Stephen wrote ஞானஸ்நானம் ஏன் எடுக்க வேண்டும்........?///////
நாம் ஞானஸ்நானம் எடுப்பது என்பது நாம் பாவத்துக்கு மறித்து நீதிக்கு பிழைத்து இருக்கின்றோம்
ஞானஸ்நானம் என்பது ஒரு ஒப்புறவாகுதல் , அறிக்கை ,ஐக்கியம் ,கழுவபடுதல்,உடன்படிக்கை என குறிப்பிடலாம்
கர்த்தருக்குள் நாம் வருவதற்கு ஒரு முதல் படி இது தான் இந்த படியின் வழியாய்த்தான் நாம் போக வேண்டும்
ஆனால் இன்று அதன் வழியாய் போக முடியாமல் இருக்கு தடைகளை பார்க்கலாம்
ஒரு புது விசுவாசி சபைக்கு வந்து ஆண்டவரை நான் முழுமையாக ஏற்று கொள்கின்றேன் எனக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் என்றால் அந்த சபையின் போதகர் இல்லை இல்லை நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்று பார்த்து அப்பொழுதுதான் நான் ஞானஸ்நானம் கொடுப்பேன் என்று அதன் பின் நகை தாளி மற்றும் போன்ற எந்த ஆபரனும் நீங்கள் அணிய கூடாது அப்பொழுதுதான் நான் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பேன் என்று உறுதியாக கூறி விடுகின்றனர் இதனால் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களும் எடுக்க மனதில்லாமல் போகின்றது
ஞானஸ்நானம் பற்றிய என் கருத்துகளை தெரிய படுத்த விரும்புகின்றேன்
ஞானஸ்நானம் பற்றி பைபிளில் சில காரியங்கள்
(1 ) பிலிப்பு இயேசுவை பற்றி கந்தாக மந்திரியிடம் சொன்ன பின் போகின்ற வழியில் மந்திரி பிலிப்பு அல்ல மந்திரி தண்ணீரை கண்டு நான் ஞானஸ்நானம் பெருகின்றதற்கு
தடை என்ன என்றான் அதற்க்கு பிலிப்பு நீர் உன் முழு இருதயதோடும் விசுவாசித்தால் தடையில்லை என்றான்
(௨) பவுலின் ஞானஸ்நானம்
(3 ) தற்கொலை செய்து கொள்ள போன சிறட்சாலை காவலனுக்கு அன்று இரவே ஞானஸ்நானம் கொடுத்தது
மேலே குறிப்பிட்டவைகளை பார்த்தால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தன் இருதயத்தில் முழுமனதார விசுவாசித்தால்
ஒரு மணி நேரமாய் இருந்தாலும் சரி ஒரு நாள் இருந்தாலும் சரி அந்த நபருக்கு ஞானஸ்நானம் கொடுக்கலாம் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றது என்பதை மனதில் வைத்து கொண்டு ஆணடவராகிய இயேசுவை முழுமனதார ஏற்று கொள்கின்றவர்களுக்கு ஞானஸ்நானம் இல்லை என்று தடைவிதிக்காதிர்கள்
போதகர் நினைப்பது கூட சரிதான் அவர்கள் பாவம் செய்து விட கூடாது ஆலயத்திற்கு வர வேண்டும் என்பது ஆனால் அதை கர்த்தர் பார்த்து கொள்பார்
ஒரு விளக்கத்தை இங்கு தர விரும்புகின்றேன்
ஒரு சகோதரி இயேசுவை ஏற்று கொண்டு ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று போதகரிடம் கூறினார்கள்
போதகர் அவர்களை பார்த்த பொழுது அவர்கள் நெற்றியில் ஒரு பெரிய பொட்டு மற்றும் அதிகமான ஆபரணங்கள் அணித்து கொண்டு இருந்தார்கள் அந்த போதகர் பார்த்து எப்படி சொல்வார் அவர்கள் இயேசுவை ஏற்று கொண்டு ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற வாஞ்சையில் இருக்கும் பொழுது இல்லை இல்லை நீங்கள் தாலி நகைகள் இவை எல்லாவற்றியும் எடுத்தால் தான் தருவேன் என்று கூறினால் அவர்கள் இப்பொழுது தான் புதிதாக வந்து இருக்கின்றார்கள் எப்படி சொல்வது என்று தெரியாமல் அவர்கள் இருந்தபடியே ஞானஸ்நானம்கொடுத்து விட்டார் ஒரு சில நாட்களுக்கு பின் அந்த போதகர் அந்த சகோதிரியை சந்தித்த போது என்ன நகைகள் எல்லாம் எடுத்து விட்டிங்க என்று கேட்ட பொழுது அந்த சகோதரி ஐயா நான் ஜெபிக்கும் பொழுது ஆண்டவர் என்னிடம் பேசினார் எனக்கு ரொம்ப சந்தோசம் இருந்தது எனக்கு எதற்க்கு இந்த பொட்டு நகைகள் என்று எடுத்துவிட்டேன் இன்னும் ஆண்டவருக்கு உண்மையாய் வாழவேண்டும் என்று கூறினார்கள் (ஆண்டவர் எடுக்க சொல்ல வில்லை ) ஆண்டவர் அவர்களிடம் பேசின அந்த சந்தோஷத்தில் அவர்களாகவே எடுத்து விட்டனர்
ஆம் நண்பர்களே வசனமும் அதைதான் கூரிகின்றது
நிறைவானது வரும் போது குறைவானது ஓடிவிடும் என்று ...........
ஆனால் எனக்கு நீண்ட நாட்களாய் ஒரு சந்தேகம்
இயேசு கிறிஸ்து தன் வாக்கியத்தில்
ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால்
தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்கின்றேன் என்று கூறினார்
இதன் அர்த்தம் எனக்கு புரிய வில்லை தேவனுடைய ஆவியினாலே பிறவாவிட்டால் என்பது புரிகின்றது ஆனால்
ஜலத்தினால் என்பது தான் எனக்கு புரிய வில்லை தண்ணீரில் எடுக்கும் ஞானஸ்நானம் பற்றி கூருகின்றார என்று தெரியவில்லை
விளக்கம் தெரிந்த நண்பர்கள் தங்கள் கருத்துகளை பதிக்கும் மாறு கேட்டு கொள்கின்றேன்
-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 23rd of October 2010 04:51:48 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
ஞானஸ்தானம் எனபது நமது பழைய மனிதன் மரித்து புதியதாக ஆவியில் பிறப்பதற்கு ஒப்பாக செய்யப்படும் ஒரு சடங்கு போன்றதுதான் என்றாலும் தேவனுடைய நீதியை நிறைவேற்றுவதக்கு நாம் உடன்படுகிறோமா என்பதை உறுதி செய்யும் ஒரு முக்கியமான விசுவாச நிலையையும் அது தன்னுள் கொண்டுள்ளது என்பது எனது கருத்து.
ஞானஸ்தானம் குறித்த தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில்உள்ள இந்த கட்டுரை அதன் அனைத்து முக்கியத்துவங்களையும் உள்ளடக்கியது. (காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது)
ஞானஸ்நானம் என்பது கிறிஸ்த்வத்தின் அடிப்படை ஆரம்ப போதனைகளில் ஒன்றாகும். என்றாலும் கூட வேதாகமத்தின் போதனையை விட தாங்கள் சார்ந்திருக்கிற சபையின் கொள்கையே பெரும்பாலான கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படுகிறது. என்னவென்றே தெரியாமல் எதையாவது செய்யும் அப்பாவி கிறிஸ்தவர்களாக அல்லாமல் வேதாகமத்தின்படி நிதானிக்கும் உண்மை கிறிஸ்தவர்களாக இருக்க பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு உதவும்.
ஞானஸ்நானம் என்றால் என்ன? ஞானஸ்நானம் என்ற வார்த்தையின் சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ள அதை நாம் இன்னமும் தெளிவாக நடைமுறை தமிழுக்கு மொழி பெயர்த்தால் நன்றாயிருக்கும் என்று நம்புகிறேன். பழைய காலத்து பிராமண குடும்பங்களில் " என்ன இன்னைக்கு ஸ்நானம் பண்ணினேளா?"என்று ஆற்றிலிருந்து ஆத்துக்கு குளித்து திரும்பும் நபர்களை விசாரிக்கும் அய்யராத்து மாமிகளின் பேச்சை கேட்டிருக்கிறீர்களா?அட ஆமாங்க குளிப்பதைத்தான் இந்த மாமிகள் ஸ்நானம் என்று சொல்லுகிறார்கள். நம் பேச்சுவழக்கில் யாராவது அவசரம் அவசரமாக சும்மா தண்ணீரை தன் உடல் மீது தெளித்து விட்டு நான் குளித்துவிட்டேன் என்று சவடாலாக கூறிக் கொண்டு வந்தால் நாம் அவரை பார்த்து என்ன சொல்லுவோம்? யோவ் என்ன காக்கா குளியல் செய்துவிட்டு வந்திருக்கிறீர்? என்போம் அல்லவா! This is enough to explain,I think.
இந்த ஞானஸ்நானம் என்பது ஒருவகையில் ஞானக்குளியல் ஆகும்.ஆம். இயேசுவை பற்றிய ஞானத்தை பெற்றபின், இரட்சிப்பை பற்றிய அறிவை பெற்றபின்,விசுவாசித்த பின் எடுக்கும் ஒரு செயலே!ஆமா நீங்க இந்த ஞானக்குளியலை எடுத்துவிட்டீர்களா? இது முத்துக் குளியலைக் காட்டிலும் உயர்வானது. ஞானஸ்நானம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டைய 10 காரியங்கள் எவை? ஞானஸ்நானம் ஏன்? எதற்கு? யாருக்கு?
1.தேவ நீதியை நிறைவேற்ற
யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். (மத்.3:14,15)
3.இயேசுவின் கட்டளையை நிறைவேற்ற ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். (மத்.28:19,20)
4.ஞானஸ்நானம் என்பது தேவ ஆலோசனை யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.(லூக்கா.7:19,20)
5.பரலோகத்திற்குப் போக ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.(யோவான்3:5)
6.பாவ மன்னிப்பு பெற நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.(அப்.2:38)
7.கிறிஸ்துவுடனடக்கம் பண்ணப்பட மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.(ரோமர்.6:4)
8. கிறிஸ்துவின் சரீரமாயிருக்கும்படி நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். (1கொரி.12:13)
10. நல்மனசாட்சியுடன் இருக்க ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. (1பேதுரு3:21)
மேலே கண்ட பத்துக்காரியங்களையும் நாம் வாசித்து தியானிக்கும்போது ஞானஸ்நானம் என்பது யாரால் எப்போது எதற்காக எடுக்கவேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இப்போது நம் மனதில் ஞானஸ்நானம் யாரிடம் எடுக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம். இயேசுவின் மூன்றரை வருட ஊழிய காலத்தில் சீடர்கள் ஞானஸ்நானம் கொடுத்துவந்ததை அறிகிறோம். (யோவான் 3:22,யோவான் 4:3). இவர்களுக்கு முன்பே யோவான் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார். இந்த யோவான் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவன். சீடர்கள் இயேசு கூட இருக்கும் போதே ஞானஸ்நானம் கொடுத்துவந்தனர். ஆனால் இயேசு பாமேறிய பின்னர் அவர்கள் பரிசுத்த ஆவியை பெறும்வரைக்கும் எதையும் செய்யாமல் காத்திருக்கும் படி கட்டளையிடப்பட்டனர். பரிசுத்த ஆவியைப் பெற்றபின் சபையில் முதல் நாளே மூவாயிரம் பேர் ஞானஸ்நானம் பெற்றனர். ஆகவே தற்காலத்தில் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களிடம் ஞானஸ்நானம் பெறுவதே வேதாகம ஒழுங்கு ஆகும்.
இவ்வாறு ஜலம் என்னும் நீரில் மூழ்கி எழுவது ஜலத்துக்குள் நமது பழய மனுஷன் ஒழிக்கப்பட்டு புதியதாக பிறப்பதை ஜலத்தினால் பிறத்தல் என்றும். பின்னர் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறுவதை புதிதாக ஆவியில் பிறப்பதாகவும் வேதம் உவமை படுத்தியுள்ளதாக நான் கருதுகிறேன்.
இரண்டுமே ஒன்றாகவும் நடக்களால் அல்லது தனித் தனியாகவும் நடக்கலாம். இரண்டும் இல்லாமல் ஒருவன் தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பது கடினம்!