ஐக்கியபுரி என்னும் நாட்டின் ராஜாவுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்களாம். அதில் இளைய மகன் மாவீரனும் எந்த ஒரு செயலையும் உடனடியாக செய்து முடிக்க துடிக்கும் வேகமும் நிறைந்தவன். இன்னொருவனோ தன் தகப்பன் மீது மிகுந்த பற்றுள்ளன்வன் எப்பொழுதும் அவருக்கு பக்கத்திலேயே அமர்ந்து அவரோடு ஐக்கியமாக இருக்க விரும்புகிறவன்.
ஒருநாள் அப்பொல்லியோன் என்னும் ராஜா திடீர் என்று ஐக்கியபுரியின்மேல் படை எடுத்து வந்துவிட்டார். இதை அறிந்த துடிப்பு நிறைந்த இளைய மகன் தகப்பனிடம் எந்த ஒரு அனுமதியோ ஆலோசனையோ கேட்காமல் எதிரியிடம் சண்டைக்கு செல்ல, தந்திரக்காரனாகிய அப்பொல்லியோன் சுலபமாக வீரம் நிறைந்த இளைய மகனை சிறை பிடித்து கைகால்களில் விலங்கை பூட்டி அடிமை ஆக்கிக்கொண்டு நாட்டுக்குள் பகுந்துவிட்டான்.
இதை அறிந்த ராஜா தன்னுடன் ஐக்கியமாக இருக்கும் மூத்த மகனிடம் எதிரியை வெல்வதற்கு தகுந்த ஆலோசனைகளை அதிகம் அதிகமாக வழங்கினார். அனைத்தையும் அக்கறையோடு கேட்ட மூத்த மகன் எழுந்து சண்டைக்கு கிளம்ப வில்லை. தகப்பன் எவ்வளவோ வற்ப்புறுத்தி அவனை யுத்தத்துக்கு அனுப்ப முயன்றும் அந்த சோம்பேறி மூத்த மகன், தகப்பனுடன் ஐக்கியமாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தகப்பனின் எந்த ஆலோசனையும் நிறைவேற்றாமல் எதிரியை தடுக்க எந்தமுயற்ச்சியும் எடுக்காமல் அரண்மனைக்குள்ளேயே அமர்ந்து கொண்டான்.
அந்தோ அவனும் சிறைபட்டுபோனான்!
இந்த கதையின் மைய கருத்து என்னவென்பது அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
தற்காலங்களில் தேவ ஐக்கியத்தைபற்றி அநேகர் பேசுவதை கேட்கிறோம் தேவ ஐக்கியம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் தேவ கட்டளைகளுக்கு கீழ்படிந்து காரியங்களை செயலில் காட்டுவதும் மிக மிக முக்கியம்.
தன்னோடான ஐக்கியத்தை மட்டும் தேவன் எதிர்பார்த்தால் எல்லோரும் சந்நியாசியாகபோய் ஒரு ஆல மரத்திடியில் உட்காந்து என்னோடு ஐக்கியமாகி விடுங்கள் என்று சொல்லியிருக்கமுடியும்! ஆனால் தேவன் அதை விரும்பவில்லை "வார்த்தைக்கு கீழ்படியுங்கள்" என்ற தேவ கட்டளையையே வேதம் திருப்ப திரும்ப சொல்கிறது. சோதனைகளும் வேதனைகளும் எதிர்ப்புகளும் நிறைந்த இந்த உலகில் அந்தகார அதிபதியாகிய சாத்தானை எதிர்த்து நின்று ஜெயிக்கவே நமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எபேசியர் 6:12ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு
I தீமோத்தேயு 1:18 நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்
எனவே அன்பானவர்களே தேவனுடைய பாதத்தில் அமர்ந்து ஐக்கியப்பட்டு ஆண்டவரின் வார்த்தைகளை அறியவிரும்புவது அவசியமே ஆனால் அதைவிட அவசியம் தேவன் தெரியப்படுத்தியவற்றுக்கு கீழ்படிந்து அவைகளை நமது செயலில் காட்டுவது.
ஆபிரஹாம் தேவனை விசுவசித்து அவரோடு ஐக்கியமாக இருந்தபோது தேவன் அவனுக்கு மட்டுமே அதை நீதியாக எண்ணினார் ஆனால் அவன் தேவகட்டளைக்கு கீழ்படிந்து ஈசாக்கை பலியிட துணித்து தனது நிலையை செயலில் காட்டியபோது அவனுடைய சந்ததியோடு சேர்த்து சகல ஜாதியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
ஆதியாகமம் 22:18நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
எனவே அன்பானவர்களே நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இந்த உலகம் முழுவதும் பயனடைய வேண்டுமா? தேவனோடு ஐக்கியமாக இருந்து அவரின் இருதய வாஞ்சையை அறிந்துகொண்டு, அதற்க்கு உடனடியாக கீழ்படித்து அதை செயலில் காட்டுங்கள் அதுவே எல்லோருக்கும் பயனுள்ள காரியமாக அமையும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)