இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நாம் ஆசிர்வாதங்களையும் நன்மைகளையும் இழப்பதற்கு காரணம் என்ன ?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
நாம் ஆசிர்வாதங்களையும் நன்மைகளையும் இழப்பதற்கு காரணம் என்ன ?
Permalink  
 


அனேக காரியங்கள் உண்டு ஆனால் நான் ஒரே ஒரு காரியத்தை சொல்கின்றேன்
 
ஒரு ஊழியர் நம் வீட்டுக்கு வரும் பொழுது நம்முடன் பேசி ஜெபித்து பிறகு நம் வீட்டில் இருக்கும்
 
பணத்தையோ அல்லது ஒரு பெருலையோ அந்த போதகர் இச்சித்து திருடி கொண்டார் என்று வைத்து கொள்வோம்
 
நாம் அவர் செய்ததை பார்த்து விட்டோம் ஒரு சிலர் உடனே கேட்டு விடுவர் இன்னொரு கூட்டம், கேட்க மனதில் இல்லாமல்
 
அப்படியே அந்த சம்பவத்தை  பார்த்து இந்த ஊழியக்காரர் திருட்டு ஊழியக்காரர் என்று நினைத்து விடுவர் அவ்வளவுதான்
 

இந்த  ஊழியர் செய்தது தவறு  தான் அது 100௦ க்கு 100 உண்மை மறைக்க முடியாதது கண்களால் பார்த்தது

 

ஆனால் ஒரு காரியத்தை நாம் அறியவேண்டும் திருடிய அந்த ஊழியர் தன்

தவரை  அறிந்து மனஸ்தாபம் பட்டு ஆண்டவரே நான் பெரிய தவர் செய்து

விட்டேன் ஜெபிக்க சென்ற இடத்தில திருடி விட்டேன் என்னை மன்னித்து

விடுங்கள் என்று மனம் கசந்து அழுதார் என்றால் நம் ஆண்டவர் மன்னிப்பது

நிச்சயம்
 


ஆனால் ஒரு சம்பவம் நடந்து கொண்டே இருக்கும் அந்த ஊழியர் திருடிய 

வீட்டு  ஆட்கள் சும்மா இருப்பார்களா

 

சகோதரி சகோதர்களே  இந்த ஊழியர் என் விட்டுக்கு வரும் போது இவர் என்

வீட்டில்   திருடியதை நான் பார்த்தேன்

இவர் சபைக்கு போகாதே இந்த ஊழியர் திருட்டு ஊழியர் என்று நிச்சயம்

கூறுவார்கள்  அவர்கள் எல்லோரிடத்திலும்
 


இப்பொழுது தண்டனை யாருக்கு என்பது நாமே புரிந்து  கொள்ளலாம்
 

அந்த ஊழியர் மன்னிப்பை  கேட்டு திருந்தி ஊழியம் செய்து கொண்டு இருப்பார்
 
ஆனால் அந்த குடும்பம்  அந்த ஊழியரை குற்றம் சாற்றி கொண்டே இருப்பார்கள்
 
அவர்கள் பார்த்தது உண்மைதான் அந்த ஊழியர் திருடியது உண்மைதான்
 
அனால் நான் மேலே சொல்கின்ற படி மாறி இருந்தால் தேவ மனிதனை குற்ற படித்தியதற்காக நாம் ஆசிர்வாதத்தையும்
 
நன்மைகளையும் தேவனுடைய கரத்தி இருந்து இழப்பது நிச்சயம் அல்லவா
 
சில விசுவாசிகளின் ஆசிர்வாதங்களும் தங்கள் வாழ்கையில் நன்மைகளும்  இல்லாமல் இருப்பதற்கு  காரணம் இதுவாக  கூட இருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன்
 

அதனால் ஒருவர் செய்தது தவறாய் இருந்தால் கூட நாம் பேசும் வார்த்தையில்  ஜாக்கிரதையாய்

இருக்க வேண்டியது நல்லது என்பது தான் என் கருத்து
 

இது நடந்த சம்பவம் அல்ல என் சொந்த கருத்தை பதிவிட்டேன் ,,,,,,,,,,,,,,


-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 23rd of October 2010 03:01:12 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: நாம் ஆசிர்வாதங்களையும் நன்மைகளையும் இழப்பதற்கு காரணம் என்ன ?
Permalink  
 


சகோதரர் எட்வின் அவர்களே!  தங்களின்  இந்த  கருத்து  மிக  சரியானது என்றே நான்  கருதுகிறேன்!    
 
நீங்கள் சொல்வதுபோல் நமது ஆண்டவர் "மன்னிக்கிறதற்கு தயை பெருத்தவர்!
தீங்குக்கு மனஸ்தாபபடும் தேவனுமாய் இருக்கிறார்!  எனவே அந்த ஊழியர் மனம் கசந்து பாவத்துக்காக
வருந்தும்போது அது எந்த குற்றமாக இருந்தாலும் எதாவது  ஒரு தண்டனையோடு மன்னித்துவிடுவார். ஆனால் அவர் செய்த பாவத்துக்கு தண்டனை நிச்சயம் உண்டு!
 
அவர் ஆண்டவரோடு ஒப்புரவானத்தை  அறியாத இந்த குடும்பத்தாரோ அவரை தூற்றிக் கொண்டு திரிவார்கள் அதனால் அனேக மனிதரிடம் அவருடைய   பெயர் (கிறிஸ்தவ ஊழிய என்ற பெயர்)  கெடுவதோடு புரஜாதியரிடம்  ஆண்ட்வரைபற்றிய பெயரும்  கூட தாழ்த்தப்படும்.     
 
இதே நிலைதான் இன்றைய கிறிஸ்த்தவ வட்டாரங்களில் பெருகி கிடக்கிறது. ஒரு சகோதரர் இன்னொரு சகோதரரை குறைசொல்லுவார் அவரை இவர் குறை சொல்லுவார், பிற மதத்தினர் எல்லா  கிறிஸ்த்தவரையும்  குறை சொல்லுவர். இவ்வாறு தொடர்ந்துகொண்டே போகும்!
 
முதல் முதல் மிக வல்லமையான  ஆவியின் வரத்தை பெற்ற ஆனானபட்ட பேதுருவே  மாய்மால பாவத்தில் சிக்கி பவுலால் கடிந்துகொள்ளப்படும் நிலை உண்டாகும்போது நாம் எம்மாத்திரம்!
 
இந்தகருத்து விசுவாசி ஊழியர்களுக்கு மட்டுமல்ல எல்லா மதத்தை சார்ந்தவர் களுக்கும் பொருந்தும். 
 
கொடுமையான பாவி கொலைகார பாவி இவன் ஒப்பெறவே மாட்டன் என்று நாம் நினைப்பவர்கள்  கூட ஒரு நாளில்/ ஒரே இரவில் பவுலாகிய சவுலைபோல் மனம் திரும்பி ஆண்டவரின் கரத்துக்குள் வந்துவிட முடியும். அவரது பழைய நடத்தைகள்
பாவங்கள் எல்லாம் ஒரே இரவில் மன்னிக்கப்பட்டுபோகும் அத்தோடு அந்த பாவியானவன்
நம்மைவிட உயர்ந்த பரிசுத்த நிலைக்குபோய், "பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயம் தீர்ப்பார்கள் என்று அறியீர்களா"  என்ற வசனப்படி நம்மை நாளை நியாயம் தீர்க்கும் நிலைக்கு கூட வந்துவிடலாம். 
 
எனவே ஒருவரை குற்றம் குறை கண்டுபிடிப்பதில் எந்தகஷ்டமும் இல்லை!  சுலபமாக அதை செய்துவிடலாம். ஆனால் நாம் சுமத்தும் குற்றம் அவர்களின்
இருதய நிலையை அறிந்த தேவனுக்கு அது
உண்மையாக இல்லாத பட்சத்தில் நாம் தண்டனை அடைய நேரிடும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். அல்லது அந்த குறிப்பிட்ட நபர்  செய்யும் குற்றத்தை ஆண்டவர் அவருடைய இருதய நிலையில் அடிபடையில்  மன்னிக்க சித்தமாக இருக்கும்போது நாம் அவர்களை தூற்றிதிருவதும் தண்டனைக்கே வழிசெய்யும் என்பதை அறிய வேண்டும்.
 
நமது கடமை "மன்னித்தல்" "மன்னித்தல்" " மன்னித்தலே" என்றே நான் கருதுகிறேன்!    
 
(ஆகினும் சிலகுக்கு தேவன் குற்றம்/தவறு/பாவம்   செய்தவரை கடிந்து கொள்ளும் அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். அந்த அதிகாரத்தை முறைப்படி கவனத்தோடு
செயல்படுத்தினால் அதில் தவரில்லை
என்றும் நான் கருதுகிறேன் அதைப்பற்றியும் விளக்கமாக ஒரு கட்டுரையில் பார்க்கலாம்)  .   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard