இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பலனை எதிர்பார்க்காமல் நன்மை செய்வதே சிறந்தது!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
பலனை எதிர்பார்க்காமல் நன்மை செய்வதே சிறந்தது!
Permalink  
 


எந்தஒரு எதிர் பலனையும் எதிர்பாக்காமல் அன்பு மற்றும் இரக்கத்தின் மிகுதியால் ஆர்வத்துடன் செய்யப்படும் செயல்களே தேவனிடத்தில் மிகுந்த  நன்மதிப்பை பெரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை பலனை எதிர்பார்த்து செய்யும் எந்த ஒரு காரியமும் ஏறக்குறைய வியாபாரத்துக்குள் அடங்கிவிடும்  என்பதும் உண்மையான ஒன்றே!
 
"நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனையை கைகோள்" என்று இயேசு சொல்லியிருக்கிறார்  எனவே  நித்திய ஜீவன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஒரு காரியத்தை செய்யக்கூடாதா? என்ற கேள்வி எழலாம்.  
 
ஜீவனில் பிரவேசிக்க விரும்பி நன்மையை செய்வதிலும்  எந்த தவறும் இல்லை!
ஆனால் அதில் பெரிய  மேன்மை ஒன்றும் இல்லை! கூலிக்கு வேலை செய்வது என்பது எல்லோரும் செய்வதுதானே இதில் என்ன பெரிய மேன்மை?
 
அதாவது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பின் மிகுதியால் துன்பப்படும் ஒருவரை காப்பற்றுவதற்காக ஒருவர் ஓடிக்கொண்டு இருந்தார். அந்நேரத்தில் ஒரு அறிவிப்பு வந்தது, " குறிப்பிட்ட ஒழுங்குடன் ஓடி ஓட்டத்தில் முதலில் வருபவர்களுக்கு கிரீடம் உண்டு" என்று! அதை அறிந்த அவர், கிரீடம் அவரது  நோக்கமாக இல்லாது இருந்தாலும்  அந்த ஒழுங்கு முறைகளின் மேலுள்ள நன்மைகளை கருத்தில் கொண்டு  தனது இயல்பான ஓட்டத்தை இன்னும் சற்று அதிகமாக்கி அல்லது ஒழுங்குபடுத்தி  அந்த கிரீடத்தையும்  பெற முயற்ச்சிக்கிறார். 
 
இங்கு இரண்டு நன்மைகள் விளைகிறது ஓன்று அந்த  துன்பப்படும் நபர் இன்னும் கொஞ்சம் சீக்கிரம் காப்பாற்ற முடியும் அடுத்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓடியவரும் "கிரீடம்" என்ற நன்மையை பெறமுடியும்.
 
கிரீடமே எனக்கு வேண்டாம்  என்று ஒதுக்கினால் தேவனின் நியமனத்தை நாம் அசட்டை செய்வதுபோல் ஆகும் . எது  எப்படி  போனால் எனக்கென்ன எனக்கு கிரீடம்தான் முக்கியம் என்று எண்ணி ஓடினால் கூலிக்காக வேலை செய்யும்நிலையில் இருக்கிறோம். இரண்டையும் தேவன் விரும்புகிரவறல்ல என்றே நான் கருதுகிறேன்!   தான் முக்கியம்
 
நமக்கு நியமிக்கப்பட்ட டிராக்கில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓடுவோம்!

தேவன் எதை அல்லது எந்த இடத்தை நமக்கு கொடுத்தாலும்  சந்தோசமாக பெற்றுக் கொள்வோம்!


-- Edited by SUNDAR on Wednesday 20th of October 2010 02:42:52 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: எந்த பலனையும் எதிர்பார்க்காமல் நன்மைகளை செய்வதே மேல்!
Permalink  
 


இந்த உலகில்  சம்பளம் தெரியாமல் யாரும் வேலைக்கு போவது இல்லை அதுபோல் ஏதாவது  பலனை எதிர்பார்த்து ஒரு காரியத்தை செய்வதில் தவறு இல்லை என்பதை வேதம் பல இடங்களில் போதிப்பது நாம் அறிந்ததே.  
 
ஆகினும் என்னை பொறுத்தவரை எந்த ஒரு காரியத்திலும் GOOD/BETTER/BEST
என்ற நிலைகள் இருப்பதை  நாம் பார்க்கிறோம்  இம்மூன்றில்  எது மிக மேன்மையானது என்று அராய்ந்து  அதை செய்வதுதான் சிறந்தது என்று  நான் கருதுகிறேன்.  
 
உதாரணமாக
 
I தீமோத்தேயு 5:18  , வேலையாள் தன் கூலிக்குப்
பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.

என்ற வசனத்தின் அடிப்படையிலும் கர்த்தரின்  ஆலயத்துக்கு வரும் தசமபாகம் லேவியருக்கு கூலி போன்றது என்ற அடிப்படையில் ஆலய பணிவிடைகளுக்கு அவ்வித கூலியை பெறுவது எவ்விதத்திலும் தவறு அல்ல!   
 
ஆனால் கர்த்தரோ!  

மல்கியா 1:10 உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் அக்கினியைக் கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள், உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
 
கூலியை அல்லது பலனை எதிர்பார்க்காமல் அன்பின் மிகுதியால் செய்யப்படும் காரியத்திலேயே அவர் பிரியப்படுகிறார் என்பதை ஆதங்கத்தோடு சொல்கிறார் கூலியாகிய பலனை எதிர்பார்த்து காரியங்களை செய்பவன்மேல் எனக்கு பிரியமில்லை என்று சொல்கிறார் .  
 
ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைதான் முக்கியம் என்கிறீர்கள் நிச்சயமாக உண்மை! ஆனால் அந்த ஆண்டவராகிய இயேசு என்ன பலனை எதிர்பார்த்து இந்த பூமிக்கு வந்தார்? என்பதை சற்று யோசித்து பாருங்கள்.  நாம் ஒன்றுக்கும் உதவாத
பாவிகளாக இருக்கும்போது  நம்மேல் உள்ள அன்பினாலேயே  நம்மை  மீட்பதற்காக இந்த பூமிக்கு வந்து  அவமானமும் நிந்தையும் அடி உதையும் வாங்கினார்.
 
அவர் வழியை நாமும் பின்பற்றுவதுதானே சிறந்தது?
 
என்ன சொன்னாலும் நன்மையை செய்யமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும்
அல்லது ஏதாவது ஆதாயத்தை எதிர்பார்த்தே காரியங்களை செயும் மனிதர்களுக்கு
"நீ தீமைசெய்தால் தண்டனை உண்டு,  நீ நன்மையை செய்தால் உனக்கு மேன்மை உண்டு! என்றும் அதற்க்கு
நித்தியஜீவன் என்ற பலன் கிடைக்கும் என்று இயேசு சொன்னது உண்மையே! 
 
ஆனால் அவரது இருதய நோக்கம் என்ன  என்பதை நல்ல சமாரியன் உவமையின் மூலம் நாம் சுலபமாக அறியமுடியும்!  
 
அந்த நல்ல சமாரியன் எந்தபலனையும் எதிர்பார்த்து கள்ளன் கையில் அகப்பட்டவனை காப்பாற்றியதாக எழுதப்படவில்லை. வெறும் அன்பு இரக்கம் இவற்றின் அடிப்படையிலேயே தனது சொந்த பணத்தை செலவு செய்து அவனை காப்பாற்றினான் என்று வேதம் சொல்கிறது. அவ்வாறு செய்வதுதான் ஒரு மேலான நிலை.   
 
லுக் 10௦:37. . அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.

எனவே
பலனை எதிர்பார்த்து நன்மை செய்வது ஒரு தவறு என்று நான் சொல்ல வரவில்லை! அனால்அது  மேன்மையானது அல்ல!   எந்த பலனையும் எதிர்பாராமல் அன்பினால் ஒரு காரியத்தை செய்வதே மேன்மையானது  என்பதே எனது கருத்து!         


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard