இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவிருந்து யார் யார் எடுக்கலாம்...?


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
திருவிருந்து யார் யார் எடுக்கலாம்...?
Permalink  
 


இன்றைய கிறிஸ்தவ உலகில் திருவிருந்து எடுப்பதை பற்றி அனேக காரியங்கள் பேசபடுகிறது. 

வேதத்தின்படி இதை யாரெல்லாம் எடுக்கலாம்...! எப்படிப்பட்டவர்கள் எடுக்கலாம்...! அதற்குரிய தகுதிகள் 
என்ன,,,!  என்பதை தல சகோதர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டால் இதை பார்பவர்களுக்கு பிரயோஜனமாய் இருக்கும்
என்று நம்புகிறேன்.
 
ஏனெனில் அனேக சபைகளில் இதை குறித்து தெளிவும் சரியான போதகமும் இல்லாதபடியால் இங்கே பதிவிட்டால்
அநேகருக்கு பிரயோஜனமாய் இருக்கும் என்பதால் இங்கு பதிவிடுகிறேன்.


__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

ஸ்டீபன் எழுதியது 
----------------------------------------------------------------------------------------------------------
ஏனெனில் அனேக சபைகளில் இதை குறித்து தெளிவும் சரியான போதகமும் இல்லாதபடியால் இங்கே பதிவிட்டால்
அநேகருக்கு பிரயோஜனமாய் இருக்கும் என்பதால் இங்கு பதிவிடுகிறேன் 
----------------------------------------------------------------------------------------------------------
 
தேவனின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டு  
இவர் மூலமாய் தேவன் தம் பாவங்களை நீக்கினார் என்று   விசுவாசித்து தேவன் வேதத்தில் சொன்னபடி நடக்கின்றவர்கள்
 
 திருவிருந்து எடுக்கலாம் என்பது என் கருத்து..................


மேலே சொன்னபடி  இல்லாதவர்கள் திருவிருந்து எடுக்க கூடாது மற்றபடி வேறொன்றும் தேவையில்லை என்று நினைக்கின்றேன்


-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 3rd of November 2010 11:20:08 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

 தேவனின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டு  
இவர் மூலமாய் தேவன் தம் பாவங்களை நீக்கினார் என்று   விசுவாசித்து தேவன் வேதத்தில் சொன்னபடி நடக்கின்றவர்கள்
 
 திருவிருந்து எடுக்கலாம் என்பது என் கருத்து..................


மேலே சொன்னபடி  இல்லாதவர்கள் திருவிருந்து எடுக்க கூடாது மற்றபடி வேறொன்றும் தேவையில்லை என்று நினைக்கின்றேன்

தாங்கள் கூறுவதுபோல் இயேசுவை ஏற்றுக்கொண்டு மனம்திரும்பி பரிசுத்த வாழக்கை வாழ்வது  திருவிருந்து எடுப்பதற்கு ஒரு சரியான தகுதி என்றாலும் இன்னும் சில காரியங்களையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.  
 
நான் அறிந்தவரையில், வெளிப்புற தகுதியாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மூழ்கி ஞானஸ்தானம் எடுத்திருதல் அவசியம். (இயேசுவை ஏற்றுக் கொண்டுள்ளதற்கு ஞானஸ்தானத்துக்கு கீழ்படிதல் ஒரு அடையாளமாக இருப்பதால் திருமுழுக்கு அவசியமாகிறது)     
 
 
அடுத்து  மிக மிக முக்கியமான தகுதி:  தன்னை தானே சோதித்து அறிதல்:  
 
I கொரிந்தியர் 11:28 எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
 
ஆம்! திருவிருந்தை பெறுவதற்குமுன்னர் நாம் நிச்சமாய் நமது இருதய நிலைகளை
சோதித்து அறியவேண்டும். யாருடனாவது கசப்பு, வைராக்கியம், பொறாமைகள், வஞ்சம்
போன்றவைகள் இருதயத்தில் இருக்குமானால் அவற்றை அறிக்கை செய்து விட்டுவிட ஒப்புக்கொண்டு  ஆண்டவருடன்  ஒபபுரவாக வேண்டும்.   
 
கடந்தநாட்களில் செய்த பாவங்கள்/குற்றங்கள் தவறுகள் எதுவும் இருக்குமாயின் அதையும் அறிக்கை செய்து. அந்த பரிசுத்த பாத்திரத்தில் பானம் பண்ணுவதற்கு தகுதியுள்ளவனாக நம்மை மாற்றும்படி ஆண்டவரிடம் ம்னறாடவேண்டும்.
 
I கொரிந்தியர் 11:31நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந் தீர்க்கப்படோம்.
 
நம்மை நாமே சரியான முறையில் நிதானித்து குற்றங்களை கண்டுபிடித்து திருத்திகொள்ளும்  மன பக்குவம் இருந்தால்  போதும் நம்மை வேறு ஒருவரும் நியாயம் தீர்க்கமுடியாது!
 
மற்றபடி,
 
மனம்திரும்பாதவர்கள், ஞானஸ்தானம் பெறாதவர்கள். பாவங்களில் இருந்து விடுபட முடியாதவர்கள், கசப்பு வைராக்கியம் மனதில் வைத்திருப்பவர்கள், அசுத்த காரியங்களில் ஈடுபடுபவர்கள் போன்றவர்கள் பந்தியில் இருந்து விலகியிருந்து
சரியான முறையில்
ஒப்புரவானபின் பங்குபெறுவது நல்லது.
 
ஆகினும் எந்த ஒரு தவறையும் செய்துவிட்டவர்கள் இனி அதுபோல் நடக்க மாட்டேன் செய்ய மாட்டேன் என்ற உறுதியான  விசுவாசத்தின் அடிப்படையில்
ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு பந்தியில் பங்கு பெறமுடியும்.
 
I கொரிந்தியர் 11:30 இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதி யுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.

என்று எழுதியிருப்பதால், சரியான ஒப்புறவாகுதல் இல்லாமல் குற்ற மனசாட்சி யுடன் பந்தியில் பங்குபெறுவது தண்டனையை கொண்டுவர வாய்ப்பு இருக்கிறது. எனவே சுத்த மனசாட்சி வரும்வரை
பொறுத்திருந்து பந்தியில் பங்குபெறுவது நல்லது. 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard