இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனிதனின் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் எதற்கு!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
மனிதனின் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் எதற்கு!
Permalink  
 


நான்  ஒரு இந்து மார்க்க  மனிதரை  அறிவேன், அவர் ஒருவர் தனது வாழ்வில் போதியஅளவு பணம்  சம்பாதித்ததால் இன்று அவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் மிக அழகான வீடுகள் கட்டிகொடுத்து அத்தோடு தானும் தனியாக ஒரு வீட்டில் வசித்து பிள்ளைகள் மருமக்கள் பேரபிள்ளைகள் என்று மிகவும் அருமையான எந்த பிரச்சனையும் இல்லாத வாழ்க்கையை வாழ்கிறார்.
  
அவர்கள் குடும்பத்தை பார்க்கும் போதெல்லாம் எனது
மனதில் எழும் கேள்வி.  "இந்தஒருவர் உலக சம்பாத்தியத்தை சம்பாதித்ததால் அவர் சொகுசாக வாழ்கிறார்! ஆனால்  அவரது பிள்ளைகள் மற்றும் பேர பிள்ளைகள் எல்லோரும்  இங்கு இவர் வீட்டில்  வந்து பிறந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் சொகுசாக வாழ யார் காரணம்? அல்லது எது காரணம்? 
 
எங்கள் தகப்பனார் மிகுந்த கஷ்டபட்டு எங்களை  வளர்த்தார்கள்  எங்களுக்கு எந்த சொத்தும் சேர்த்து வைக்கவில்லை இன்று நாங்களும் அதே நிலையில் தொடர்கிறோம். தாய் தகப்பனுடனோ அண்ணன் தம்பி சொந்த பந்தங்களுடன் சேர்த்து வாழ முடியாமல்  திக்குக்கு ஒருவராக பிரிந்து கிடக்கிறோம்.   
 
ஒருவர் பிறக்கும்போதே ராஜாவின் பிள்ளையாக பிறந்து அனைத்து சொகுசுகளையும் அனுபவித்து வாழ்வதற்கும் இன்னொருவர் ஒரு குப்பத்து பிள்ளையாக பிறந்து,
பிறந்ததில் இருந்தே அனேக பாடுகளை
அனுபவித்து வாழ்வதற்கும் காரணம் என்ன?  
 
நான்  ஒரு  சகோதரனை  அறிவேன்  அவருக்கு  வயதுக்கு வந்த திருமணம்ஆகாத இரண்டு சகோதரிகள் இரண்டும் ஊமை. தப்பனார் பொறுப்பற்ற குடிகாரன், தாயார்  கால்  வலியில் எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ளவர். குடும்ப பொறுப்பை சுமக்கும்  இந்த சகோதரருக்கோ அவரது இரண்டு காதுகளில் ஒரு காது முற்றிலும் செவிடு இன்னொன்று துல்லியமாக இல்லை.  டிகிரி படித்திருக்கும் அவர்  வேலைக்கு சென்றலும் அவரது காதில்உள்ள குறையால் நிலைத்து நிற்க முடிவதில்லை. மிகுந்த வேதனை மற்றும் துன்பத்தில் வாழ்கிறார்.   
 
மனிதர்கள்  எல்லோரும்  இறைவனின்  கையில்  உள்ள 
"கழிமண்" என்பதில் ஐயமில்லை!  அந்த கழிமண்ணை அவரது இஸ்டப்படி  வனைய அவருக்கு அதிகாரம் உண்டு! என்றாலும் தேவன்
தன் செய்கையில் எல்லாம் "மகா நீதிபரர்" என்றும் விவிலியம் சொல்கிறது. எனவே உலகில் நடக்கும் எந்த  ஒரு காரியங்களுக்கும்  அடிப்படை காரணம் நிச்சயம்  இருக்கும் என்பது எனது கருத்து. 
 
இப்படி காரியங்களை எல்லாம் பார்க்கும் போது, மனதுக்கு மிகவும்  சங்கடமாகவும், நம்மால் ஒன்றுமே செய்யமுடியாத ஒரு கையால் ஆகதவன் போலவும், ந்த உலகில் என்ன நடக்கிறது என்பதே புரியாத புதிராகவும் இருக்கிறது!      .  
 
இதற்க்கான  பதில்  அறிந்தவர்கள்  பதிவிடவும்.   


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: மனிதனின் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் எதற்கு!
Permalink  
 


கடந்த  சனிக்கிழமை  அன்று தாம்பரம் செல்வதற்காக சைதாபேட்டை ரயில் நிலையத்துக்கு சென்றிருந்தேன். ரயில் வர சற்று தாமதம் ஆகும் என்று கருதி ஒரு டீ சாப்பிட சென்றேன். அப்பொழுது ஒரு பிச்சைகார மனிதர்
எங்கோ ஹோட்டலில் மதிய  சாப்பாடு வாங்கி வந்து
ஒரு
சுவர் பக்கம் அமர்ந்து  சாப்பிட ஆரம்பித்து கொண்டிருந்தார். நான் பார்த்துவிட்டு கடந்து சென்றேன். பின்னர் டீ அருந்திவிட்டு அந்தபிச்சைக்காரன்  அமரந்திருந்த இடத்துக்கு சன்று பக்கத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தேன்.
 
திடீர் என்று பின்னால் கெட்ட வார்த்தைகளால்  அர்ச்சனை செய்யும் சத்தம் கேட்டது. நான் கண்டும் காணாததுபோல் அமர்ந்திருந்தேன். வரவர மோசமான வார்த்தைகள் அவர் வாயில் இருந்துவர ஆரம்பித்ததால் திரும்பி அவரைபார்த்து."யோவ் ஏனையா இப்படி கெட்ட கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு இருக்கிறீர்? சாப்பிடத்தானே செய்கிறீர் ஒழுங்காக சாப்பிட்டு எழுந்து போரும்" என்று  கூறினேன். அவர் உடன் என்னை நோக்கி பார்த்தார், அதன் பிறகுதான் அவர் கண்பார்வை இழந்தவர் என்று எனக்கு தெரிய வந்தது. 
 
உடனே சற்று சாந்தமாக "ஏன் இப்படி பொது இடத்தில் அமர்ந்து கெட்ட வார்த்தைகளை பேசுகிறீர்?" என்று கேட்டேன். உடனே அவர் இங்கு எழுந்து வாருங்கள் என்று சொன்னார். நான் உமக்கு சற்று பக்கத்தில்தான் இருக்கிறேன் சொல்லும் என்றென். அவர் மீண்டும் என் பக்கத்தில் வாருங்கள் என்று சொன்னார். பக்கத்தில் செண்டு பார்த்தபோது இங்கே பாருங்கள் என்று அவர் சாப்பிட்டு கொண்டிருந்த  இலையை காட்டினார் அப்பொழுதுதான் கவனித்தேன் அந்த இலையில் யாரோ
கைநிறையை குப்பை மண்ணை அள்ளி போட்டுவிட்டு செற்றிருக்கிரார்கள். 
 
சிறிது நேரத்துக்கும் முன் நான் கடந்து போகும்போது தான் அவர் அந்த பொட்டலத்தை அவிழ்த்து கொண்டு இருந்தார். சாம்பாரை கூட அவிழ்த்து ஊற்றவில்லை அதற்குள் யாரோ பக்கத்தில் சுவர் ஓரமாக பெருக்கி தள்ளி வைத்திருந்த மோசமான மண்ணை கைகொண்டு
அள்ளி அவர் சாதத்தில் போட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள்.
 
"இப்படியெல்லாம் செய்கிறார்களே  இவர்கள் உருப படுவார்களா, நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன், ஒரு நேரமாவது வயிறு நிறைய உண்ணலாம் என்று
55 ரூபாய் கொடுத்து இந்த சாப்பாட்டை வாங்கி வந்து, சாப்பிடும் முன் இப்படி செய்துவிட்டார்களே. அந்த ஆண்டவன் என்று ஒருவன் இருக்கிறானா? அப்படி யாரும் இல்லவே இல்லை! அப்படி இருந்தால் இதை கவனியாது இருப்பானா?  என்று புலம்ப ஆரம்பித்தார்.
 
அதற்க்கு பலர் கூடிவிட்டார் அவரவர்களுக்கு சிறிது நேரம்  "அச்சோ' கொட்டிவிட்டு சிறிது நேரத்தில் கலைந்து சென்றுவிட்டனர்.
 
இந்த காரியங்களை  பார்த்த நான் மிகவும் கண்கலங்கி விட்டேன். அவருக்கு தேவையான உதவிகளை செய்தேன் என்றாலும் நீண்ட நேரம் அந்த பாதிப்பு என் 
மனதை விட்டு அகலவில்லை. 
 
ஒரு  நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு நடந்தால்கூட எங்காவது முட்டிகொள்வோம். கண்ணில்லாத
மனிதர்கள்  அன்றாடம் படும் அவஸ்த்தைகளை நினைத்து பார்த்தாலே மனது வலிக்கும். அதிலும் சில பிசாசு மனிதர்களின் செயலால் கேலி கிண்டல் சாப்பிடும் சாப்பாட்டில்  மண்ணள்ளி போடுவது. கண் தெரியாதவர்களிடம் இருந்து  காசை திருடி செல்வது. முன்னால் தடுக்கல்  கல்லை வைப்பது. அப்பப்பா என்ன துன்பங்கள். இன்னும் நாம் கண்ணுக்கு தெரியாமல் என்னென்னவோ இந்த உலகில் நடக்கிறது
 
சங்கீதம் 74:20  பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே.
நீதிமொழிகள் 16:29
கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்
 
ஏன் இந்த உலகில் இப்படி கொடுமை  நடக்கிறது?  அவன் குருடனாக பிறந்ததற்கு யார் காரணம்? எதற்க்காக அவரது சாப்பாட்டில் மண்ணள்ளி போடப்பட்டது?
 
போன்ற பல்வேறு கெள்விகள மனதில் எழும்பஅங்கிருந்து கடந்து சென்றேன்  
(இந்த பதிவை படித்துவிட்டு நான் இறைவனிடத்தில் இடறல் அடைந்து விட்டேன் என்று கருதவேண்டாம். இவ்வுலகில் நடக்கும்  அனைத்திற்கும் சரியான காரணம் இறைவனிடம்  உண்டு என்று நம்புகிவரன் நான். எனவே  நான் ஒருபோதும் இடரலடைய மாட்டேன். இதற்க்கான  வேதாகம அடிப்படையில் விளக்கம் இருந்தால் தரவும்)
                     


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
மனிதனின் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் எதற்கு!
Permalink  
 


தேவனால் ஆகாதவன் என்று தள்ளப்ப்ட்டுபோன தூதன் சாத்தானாக மாறி, மனுபுத்திரருக்காக படைக்கபட்ட இந்த உலகத்தை  தந்திரமாக  ஏமாற்றி கவர்ந்துகொண்டான்.

இப்பொழுது அவன் கடவுள் மேல் வஞ்சம் கொண்டு "என்னை ஆகாதவன் என்று தள்ளினீர் அல்லவா?  உன்னுடயை படைப்புகளுக்கு அதிகமதிகமான் துன்பங்களை கொடுப்பேன் அவன் துன்பபடுவதை  பார்த்து நீர் மனவேதனை அடையவேண்டும்" என்ற திட்டத்தோடு
செயல்படுகிறான். அதனால்தான் சக மனிதர்கள் இன்னொருவருக்கு கொடுமைகளை  செய்யமுடிகிறது.
  
சாத்தான் ஆவியாக இருப்பதால்  ஒரு மனிதனுக்குள் சுலபமாக புகுந்து இன்னொரு சக மனிதனுக்கு கொடுமையை செய்ய தூண்டுகிறான் அல்லது கொலை செய்ய தூண்டுகிறான். அவன் அந்த குறிப்பிட்ட கொடிய பாவத்தை செய்து முடித்தபின்னர் அவனைவிட்டு வெளியேறிவிடுவான்.  
 
இங்கு ஆண்டவருக்கு இருபுறமும் மனவேதனை! ஒருபுறம் சக மனிதனே சற்றும் இரக்கம் இல்லாமல்  இன்னொரு மனிதனுக்கு கொடும் தீங்கு இழைக்கும்போது அவன் படும் துன்பத்தை கண்டு  ஆண்டவர் மிகவும்  மனம் வருந்துகிறார்.  பிறகு தீமை செய்தவன் அதற்க்கான தண்டனையை அனுபவித்து ஆகவேண்டும் என்ற ஆண்டவரின் தீர்ப்பிற்கு இணங்க அந்த தீமை செய்தவன் தண்டனையை அனுபவிக்க நேரிடுகிறது அப்பொழுதும் ஆண்டவருக்கு மன வேதனையே!
 
உதாரணமாக சமீபத்தைய கோவை குழந்தைகள் கொலை சம்பவத்தை எடுத்து கொள்வோம்:
 
அந்த டாக்சி ஓட்டுனருக்குள் புகுந்த சாத்தான் அவர்களது மூளையை குழப்பி ஆவியை தூண்டி வெறிப்பிடிக்க வைத்து அந்த குழந்தைகளை கொடூரமாக கொலை செய்ய வைக்கிறான். இதில் மரித்த பிள்ளைகள் படும் கொடுமையான துன்பங்கள் மற்றும் பெற்றோரின் துன்பங்கள் எல்லாவற்றையும் பார்த்து ஆண்டவர் மிகுந்த வேதனை அடைகிறார். 
 
கொலை செய்து முடித்தவுடன் கொலை செய்தவர்களை விட்டு அந்த தீய ஆவி  வெளியேறிவிடுவதால்  இப்பொழுது கொலை செய்தவர்கள் தவறை உணர்வதோடு எப்படித்தான் இப்படி கொடூரமாக நடந்துகொண்டோமோ என்று தெரியாமல் புலம்ப நேரிடும்!  அவர்கள் தூக்குவரை செல்லே நேரிடும்போது அவர்களுக்காகவும் ஆண்டவர் மனம் வருந்துகிறார். 
 
இங்கு மனிதனை தனது தந்திரத்தால் மேற்கொண்ட  சாத்தான் தன்னுடைய கொடூரபுத்தியால் எல்லா மனிதர்களையும்  கைப்பாவைகள் ஆக்கி அவர்களுக்கு துன்பத்தை கொடுப்பதன் மூலம் தேவனுக்கு வேதனையை ஏற்ப்படுத்துவதே அவன் நோக்கம்.
 
இவ்வாறு சாத்தான் உள்ளே புகுந்து ஒருவனை தீமை செய்யதூண்டும் இந்த காரியங்கள் நமது சாதாரண கண்ணுக்கு தெரிவதில்லை என்றாலும் ஆவிக்குரிய கண்களால் இதை பார்க்கமுடியும்.
 
இயேசுவை சிலுவையில் அறைய தூண்டியது யூதர்களே  அவரை சிலுவையில அறைந்தது ரோம போர்செவகர்களேயானாலும் அவர்களுள் இருந்து கிரியை செய்த சாத்தனின் ஆவியை இயேசு சரியாக அடயாளம் கண்டுகொண்டதால் "இவர்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் செய்கிறார்கள் இவர்களுக்கு மன்னியும்" என்று வேண்டுதல் செய்ய முடிந்தது.    
 
இன்று  "சாத்தனின் ஆவியை" மேற்கொள்ளவே தேவன் நமக்கு  "பரிசுத்த ஆவி" என்னும் வல்லமையை இயேசுவின் மரணத்தின் மூலம் பெற்று தந்துள்ளார்.  அந்த ஆவியின் வல்லமை நமக்குள் சரியாக கிரியை செய்யும்னானால் நமக்குள்
சாத்தானின்  ஆவி புகுந்துவிடமுடியாதபடி தடுப்பதோடு நமக்கு எதிரியாக கிரியை செய்பவர்களை ஆட்கொண்டுள்ள ஆவியையும் அடையாளம் கண்டுகொண்டு அதற்காக ஜெபிக்க முடியும்.
 
இங்கு தேவன் பேரில் எந்த குற்றமும் இல்லை என்பதே எனது கருத்து!   காரணம் மனிதனுக்கு தீமையை வெறுத்து நன்மையை தெரிந்து கொள்வதற்கு அதீத அறிவை கொடுத்துள்ளதோடு "தீமையை செய்யாதே" என்று அனேக முறை  எச்சரித்தும் இருக்கிறார்.
  
இதுபோன்ற கொடுமைகள் ஒழிந்து  அந்த  கொடிய சாத்தனுக்கு முடிவு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது  மட்டும் உறுதி.
    


-- Edited by SUNDAR on Saturday 6th of November 2010 12:39:15 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

ஒரு மனிதன் தனுடைய அன்றாட தேவைகளுக்காக இந்த உலகத்தில் படுகிற

பிரயாசங்கள்தான் எத்தனை..! எத்தனை...!


நான் அனேக நேரங்களில் என் மனதில் நினைக்கும் கேள்வியைத்தான் சகோதரர்
சுந்தர் அவர்களும் இங்கு பதித்து இருகிறிர்கள்.


ஒரு மனுசனுக்கு தேவைக்கு அதிகமாகவே கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு

சிலருக்கு அன்றாட தேவைகளுக்கு கூட மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது.


அதிகமாக கொடுக்க பட்டு இருகிரதினால் அதுவே ஒரு சிலர் தீமையான

காரியங்களை செய்வதற்கும், தன்னுடைய அன்றாட தேவைகளை சந்திபதர்காக

ஒரு சிலர் தீமையான காரியங்களை செய்வதற்கும் வழி வகுக்கிறது என்று கூட
என்ன தோன்றுகிறது.


ரோட்டோரங்களில் வேலை செய்யும் ஒரு சிலரை பார்க்கும் பொது மிகவும்

வேதனையாய் இருக்கிறது. அவர்கள் எவ்வளவு மிகவும் கடினமாய் உழைக்க வேண்டியுள்ளது.


ஒரு வேலை ஆகாரத்துக்கு கூட மிகவும் ஏங்கி தவிக்கிற அநேகரை பார்க்கும்

போது மிகவும் வேதனை படுகிறேன். இதற்கு காரணம் என்ன...!


ஒரு சிலரோ மிகவும் நன்றாய் இருக்கிறார்கள் ஏன் இந்த ஏற்ற தாழ்வுகள்

இதற்கு அடிப்படை காரணம்தான் என்ன.....!


எல்லாருக்கும் உணர்வுகளும், சிந்தனைகளும் ,இன்பமும், துன்பமும், வலியும்,
வேதனைகளும், சரிசமம்தானே....!


ஒரு மனிதன் ஏழையாய் பிரபதற்கோ, அல்லது பணக்காரனை பிரபதற்கோ அடிப்படை காரணம்தான் என்ன..!


ஒரு மனுஷன் நன்றாய் படித்து நல்ல வேலை கிடைத்து நல்ல நிலைமைக்கு
போகிறான், இன்னொருவரோ சரியாய் படிகமலோ அல்லாதோ படிக்கச்
முடியாமலோ மிக கஷ்டபடுகிறான், இருவருக்கு கடவுள் ஒருவர்தானே.


ஒருவருக்கு ஞானம் அதிகமாகவோ இன்னொருவருக்கு ஞானம் குறைவாகவோ கொடுக்கப்பட்டு இருக்கிறதா....!


அல்லது மற்ற ஜனங்கள் சொல்லுகிறபடி அவைகளுடைய தலைஎழுத்தா.....!

இவைகளை நினைக்கும் போது சரியாய் தூங்க கூட முடியவில்லை.......!


ஒருவேளை இந்து சகோதர்கள் சொல்லுகிறபடி அவர்கள் முர்பிரவியிலோ
அல்லது அவர்கள் முன்னோரோ செய்த பாவதின் ப்ரிதிபலனோ...!


இதை படிக்கும் அனைத்து சகோதர்களுக்கும் இதனுடைய அடிப்படை கரணம்
தெரிந்தால் பதிக்கும் படி விரும்புகிறேன்.

-- Edited by Stephen on Friday 12th of November 2010 02:27:21 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

Stephen wrote:
ஒருவருக்கு ஞானம் அதிகமாகவோ இன்னொருவருக்கு ஞானம் குறைவாகவோ கொடுக்கப்பட்டு இருக்கிறதா....!


அல்லது மற்ற ஜனங்கள் சொல்லுகிறபடி அவைகளுடைய தலைஎழுத்தா.....!

இவைகளை நினைக்கும் போது சரியாய் தூங்க கூட முடியவில்லை.......!


ஒருவேளை இந்து சகோதர்கள் சொல்லுகிறபடி அவர்கள் முர்பிரவியிலோ அல்லது அவர்கள் முன்னோரோ செய்த பாவதின் ப்ரிதிபலனோ...!


இதை படிக்கும் அனைத்து சகோதர்களுக்கும் இதனுடைய அடிப்படை கரணம்
தெரிந்தால் பதிக்கும் படி விரும்புகிறேன்.


சகோதரர் ஸ்டீபன் கேட்டுள்ள இந்த கேள்விகளுக்கு  கிறிஸ்த்தவ கூட்டத்துக்குள் எந்த பதிலும் இருக்காது என்றே நான் கருதுகிறேன். வேண்டுமானால் ஏதாவது மழுப்பலான பதில்கள்  கிடைக்கலாம்.
 
சமீபத்தில் ஒரு இந்து சகோதரர் ஒரு கிறிஸ்த்தவ தளத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சிலர் தவித்ததை  அறிந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன்.    
 
நான்கூட பல பாஸ்டர்களிடம் இது சம்பந்தமாக  விசாரித்து சரியான  விளக்கம் எதுவும்  கிடைக்கவில்லை. கொஞ்சம் அதிகமாக வற்ப்புறுத்தி கேட்டால் "மறைவானவைகள் கர்த்தருக்கே  உரியவைகள்" என்றொரு விளக்கம் சொல்லி விடுவார்கள். இன்னொரு பக்கமோ எதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்று போதிப்பார்கள்.    
 
ஆண்டவராகிய இயேசுவிடம்  "பிறவிக்குருடு" யாருடைய பாவத்தால் வருகிறது என்று கேட்கப்பட்டபோது 
 
யோவான் 9:2 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.

யோவான் 9:3 இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.

என்று அந்த குறிப்பிட்ட குருடனின் நிலை பற்றியே இயேசு சொன்னாரேயன்றி, மற்ற பிறவிகுருடுகளுக்கு எந்த காரணம் என்று சொல்லவில்லை.
 
ஒருவேளை உலகத்தில் பிறக்கும் எல்லா பிறவி குருடர்களும் தேவனின் கிரியை வெளிப்படவே  பிறக்கிறார்களோ என்னவோ? இயேசுவைப்போல வல்லமையாக அற்ப்புதம் செய்யும் யாரும் இல்லாத காரணத்தால் அவர்கள் இன்னும் குருடாகவே இருக்கிறார்களோ என்னவோ?  அல்லது ஒரு  பிறவிக்குருடனுக்கு நீங்கள் உதவி செய்கிறீர்களா என்பதை சோதிக்கும் பொருட்டு அந்த பிறவிக் குருடனை தேவன் படைத்தார் (?) என்று  நம் சகோதரர்கள்  சிலர் சொல்வதுபோல்கூட இருக்கலாம். அதாவது நம்போன்ற கண்ணுள்ளவர்களை சோதிக்க தேவன் கண்ணில்லாதவர்களை படைத்து தடுமாற 
வைத்திருக்கலாம்.   
 
இதுபோன்று கிறிஸ்த்தவத்தால் சரியான பதில் சொல்ல முடியாத இன்னும் அனேக கேள்விகள் உண்டு! ஆகினும் எல்லாமே வேதாகமத்தில் உள்ளது என்று மார்தட்டும் வார்த்தைக்கு மட்டும் இங்கு பஞ்சமில்லை. எனக்கு தெரிந்து இந்த பிறவிக்குருடு, குழந்தை மரணம், ஒருவன் பிறவி பணக்காரன் ஒருவன் பிறவி ஏழை, மன வளர்ச்சி இல்லாத பிறவி போன்றவற்றிக்கான சரியான காரணத்தை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு  சரியாக சொன்னதாக  தெரியவில்லை.  ஆனால் அப்படி யாராவது காரணம் சொல்ல வந்தால் வசனத்தை காட்டு என்று கேட்டு  விரட்ட பலர் தயாராக இருக்கிறார்கள்.
 
எனவே நாம் இதே நிலையில் தொடரவேண்டியத்தை தவிர வேறு வழியில்லை என்றே நான் கருதுகிறேன்

 



-- Edited by இறைநேசன் on Tuesday 1st of February 2011 10:04:11 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard