இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பணம் எல்லாவற்றிற்கும் உதவும்- நம்மை பாதாளம் கொண்டுபோகவும்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
பணம் எல்லாவற்றிற்கும் உதவும்- நம்மை பாதாளம் கொண்டுபோகவும்
Permalink  
 


 
இந்த உலகத்தில் எதை செய்ய வேண்டும் என்றாலும் பணம் பணம் பணம் தான்

இப்படி  இந்த பண ஆசை உலகத்தில் உள்ள எல்லோரிடத்திலும்  இருக்கும்ஒன்று

பணம் தேவைதான் ஆனால் பணமே என்று இருப்பது தான் தவறு
 
இந்த பண ஆசையினால் விழுந்தவர்களை வேதத்தில் பார்த்தல் 

பிலேயாம் 
: அருமையான வரம் கர்த்தரோடு பேசுபவன் பண ஆசையினால் அழிந்து போனான்

கேயாசி
 : எலியா எலிசா என்ற வரிசையில் பெரிய தீர்கதரிசியாய்  இருக்க வேண்டியவன் பண ஆசையினால் சாபத்தை வாங்கி கொண்டான்

யூதாஸ்
 : இயேசுவின் சீடர்கள் வரிசையில் இருந்தவன் பண ஆசையினால் அருமையான பாக்கியத்தை இழந்தான்

இன்னும் வேதத்தில் பண ஆசையினால் இறந்தவர்களும்  உண்டு  இவர்கள் மன்னிப்பு தேவனிடத்தில் கேட்டார்கள இல்லையா என்று தெரிய வில்லை அல்லது இந்த பண ஆசைக்கு  மன்னிப்பு  இல்லையா என்று தெரிய வில்லை
 
பணம் எல்லா தீமைக்கும் வேறாய் இருக்கின்றது
 
அதிக முறை சுந்தர் சொல்வது போல் நமக்கு அன்றைக்கு தேவையான ஆகாரமும் உடுக்க உடையும் இருந்தால் போதும்
என்று கர்த்தருக்கு உண்மையாக வாழ்தோம் என்றால்

வெளிபடித்தின  விசேசத்தில் தேவன்  சொல்வது போல்
ஜெயம் கொள்கின்றவன் எவனோ அவனுக்கு தேவன் செய்வேன் என்று சொன்னதை நிச்சயம் செய்வார்

நம்மிடம் பண ஆசை இருந்தால் நிச்சயம் எல்லாவற்றிற்கும் உதவும் இந்த பணம் பாதாளத்தில் கொண்டு போகவும் உதவும் என்ற என்னத்தை மனதில் வைக்க வேண்டும்
 

 நீதிமொழிகள் :  30 - 8 , 9 இந்த வசனத்தை வாசித்து பாருங்கள்
 

தேவைகளை பற்றிய அருமையான வசனம் எனக்கு மிகவும் பிடித்த வசனம்  



-- Edited by EDWIN SUDHAKAR on Monday 11th of October 2010 09:58:55 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: பணம் எல்லாவற்றிற்கும் உதவும்- நம்மை பாதாளம் கொண்டுபோகவும்
Permalink  
 


EDWIN SUDHAKAR wrote:
நம்மிடம் பண ஆசை இருந்தால் நிச்சயம் எல்லாவற்றிற்கும் உதவும் இந்த பணம் பாதாளத்தில் கொண்டு போகவும் உதவும் என்ற என்னத்தை மனதில் வைக்க வேண்டும்

  
பல்வேறு  காரணங்களை  சொல்லி பணத்தை சேர்த்து வைக்க நினைக்கும் பாஸ்டர்களும் பல விசுவாசிகளும தங்கள் செய்கைகளை நியாயப்படுத்த எடுத்துகாட்டுவது தாங்கள் குறிப்பிடும்  வசனமாகிய 
 
பிரசங்கி 10:19   பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்   
 
என்ற வசனமே.
 
இந்த "எல்லாவற்றுக்கும்' என்கிற வார்த்தையில் "பாதாளத்துக்கு கொண்டுபோகுதல்" என்பதும் அடங்கும் என்பதை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
 
நிச்சயமாக இன்றைய உலகில் பணமே மனிதனை பாதாளத்துக்கு கொண்டுபோகும் மிகப்பெரிய காரணி யாகவும். உலகில் நடக்கும் அனேக  காரியங்களுக்கு அடிப்படை காரணமாகவும் அமைந்துள்ளது என்பதை அறியவேண்டும்.
 
"பணம்சேர்ப்பது தவறுஇல்லை பிரதர், பண  ஆசைதான் கூடாது" என்று சாமார்த்தியமாக பேசும் பல சாகசவாங்களை நான் பார்த்துவிட்டேன்.  ஆனால் பணம் சேர்ப்பதற்கும் பண ஆசைக்கும் இடையே உள்ள நூலிழை  வேறுபாட்டை ஒருவர் சுலபமாக கடந்துவிட அனேக வாய்ப்புகள் இருக்கிறது.
 
எனவே பணத்தை கையாளுவதில் கவனம்தேவை இல்லையேல் பாதளம் போவதை தவிர்ப்பது கடினம்!

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard