இந்த உலகத்தில் நடக்கிற எல்ல காரியங்களும் தேவனுடைய சித்தத்தின்படியே நடக்கிறது என்று நான் நம்புகிறேன்.
சகோதரரே எல்லா காரியமும் தேவனுடைய சித்தப்படி நடக்கிறது என்பதை என்னால் ஏற்க்க முடியவில்லை!
காரணம் ஒரு காரியம் ஒருவர் சித்தபடி சரியாக நடந்தால் அதற்காக யாரும் மனஸ்தாபமோ வருத்தமோ படுவதுகிடையாது. ஆனால் தேவனாகிய கர்த்தர் மனிதனை படைத்தத்தர்க்கும் சவுலை ராஜாவாகியதர்க்கும் மனஸ்தாப படடிருக்கிறார். எனவே தேவன் நல்லதையே நினைத்து மனிதர்களை படைக்க, இங்கு மனிதர்கள் அவரின் எதிர்பார்ப்புக்கு விரோதமாக தங்களை கெடுத்து கொண்டதால் அவர் மனஸ்தாபப்பட நேர்ந்துள்ளது.
எனவே மனிதர்கள் தங்களை கேடுத்துகொண்டது தேவனின் சித்தம் அல்ல என்றே நான் கருதுகிறேன்! எனவே நாம் இவ்வாறு சொல்லலாம் "இந்த உலகில் நடக்கும் ஒவ்வொரு காரியமும் அவருடைய அனுமதியோடேயே நடக்கிறது அவருக்கு தெரியாமல் எதுவும் எங்கும் நடந்துவிடாது" என்பதுதான் ஏற்க்க முடிந்த கருத்து.
Stephen wrote: ///அதோடு ஒவ்வென்றுக்கும் தேவனிடத்தில் சரியான நியாயம் இருக்கும் என்றும் நான் நம்புகிறேன். இப்படி எல்லாவற்றையும் தேவன் நீதி நீயாயதின்படி நடபிதாலும் அனேக காரியங்கள் நமக்கு புரிவதில்லை.///
ஆம்! தேவன் இவ்வுலகில் அனுமதித்துள்ள ஒவ்வொரு காரியத்துக்கும் சரியான நீதியான விளக்கம் தேவனிடம் இருக்கும் இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை!
ஏசாயா 55:8என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள்வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
யோபு 9:10ஆராய்ந்து முடியாத பெரியகாரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
என்று வசனம் சொல்வதால் கர்த்தரின் வழிகள் மனித அறிவுக்கு எட்டாததாகவே என்றும் உள்ளது! இருதயம் அடைக்கப்பட்ட நிலையில் இருக்கும் நம்மால் அவரின் மேன்மையான வழிகளை அறிந்துகொள்வது எனபது முடியாத காரியமே!
Stephen wrote: ///இப்படி நமக்கு தெரியாமல் அல்லது புரியாமல் இருக்கும் காரியங்களை நாம் தேவனிடத்தில் அறிந்து கொள்ள முடியுமா...? அல்லது அறிய முடியாத.....?///
எல்லா காரியங்களுக்கும் பதிலை அறியமுடியாது என்றாலும் இங்கு நடக்கும் அனேக காரியங்களுக்கு சரியான காரணத்தை தேவனிடமிருந்து அறிந்துகொள்ள முடியும் என்பதை நான் திட்டவட்டமாக நம்புகிறேன்.
சங்கீதம் 25:12கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
என்றாலும் எல்லா காரியங்களையும் தேவன் எல்லோரிடத்திலும் தெரிவிப்பது கிடையாது. அவரது இருதயத்துக்கு ஏற்றாற்போல் நடப்பவர்களிடம் தேவன் அனேக உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.
சங்கீதம் 103:7அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார். ஒரு ரகசியமான காரியத்தை ஒருவருக்கு தெரிவிப்பதால் நிகழப்போகும் நிறை குறைகளை கருத்தில் கொண்டு தேவன் சில உண்மைகளை சிலருக்கு தெரிவிக்கிறார்.
ஒரு நிகழ்ச்சியை பற்றிய உண்மையை அறிந்து கொள்வதனால் உங்களை நீங்கள் சீர்படுத்துவதர்க்கும் உங்களுக்கு மிகுந்த பிரயோசனமாகவும் இருக்கும் பட்சத்தில் உங்கள் மன நிலைகளின் அடிப்படையில் தேவன் உங்களுக்கு அதன் உண்மைகளை தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆமோஸ் 3:7கர்த்தராகியஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல்ஒரு காரியத்தையும் செய்யார்.
என்ற வசனத்தில் அடிப்படையில் இந்த உலகில் தேவன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் உள்ள ரகசியத்தை தன்னுடைய ஏதாவது ஒரு ஊழியக்காரருக்கு வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார் என்பதை அறியமுடிகிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)