவதும் அறிந்தவர் எரிச்சலுள்ளவர் அக்கிரமங்களை விசாரிப்பவர் மற்றும்  நீதியுள்ள  நியாயாதிபதி!       
 
ஒருவர்கூட கெட்டுபோவது அவரது சித்தமோ விருப்பமோ இல்லை. இந்த உலகில் உண்டாக்கப்பட்ட சகல சிருஷ்டி களையும்  மீட்டுவிடும் நோக்கிலேயே அவர் இன்றுவரை செயல்பட்டு வருகிறார்.  அவர் யாரையும் தள்ளிவிடுகிற இறைவன் அல்ல. எல்லோரும் அவரது கரத்தின் கிரியைகளே! அவர் ஆவியாய் இருக்கிறவர் அவருக்கு எந்த உருவமும் கிடையாது.  (மேலே உள்ள அனைத்திற்கும் வேதாகமத்தில் வசன ஆதாரம் உள்ளது       
 
அனேக வல்லமைகளின் தொகுப்பாக இருந்த எலோஹீம் எனப்படும் அந்த தேவன், தீமை  மற்றும் அசுத்தத்தை இந்த பிரபஞ்சத்தில் இருந்து  முற்றிலும் வெளியேற்றும் பொருட்டு தனது வல்லமைகளை சில பகுதிகளாக பிரித்துகொண்டார். 
 
அவரிலிருந்து உருவான  வல்லமையுள்ள ஆள்த்துவங்கள்
 
1. தேவனாகிய கர்த்தர்
2. கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து  
3. பரிசுத்த ஆவியாகிய தேற்றவாளர்  
 
இவ்வாறு தனது வல்லமைகளை அவர் பிரித்து கொண்டாலும் அவர் ஒருவரே! ஒன்றுக்குள் ஒன்றானவர்களே! என்பதையும் விசுவாசிக்கிறோம். இம்மூன்று  பிரிவுகளும் தனித்தனியாகவும் செயல்படவும் முடியும் சேர்ந்தும் செயல்பட முடியும்.  அதாவது பிதாவும் கிரியை செய்ய முடியம் இயேசுவும் தனியே கிரியை செய்ய முடியும் அதை இயேசுவே தனது வாயால் சொல்லியும் இருக்கிறார் இன்றுவரை அவ்வாறு செயல்பட்டும் வருகிறார்கள்.  
 
இவர்களைப்பற்றி தனிதனிய சிறு விளக்கத்தை  பார்க்கலாம் .....

 

-- Edited by இறைநேசன் on Saturday 30th of October 2010 11:43:34 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

தேவனாகிய  கர்த்தர் :
 
யாவே, யகோவா, சேனைகளின் தேவன், கர்த்தராகிய ஆண்டவர்  என்று பல்வேறு பெயர்களில் வேதாகாமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேவத்துவத்துக்குள்
மிகவும் முக்கியமானவரும்
அனைத்துக்கும் நடுநாயகமானவரும்  இவரே! 
 
ஓசியா 12:5 கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம்.
சங்கீதம் 83:17 யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்
 
எனது ஆத்மநாயகரும் இவரே!.என்  தேவனும் என உயிர் மூச்சும் இவரே! என்னை தெரிந்துகொண்டு  அபிஷேகித்து நடத்தி,  பாவ மன்னிப்புக்காக இயேசுவை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று எனக்கு போதித்தவரும் இவரே. எந்தமனிதன சொல்லியும் நான் இயேசுவை ஏற்க்கவில்லை,  இவர் கட்டளையிட்டதன் அடிப்படையிலேயே நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன். 
 
எரேமியா 10:10 கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்
 
இவரே நமது ஆதி தகப்பனாகிய ஆதாம் ஏவாளை மண்ணினால் படைத்தவர். நாம் தற்போது காணும் இந்த வானம் பூமி அனைத்தும் இவராலே படைக்கப்பட்டது. 
 
ஏசாயா 45:12 நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷர்களைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்
 
பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஆவியை கொடுத்து அவர்களது சுவாசத்தை தனது கையில் வைத்திருப்பவர் இவரே!
 
ஏசாயா 42:5 வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குக் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் 

என்னை என்தாயின் கர்ப்பத்தில் உருவாக்கிவரும் இவரே: என்னை கரம்பிடித்து வழி நடத்துபவரும் இவரே  
 
ஏசாயா 44:24 உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.

சுருங்க சொல்லின்:
உலகில் நடக்கும் அனைத்து காரியங்களுக்கும் இவரே காரண கர்த்தர். இந்த உலகத்தின் மெய்யான அதிபதி இவரே! முந்தினவரும் இவரே பிந்தினவரும் இவரே!  இவருக்கு முன்னால் எந்ததெய்வமும் இருந்தது கிடையாது, இவருக்கு பின்னாலும் எந்த தெய்வமும் வரப்போவது இல்லை      

ஏசாயா 
44:6. நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
ஏசாயா 43:10   எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை    
ஏசாயா 44:6 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லை்.
ஏசாயா 45:5 நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை

இவருக்கு சமானம் என்று சொல்வதற்கு யாருமே இல்லை!
 
ஏசாயா 46:9 ; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை.

இப்படி அனேக வசனங்களின் "யகோவா" தேவனாகிய கர்த்தர் திரும்ப திரும்ப சொல்லியிருப்பதால்.  இவரைத்தவிர வேறு யாரையும் தேவன் என்ற நிலையில் அழைப்பது ஒரு தவறான நிலை என்பதை நாம் முதலில் அறியவேண்டும்.

உபாகமம் 5: 6 உன் தேவனாகிய கர்த்தர் நானே. 7 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
யாத்திராகமம் 20:3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
சங்கீதம் 81:9 உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம் 
 
உன் தேவனாகிய கர்த்தர் நானே என்னயற்றி வேறு தேவர்கள் உனக்கு வேண்டாம் என்று கர்த்தர் திட்டவட்டமாக சொல்வதால் அவர் ஒருவரை மட்டுமே தேவன் என்று அழைப்பதே சரியான வழிமுறையும் தேவனின் வார்த்தைகளுக்கு கீழ்படியும் நிலையும் ஆகும்! .   .  
 
தேவன் என்ற சொல்லுக்கு ஒரே ஒரு பொருள்தான் உண்டு அது  "யகோவா தேவனே" தமிழில் அவரை "கர்த்தராகிய தேவன்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
 
 


-- Edited by SUNDAR on Tuesday 2nd of November 2010 11:01:16 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

நாம் விசுவாசிக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து:

நமது கர்த்தர், நமது இரட்சகர், நமது ஆண்டவர், சமாதான கர்த்தர்,
வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு, மனுஷ குமாரன், தேவனின்
வார்த்தை, என்று பெல்வேறு பெயர்களில் வேதாகமம் குறிப்பிட்டிருக்கும் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவை, யார் என்பது பற்றி அதிகம் யாருக்கும் விளக்க வேண்டிய தேவையே இல்லை என்று கருதுகிறேன்.

ஏனெனில் அவர் வழியாகத்தான் நாம் கிறிஸ்த்த்வத்துக்குள் அடியெடுத்து வைக்கிறோம்!
அவரே வழி!  அவரே சந்த்தியம்! அவரே நமக்கு ஜீவனுமானவர்! அவரில்லாது ஒருவரும் தேவனிடத்தில் போகவே முடியாது!

நம்முடைய பாவங்களை சுமந்து தீர்த்தவர், நமக்காக நிந்தைகளையும் அவமானகளையும் தாங்கியவர், நமக்காக சிலுவையில் கடைசி சொட்டு இரத்தத்தை வரை சிந்தி, தனது ஜீவனை கொடுத்து நம்மை மீட்டவர். இவர் இல்லை என்றால் நம்மில் யாருக்குமே மீட்புக்கான வழி இல்லை! தேவனிடம் ஒப்புரவாகும் பாக்கியமும் இல்லை.

இவ்வளவு மேன்மைகளை தன்னிடத்தில் கொண்டிருக்கும் நமது ஆண்டவராகிய இயேசுவை என் விசுவாசத்தின் அடிப்படையில் சற்று விளக்க விளைகிறேன்!

யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
யோவான் 1:2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்

ஆதியிலே தேவனோடு அவருடைய வார்த்தையாக இருந்தவரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து

யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்;

ஆதியிலே தேவனோடு இருந்த அந்த வார்த்தையானது மனுஷர்களை பாவத்தில் இருந்து மீட்கும் பொருட்டு மாம்சமானது. அவரே இயேசு கிறிஸ்த்து!

ஆண்டவாராகிய இயேசு தேவனின் ஒரு பகுதி என்றும் எனவே அவரையும் தேவன் என்று கருதுவதில் எந்த தவறும் இல்லை என்று நான் பல வசனங்கள் மூலம் ஏற்கெனவே விளக்கியிருக்கிறேன்.

கீழ்கண்ட சுட்டியை பார்க்கவும்!

இயேசுவும் பிதாவும் ஒருவரா?
 Add/remove tags to this thread
 16-em-plus-b-d.png
 

இன்னும்கூட ஒரு சிறு விளக்கம் கொடுக்க விளைகிறேன்!

பிதாவாகிய தேவன் }======= தேவனாகிய கர்த்தர் 
                              }======= கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து

அதாவது "தேவனாகிய கர்த்தரின்" அடுத்தநிலையோ அல்லது "தேவனாகிய\ கர்த்தரோ"  இயேசு அல்ல! பிதாவாகிய தேவனின் இன்னொரு நிலையே கர்த்தராகிய இயேசுகிறிஸ்த்து. "பிதாவாகிய  கர்ததர்" என்றோ "கர்த்தராகிய பிதா" எனறோ வசனம் எங்கும் சொல்லவில்லை யெகோவா தேவனேதான் இயேசுவாக வந்தார் என்பதெல்லாம் தேவத்துவத்தின் உண்மைகளை அறியாதவர்கள் சொல்லும் தவறானஒரு கருத்துபோல இருந்தாலும் மிகவும் மைநூட்டாக ஆராய்ந்தால் அதிலும் உண்மை இருப்பதை அறியலாம்.

சங்கீதம் 110:1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்

என்று தாவீது தெளிவாக கூறியிருக்கிறார்.

இங்கு கர்த்தர் என்பது "யகோவா தேவனையும்" "ஆண்டவர்" என்பது ஆண்டவராகிய இயேசுவையும் குறிக்கும் பதமாக உள்ளது. 'கர்த்தர்" என்னும் தனிப்பட்ட ஆள்தத்துவம் உள்ள தேவன், "ஆண்டவர்" என்னும் இயேசுவிடம் எனது "வலது பாரிசத்தில் உட்காரும்" என்று  பேசியிருக்கிறார் என்பதை வசனம் தெளிவாக சொல்கிறது. பின்னர் "அவரே இவர்" என்ற கருத்து எப்படி சரியாக முடியும்?

என்னுடைய கருத்துப்படி:

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்த்து யார் ? தேவனின் வார்த்தை (யோ 1:1)

அவர் தேவனா?      ஆம்! அவர் தேவனின் ஒரு பகுதி எனவே தேவனே!
                               (ஏசா:9:6)வல்லமையுள்ள தேவன்

அவரை தேவன் என்று அழைக்கலாமாதவறில்லை என்றே கருதுகிறேன்
ஆகினும்
  அவரோ  அல்லது கர்த்தரோ அவரை தேவன் என்று அழைக்க சொல்லவில்லை

பின்னர் இயேசுவை எவ்வாறு அழைப்பது? தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்த்து. அல்லது ஆண்டவராகிய இயேசு (இந்த உலகத்தை நித்தியமாக ஆளப்போகிறவர் அவரே)

இக்காரியங்களை புரியும் நிலையில் உள்ள குழப்பத்தை போக்க ஒரு சிறு உதாரணத்தை முனவைக்கிறேன்:

இந்தியாவின் பக்கம் உள்ள அரபிக்கடல், வங்காள விரிகுடாக்கடல் இரண்டையும் எடுத்துகொள்வோம். இந்த இரண்டுமே இந்திய பெருங்கடலின் ஒவ்வொரு பகுதிகளே.

இப்பொழுது அரபிக்கடலை காட்டி, இதுதான் இந்தியப்பெருங்கடலா? என்று கேட்டால் இல்லை இது அரபிக்கடல் என்று சொல்லலாம். ஆனால் உண்மையில் அந்த அரபிக்கடலும் இந்தியப்பெருங்கடலே என்றும் கூறலாம். இன்னொரு புறம் இந்த இந்தியபெருங்கடல்தான்  அரபிக்கடலை உருவாக்கியது என்றும்கூட கூறலாம்.

அதாவது இயேசு மாமிசமாக வந்ததால் அவரது பெயர்தான் வேறு மற்றபடி தேவனும் இயேசுவும் ஒன்றுக்குள் ஒன்றானவர்களே!



-- Edited by SUNDAR on Friday 12th of November 2010 10:36:31 AM



-- Edited by SUNDAR on Saturday 8th of October 2011 03:19:29 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 627
Date:
Permalink  
 

திரியின் முக்கியத்துவம் கருதி மீண்டும் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட கேட்டுக்கொள்கிறேன்

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard