சகோதரர் எட்வின் அவர்களே! தங்களின் இந்த கருத்து மிக சரியானது என்றே நான் கருதுகிறேன்!
நீங்கள் சொல்வதுபோல் நமது ஆண்டவர் "மன்னிக்கிறதற்கு தயை பெருத்தவர்!
தீங்குக்கு மனஸ்தாபபடும் தேவனுமாய் இருக்கிறார்! எனவே அந்த ஊழியர் மனம் கசந்து பாவத்துக்காக
வருந்தும்போது அது எந்த குற்றமாக இருந்தாலும் எதாவது ஒரு தண்டனையோடு மன்னித்துவிடுவார். ஆனால் அவர் செய்த பாவத்துக்கு தண்டனை நிச்சயம் உண்டு!
அவர் ஆண்டவரோடு ஒப்புரவானத்தை அறியாத இந்த குடும்பத்தாரோ அவரை தூற்றிக் கொண்டு திரிவார்கள் அதனால் அனேக மனிதரிடம் அவருடைய பெயர் (கிறிஸ்தவ ஊழிய என்ற பெயர்) கெடுவதோடு புரஜாதியரிடம் ஆண்ட்வரைபற்றிய பெயரும் கூட தாழ்த்தப்படும்.
இதே நிலைதான் இன்றைய கிறிஸ்த்தவ வட்டாரங்களில் பெருகி கிடக்கிறது. ஒரு சகோதரர் இன்னொரு சகோதரரை குறைசொல்லுவார் அவரை இவர் குறை சொல்லுவார், பிற மதத்தினர் எல்லா கிறிஸ்த்தவரையும் குறை சொல்லுவர். இவ்வாறு தொடர்ந்துகொண்டே போகும்!
முதல் முதல் மிக வல்லமையான ஆவியின் வரத்தை பெற்ற ஆனானபட்ட பேதுருவே மாய்மால பாவத்தில் சிக்கி பவுலால் கடிந்துகொள்ளப்படும் நிலை உண்டாகும்போது நாம் எம்மாத்திரம்!
இந்தகருத்து விசுவாசி ஊழியர்களுக்கு மட்டுமல்ல எல்லா மதத்தை சார்ந்தவர் களுக்கும் பொருந்தும்.
கொடுமையான பாவி கொலைகார பாவி இவன் ஒப்பெறவே மாட்டன் என்று நாம் நினைப்பவர்கள் கூட ஒரு நாளில்/ ஒரே இரவில் பவுலாகிய சவுலைபோல் மனம் திரும்பி ஆண்டவரின் கரத்துக்குள் வந்துவிட முடியும். அவரது பழைய நடத்தைகள் பாவங்கள் எல்லாம் ஒரே இரவில் மன்னிக்கப்பட்டுபோகும் அத்தோடு அந்த பாவியானவன் நம்மைவிட உயர்ந்த பரிசுத்த நிலைக்குபோய், "பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயம் தீர்ப்பார்கள் என்று அறியீர்களா" என்ற வசனப்படி நம்மை நாளை நியாயம் தீர்க்கும் நிலைக்கு கூட வந்துவிடலாம்.
எனவே ஒருவரை குற்றம் குறை கண்டுபிடிப்பதில் எந்தகஷ்டமும் இல்லை! சுலபமாக அதை செய்துவிடலாம். ஆனால் நாம் சுமத்தும் குற்றம் அவர்களின் இருதய நிலையை அறிந்த தேவனுக்கு அது உண்மையாக இல்லாத பட்சத்தில் நாம் தண்டனை அடைய நேரிடும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். அல்லது அந்த குறிப்பிட்ட நபர் செய்யும் குற்றத்தை ஆண்டவர் அவருடைய இருதய நிலையில் அடிபடையில் மன்னிக்க சித்தமாக இருக்கும்போது நாம் அவர்களை தூற்றிதிருவதும் தண்டனைக்கே வழிசெய்யும் என்பதை அறிய வேண்டும்.
நமது கடமை "மன்னித்தல்" "மன்னித்தல்" " மன்னித்தலே" என்றே நான் கருதுகிறேன்!
(ஆகினும் சிலகுக்கு தேவன் குற்றம்/தவறு/பாவம் செய்தவரை கடிந்து கொள்ளும் அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். அந்த அதிகாரத்தை முறைப்படி கவனத்தோடு செயல்படுத்தினால் அதில் தவரில்லை என்றும் நான் கருதுகிறேன் அதைப்பற்றியும் விளக்கமாக ஒரு கட்டுரையில் பார்க்கலாம்) .
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)