இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிசுத்த ஆவியின் அபிசேகம் எதற்காக....?


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
பரிசுத்த ஆவியின் அபிசேகம் எதற்காக....?
Permalink  
 


இன்றைக்கு அனேக சபைகளில் பரிசுத்த ஆவியின் அபிசேகம் பற்றி

போதிபதில்லை.


பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகளையும் ஏற்க மறுக்கிறார்கள் ஒரு

மனுஷனுக்கு பரிசுத்த ஆவியின் அபிசேகம் எவ்வளவு முக்கியம் என்பதை

இன்றைக்கு அநேகர் அறியாமல் இருக்கிறார்கள்.


பரிசுத்த ஆவியில் நிறைதல் என்றால் என்ன....?

அல்லது

பரிசுத்த ஆவியில் நிரப்பபடுதல் என்றால் என்ன.....?

அது எதற்காக நமக்கு கொடுக்க படுகிறது.......?

அதினுடைய மேன்மை என்ன...?

எல்லாருக்கும் அவசியமானதா........?
 
தல சகோதர்களின் மேலான பதிவுகளை எதிர்நோக்கி .........................


__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது புதியஏற்பாட்டு காலத்தில் இருக்கும் நமக்கு இன்றியமையாத ஓன்று. அபிஷேகத்தின் மூலம் பிதாவிடமிருந்து  வந்து  நம்முள் வந்து தங்கும் ஆவியானவர்தான் நம்மை சகல சத்தியத்துக்குள்ளும் வழிநடத்த முடியும் என்று விவில்யியம் போதிக்கிறது.
 
யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் 
  
அதாவது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறுவதால் மட்டுமே ஒருவர்  பெலனடைந்து தேவனுக்கு ஏற்ற விதமாக நடக்க முடியும் என்றே நான் கருதுகிறேன்  
 
அடுத்ததாக ஆவியானவர் மீட்பின் நாளுக்கான முத்திரை என்றும் வேதம் சொல்கிறது.
 
எபேசியர் 4:30 அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.

இந்த வசனத்தின்  அடிப்படையில் பார்த்தோமே என்றால்
சில பொருட்கள்  தொழில்சாலையில் இருந்து விற்ப்பனைக்கு தயாராகும்போது "PASSED" என்றொரு முத்திரையை அதில் பதிப்பார்கள். அதாவது அந்த பொருள் விற்ப்பனைக்கு தயாராக இருப்பதை அந்த முத்திரை அறிவிக்கும். அதேபோல்  இயேசுவின் வருகையில் மீட்கப்படுவதற்கு முத்திரையாக இந்த பரிசுத்த ஆவியானவர் அருளப்படுகிறார். பரிசுத்த ஆவியானவர் நம்முள் தங்கியிருக்கும்வரை நமக்கு பரலோகத்தை
பற்றிய நிச்சயம் உண்டு என்பது எனது கருத்து. .
 
மேலும் ஆவியானவர்பற்றி விபரம்  அறிந்துகொள்ள நமதுதளத்தில் உள்ள  கீழ்கண்டதிரிகளை   வாசிக்கவும்!  
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

அன்பு எழுதியது
---------------------------------------------------------------------------
ஒருவன் எப்போது இயேசுவை ஏற்றுக்கொள்கிறானோ அப்போதே அவனிடம் பரிசுத்தஆவி வந்துவிட்டது என அர்த்தம். இன்று பலரும் நினைப்பதுபோல், பரிசுத்தஆவி வருதல் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அடையாளங்களுடன்தான் (உ-ம்: அந்நிய பாஷை பேசுதல்) நிகழவேண்டுமென்பதில்லை. ஒருவன் இயேசுவை அறியும்போது அவனிடம் பரிசுத்தஆவி வந்துவிடுகிறது, அல்லது ஒருவனிடம் பரிசுத்தஆவி வரும்போது அவன் இயேசுவை அறிந்தவனாகிறான். இவ்விரு நிகழ்வுகளும் (அதாவது பரிசுத்தஆவி வருதலும், இயேசுவை அறிதலும்) ஒரே சமயத்தில் நிகழ்பவைகளாக இருக்கின்றன.
---------------------------------------------------------------------------
EDWIN SUDHAKAR WROTE
இந்த கருத்தை நான் எற்றுகொள்கின்றேன்............
---------------------------------------------------------------------------------------------------------

சகோதரர்  எட்வின்  அவர்களே. இந்த கருத்தில் எல்லோருக்கும் ஒரேபோல் தான் நடக்கும் என்று சொல்ல வாய்ப்பு இல்லை. ஆவியானவரை பெறுதல் என்பது ஒரு தனி விசேஷ அனுபவம் என்றே நான் கருதுகிறேன். ஆண்டவராகிய இயேசுவுக்கு ஞானஸ்தானம் பெரும்போதே அபிஷேகமும் கிடைத்தது அதுபோல் தங்களுக்கும்  வேறு பலருக்கும் கூட கிடைத்திருக்கலாம். 

ஆனால் வசனங்கள் அடிப்படையில் பார்த்தால் ஞானஸ்தானம் பெற்று ஆவியானவரை பெறாதவர்களும் உண்டு ஆவியானவரை பெற்றபின் ஞானஸ்தானம் எடுத்துகொண்டவர்களும் உண்டு. வசன அதரத்துடன் சரியான விளக்கங்களை அரிய கீழ்கண்ட சுட்டியை சொடுக்கவும்
 
அடுத்து  ஆவியானவர்  எதாவது அடையாளத்தோடு மட்டும்தான்  வருவார் என்று கருதுவதும்கூட உண்மையானதே. அது நிச்சயம் ஒரு மாறுபட்ட  அனுபவமாகவே இருக்கும்! 

உதாரணமாக அந்நிய பாஷை/துள்ளி குதித்தல்/ உரத்த சத்தமாய் ஜெபித்தல்/ பனி போன்ற ஓன்று நம்மை மூடுதல்/ கண்ணீர் சிந்துதல்/ ஒளி போன்றஓன்று நம்மை ஆட்கொண்டதுபோல் உணர்தல் போன்ற ஏதாவது ஒரு இன்டிகேசன் நிச்சயம் உண்டு  என்றே நான் கருதுகிறேன்!  ஆனால் அப்படி ஏதாவது ஒரு சிறு நிகழ்வு நடந்து, நாம் அறியாமல் கூட ஆவியானவர் நம்முள் வர வாய்ப்புண்டு. ஆனால் ஆவியானவர் நம்முள் இருக்கிறாரா இல்லையா என்பதை நாம் அனுபவ பூர்வமாக நிச்சயம் அறியமுடியும்!  
 
மேலும் விளக்கம் வேண்டுமாகின் தாராளமாக முன்வைக்கவும் ஆராயலாம்             


-- Edited by SUNDAR on Saturday 18th of December 2010 04:57:14 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

-------------------------------------------------------------------------------------------------------
சுந்தர் எழுதியது

அடுத்து  ஆவியானவர்  எதாவது அடையாளத்தோடு மட்டும்தான்  வருவார் என்று
கருதுவதும்கூட உண்மையானதே. அது நிச்சயம் ஒரு மாறுபட்ட  அனுபவமாகவே இருக்கும்! 
-------------------------------------------------------------------------------------------------------
சுந்தர் கூறுவது  மிகவும் சரியானது 
 

அன்பு அவர்கள் கூறுகின்ற படி  பரிசுத்த ஆவியானவர் ஞானஸ்தானம் எடுப்பதற்கு முன்பு கூடஒரு மனிதனில் வந்து தங்குவார் அல்லது ஞானஸ்தானம் எடுத்த பிறகும் கூட வருவார்

மற்றும்

 
சகோ: சுந்தர் சொல்கின்றபடி  ஞானஸ்தானம் எடுக்கும்  பொழுதும்  வருவார்  
 
ஆனால்நிச்சயம்  ஆவியானவர்  நமக்குள்  வரும்  பொழுது  ஒரு மாற்றம்  தெரியும்  சிலர்  கிலே  விழுந்தால்  அல்லது அன்னியபாசயிலே  பேசினால் மட்டும்  தான்ஆவியானவர் வந்ததாக   சொல்கின்றனர்  

இப்படியும்  வருவார்  இது மறுக்க முடியாத  உண்மை ஆனால்  இப்படி  மட்டும்  தான்  ஆவியானவர் வருவார் என்று சொல்வதுதான்  என்னால்  ஏற்று  கொள்ள  முடியவில்லை   
 
நான் இயேசுவின்  நாமத்தினால்  ஞானஸ்தானம்  எடுத்து  இரண்டு 
வருடம்  ஆகியும்  அபிஷேகம்  பெறாமல்  இருந்தேன்  ஏனென்றால்  

எனக்கு  இயேசுவை பற்றி  ஒன்றும்  தெரியாது  வேதம் கூட முழுமையாய்   படித்ததில்லை  ஆவியானவர் என்பது யார் அவரின் குணங்கள் என்றால் என்ன   ஒன்றும்  புரியாது  
 
இயேசு  மேல்  உள்ள  ஆசையினால்  ஞானஸ்தானம் எடுத்தேன் 
பிறகு இரண்டு வருடம் கழித்து ஆண்டவராகிய கிறிஸ்துவை
முளுமனதார ஏற்று கொண்டு
 
வேதத்தை ஆர்வமாய் படித்து மற்றும்  சகோ : எசேக்கிய பிரான்சிஸ் அவர்களுடைய புஸ்தகங்களை  படித்தேன் 
(ஆவியானவர்  பெற்று கொள்வது எப்படி )  

அதன் பின் ஒரு நாள் நான் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டு இருக்கும்
பொழுது எப்பொழுதும் ஆண்டவர் நினைப்போடு இருந்ததால்
 
பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுது பற்பல பாஷைகளை பேசினேன் என்னுள்
புது மாற்றும் தெரிந்தது முக்கியமாக இறக்கம் குணம் அதிகமாக எனக்குள் இருந்தது
 
ஆவியானவர் அபிஷேகம் பெறமால் இருக்கும் பொழுது குருடர் உடல் ஊனம்முற்றவர்கள்  குஷ்டரோகிகள்
இவர்களை பார்க்கும் பொழுது  ஐயோ பாவம் என்று சொல்லி விட்டு பின் அதை மறந்து போய்விடுவேன் ஆனால் ஆவியானவர் அபிஷேகம்  பெற்றபின்
 
அவர்களை பார்க்கும் பொழுது மனதில் அழுதும்  இருதயம் இழுக்கும் பட்டும்  இருக்கின்றேன் உண்மையாக
சொல்கின்றேன் அதுநான் அல்ல எனக்குள் ஆவியானவரே அவர்களுக்காக இறக்க பட்டும்  வருந்தியும்  இருக்கின்றார்
என்று நான் நன்கு அறிவேன் 
 
ஆவியானவர் வந்தால் நிச்சயம் நமக்குள் மாற்றும் தெரியும் அப்படி ஒன்றும் தெரிய வில்லை என்றால்   
ஆண்டவர் பாதத்திலே அமர்ந்து ஆண்டவரே நான் ஆவியானவரின் அபிஷகம் பெற்றேனா இல்லையா
என்று எனக்கு தெரியவில்லை தயவுகூர்ந்து ஒரு முறை நானே ஆச்சரியப்பட என்னை உமது பரிசுத்த
ஆவியினாலே நிரப்பும் என்று சொன்னால் நிச்சயம் திருஷ்டான்கமாய்  நீங்கள் உணர்ந்து
கொள்ளும் படி தேவன் தம்முடைய ஆவியினால் உங்களை நிரப்புவார் 


-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 18th of December 2010 06:32:03 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard