ஆதியாகமம் 15:13உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, ...... அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.
"இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்தில் நானூறு வருடங்கள் அடிமையாக இருப்பார்கள் என்றும் அதன் பின்னர் அவர்களுக்கு கானான் தேசத்தை சுதந்தரிப்பதர்க்கு கொடுப்பேன்" என்றும் தேவனாகிய கர்த்தர் ஆபிரகாமுக்கு முன்னறிவித்திருந்தாலும் எகிப்த்தில் இருந்து ஜனங்களை அழைத்து செல்ல தேவன் பயன்படுத்திய மோசே என்னும் தேவமனிதன் பண்படுவதர்க்கு தாமதமானதால் இஸ்ரவேல் ஜனங்கள் 430 வருடத்திலேயே எகிப்த்தைவிட்டு வெளியேற முடிந்தது.
. யாத்திராகமம் 12:41நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
எகிப்த்தில்இருந்து வெளியேறிய இஸ்ரவேல் ஜனங்கள் ஓரிரு மாதங்களில் தேவன் அவர்களுக்கு சுதந்திரமாக வைத்திருந்த கானானை எட்டிவிட கூடிய வாய்ப்பிருந்தும், கானான் தேசத்தை வேவுபார்க்கசென்ற மனிதர்கள் பரப்பிய துர்செய்தி மற்றும் அதை தொடர்ந்து நடந்த கீழ்படியாமை போன்ற காரியங்க்ளால் சுமார் நாற்ப்பது வருடம் அவர்கள் வனாந்திரத்தில் அலைத்து திரியும் நிலை ஏற்ப்பட்டது.
எண்ணாகமம் 14:34நீங்கள் நாற்பதுவருஷம் உங்கள் அக்கிரமங்களைச்
சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.
ஆகான் என்ற மனிதனின் கீழ்படியாமையால் ஆயியை பிடிப்பதில் சிரமமாகி, அநேகர் உயிரிழக்க நேர்ந்து பலநாட்கள் தாமதமாகிபோனது.
இதுபோல் பல வேதாகம மனிதர்களின் கீழ்படியாமையால் அனேக நேரங்களில் தேவனின் திட்டங்கள் நிறைவேறுவதில் தாமதமாகி போனத்தைநாம் அரியமுடியும்!
இன்றும் உலகில் அதே நிலைதான் நீடித்துக்கொண்டு இருக்கிறது!
ஆண்டவராகிய இயேசுவின் வருகையும் பரம கானானுக்கும் நாம் பிரவேசிக்கும் பாக்கியமும் தள்ளிக்கொண்டே போவதற்கு காரணம், ஆண்டவர்களை அறிந்து கொண்டவர்களின் சரியான கீழ்படிதல் இல்லாமையே என்றால் மிகையாகாது!
(இங்கு என்னையும் சேர்த்துதான் நான் சொல்கிறேன்)
"தேவனின் திட்டங்களை தகர்ப்பவர்கள் தெரிந்து கொள்ளப்பட்ட
மனிதர்களே" என்று சொன்னால் நிச்சயம் அது ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.
என்று அக்கலாய்க்கும் ஆண்டவரின் சத்தத்தை கேட்க ஆளில்லை. அவரனுப்பிய தூதர்களும் அவருடைய ஊழியக்காரர்களும் அந்தகன்கள் ஆகி "ஆண்டவர் என்றாவது ஒருநாள் வருவார் அந்த கவலையை விட்டு இன்று ஏதாவது ஒரு முறையில் பணம் சம்பாதிக்க வழியைப்பார்ப்பது அதை பிள்ளைகளுக்கு எப்படி பங்குவைத்து கொடுப்பது என்ற திட்டத்தோடு எல்லோரும் களம் இறங்கி விட்டதாகவே நான் உணர்கிறேன்.
சாத்தானின் நயவஞ்சக பிடியில் கிடக்கும் நாம் எத்தனை முறை தண்டிக்கப் பட்டாலும் இன்னும் சொரணை அற்றே திரிந்துகொண்டு இருக்கிறோம். தேவனின் நோக்கத்தை நிறைவேற்றமுடியாதபடி இருதயங்கள் அடைக்கப்பட்டு கிடக்கின்றன.
"முயல்கிறேன்! முயல்கிறேன்! முயல்கிறேன்! அனால் முடிய வில்லையே என் செய்வேன்" என்று புலம்பும் நிலையில்தான் நானும் இருக்கிறேன்! என்று வருவார் என் ஆண்டவர் என்று எந்நாளும் ஏங்கி நிற்கிறேன்!
கைகெட்டும் தூரத்தில் அனைத்தும் இருப்பதை பலநேரம் அறிய முடிந்தாலும், காணமுடியாத தூரத்தில் இருப்பதுபோல சிலநேரம் எண்ண தோன்றுகிறது.
அடுத்தவனை குறைசொல்லிகொண்டு திரியும் அன்பு நண்பனே "நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? என்பதுதான் இன்று தேவனின் கேள்வி. சாத்தானை ஜெயிக்க ஒரு பெரிய கூட்டம் தேவையில்லை சகோதரரே! உன்னுள் இருக்கும் கர்த்தரின் ஆவியின் பெலனும் உன்னோடு இருக்கும் இயேசுவின் கரமும் போதும். ஒரே மனிதனை முறியடிப்பதுபோல் சாத்தானின் சேனையை ஜெயம்கொள்ள நிச்சயம் முடியும்!
ஆண்டவரின் வருகையும் சாத்தானின் வீழ்ச்சியும் நமது கரத்தில்தான் இருக்கிறது, நமது கீழ்படிதலில்தான் தேவனின் திட்டங்களின் நிறைவேறுதல் உள்ளது! அன்பு சகோதரனே சகோதரியே உன்னை தரைமட்டும் தாழ்த்தி கீழ்படி வெற்றி நிச்சயம் உண்டு!
-- Edited by SUNDAR on Tuesday 9th of November 2010 03:38:23 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சாலையில் ஒரு குருடரையோ அல்லது வேதனை அனுபவிக்கும் மனிதனையோ அல்லது ஒரு முடவனையோ அல்லது பல்வேறு துன்பங்களில் அடிபட்டு அலையுண்டு கிடக்கும் மக்களையோ காணும்போது அங்கு என்னை நானே குற்றவாளிபோல் கருதுகிறேன். இன்றுவரை இவைபோன்ற கொடூரங்கள் துன்பங்கள் எல்லாம் இந்த பூமியில் நடைபெற்றுக் கொண்டு இருப்பதற்கு நானும் ஒரு காரணமாகவே எண்ணி கலங்குகிறேன்.
ஆணடவர் சாத்தனை ஜெயிப்பதற்கு தேவையான அனைத்து ஆயுதங்களும் பரிசுத்த ஆவியானவர் என்னும் கூடுதல்பெலனும் நமக்கு தந்திருப்பதோடு, சரியான வழியை வேதாகமத்தில் தெளிவாக எழுதி கொடுத்துள்ளார்! அனால் எல்லா மனிதர்களும் எதாவது ஒரு காரியத்தில் சாத்தானின் தந்திரமான திட்டத்தல் பிடிக்கப்பட்டு சாத்தானோடு அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழ்வதில் திருப்தியடைந்து விட்டனர். இன்றுவரை அவனை ஒருவரும் ஜெயம்கொள்ள முடியாமல் போனதையும் நினைத்து மிகுந்த வேதனை அடைகிறேன்.
தன்னிடம் உள்ள குறை குற்றங்கள் தெரியாமல் அடுத்தவரை குறை கூறி திரிகின்றனர். தான் தேவனை சரியாக அறியாமல் அடுத்தவர்களுக்கு அதிகமதிகம் ஆலோசனை சொல்கின்றனர். ஓடி ஓடி ஒருவருக்கு கிறிஸ்த்துவை அறிவிக்கும் பலர் தாங்கள் அவரது உபதேசத்தில் நடக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்க தவறி விடுகின்றனர். அதிகமாய் ஜெபிக்கின்றனர் அதிக அதிகமாய் வேதத்தை ஆராய்கின்றனர் ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளுக்கு கீழ்படிவதில் அக்கரை யில்லாமல் இருக்கின்றனர்.
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரே ஒரு மோசே ஆறு லட்சைபேரை பார்வோனின் பிடியில் இருந்து மீட்டுவிட முடியும். இந்த "ஆறுலட்சம்" என்பது எகிப்த்தில் இருந்து விடுதலையாக்கப்பட்ட மொத்த இஸ்ரவேல் ஜனங்களையும் குறிக்கிறது. அந்த ஆறுலட்சம் பேரில் அநேகர் முறுமுருப்பவர்களும், ஆகார பிரியர்களும் திருப்தியில்லாதவர்களும் தேவனை பரீட்சை பார்ப்பவர்களுமாக இருந்தார்கள். அவர்களால் எந்த பயனும் இல்லை! மோசே போல் ஒருவன்தான் தேவனுக்கு தேவையின்றி ஆசைகளில் சிக்குண்டு கிடக்கும் அநேக கூட்டம் ஆண்டவருக்கு தேவைஇல்லை!
அவரது வார்த்தைக்கு முழுமையாக கீழ்படிந்து நடக்க விரும்பும், தன்னை முழுமையாக தேவனின் கரத்தில் அர்ப்பணிக்கும் தன்னை தானே வெறுத்து தேவனின் பின்னால் வர துணியும் ஒரு ஒரு மனிதன் போதும்! அனைத்து ஜனங்களையும் சாத்தான் கையில் இருந்து மீட்டுவிட தேவனால் முடியும்!
எரேமியா 51:20நீ எனக்கு தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன். எரேமியா 51:21உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரை வீரனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு இரதத்தையும் இரதவீரனையும் நொறுக்குவேன். எரேமியா 51:22உன்னைக்கொண்டு புருஷனையும் ஸ்திரீயையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு கிழவனையும் இளைஞனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு வாலிபனையும் கன்னிகையையும் நொறுக்குவேன். எரேமியா 51:23உன்னைக்கொண்டு மேய்ப்பனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு உழவனையும் அவனுடைய உழவுகாளைகளையும் நொறுக்குவேன்; உன்னைக் கொண்டு அதிபதிகளையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன்.
தேவன் அனைவரையும் /அனைத்தையும் நொறுக்குவதற்கு ஒரே ஒருவன் போதும்!
"தேவன்தான் எல்லாவற்றையும் செய்கிறவர் செய்யபோகிறவர், அவர் ஆவியாலேயன்றி ஒன்றும் இங்கு ஆகாது! ஆனால் அவர் நினைத்ததை செய்வதற்கும் அவர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு ஆபிரகாம் போல ஒரு மோசே போல ஒரு எரேமியா போல கீழ்படிதல் உள்ள ஒரு மனுஷன்தான் தேவனுக்கு வேண்டும்"
இந்த உலகமும் இதில் வாழும் வாழ்க்கையும் ஒன்றுமில்லை சகோதரர்களே! இதைவிட எவ்வளவோ மேன்மையான நித்தியம் நமக்கு இருக்கிறது! சாத்தானுடன் எந்த காரியத்திலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவேண்டாம்
தேவனது வார்த்தைகளுக்காக ஜீவனையும் இழக்க நீங்கள் தயாராக இருக்கும் அவன்தான் அந்த "தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன்" அவனை கொண்டுதான் தேவன் அனைத்தையும் சாதிக்க முடியும்!
அடுத்தவரை உன்று பார்க்காதீர்கள்! அவனிடம் ஆயிரம் குறைகள் உங்களுக்கு நிச்சயம் தெரியும். உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்! அப்பொழுது மகிமைமேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆவீர்கள்!
-- Edited by SUNDAR on Tuesday 9th of November 2010 03:38:05 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)