சமீப நாட்களில் ஒரு ஊழியக்கார சகோதரியின் அறிமுகம் கிடைத்தது. அவர்களை பற்றி நான் அறிதுகொண்ட சில உண்மைகளை இங்கு பதிவிடுகிறேன். இதுபோன்ற வர்களின் உண்மை நிலை என்னவென்பதை எனக்கு சற்று தெரிவிக்கவும்.
சில வருடங்களுக்கு முன்னால் எந்த ஒன்றுமே அறியாமல் மிக சாதுவாக தான் உண்டு தனது குடும்பம் உண்டு (கணவன் மற்றும் இரண்டு சிறு குழந்தைகள்) என்று வாழ்ந்து வந்த கத்தோலிக்க பிரிவை சார்ந்த அவர்கள் சுமார் 4 வருடங்களுக்கு முன்னால் ஆண்டவரை அறிந்துகொண்டார்கள்.
அதன் பின்னால் அவர்கள் கணவனும் மனம்திரும்ப, ஊழியம் அது இது என்று அதிக அதிகமாக ஈடுபட ஆரம்பித்தனர். அவர்களை பற்றி கேள்விப்பட்டபோது உண்மையில் நான் மிக உயர்ந்த விசுவாசகுடும்பம் நம்மால் அப்படி இயக்க முடியவில்லையே என்று வருந்தியதுண்டு.
ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை வேறு சில சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து மெஷினரி ஊழியம் என்று வெளியூர்களுக்கு சென்று நான்கைந்து நாடங்கள் தங்கி ஊழியம் செய்து வருவார்கள், அதிகம் ஜெபிக்கும் ஜெபவீரர் மற்றும் எந்நேரமும் அந்த ஆத்துமா இந்த ஆத்துமா என்ற ஆத்துமாக்களுக்காக புலம்புவதையும் பார்க்க முடியும். எங்கு ஜெபிக்கபோக வேண்டும் என்றாலும் உடனே புறப்பட்டு வந்துவிடுவார்கள். இவற்றை எல்லாம் பார்க்கும் போது இவர்களை தவறு என்று சொல்வைதர்க்கு எதுவுமே இல்லை.
ஆனால் அவர்கள் வாழ்க்கை நிலைகளை சற்று உள்ளே சென்று பார்த்த போது நான் அறிந்துகொண்ட உண்மைகள் சிலவற்றை எழுதுகிறேன். அவர்களின் நிலை என்னவென்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
சென்னையில் குடும்பத்தோடு வசிக்கும் அவர்கள் "ஆண்டவர் வீடுகட்ட சொன்னார்" என்று ஆண்டவர் மேல் பழியை போட்டு, சொந்த ஊரில் நல்ல வீடு கட்டி வைத்துள்ளனர். அதற்க்கு பணம் பற்றாகுறை ஏற்ப்பட்டபோது, ஆண்டவர் ஒரு குறிப்பிட்ட ஊளியரிடம்போய் பணம் கேட்கசொன்னாராம். ஆனால் அந்த ஊழியரோ "என்னிடம் ஆண்டவர் உங்களுக்கு பணம் கொடுக்க சொல்லவில்லையே" என்று தர மறுக்க அதிக வட்டிக்கு கடன் வாங்கி வீட்டை கட்டிவிட்டு கடனை செலுத்த முடியாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். சாதாரண ஒரு குடும்பமான இவர்கள் இரண்டு மூன்று இடங்களில் காலி இடங்களை வாங்கி போட்டுள்ளனர். ஆனால இந்த கடன் பிரச்சனையில் இருந்து விடுபட ஒரு இடத்தை விற்றாவது கடனை தீர்க்க மனதில்லாமல் இருக்கின்றனர். ஆனால் பணம் தர மறுத்த ஊழியக்காரரை குற்றம் சுமத்திக்கொண்டு "அவரால்தான் நான் இவ்வளவு கடனுக்கு உள்ளானேன், "அவரிடம் கேள் பணம் தருவார் என்று ஆண்டவர் தெளிவாக சொன்னார் அவர் பணம் தராமல் என்னை கடன்காரர் ஆக்கிவிட்டார்கள்" என்று புலம்புகிறார்களாம்.
இது எப்படி இருக்கு?
எங்கள் வீட்டில் வந்து அமர்ந்த அவர்கள் உங்கள் செல்போனை கொஞ்சம் தாருங்கள் ஒரே ஒரு கால் பண்ணவேண்டும் என்று கேட்டு வாங்கி அதில் இருந்த சுமார் நாற்ப்பது ரூபாயை காலியாக்கி விட்டதோடு, எங்கள் வீட்டில் இருந்த ஒரு டிவி ஐ பார்த்து இந்த டிவி எனக்குதான் என்று ஆண்டவர் சொல்லிவிட்டார். அது என் வீட்டுக்கு வருகிறதா இல்லையா என்பதை மட்டும் பாருங்கள் என்று சவால் விட்டிருக்கிறார்.
யார் வீட்டில்போய் அமர்ந்தாலும் அங்குள்ள்பொருட்களை அவர்களின் அனுமதியே இல்லாமல் எடுத்து உபயோகிப்பது கண்ணில் தெரிய எதாவது தின்பண்டங்கள் இருந்தால் எந்த கூச்சமும் இல்லாமல் அதை எடுத்து தன் பிள்ளைகளோடு சேர்ந்து தின்று எல்லாவற்றையும் தின்று காலியாக்கிவிடுவது போன்றது இவர்கள்\ வாடிக்கை.
தற்போது அவர்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டின் ஓணர் ஒரு பைக் ஒன்றை விற்ப்பதற்க்காக வைத்திருந்தாராம் "அந்தபைக் எங்களுக்குத்தான் என்று ஆண்டவர் சொல்லிவட்டார் எனவே அதை இத்தனை ரூபாய்க்கு எங்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று அவரிடம் கேட்க, அவர் மறுக்க இறுதியில் அந்த பைக்கை வேறொருவர் கூடுதல் பணம் கொடுத்து வாங்கி சென்று விட்டார். இதை அறிந்த ஆண்டவர் "அந்த பைக் போனால் போகுது விட்டுவிடு, உனக்கு நான் மாருதி கார் தருகிறேன் என்று சொன்னதோடு பைக் என்றால் உங்கள் குடும்பம் மட்டும்தான் சபைக்கு போகமுடியும் கார் என்றால் இன்னும் பல் ஆத்துமாக்களை நீ காரில் ஏற்றிக்கொண்டு சபைக்கு போகலாம் என்றாராம்"
அதற்காக இப்பொழுது கார் வாங்கும் கனவில் மிதப்பதொடு ரோட்டில் செல்லும் கார்களை பார்த்து இந்த கார்தான் ஆண்டவர் என்னை வாங்க சொல்லிருக்கிறார் என்று என் மனைவியிடம் காட்டுகிறார்களாம்
இதில் உண்மை என்னவென்பதே எனக்கு புரியவில்லை. ஆண்டவர் இப்படி எல்லாம் உலக பொருட்களை வாங்குவது பற்றியா அடிக்கடி பேசுவார்?
ஒருபுறம் பார்த்தால் ஆவிக்குரிய நிலையில் அதிகம் ஜெபிபது சபைக்கு காலை ஐந்து மணிக்கே சென்று ஆராதனையில் கலந்துகொள்வதொடு சிறுபிள்ளைகளுக்கு ஊழியம், மெஷினரி ஊழியம் வீடு வீடாக போய் ஜெபித்தல் போன்ற பல காரியங்களில் ஈடுபடுகிறார்கள்
இன்னொருபுறம் பார்த்தால் உலக பொருட்களின்மேல் அளவற்ற பற்று உள்ளவர்களாக எதை பார்த்தாலும் அது எனக்குதான் ஏற்றொரு நிலையில் இருக்கிறார்கள்
இவர்களின் உண்மையான நிலை என்ன?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
sundar wrote: //ஒருபுறம் பார்த்தால் ஆவிக்குரிய நிலையில் அதிகம் ஜெபிபது சபைக்கு காலை ஐந்து மணிக்கே சென்று ஆராதனையில் கலந்துகொள்வதொடு சிறுபிள்ளைகளுக்கு ஊழியம், மெஷினரி ஊழியம் வீடு வீடாக போய் ஜெபித்தல் போன்ற பல காரியங்களில் ஈடுபடுகிறார்கள்
இன்னொருபுறம் பார்த்தால் உலக பொருட்களின்மேல் அளவற்ற பற்று உள்ளவர்களாக எதை பார்த்தாலும் அது எனக்குதான் ஏற்றொரு நிலையில் இருக்கிறார்கள்
இவர்களின் உண்மையான நிலை என்ன?//
உலகப்பொருட்கள் மீது அளவற்ற பற்றுள்ளவர்களாக இருப்பதாக நீங்களே சொல்லிவிட்டீர்கள். உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென வேதாகமம் கூறுவதை நீங்கள் அறிவீர்களல்லவா (யாக்கோபு 4:4)? இவ்வளவாய் வேதாகமம் தெளிவாகச் சொல்லியிருந்துங்கூட உங்களால் அச்சகோதரியை நிதானிக்க இயலவில்லையா?
இவர்களையே உங்களால் நிதானிக்க முடியவில்லையெனில், மிகமிகத் தந்திரமாக செயல்படுகிற மற்றவர்களை எப்படி நிதானிப்பீர்களோ தெரியவில்லை.
இப்போது நான் சொல்லப்போவது உங்களுக்குப் பரியாசமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் உங்களைப் பரியாசம் பண்ணுவதற்காக இதைச் சொல்லவில்லை.
எத்தனையோ விஷயங்களில் “ஆவியானவர்” இடைபட்டு உங்களுக்குப் பல காரியங்களை வெளிப்படுத்தியிருக்கும்போது, மிகமிகச் சாதாரணமான இக்காரியத்தில் “ஆவியானவர்” உங்களுக்கு வெளிப்படுத்தாதது ஆச்சரியமாக உள்ளது.
“ஆவியானவர்” நேரடியாக வெளிப்படுத்தாவிட்டாலும், உலகப்பொருளுக்கும் தேவனுக்கும் உங்களால் ஊழியஞ்செய்யஇயலாது எனும் இயேசுவின் வசனம்கூட (மத்தேயு 6:24) அச்சகோதரியின் நிலையை உங்களுக்கு வெளிப்படுத்தவில்லையா?
எத்தனையோ விஷயங்களில் “ஆவியானவர்” இடைபட்டு உங்களுக்குப் பல காரியங்களை வெளிப்படுத்தியிருக்கும்போது, மிகமிகச் சாதாரணமான இக்காரியத்தில் “ஆவியானவர்” உங்களுக்கு வெளிப்படுத்தாதது ஆச்சரியமாக உள்ளது.
“ஆவியானவர்” நேரடியாக வெளிப்படுத்தாவிட்டாலும், உலகப்பொருளுக்கும் தேவனுக்கும் உங்களால் ஊழியஞ்செய்யஇயலாது எனும் இயேசுவின் வசனம்கூட (மத்தேயு 6:24) அச்சகோதரியின் நிலையை உங்களுக்கு வெளிப்படுத்தவில்லையா?
ஆவியானவர் எல்லா கேள்விகளுக்கும் நமக்கு பதில் அளிப்பதில்லை. சில காரியங்களில் மௌனம் சாதித்து விடுகிறார். அவரின் செயலுக்கு என்தாவது முக்கிய காரணம் என்று கருதி நானும் அதற்குமேல் அவரிடம் மன்றாட விரும்புவ தில்லை பொதுவாக இன்னொரு விசுவாசி மற்றும் ஊழியக்காரர்கள் பற்றிய உண்மையில் பல நேரங்களில் அவர் பதில் சொல்வது இல்லை. தன்னுடைய ஒருபிள்ளையின் குறையை இன்னொருபிள்ளையிடம் சொல்ல விரும்பவில்லை போலும் என்றே நான் கருதுகிறேன்.
இந்நிலையில் ஒருவரின் ஒரு நிலையை பார்த்து "மிகுந்த ஆவிக்குரியவர்" என்று எண்ணும் நான் இன்னொரு நிலைபார்த்து "இது சரியான ஆவிக்குரிய நிலைதானா" இல்லை நமக்குதான் அதுபோல் அனுபவம்இல்லையா என்று ஐயப்படும் நிலையில் இருக்கிறேன். எனவே அனுபவம் உள்ளவர்கள் அவர்கள் நிலை பற்றி விளக்கினால் நலம் என்று கருதுகிறேன்.
அதிக அனுபவம் உள்ளவர்களிடம் விசாரித்து எனக்குள்ளே உள்ள சில சந்தேகங்களை தீர்த்துகொள்ளவே இந்த விவாதத்தை முன் வைத்தேன் ஏனெனில் இதேபோல செயல்பட்ட இன்னொரு சகோதரியையும் நான் அறிவேன் "ஆண்டவர் பிரிட்ஜ் வாங்க சொன்னார் பக்கத்தில் காலியாக கிடக்கும் இடம் எனக்குத்தான் என்று சொல்லியிருக்கிறார்" என்று அந்த சகோதரியும் பல காரியங்களை சொல்ல்யிருந்தார்கள். ஆனால அந்த இடம் இன்னொருவர் வாங்கி வீடுகட்டி விட்டார்.
ஆண்டவர் எரேமியா தீர்க்கதரிசியிடம் அவரது சிறிய தகப்பன் இடத்தை வாங்கி பத்திரத்தை பதிவு செய்யும்படி கூறினார் அதற்க்கு காரணம் பிற்காலத்தில் இஸ்ரவேலர் மீண்டும் அந்த இடத்துக்கு திரும்பிவந்த நிலங்களை கொள்வார்கள் என்பதை முன்னறிவிககவே. மற்றபடி வேதத்தில் பொருட்களை வாங்குங்கள் என்று கர்த்தர் சொன்னதற்கு சரியான ஆதாரம் எதுவும் இருப்பதுபோல் தெரிய வில்லை.
இங்கு எனது கேள்வி என்னவென்றால்
ஆண்டவர்தான் இவ்வாறு தனது பிள்ளைகளின் உபயோகத்துக்கு என்று சில பொருட்களை இதுபோல் வாங்க சொல்கிறார் என்றால், ஆண்டவர் ஒருமுறை சொன்னது நடக்காமல் போகுமா?
மேலும் இத்தனைநாள் கிறிஸ்த்தவ வாழ்வில் என்னிடம் பலமுறை இடைபட்டுள்ள ஆண்டவர், "உண்மையாய் நட, உத்தமாய் இரு, என் வாத்தைகளை பின்பற்று, உலக பொருட்கள்மேல் பற்று வைக்காதே, இக்காரியத்தில் நீ செய்ததது தவறு, இவரிடம் மன்னிப்பு கேள்" என்பது போன்றே எனக்கு போதித்திருக்கிறார். ஒரு முறை கூட இந்த பொருளை வாங்கு என்று கட்டளையிட்டதே இல்லை. மாறாக பொருட்களை வாங்குவதற்கும் நிலங்களை கொள்வதற்கும் இதுகாலமில்லை என்றுதான் அறிவுறுத்தியிருக்கிறார்.
ஒருவேளை ஆண்டவர் இந்த காரியங்களை அவர்களிடம் சொல்லவில்லை அவர்கள் தவறான ஆவியால் வழிநடத்தப்படுகிறார்கள் என்றால்
இதுபோல் ஆண்டவரின் ஊழியம்/ ஜெபம் மெஷினரி பணி என்று அவருக்காகவே தன்னை அர்ப்பணித்து ஆத்துமா ஆத்துமா என்று பரிதபிபில் வாழும் ஒருவரை சாத்தான் உலக போருட்கள்மேலுள்ள இச்சையில் இழுத்துபோடுவானாகில் சாதாரண மற்ற விசுவாசிகள் எம்மாத்திரம்? (ஏனெனில் அவர்களைப்போல ஊழியம் செய்வதோ ஜெபத்தில் தரித்திருப்பதோ என்னால் நிச்சயம் முடியாது!)
இக்காரியங்கள் என்னை சற்று குழப்புகிறது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
sundar wrote: //ஒருபுறம் பார்த்தால் ஆவிக்குரிய நிலையில் அதிகம் ஜெபிபது சபைக்கு காலை ஐந்து மணிக்கே சென்று ஆராதனையில் கலந்துகொள்வதொடு சிறுபிள்ளைகளுக்கு ஊழியம், மெஷினரி ஊழியம் வீடு வீடாக போய் ஜெபித்தல் போன்ற பல காரியங்களில் ஈடுபடுகிறார்கள்
இன்னொருபுறம் பார்த்தால் உலக பொருட்களின்மேல் அளவற்ற பற்று உள்ளவர்களாக எதை பார்த்தாலும் அது எனக்குதான் ஏற்றொரு நிலையில் இருக்கிறார்கள்
இவர்களின் உண்மையான நிலை என்ன?//
ஊழியம் செய்கின்ற அந்த ஸ்திரிக்கு கர்த்தர் மேல் அன்பு இருக்கின்றது அது உண்மை ஆனால் அதே நேரத்தில்
உலக பொருட்கள் மீதும் அதிக ஆசை இருக்கின்றது
இந்த காரியத்தை நாம் உடனே தவறு என்றும் கூறி விட முடியாது அப்படியே அது சரி என்றும் ஒற்று கொள்ள முடியாது
நான் கேளிவிபட்ட சம்பவத்தை இங்கு பதிக்கின்றேன்
ஒரு பெண் போதகர் ஆலயத்தில் பேசும் பொழுது அந்த வார்த்தை ஆண்டவர்
பேசுவது போல் இருக்குமாம் அந்த பெண் ஆராதனை நடத்தும் பொழுது
தேவனுடைய மகிமை அந்த இடம் முழுவது சூழ்ந்து கொள்ளோமாம்
அந்த அளவுக்கு அந்த ஆராதனை இருக்குமாம் மீட்டிங் முடிந்த பிறகு பெண்
போதகர் அவர் இடத்துக்கு போய் விட்டார்
அப்பொழுது ஒரு போதார் ஒருவர் அவரிடம் பேச வேண்டும் என்று அவர் தங்கி
இருக்கும் ரூமுக்கு சென்று பார்த்த பொழுது
அந்த பெண் போதகர் சிக்கரட் பிடிப்பதை பார்த்து போதகருக்கு ஒரே
வேதனையும் குழப்பமாய் இருந்தது போதகர் அந்த இடத்தை விட்டு சென்று
ஆண்டவரிடத்தில் ஆண்டவரே இவளுக்கு இந்த பழக்கம் இருந்தும் இவள்
நடத்தும் ஆராதனையில் உம்முடைய மகிமை இறங்கியதே என்று கேட்டதற்கு
அதற்க்கு ஆண்டவர் ஆம் அவளுக்கு அந்த பழக்கம் இருப்பது உண்மை ஆனால்
அவள் ஒவ்வொரு நாளும் படுகின்ற வேதனையை நான் அறிவேன் அவள் இந்த
பழக்கத்தை விட வேண்டும் விட வேண்டும் என்று பல முறை நினைத்தும்
அவளால் அதை விட முடிய வில்லை அவள் அதில் கட்ட பட்டு இருக்கின்றாள்
அதற்காகத்தான் அந்த கட்டில் இருந்து விடுவிக்க உன்னை வரவழைத்தேன்
என்று கூறினார்
இந்த சம்பவம் ஒரு பெரிய போதகர் சொன்னது ( இது என் கருத்தல்ல நான் கேள்வி பட்ட சம்பவம் )
இந்த விசயத்தில் என் கருத்து இது தான்
மனிதர்களின் பார்வை எண்ணமும் எப்பொழுது தவறாய் இருக்கும்
ஆனால் ஆண்டவரோ உள்ளத்தை பார்கின்றவர்...........................
-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 23rd of October 2010 02:54:27 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
சகோதரர் எட்வின் அவர்களின் பதிலில் ஏற்றுக்கொள்ளகூடிய நல்ல கருத்துக்கள் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
நாம் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டிருந்தாலும் பாவ மாமிசத்தை பெற்ற மனிதர்களே! ஒவ்வொரு மனிதனிடமும் குறை நிறைகள் இருக்கத்தான் செய்யும். இந்த பாவ மாமிசகிரியை மேற்கொண்டு பரிசுத்தமாக வாழ முயர்ச்சிப்பதும் இயேசுவை போன்ற ஒரு பரிசுத்த நிலையை அடைவதும்தான் நமது நோக்கம் மற்றும் இலக்கு. இவ்வாறு நமது இலக்கை நோக்கி முன்னேறுகையில், நாம் எந்த விஷயத்தில் பலகீனமாக இருக்கிறோம் என்பதை அறிந்த சாத்தான் சில மாமிச கிரியைகள் மூலம் நமது ஆவிக்குரிய நிலையை மேற்கொண்டு விடுவது உண்டு. அவ்வாறே பலமுறைகள்கூட நடக்க வாய்ப்புண்டு.
இதில் ஆண்டவருக்கோ ஆவியான்வருக்கோ எந்த பங்கும் இல்லை. ஆகினும் ஆவியானவர் இக்காரியங்களை தவறு என்று சுட்டிகாட்ட தவறுவது இல்லை. சிலர் அந்த கடிந்துகொள்தலை கேட்டு திருந்திவிடுகின்றனர். சிலர் பலமுறை கடிந்துகொள்ளப்ப்ட்டாலும் திருந்துவது இல்லை. அதக்காக அந்த விசுவாசியயோ ஊளியரையோ ஆண்டவர் தள்ளிவிடுவது இல்லை. ஏனெனில் இயேசுவிடம் வந்த யாரையும் அவர் புறம்பே தள்ளுவது இல்லை. அவர்களாகவே இயேசுவை மறுதலித்து போனால்தான் உண்டு
ஆனால் இப்படிபட்டவர்கள் தாங்கள் வாழ்வில் அனேக பிரச்சனைகளை சந்திப்பதோடு சரியான இலைக்கை எட்ட முடியாதவர்களாகவே வாழ்ந்து முடிக்கின்றனர்.
அந்த சகோதரி உலக பொருட்களில் மேல் பற்றுள்ளவராக இருப்பது உண்மை அந்த பலஹீனத்தை பயன்படுத்தி சாத்தான் அவர்கள் மனதில் சில தேவையற்ற வார்த்தைகளை விதைக்கிறான் அதில் அவர்கள் இழுப்புண்டு போகிறார்கள் அவ்வளவுதான்! (எப்படியாகிலும் சில ஆத்துமாக்கள் ரட்சிக்கப்பத்வாதை தடை செய்துவிட்டாள் அதுவே சாத்தனுக்கு கொண்டாட்டம்தானே) அதற்காக அவர்கள் குற்றவாளியோ ஆண்டவரால் சீர்படுத்த முடியாதவர்களோ அல்ல! ஒருவேளை அவர்கள் கொஞ்ச காலம் கழித்து திருந்தி விடலாம் அல்லது திருந்தாமலேயே போகலாம் அதற்காக ஆண்டவர் அவர்களை தள்ளிவிடபோவது இல்லை இந்நிலையில் நாமும் அவர்களை போன்றவர்களை தூன்றி தியக்கூடாது எனபதே எனது கருத்து.
மற்றபடி இங்கு யாருமே 100௦௦% பரிசுத்தர் அல்ல என்பதை உணர்ந்து கொண்டால் எந்த ஒரு குற்றத்தையும் உடனே மன்னிக்கும் மனநிலை வந்துவிடும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//ஒருபுறம் பார்த்தால் ஆவிக்குரிய நிலையில் அதிகம் ஜெபிபது சபைக்கு காலை ஐந்து மணிக்கே சென்று ஆராதனையில் கலந்துகொள்வதொடு சிறுபிள்ளைகளுக்கு ஊழியம், மெஷினரி ஊழியம் வீடு வீடாக போய் ஜெபித்தல் போன்ற பல காரியங்களில் ஈடுபடுகிறார்கள்;
இன்னொருபுறம் பார்த்தால் உலக பொருட்களின்மேல் அளவற்ற பற்று உள்ளவர்களாக எதைப் பார்த்தாலும் அது எனக்குத்தான் என்றொரு நிலையில் இருக்கிறார்கள்.
இவர்களின் உண்மையான நிலை என்ன?//
கடைசி பதிவில் சுந்தர் சொல்வது:
//அந்த சகோதரி உலக பொருட்களில் மேல் பற்றுள்ளவராக இருப்பது உண்மை ... ஒருவேளை அவர்கள் கொஞ்ச காலம் கழித்து திருந்தி விடலாம் அல்லது திருந்தாமலேயே போகலாம். அதற்காக ஆண்டவர் அவர்களை தள்ளிவிடப்போவது இல்லை. இந்நிலையில் நாமும் அவர்களை போன்றவர்களை தூற்றித் திரியக்கூடாது எனபதே எனது கருத்து.
மற்றபடி இங்கு யாருமே 100% பரிசுத்தர் அல்ல என்பதை உணர்ந்துகொண்டால் எந்த ஒரு குற்றத்தையும் உடனே மன்னிக்கும் மனநிலை வந்துவிடும்.//
சுந்தர் அவர்களே!
குறிப்பிட்ட சகோதரியின் நிலை பற்றி துவக்கத்தில் கேட்டீர்கள். அதற்கான பதில் கூறப்பட்டது. மற்றபடி, யாரும் அச்சகோதரியை தூற்றவுமில்லை, அவரை மன்னிக்கக்கூடாது எனக் கூறவுமில்லை. உண்மையில் அச்சகோதரி குறித்து இப்படி ஒரு பதிவைப் பதித்து, நீங்கள்தான் அவரைத் தூற்றியுள்ளீர்கள் எனச் சொல்லலாம்.
பிறரது குற்றத்தை மன்னிக்கும் மனநிலை எப்படி/எப்போது வரும் என்பது பற்றி இத்திரியில் நாம் விவாதிக்கவில்லை. அச்சகோதரியின் நிலை என்ன எனும் தங்கள் கேள்விக்கான பதில் மட்டுமே கூறப்பட்டது.
இத்திரியில் துவக்கத்தில் நீங்கள் கேட்ட கேள்விக்கும், முடிவுரையில் நீங்கள் கூறியுள்ள கருத்துக்களுக்கும் சற்றும் சம்பந்தமில்லை என்பதை அறிவீர்களாக.
-- Edited by anbu57 on Wednesday 27th of October 2010 09:24:02 PM
//இந்தக் காரியத்தை நாம் உடனே தவறு என்றும் கூறிவிட முடியாது, அப்படியே அது சரி என்றும் ஒத்துக்கொள்ள முடியாது//
எசேக்கியேல் 13:10 சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.
குறிப்பிட்ட சகோதரியின் நிலை பற்றி துவக்கத்தில் கேட்டீர்கள். அதற்கான பதில் கூறப்பட்டது. மற்றபடி, யாரும் அச்சகோதரியை தூற்றவுமில்லை, அவரை மன்னிக்கக்கூடாது எனக் கூறவுமில்லை. உண்மையில் அச்சகோதரி குறித்து இப்படி ஒரு பதிவைப் பதித்து, நீங்கள்தான் அவரைத் தூற்றியுள்ளீர்கள் எனச் சொல்லலாம்.
பிறரது குற்றத்தை மன்னிக்கும் மனநிலை எப்படி/எப்போது வரும் என்பது பற்றி இத்திரியில் நாம் விவாதிக்கவில்லை. அச்சகோதரியின் நிலை என்ன எனும் தங்கள் கேள்விக்கான பதில் மட்டுமே கூறப்பட்டது.
இத்திரியில் துவக்கத்தில் நீங்கள் கேட்ட கேள்விக்கும், முடிவுரையில் நீங்கள் கூறியுள்ள கருத்துக்களுக்கும் சற்றும் சம்பந்தமில்லை என்பதை அறிவீர்களாக.
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே!.
அந்த சகோதரியை தூற்றுவதற்காக அதன் நடத்தைகளை இங்குநான் எழுத வில்லை. உண்மையில் இந்த திரியை ஆரம்பிக்கும்போதே அதுபோன்றதொரு கேள்வி என் மனதில் எழுந்தது. அனால் இவ்வாறு ஆண்டவரை ஏற்றுக் கொண்டு வாழும் அனேகரிடம் உண்மையில்லாத மற்றும் உலகபற்றுள்ள நிலையை என்னால் பார்க்கமுடிகிறது. அப்படிபட்ட்வர்களின் இறுதி நிலை என்னவென்பது எனக்கு கொஞ்சம் புரியாததாகவே இருந்தது எனவே இக்கேள்வியை முன் வைத்தேன்.
அந்த சகோதரியின் சில காரியங்களை மட்டும நான் நேரில் பார்த்திருந்தாலும் மற்ற அனேக குறைகளை எனக்கு அடிக்கடி சொல்லுவது இன்னொரு விசுவாசியே! அந்த விசுவாசியிடமும் பண ஆசை மற்றும் கீழ்படியாதநிலை என்று பல குறைகள் இருக்க கண்டேன். ஆனால் மற்ற சகோதரியை குறைசொல்வதர்க்கு அதிக ஆர்வத்தில் செயல்படுவதை என்னால் பார்க்க முடிந்தது. அதுவும் ஒரு குறை சொல்லும் ஆவியின் செயல்தான் என்பதை அறிந்துகொண்டேன்.
இங்கு சகோதரர் எடிவின் அவர்களின் ஒரு பதிவு எனக்கு ஒரு தெளிவை ஏற்ப்படுத்தியதால். உலகில் உள்ள எல்லோரும் ஏதாவது ஒரு விஷயத்தில் குறை உள்ளவர்களே "நீதிமான்கள் ஒருவரும் இல்லை" "ஆண்டவரும் மன்னிக்கிறதற்கு தயை பெருத்தவர்" என்னும் பட்சத்தில் தன்மீதே பல குறைகளை வைத்துகொண்டு அடுத்தவரை குறைசொல்லி திரியக்கூட்டது என்பதை வலியுறுதியே இந்த பதிவை முடித்தேன்.
இப்பதிவு யாருக்கு பயன்படுமோ இல்லையோ ஆனால் நிச்சயம் தவறான கருத்துக்கள் எதுவும் இல்லை என்றே கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)