இன்றைய கிறிஸ்தவஉலகில் அநேகர் ஆவியில் நடத்தபடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு துணிந்து பாவம்செய்யும் பரிதாபநிலையில் இருப்பதை பார்க்கமுடிகிறது. காரணம் இவர்களை நடத்தும் போதகர்கனில் தவறான போதனையே.
கிரியை முக்கியமல்ல கிருபைதான் முக்கியம் "கிரியையினால் ஒருவரும் நீதிமானாக முடியாது" "கிருபையினால் விசுவாசத்தாலேயே நீதிமானாக்கப் படுகிறோம்" போன்ற வசனங்களில் ஒரு புரத்தை பிடித்துகொண்டு, இயேசுவானவர் ஒருவர் செய்த மற்றும் செய்யபோகும் எல்லா பாவங்களுக்க்காகவும் மரித்து விட்டார் என்று போதித்து விசுவாசிகளுக்கு பாவத்தின் கொடூரத்தை காட்ட மறந்து அதனால் புறஜாதி மக்களைவிட எவ்விதத்திலும் மேன்மை இல்லாத ஒரு தரமற்ற வாழ்க்கையை கிறிஸ்த்தவ சபையினர் வாழ்ந்து வருகின்றனர்.
உன்று உலகில் நடக்கும் அத்தனை கொடூரங்களுக்கும் சண்டைகள் வேதனைகள் துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் பாவமே! பாவம் சாதரணமானது அல்ல!
ஆண்டவராகிய இயேசு தன் வாழ்வில் ஒரு சிறு பாவத்தைகூட கண்டித்து உணர்த்த தவறவில்லை. அன்பின் மிகுதியால் தேவனது சித்தத்துக்கு விரோதமாக ஒரு சிறு வார்த்தை சொன்ன பேதுருவை "அப்பாலே போ சாத்தானே" என்று கடிந்து கொண்டார்.
ஆனால் இன்று சபைகளில் போதிக்கப்பவும் போதனைகள் ஒரு கண்டிப்புடனும் அதிகாரத்துடனும் போதிக்கப்படாமல், விசுவாசிகளை கவர்ந்து சிரிப்பு மூட்டும் விதமாக போதிக்கப்பட்டு வசனங்களின் சாரத்தை குறைத்துவிடும் நிலை உருவாகி உள்ளது. அதன் மூலம் விசுவாசிகளுக்கு தேவனின் வார்த்தைகள்மேல் ஒரு பயம் மக்களுக்கு இல்லாத நிலை உருவாகியுள்ளதை அறியமுடிகிறது.
பாவம் நிச்சயம் தண்டனைக்கு உரியது என்பதை மீண்டும் மீண்டும் நான் தெரிவித்துகொள்கிறேன்.
நீங்கள் இயேசுவின் இரத்தத்துக்குள் உள்ளே இருந்துகொண்டு பாவம் செய்தாலும் சரி, சாத்தான் உங்களை வெளியில் இழுத்து தண்டித்துவிட்டு பின்னர் வேண்டுமானால் உள்ளே அனுப்புவான். அதாவது இயேசுவின் கரத்தின்கீழ் இருக்கும் நீங்கள் நித்திய ராஜ்யம் போவதை தடைசெய்யமுடியாது. ஆனால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பாவத்துக்கும் இந்த பூமியில் இருக்கும் வரை தண்டனை கொடுப்பதற்கு அவனுக்கு முழு அதிகாரம் உள்ளது. தேவனே அவன் கையில் தண்டனைக்கு ஒப்பு கொடுத்து விடுவார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
எனவே நிர்விசாரமாக, இயேசு எனக்காக மரித்துவிட்டார் எனக்கு லைசென்ஸ் கிடைத்துவிட்டது "மனிதனின் நீதி ஒன்றுமில்லை" "சன்மார்க்க வாழ்வு ஒன்று மில்லை" என்பது போன்ற சாக்கு போக்குகளை சொல்லிக் கொண்டு துணித்து பாவம் செய்யாதீர்களாயின் அதற்க்கான தண்டனையை அனுபவிக்காமல் இந்த பூமியில் இருந்து ஒருகாலும் நீங்கள் தப்பிக்க முடியாது!
யாத்திராகமம் 34:7 ; குற்றவாளியைக் குற்றமற்றவனாகவிடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்.
ரோமர் 6:1ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.
ரோமர் 6:15இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவஞ்செய்யலாமா? கூடாதே.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
விஷத்தை தேனில் கலந்து உண்டாலும் அது தனது தன்மையை காட்டாமல் விடாது. அதுபோல் இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவம் செய்தலும் ஏற்றுக்கொள்ளாமல் பாவம் செய்தாலும் பாவம் பாவம்தான் அது நிச்சயம் தண்டனைக்குரியதே
அநியாயம்/ பாவம் செய்பவன் யாராக இருந்தாலும் அவன் எந்த மததுக்குள் போய் ஒளிந்துகொண்டு
அநியாயத்தை செய்தாலும் அவன் தண்டனைக்கு தப்புவதில்லை அதற்கேற்ற பலனை அடைந்தே
தீருவான் என்பதை விவிலியம் திட்டமாக சொல்லி எச்சரிக்கிறது
கொலோ: 3 25. அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை
வெளி 22:11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்.........
12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
எனவே இயேசுவின் இரத்தால் கழுவப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய நாம் பரிசேயரையும் மற்ற சாதாரண மனிதர்களையும்விட அதிக நீதியும் நேர்மையும் குற்றமில்லாதவர்களாகவும் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லையேல்
லூக்கா 12:47 தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்
என்ற வார்த்தைகளின்படி மற்றவர்களைவிட நாம் அதிகம் தண்டனைபெற வாய்ப்பிருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
-- Edited by இறைநேசன் on Friday 22nd of October 2010 09:47:59 PM