இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "வேதபுரட்டு" என்றால் என்ன ?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
"வேதபுரட்டு" என்றால் என்ன ?
Permalink  
 


"வேதபுரட்டு" என்ற இந்த வார்த்தையை நாம் பல இடங்களில் பலர் பயன்படுத்த கேட்டிருக்கலாம். ஆனால் பலர் அதற்க்கு உண்மை பொருள் தெரியாமலேயே பயன்படுத்துவதாக நான் கருதுகிறேன். 
 
வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு வசனத்தை தனக்கு ஏற்றபடி அல்லது தாங்கள் கொள்கைக்கு ஏற்றபடி  புரட்டி போதிப்பதுதான் வேதபுரட்டேயன்றி ஒரு சிலருக்கு நாம்சொல்லும் வார்த்தைகள் புரியும்படிக்கு வேதத்தில் இல்லாத சில காரியங்களை சொல்லி போதிப்பது வேதபுரட்டில் அடங்காது.  
 
பொதுவாக வேதபோதனை செய்பவர்கள் அந்த  வேத வசனங்களை கேட்கும் விசுவாசிகளுக்கு அவர்கள் சொல்லும் கருத்துக்கள் எளிதாக புரியும்படிக்கு அவர்கள் அறிந்த பொருளில் ஒரு கதையை  சொல்லியோ அல்லது ஒரு சாட்சியை சொல்லியோ அல்லது தாங்கள் வாழ்வில் நந்தத உண்மை சம்பவங்களை  சொல்லியோ அதற்க்கு தொடர்புடைய வேதவசனங்களை போதிப்பது இயல்பானது. அதுபோன்ற ஒரு சம்பவம் வேதபுத்தகத்தில் எழுதப்படவில்லை என்றாலும் அதனால் வரும் பயன்களை கருத்தில்கொண்டு அதற்க்கு இசைவான  வசனங்களை விளக்கும் பொருட்டு  அது போதனையோடு சேர்க்கப்படுகிறது. 
 
இவ்வாறு தாங்கள் சொல்ல நினைக்கு அடிப்படை கருத்தை விளக்க வேதத்தில் இல்லாத ஒரு கருத்தை அல்லது சம்பவந்த்தை அல்லது கதையை  அல்லது நிகழ்ச்சியை சேர்த்து போதிப்பது வேதபுரட்டு என்று கருதுவோமாயின் இன்று உலகில்  எல்லோருமே வேத புரட்டர்களே!
 
ஆனால் வேதபுரட்டு என்பதற்கு சரியான பொருள் அதுவல்ல  வேத வசனத்தை புரட்டி (அதாவது மாற்றி பொருள்சொல்லி  போதிப்பதையே குறிக்கும்!.
 
வேத புரட்டல்களுக்கு சில உதாரணங்கள்:
 
1. "யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்". என்று வேதம் போதிக்க, "இயேசுவே எல்லாம்" என்று போதிப்பதோ அல்லது "தேவனே எல்லாம்" ஏற்று போதிப்பது இரண்டுமே  வேத புரட்டல்களே!    
 
2. திரித்துவம் என்ற வார்த்தை வேத புத்தகத்தில் இல்லாத பட்சத்தில் அப்படி ஒரு திரித்துவ தத்துவத்துக்குள் அநாதிதேவனை அடக்க நினைப்பது ஒரு வேதபுரட்டல்.
 
3. பிதாவால் அனுப்பபட்டு பூமியில் கிரியை இன்றுவரை  செய்துவரும் பரிசுத்தத் ஆவியானவரை  "நடத்துபவர்"  "உணர்த்துபவர்"  "மற்றாடுவபர்" "துகப்படுபவர்" என்று ஒரு ஆள்தத்துவம் உள்ளவராக வேதம் காட்டும் பட்சத்தில் அவரை வெறும்  வல்லமை என்று போதிப்பது வேதபுரட்டலே!       
 
 4. தேவன் "கிரியை" "கிரியை" என்று வேத புத்தகம் முழுவதும் பேசியிருக்க, கிருபை கிரியை இரண்டையும் சமமான நிலையில் போதிக்காமல், கிருபையை மட்டும் எடுத்துகொண்டு கிரியை ஒதுக்குவதோ அல்லது கிரியை மட்டும் எடுத்துகொண்டு கிருபையை ஒதுக்குவதோ இரண்டும் வேத புரட்டல்களே!    
 
5. ஏசாயா 3:11 துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும். என்று வேதம் தெளிவாக பல இடங்களில் சொல்லும் பட்சத்தில் துன்மார்க்கனுக்கு தண்டனை இல்லை என்று சொல்லி போதிப்பதுவோ அல்லது " எபிரெயர் 10:30 பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன்" என்று கர்த்தர் சொல்லியிருக்கும் பட்சத்தில் அவரது சித்தத்துக்கு விட்டுவிடாமல், துன்மார்க்கன் தண்டனை அடைந்தே தீரவேண்டும் என்ற மனகடினத்தில் போதிப்பது இரண்டுமே வேதபுரட்டல்களே.  நமது வேலை தீமை செய்பவகளை மன்னித்து அவர்களுக்காக   ஜெபிபதுதான் அவர்களுக்கு தண்டனை கொடுப்பதும் மன்னிப்பதும் தேவனின் விருப்பம்.     
 
6. "பாதாளம்" "நரகம்"  "பரலோகம்"  பற்றிய அனேக வசனங்கள் மற்றும்    அவைகளை தரிசனமாக பார்த்த சாட்சிகள் வேதபுத்தகத்தில் பல  இருக்க அப்படியொரு இடமே   இல்லை என்று சொல்லி சாதிப்பதும் அவைகளை யாரும் பார்க்கமுடியாது என்று போதிப்பதும்   வேதபுரட்டின் ஒரு வகையே!   
 
இன்னும் அனேக வேத புரட்டல்கள் கிறிஸ்த்தவ உலகில் இருப்பதால்தான்  கிறிஸ்த்தவ மதம் இத்தனை பிரிவுகளை எட்டியுள்ளது.  
 
இந்த வேதபுரட்டு என்பது பெரும்பாலும் ஒருவர் தாங்கள்செய்யும் அயோக்கியமான அல்லது  தாங்கள் வைத்திருக்கும் வேதத்துக்கு புறம்பான நம்பிக்கைகளை வேத வசனத்தின் அடிப்படையில் நியாயப்படுத்த நினைப்பதாலேயே உருவாகிறது. அது ஒரு சிலராகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஒரு கூட்டமாக கூட இருக்கலாம் அல்லது ஒரு குழுவாக கூட இருக்கலாம்.  திரள் கூட்டத்தில் செர்ந்துகொண்டவர்கள்  எல்லாம் உண்மையை போதிக்கிறார்கள் என்று பொருள் அல்ல! பரம்பரை பரம்பரையாக வரும் நபிக்கயையோ அல்லது பைபிள் காலேஜ் என்ற மனித வியாக்கீன கல்லூரிகளில் சொல்லிகொடுப்பதன் மூலமாகவோ  இந்த புரட்டல்கள் எல்லோரையும் தொற்றிகொள்வது உண்டு!   
 
மிக சுருக்கமாக  சொன்னால் தேவன் ஒரு கட்டளையை கைகொள்ளுவதர்க்கு போதித்திருக்கும் பட்சத்தில் அந்த கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க மனதில்லாமல் அந்த வசனத்தை எங்காவது லேசாக புரட்டி, அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும்  வேறு ஒரு வசனத்தை காரணம்காட்டி  தன்மேல் விழுந்த கடமையாகிய அந்த கட்டளையில் இருந்து விலக நினைப்பதுதான் வேதபுரட்டல்.     
 
உதாரணமாக:
 
மத்: 15: 4. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.

5. நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து,
 
தகப்பனையும் தாயையும் கடைசி வரை  கனம் பண்ண வேண்டும் என்பது கற்ப்பனை! அதில் இருந்து இடையிலேயே விடுபட ஒரு ஒரு சின்ன புரட்டு. அதாவது " தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன்"  என்று ஒருமுறை கேட்டுவிட்டால் அத்தோடு அவர்கள் கடமைமுடிந்த்து என்று  போதித்து தன்மேல் விழுந்த கட்டளையில் இருந்து எஸ்கேப்ஆக நினைப்பதுவே!  
 
இது தேவனுக்கு கீழ்படிய விரும்பாத சாத்தானின் தந்திரமே! இவ்வாறு வேத புரட்டல்களை உண்டாக்குவதன் மூலம் தேவனை பற்றிய சரியான உண்மைகளை அறிந்து அவரது இருதயநிலைக்கு ஏற்றாற்போல் நடந்துவிடாதபடி சாத்தான் செய்து வருகிறான். 
 
தேவனின் நேரடிதொடர்பில் இல்லாத ஒவ்வொருவரும் இந்த வேதபுரட்டல்களாகிய தடுக்கல்கல்களில்   சிக்கிகொண்டு தேவனின் சித்தத்தை சரியாக நிறைவேற்ற முடியாமல்போகும் வாய்ப்பிருக்கிறது.
     


-- Edited by SUNDAR on Tuesday 12th of October 2010 09:24:52 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard