இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாழ்வின் துன்பங்களுக்கான காரணத்தை கண்டறிதல்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
வாழ்வின் துன்பங்களுக்கான காரணத்தை கண்டறிதல்!
Permalink  
 


இந்த உலகில் வாழும் ஒவ்வருவரும் தங்கள் வாழ்க்கையில் துன்பங்கள், துயரங்கள் கொடுமைகள், பிரச்சனைகள் சண்டைகள், பொறாமைகள். ஏச்சு பேச்சுகள், அவமானங்கள், பண நெருக்கடிகள், பற்றாக்குறைகள். இழப்புகள், வேதனைகள்  போன்ற நமக்கு பிடித்தமில்லாத  அனேக நிலைகளுக்குள் நாம்  விரும்பினாலும்  விரும்பாவிட்டாலும் கடந்துசெல்ல வேண்டிய கட்டாயத்துக்குள் இருக்கிறோம்.
       
அடுக்கடுக்காக சம்பவிக்கும் இதுபோன்ற அனேக காரியங்கள் நமது வாழ்க்கையை புரட்டிபோடுகின்றன. அவற்றுள்  சிலவற்றுக்கு நாம் காரணம் கண்டுகொண்டாலும் பல காரியங்களுக்கு நம்மால் சரியான காரணம் கண்டுபிடிக்க முடியாமல் போய்வடுகிறது.  
 
சூரியனுக்கு கீழ் உள்ள இந்த உலகில் காரணம் இல்லாமல் யாருக்கும் எதுவும் சம்பவிப்பது இல்லை! இதோ இறைவன் தவறாக எனக்கு இந்த காரியத்தை செய்து விட்டார் என்றோ அல்லது நான் எந்த தீங்கும் யாருக்கும் செய்யவில்லை எனக்கு இத்தனை துன்பம் வருகிறது என்று சொல்வதோ எவ்விதத்திலும் சரியானது அல்ல!
 
காலையில் நாம் கண்விழிப்பதில்  இருந்து இரவு தூங்கும் வரை நமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கிறது!  
 
ஒரு கொசு நம்மை கடிப்பதில் இருந்து ஒரு பெரிய  விபத்தில் நாம் மாட்டுவது
அல்லது மரணிப்பது  வரை எந்த ஒரு சிறிய பெரிய காரியத்துக்கும் நுணுக்கமான
காரணங்கள் இருக்கின்றன. நம்முடைய இருதயங்கள் அடைபட்டு இருப்பதால் அந்த காரணத்தை  நம்மால் அறிய முடிவதில்லை அவ்வளவுதான்.     
 
அதை சரியாக  கண்டறிந்து சீர் செய்வதால் நாம் தேவனுடன் இன்னும் நெருகிய நிலையை அடைய முடியும் என்பதற்காக இந்த திரியில் நான் அறிந்துகொண்டு வழிகளை தெரிவிக்க விளைகிறேன்.
 
முதன் முதலில் நாம், ஏனோ தானோ என்ற நோக்கில் ஏதோ நடக்கிறது ஏதோ பூமியல் தெரியாமல் பிறந்துவிட்டோம் ஏதோ வாழ்கிறோம் என்ன நடக்கிறதோ நடக்குமோ எதுவுமே புரியவில்லை என்று புலம்பி, ஒருபக்கம் பணத்தில்/ உலக இன்பங்களில் அதிகமதிகமாக புரண்டு கொண்டு இன்னொருபக்கம் 
 
பிரசங்கி 6:12 நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?
 
"மாயை மாயை எல்லாம் மாயை" என்று சொல்லி புலம்பிய  பிரசங்கி போல்  புலம்பிக்கொண்டு அலையாமல்  , 
 
யோவான் 4:32 . இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
 
என்று இயேசு திட்டமாக சொன்னதுபோல் அனைத்தையும்அறிந்த இறைவன் ஏதோ ஒரு உன்னத  நோக்கத்தோடுதான் என்னை இந்த உலகில் படைத்திருக்கிறார். என் மீதான அவரது நோக்கத்தை கண்டறிந்து அதை நிறைவேற்றுவதே எனது தலையாய பணி  என்றொரு தெளிவான  முடிவுக்கு வரவேண்டும்.
 
இதுவே நாம் இந்த உலகில் நடக்கும் காரியங்கள் பற்றிய உண்மையை அறிய முதல்படி!
 
மற்றபடி "ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகால்" என்பதுபோல் உலகத்திலும் அதன் பொருட்கள் மேலும் ஒரு கண்ணை வைத்து கொண்டு  இன்னொரு கண்ணை தேவனுடைய  காரியங்களிலும் வைத்துகொண்டு இரண்டு எஜமானுக்கு ஊழியம் செய்துகொண்டு உண்மையை அறிய விரும்பினால் அது ஒரு போதும் நடக்காது ஒன்றும் புரியாது.
 
 
தொடர்ந்து  பார்க்கலாம்...  
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

வாழ்வில் வரும் துன்பங்கள் தொல்லைகள் குறித்து பிரசங்கி இவ்வாறு சொல்கிறார்:  
 
பிரசங்கி 1:13  மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.
 
பிரசங்கி 9:2.எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும்.
 
தேவன் இங்கு நியமிதபடிதான் இவைகள் எல்லாம் நடக்கிறது என்றும், சன்மார்க்கர் துன்மார்க்கர் எல்லோருக்கும் சமமாகவே சம்பவிக்கிறது என்று வசனம் கூறுகிறது.
 
நமது இரட்சகராகிய இயேசுகூட:
 
யோவான் 16:33  உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
 
என்றுதானே சொல்லி சென்றிருக்கிறார். இந்நிலையில் துன்பங்களுக்கான  காரணத்தை கண்டறிந்து  அவைகள் வராமல் தவிர்ப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறதே.   
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: வாழ்வின் துன்பங்களுக்கான காரணத்தை கண்டறிதல்!
Permalink  
 


இறைநேசம் wrote:
நமது இரட்சகராகிய இயேசுகூட:
 
யோவான் 16:33  உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
 
என்றுதானே சொல்லி சென்றிருக்கிறார். இந்நிலையில் துன்பங்களுக்கான  காரணத்தை 
கண்டறிந்து  அவைகள் வராமல் தவிர்ப்பது
சாத்தியமா என்ற கேள்வி எழுகிறதே.   
 

"உலகத்தில்  உங்களுக்கு  உபத்திரியம்  உண்டு"  என்று  சொல்வதற்கு ஒரு தேவகுமாரன் பரத்தில் இருந்து இரங்கி வந்துதான் சொல்லவேண்டும் என்ற அவசியம இல்லையே.  ஒரு சாதாரண  பிச்சைகாரனுக்கு கூட  இந்த உலகம் உபத்திரியம் நிறைந்தது என்று சொல்லமுடியும். ஆண்டவராகிய இயேசு  தான் உலகத்தை  ஜெயித்ததை அறிவிக்கவே இந்த அந்த வார்த்தையை  பயன்படுத்தினாறேயன்றி  உலகத்தில் உபத்திரியம் உண்டு என்று சொன்னது எல்லோரும் அறிந்த ஒரு சாதாரண வார்த்தையே. மேலும் ஆண்டவராகிய இயேசு "பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்" (.லூக்கா 5:32) என்று சொல்லி யிருப்பதாலும் பாவத்துக்கும் உபத்திரியத்துக்கும் நெருங்கிய  தொடர்பு இருப்பதாலும்கூட இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தி இருக்கலாம்.   

அடுத்து "உலகத்தில் உபத்திரியம் உண்டு" என்று சொல்லிவிட்டு, அந்த உபத்திரியத்தை போக்க வழி எதுவும் சொல்லப்படாத ஒரு வேதம் இருக்குமாயின் அது ஒரு முழுமையான வேதம்  என்ற தகுதியை இழந்துவிடும். நமது வேதாகமம் அப்படிபட்டது அல்ல! வேதாகமத்தில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறது. எல்லா மனுஷர்களுக்கும் தேவையான அனைத்து காரியங்களும் நிறைந்த ஒரு முழுமையான புத்தகமே வேதாகமம்.  வேதாகமத்தின் உயரிய தன்மையை அறியாதவர்களும் அதில் சொல்லப்பட்ட வார்த்தைகள்படி வாழ முற்படாத வர்களுமே   "வேதத்தில்  உபத்திரியத்தை தீர்க்க வழி சொல்லப்பட வில்லை"  என்பதுபோல் எண்ணிகொள்கின்றனர்.   அவர்களுக்கு உண்மை தெரிந்திருந்தும் அதை அறிந்து ஏற்றுக்கொள்ள மனதில்லை அல்லது முடியவில்லை என்றே நான் கருதுகிறேன்.

இந்த உலகில் மனிதனுக்கு வரும் எந்த ஒரு உபத்திரியமும் காரணமின்றி வரவல்லை என்பதை அறியவேண்டும்.  நமது உடம்பானது சரியாக வேலை செய்யுமானால் நாம் சாப்பிட்ட உணவு நிச்சயம் சரியாக  ஜீரணம் ஆகிவிடும் ஏனெனில் நமது உடம்பானது சாப்பிட்டபடும் உணவை  சரியான ஜீரணித்து அதன் மூலம் மனுஷனுக்கு சக்தியை கொடுக்கும் ஒரு அருமையான்  முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே ஆரோக்யமான ஒரு உடம்பானது சரியான உணவை சரியான நேரத்துக்குள் ஜீரணித்துவிடும். 
 
ஆகினும்  ங்கு எல்லோருக்கும் அதுபோல் நடப்பதில்லை.  காரணம் உடம்பின் அமைப்பை நாம் குறை சொல்ல முடியாது. நம்முடைய உணவு பழக்கம் அல்லது நோய் நொடிகள், சரீர கோளாறுகள் தூக்கமின்மை, விலக்கபட்ட பொருளை உண்ணுதல் போன்ற நம்முடைய பல்வேறு ஒழுங்கீனங்களால்தான் அஜீரண கோளாறு ஏற்ப்படுமேயன்றி உடம்பின் அமைப்பால் அது ஏற்ப்படுவது இல்லை. 
 
அதுபோல் தேவன் இந்த உலகை வடிவமைத்ததில் எந்த ஒரு தவறும் நிச்சயமாக இல்லை. இந்த உலகத்தில் படைத்த தேவன் "அனைத்தையும் நல்லதாகவே கண்டார்" என்று வேதம் சொல்கிறது. உபத்திரவமும் துன்பமும் உண்டானதற்கு அடிப்படை காரணம் மனுஷனின் மீறுதலே. அதுபோன்ற மீறுதலே இன்றும் ஒவ்வொரு உபத்திரியத்துக்கும் காரணமாக  அமைகிறதேயற்றி "தேவனின் திட்டத்தில் இந்த உலகில் உள்ளவர்களுக்கு நிச்சயம் உபத்திரியம் உண்டு" என்ற நியதி ஆதியில் இருக்கவில்லை.    
 
ஏசாயா 65:18 நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்
 
அன்றும்  இன்றும்  என்றென்றும் தேவன் விரும்புவது 'தான் படைக்கும் உலகத்தில் மனுஷன் மற்றும் அனைத்து உயிரினங்களும்  களிகூர்ந்து மகிழ்த்திருப்பதே'
 
அதற்க்கு ஏற்ப தேவன் மனுஷனை மகிழ்ச்சியாக்கும் அனைத்தையும் உண்டாக்கி கொடுத்து, மனுஷனை இந்த பூமியில் படைத்து அவர்களை  ஆசீர்வதித்தார்! ஆனால் தேவனால் ஆகாதவன் என்று தள்ளபட்ட சத்துருவாகிய சாத்தானால் வந்ததுதான் இந்த அனைத்து உபத்திரியங்களும். அவ்வாறிருக்க இந்த உலகத்தில் உண்டாகும் உபத்திரியத்தை போக்க முடியாமல் நீ பரலோகத்துக்கு வந்தால் மட்டும்தான் உனக்கு மகிழ்ச்சியுண்டு, இந்த பூமியில் என்னால் ஒன்றும் செய்யமுடியாது இங்கு இருக்கும்வரை உனக்கு உபத்திரியம் உண்டு என்று சொல்ல, தேவன் சாத்தானின் செயல்களை முறியடிக்க முடியாத ஒரு கையாலாகாதவர் அல்ல!
 
உலகத்திலுள்ள உபத்திரியங்களை போக்கும் அனைத்து வழியையும் தேவன் வேதாகமத்தில் நமக்கு எழுதிகொடுத்துள்ளார். அதை கைகொண்டு நடக்க விரும்பாத மனிதன் தானேதனக்கு உபத்திரியத்தை வரவைத்து கொள்கிறானேயன்றி, தேவனால் கூடாதது என்றோ தேவனால் தீர்க்கமுடியாத காரியம் என்றோ எதுவும் இந்த உலகத்தில் இல்லை..........


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
Permalink  
 

பெரும்பான்மையான துன்பத்துக்கு மனிதரே காரணம்!!!  அவர்கள் போர்கள் தொடுக்கிறார்கள், பெருங் குற்றங்களை செய்கிறார்கள். சூழ்நிலைகளைச் தூய்மைக்கேடு செய்கிறார்கள், சகமனிதர்களின் அக்கறையும் அன்பும் இல்லாமல் பேராசைனால் தூண்டப்பட்ட ஒரு முறையில் பெரும்பாலும் தொழில் நடத்துகிறார்கள்,   மேலும் தங்கள் உடல் நலத்துக்கு தீங்கு உண்டாக்கக் கூடும்மென்று தாங்கள்
அறிந்துள்ள பழக்கங்களில் மனம்போனபோக்கில் சில  சமயங்களில்  ஈடுபடுகின்றனர்.    இவற்றை அவர்கள் செய்கையில், மற்றவர்களுக்கும் தங்களுக்கு தாங்கலேஉம் தீங்கு செய்கிறார்கள். மனிதர் தாங்கள் செய்பவற்றின் இயல்பான விளைவுகளால் தாக்கப் படாமல் காக்கப்பட்டிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க வேண்டுமா?
(கலா 6 :7     நீதி 1: 30௦-33 )    மனிதர் தாமே செய்யும் இந்தக் காரியங்களுக்காக கடவுளைக் குற்றம் சாட்டுவது நியாயமா?


__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

மனுஷன் ஒரு தீமையான காரியத்தை செய்கிறான் என்றால், அதை மனுஷனே தனது சொந்த மூளையால் செய்கிறானா? அல்லது அவனுக்கு சாத்தான் புகுந்து அப்படி ஒரு தீமையை செய்ய வைக்கிறானா? என்பதை விளக்க முடியுமா?
 
சாத்தான் இருதயத்தை நிரப்பியதால்தான் அன்னிய சப்பீராள் ஆவியானவரிடம் பொய்சொல்லி வீழ்ந்தனர். சாத்தான் யூதாசினுள் புகுந்ததால்தான் அவன் இயேசுவை காட்டி கொடுத்து மாண்டான்.  இவ்வாறு ஒரு மனுஷனை தீமையை  செய்ய தூண்டுவது சாத்தானால் நடக்கும் காரியமாகவே தெரிகிறதே.
 
இதில் மனுஷனின் பங்கு அல்லது தவறு  என்னவெனில் நன்மை தீமையை அறிய தெரிந்திருந்தும் தீமையை விட்டு விலகாமல் அதை செய்து மாட்டிகொள்வதுவே.   
 
சாத்தானால் தூண்டப்படும் மனுஷன் தீமையை செய்து அதன் மூலம் தனக்கு தானே குழி தோண்டி கொள்கிறான். எனவே அனைத்து துன்பத்துக்கும் அடிப்படை காரணம் சாத்தானே என்று நான் கருதுகிறேன்.


__________________


இளையவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink  
 

திரு சுந்தர் ஐயா,
தங்களின் "வாழ்வின் துன்பங்களுக்கான காரணத்தை கண்டறிதல்" என்ற
இந்த கட்டுரை சரியான பாதையில் தான் சென்று கொண்டுள்ளது.
மேலும் அறிய ஆவலாயிருக்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.

__________________

"கர்த்தர் நல்லவர்



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

sekariam wrote:

திரு சுந்தர் ஐயா,
தங்களின் "வாழ்வின் துன்பங்களுக்கான காரணத்தை கண்டறிதல்" என்ற  இந்த கட்டுரை சரியான பாதையில் தான் சென்று கொண்டுள்ளது. மேலும் அறிய ஆவலாயிருக்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.


 நன்றி சகோதரரே விரைவில் தொடர்கிறேன்!

 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
வாழ்வின் துன்பங்களுக்கான காரணத்தை கண்டறிதல்!
Permalink  
 


"ஆசையே துன்பத்துக்கு காரணம்" என்றார் புத்தர்.

அதை தொடர்ந்து  "ஆசை இல்லா மனிதர் தன்னை துன்பம் எங்கே நெருங்கும்" என்று எழுதினர் கவியரசு.
 
நமது பரிசுத்த வேதாகமமும்
 
யாக்கோபு 1:14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.15. பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
 
இச்சை என்னும் ஆசை மூலமே மரணம் வரையிலான  சோதனைகளும் துன்பங்களும்  ஏற்ப்படுகிறது  என்று போதிக்கிறது.
 
எனவே மனுஷர்களின் துன்பத்துக்கு முக்கிய காரணம் "இச்சை எனப்படும் ஆசை" என்று எடுத்துகோள்ளலாமா?
 
ஒரு சின்ன உண்மை சம்பவம்:
 
ஆண்டவர் எனக்கு கட்டளையிட்டுள்ளபடி நான் யாரிடமும் இலவசமாக எதுவும் வாங்குவதில்லை, மேலும் கீழே யாராவது தெரியாமல் விட்டு சென்ற  எந்த ஒரு பொருளோ பணத்தையோ எடுப்பதில்லை" 
 
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர்  என் தகப்பனாரும் நானும் ஒருநாள் சாலையில் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது இரண்டு பத்து ரூபாய் நோட்டுகள் காற்றில் இழுத்துவரப்பட்டு எங்கள் முன்னே வந்தது. அதை எடுப்பதற்காக எனது தப்பனார் குனிந்தபோது நான் அவர்களிடம் "அந்த பணத்தை  எடுக்கவேண்டாம் விட்டுவிடுங்கள், அது நமதுபணமல்ல, அடுத்தவன் பணம் நமக்கு எதற்கு என்று சொல்லி தடுத்தேன் ஆனால் என் தப்பனாரோ "இதை நாம் எடுக்கவில்லை  என்றால் வேறு எவனாவது எடுப்பான் எனவே நானே எடுத்து கொள்கிறேன்"  என்று  எடுத்துகொண்டார்கள்.  அங்கிருத்து ஆட்டோ பிடித்து நாங்கள்  இருவரும் ஒரு இடத்துக்கு சென்றோம். அங்கு சென்று இரங்கி சிறிது  நேரத்தில் நாங்கள் கொண்டுவந்த  ஒரு பையை   ஆட்டோவிலேயே விட்டு விட்டோம்  என்று அறிய  வந்தது. உடனே  விட்ட  ஆட்டோவை  பிடிக்கவேகமாக ஓடினேன் அனால்  வேதனை தான்  மிஞ்சியது!  ஆட்டோ கிடைக்கவில்லை  மிகவும் மனமடிவாகி போனோம். சுமார்  15 நிமிடங்கள்  வேதனையுடன் அதே  இடத்தில் நின்றுகொண்டிருந்தபோது, எங்களை விட்டு சென்ற ஆட்டோகாரர்திரும்ப அதே  இடத்துக்கு வந்து, அந்த பையை எங்களிடம் கொடுத்துவிட்டு "எனக்கு 20 ரூபாய் கொடுங்கள், நான்  சிறிது தூரம் போய் திரும்பி வந்திருக்கிறேன்" என்று சொல்லி எனது தகப்பனார் கீழே கிடந்தது எடுத்த  அதே 20ரூபாயை வாங்கி சென்றார். நாங்கள் கீழே கிடந்த அந்த பணத்தை எடுத்தபோது கிடைத்தது  அற்ப சந்தோசம் ஆனால் அனேக வேதனையுடன் அந்த பணம் கடந்துபோனது.
 
இந்த சம்பவத்தை பிரித்துப்பார்த்து, அதுவேறு இதுவேறு என்று எடுத்து கொள்வோரே இன்று உலகில் அநேகர். ஆனால் இரண்டு சம்பவங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை ஞானமாக யோசித்தால் நாம்  புரிந்துகொள்ளலாம்.  இதுபோல்தான் இன்று உலகில் சம்பவங்கள் நடந்தேறு கின்றன. நாம் தேவையற்றதை இச்சித்து அல்லது தேவனுக்கு 
ஒவ்வாத காரியங்களில் ஆசைபட்டு காரியங்களை நடப்பிப்பதன் மூலமே அநேகன் துன்பங்களை நமக்கு நாமே வருவித்து கொள்கிறோம்  என்பது முற்றிலும் உண்மை. 
 
I தீமோத்தேயு 6:6 போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
எபிரெயர் 13:5 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்;  
 
நமக்கு இருப்பதும், கிடப்பதும் போதுமென்ற திருப்தியில் மன ரம்யமாக வாழ கற்றுகொண்டாலே அனேக தேவையற்ற துன்பங்களை தவிர்க்க முடியும்! 
 
ஆசைதான் துன்பத்துக்கு அடிப்படை  காரணம் என்பது அனைவரும்  அறிந்த உண்மை என்றாலும் 
 
ஒருவரால் ஆசையை முற்றிலும் ஒழிக்க முடியுமா?  
 
பசியாய்   இருப்பவனுக்கு உணவின்மேல் தானாக  ஆசை வருகிறது.  
தாகமாய் இருப்பவனுக்கு தண்ணீர்மேல் தானாக ஆசை வருகிறது.
கடின வேலை செய்பவனுக்கு இளைப்பாற ஆசை வருகிறது.
வயது வந்தபோது திருமணம் முடிக்க ஆசை வருகிறது 
பின்னர்  பிள்ளை வேண்டும் என்று அசை வருகிறது! 
இப்படி ஒன்றன் பின் ஒன்றாக ஆசை என்பது நமது உடம்பின் தேவைகளாலேயே தானாக உருவாகிறது. எனவே ஆசைக்கு அடிப்படை  காரணம் நமது மாம்சமே! இந்தமாம்சமானது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தனது தேவைகளை  பூர்த்திசெய்ய ஆசையை  உண்டாக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டிருக்கிறது.
 
ரோமர் 7:18  என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று
நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.
 
எனவே ஆசையை உண்டாக்கும் நன்மைக்கு எதிராக் செயல்படும்   உடம்பபை வைத்துகொண்டு ஆசைதான் துன்பத்துக்கு காரணம் அதை  ஒழித்துவிடு என்று போதிப்பது சரியானதா?  அந்த போதனையை கேட்டு ஆசையாய் முன்றிலும் ஒழிப்பதுதான் சாத்தியமா?      
 
இந்த உண்மை தேவனுக்கும்  நிச்சயம் தெரியும் அல்லவா?  நம்மீது அன்பும்  கரிசனயுமுள்ள  தேவன் அனைத்தும் தெரிந்தும்  அப்படியே விட்டுவிட்டாரா?...............  
 



-- Edited by SUNDAR on Monday 30th of May 2011 08:37:03 PM



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இந்த  திரியை  இன்னும்  அதிகமாக  இழுக்க விரும்பாமல்  எனது கருத்தை சுருக்கமாக சொல்லி முடிக்க விரும்புகிறேன். 
 
ஒரு சாமான்ய மனிதனால் மாம்சத்தில் தானாகவே உருவாகும் ஆசைகளை ஒழிக்க முடியாது என்பது தேவனுக்கு நன்றாகவே தெரியும். எனவேதான் தன்னுடைய வார்த்தைகள் அடங்கிய வேதபுத்தகம் என்னும் ஒரு வரையறையை  மனிதர்களுக்கு எழுதி கொடுத்துள்ளார். அந்த வரையறையை விட்டு வெளியே  வந்து கிரியைகளை நடப்பிக்கும்போது மட்டுமே அங்கு துன்பங்கள் உண்டாகும். தேவன் நிர்ணயித்துள்ள வரையரைக்கும் எந்த ஒரு செயலை செய்தாலும் அதனால துன்பங்கள் உண்டாகாது.
 
உதாரணமாக:  கொரிந்தியர் 7:2 வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.
 
என்று வசனம் சொல்கிறது. அதற்க்கு ஏற்ப திருமண பந்தத்துக்குள் மனுஷன் தனது மாம்சதேவையை பூர்த்திசெய்ய தேவன் அனுமதியளிக்கிறார். ஆனால் மனுஷன் அதில் திருப்தியடையாமல்   
 
லேவி 20:10  பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
 
என்ற வார்த்தையின் அடிப்படையில் துன்பம் அனுபவிக்க நேரிடும்.
 
அதாவது ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியாமல் வாழ்ந்த வரை அவர்களுக்கு தேவனே ஒரு பாதுகாப்பு வளையமாக இருந்தார் அவர்களுக்கு எந்த கட்டளையும் இல்லை. ஆனால் என்று அவர்கள் என்று நன்மை விலக்கபட்ட
கனியை புசித்து பாவம் செய்து நன்மை  தீமைகளை அறியும் நிலையை அடைந்தார்களோ அன்றே அவர்கள் தங்களின் மீறுதலுக்கு தண்டனை அடைந்ததோடு, தொடர்ந்து செய்யும் தீமைகள் எல்லாவற்றிக்குமே தண்டனை உண்டு என்பதை அறிந்துகொண்டனர். எனவே  தீமையை தவிர்த்து நன்மையை மட்டுமே செய்யவேண்டும் என்ற கட்டாய நிலைக்குள் தள்ளப்பட்டனர்.
 
இந்நிலையில் தேவன்,  தீமை எதுவென்பதை  உணர்த்தும் ஒரு மனசாட்சியை மனுஷனுக்குள்  உண்டாக்கினார். பின்னர் அதை தொடர்ந்து வந்த காலங்களில் நன்மை எது தீமை எது என்பதை வரையறுக்கும் நியாயப்பிரமாண கட்டளைகளை  எழுதி கொண்டுத்து  உங்களுக்கு நன்மை உண்டாக அதில் நடவுங்கள் என்று சொன்னார்.
 
எரேமியா 7:23 என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள்
 
ஆகினும் தேவன் கொடுத்த நியாயபிரமாணத்தின்படி நடக்க முடியாமல் மனுஷர்கள் விழுந்து பட்டயம் பஞ்சம் போன்ற அதிக துன்பத்துக்குள் கடந்து போகவே, இந்த கடைசி காலங்களில், மனுஷனுக்குள் வந்து தங்கியிருந்து  பாவத்தை  கண்டித்து உணர்த்தும் பரிசுத்த ஆவியானவரை கிறிஸ்த்துவின் பலியின் மூலம் தந்தருளினார். இவை எல்லாற்றிலும் தேவனின் நோக்கம் மனுஷன் எவ்வாறேனும்  பாவத்தை விட்டு மனுஷன் விலகவேண்டும் என்பதே என்பதை தெளிவாக அறிய முடியும்.   
 
கிறிஸ்த்துவின் இரத்தத்துக்கு மிஞ்சிய பாவம் என்று ஒன்றும் இல்லை  என்பது உண்மை ஆனால் ஒரு மனுஷனின் மீறுதல்கள் மற்றும்  பாவங்களை காரணம் காட்டி  அவனது வாழ்க்கையில் இரட்டத்தனயாக துன்பங்களை கொண்டுவர தேவனிடம் அனுமதிபெற சாத்தானால் முடியும்!     
 
அன்றில் இருந்து இன்றுவரை தேவனின் வார்த்தைகளை மீறுவதே மனுஷர்களின்  துன்பத்துக்கு அடிப்படை காரணமாக உள்ளது. தேவனும் மனசாட்சியின் பிரமாணம், நியாயப்பிரமாணம் என்று பல்வேறு  கற்பனைகள் கட்டளைகள் மூலம் மனுஷர்கள் துன்பத்தில் இருந்து விடுபடுவதர்க்கு  வழிகளை நமக்கு போதித்தார். ஆனால் பாவத்தின் மேல் எப்பொழுதுமே நாட்டம் கொண்ட மனுஷன் ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி தேனின் வார்த்தைகளை மீறி நடப்பதிலேயே  அதிக  ஆசை கொள்கிறானேயன்றி  "சரி தேவனின் கட்டளைகளுக்கு  அப்படியே கீழ்படிந்துதான் பார்ப்போமே" என்று சற்றேனும் முயற்சிப்பதில்லை. இந்த நிலையை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட சாத்தான்  வசனங்களை தவறாக புரட்டி  தேவனின் கற்பனைகளை  கைகொள்ளுவது  கிருபையை இழக்க செய்யும் என்பதுபோன்று மாயமாக போதித்து, உண்மை உத்தமம் நீதி நியாயத்தை செய்யவிடாதபடி ஏமாற்றி ஜனங்கள் அனேக துன்பத்தை அநுபவிக்கும் நிலையை கொண்டு வருகிறான். 
 
இங்கு நான் "எவ்வாறேனும் பாவத்தை தவிர்த்தல், உண்மை உத்தமம்  மற்றும் நீதி/நியாயம், தாழ்மை/விட்டுகொடுத்தல் போன்றவற்றைபற்றி அதிகமதிகமாக எழுதுவதால் அதற்க்கு எப்பொழுதுமே எதிரியாக இருக்கும் சாத்தானுக்கு சற்றும் பிடிப்பதில்லை. நம்மோடு  இணைந்து செயல்படகூட பலர் விரும்புவதில்லை. "இனம் இனத்தோடுதான் சேரும்" என்பது சரியான பழமொழி அல்லவா? 
 
வசனம் என்ன சொல்கிறது என்பதை சற்று கவனமாக ஆராயுங்கள்:
 
கலாத்தியர் 5:4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.
 
"நியாயபிரமாணத்தால் நீதிமானாக விரும்புகிறவர்களே" கிருபையில் இருந்து விழுவார்கள்.  ஆனால் நாமோ இயேசுவின் மாசற்ற இரத்தத்தால் நீதிமானாக்க பட்டுள்ளோம். அவ்வாறு நீதிமானாக்கபட்ட நாம், நம்மை இலவசமாக கிருபைனால் நீதிமானாக்கியவரின் வார்த்தைகளுக்கு செவிகொடுத்து அவரின் கற்பனைகளை கைகொள்ள வாஞ்சிக்கிறோம். இதில் விழுவதற்கு ஒன்றுமில்லை.
 
"கொலை செய்யாதிருப்பாயாக" "விபசாரம் செய்யாதிருப்பாயாக" 'களவு செய்யாதிருப்பாயாக"   என்று வசனம் சொல்கிறது. அதை கைக்கொண்டு நடக்க ஒருவன் பிரயாசம் எடுத்தால் அவன் கிருபையில் இருந்து விழுந்துவிடுவனா?   
 
எப்படியெல்லாம் சாத்தானின்  ஏமாற்றுவேலைகள் நடைபெறுகிறது!
       
எனவே இந்த உலக வாழ்வில் வரும் எந்த துன்பங்களுக்கும்  முக்கிய காரணம் தேவனின் வார்த்தைகளை மீறி செயல்படுவதே. என்ற உண்மையை  அறிந்து
உங்களுக்கு நன்மையுண்டாக ஒவ்வொருவரும் வேத வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்க பிரயாசம் எடுக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
 


-- Edited by SUNDAR on Friday 3rd of June 2011 09:47:22 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
RE: வாழ்வின் துன்பங்களுக்கான காரணத்தை கண்டறிதல்!
Permalink  
 


சகோதரர் சுந்தர் அவர்கள் எழுதியது..

//கிறிஸ்த்துவின் இரத்தத்துக்கு மிஞ்சிய பாவம் என்று ஒன்றும் இல்லை  என்பது உண்மை//

இந்த கருத்தானது பாவத்தில் எல்லாம் பெரிய பாவம் இயேசுவின் ரத்தமே என்னும் பொருள் தரும்படி உள்ளது. இதற்கு இது சரியான பொருள் இல்லை என்று சொல்வீர்களானால் சரியான பொருள் தரும்படியான சரியான வார்த்தைகளை உபயோகிக்கலாமே...

//ஆனால் ஒரு மனுஷனின் மீறுதல்கள் மற்றும்  பாவங்களை காரணம் காட்டி  அவனது வாழ்க்கையில் இரட்டத்தனயாக துன்பங்களை கொண்டுவர தேவனிடம் அனுமதிபெற சாத்தானால் முடியும்! //

தான் இயேசுவின் ரத்தத்தால் பாவங்களற கழுவப்பட்டேன் என உணரும் மனிதனை துன்புறுத்த எப்படி சாத்தான் தேவனிடம் அனுமதி பெற முடியும்? 
 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

SANDOSH wrote:

சகோதரர் சுந்தர் அவர்கள் எழுதியது..

//கிறிஸ்த்துவின் இரத்தத்துக்கு மிஞ்சிய பாவம் என்று ஒன்றும் இல்லை  என்பது உண்மை//

இந்த கருத்தானது பாவத்தில் எல்லாம் பெரிய பாவம் இயேசுவின் ரத்தமே என்னும் பொருள் தரும்படி உள்ளது. இதற்கு இது சரியான பொருள் இல்லை என்று சொல்வீர்களானால் சரியான பொருள் தரும்படியான சரியான வார்த்தைகளை உபயோகிக்கலாமே...

 


தங்களின்  சுட்டுதலுக்கு  நன்றி  சகோதரரே! ஒரு வழியில் பார்த்தால் தாங்கள் சொல்வதுபோல் பொருள்பட வாய்ப்பிருக்கிறது எனவே அந்த வார்த்தைக்கான நான் பயன்படுத்தியதன்  பொருளை நான் இங்கு சொல்லிவிடுகிறேன் 

"இயேசுவின்  இரத்தத்துக்கு மிஞ்சிய பாவமில்லை" என்று நான் எழுதியந்தன் பொருள் 
 
"ஆண்டவராகிய இயேசுவின் இரத்தத்தால் கழுவ முடியாத பாவம் என்று ஒன்றும் இல்லை" என்பதே!   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

SANDOSH wrote:

சகோதரர் சுந்தர் அவர்கள் எழுதியது..

//ஆனால் ஒரு மனுஷனின் மீறுதல்கள் மற்றும்  பாவங்களை காரணம் காட்டி  அவனது வாழ்க்கையில் இரட்டத்தனயாக துன்பங்களை கொண்டுவர தேவனிடம் அனுமதிபெற சாத்தானால் முடியும்! //

தான் இயேசுவின் ரத்தத்தால் பாவங்களற கழுவப்பட்டேன் என உணரும் மனிதனை துன்புறுத்த எப்படி சாத்தான் தேவனிடம் அனுமதி பெற முடியும்? 
 


சகோதரர்  அவர்களே,  பாவங்களற கழுவப்பட்டேன் என்று உணரும் மனுஷனை சாத்தானால் ஒன்றும் பண்ண முடியாது என்பது உண்மை. ஆனால் அது இந்த பூமிக்கடுத்த  காரியம் அல்ல! 

பாவங்களற கழுவப்படுதல் என்பது ஒரே நாளில் முடிந்துவிடும் சம்பவமும் அல்ல. இந்த பூமியில் நாம் வாழும் நாள் வரையில் நாம் ஏதாவது ஒரு விதத்தில் பாவங்களை செய்துகொண்டே இருக்கிறோம் எனவே ஒவ்வொருநாளும் தேவனுடன் ஒப்புரவாகி நம்மை நாமே  நிதானித்து அறிந்து, நாம் செய்த பாவங்கள் ஏதாவது இருக்குமாயின் அதை அறிக்கை செய்து மனஸ்தாபபட்டு இயேசுவின் இரத்தத்தின் மூலம் நம்மை நாமே சுத்திகரித்துகொள்ள வேண்டியது அவசியம்.
 
ஒரு  துணியை எவ்வளவுதான் துவைத்து அழகாக உடுத்தினாலும் ஓரிரு நாட்களில் அதில் அழுக்கு படிந்துவிடுவதை யாராலும் தடுக்க முடியாது. பின்னர் அதை கட்டாயம் சலவை செய்யவேண்டும். இது அடிக்கடி நிகழும் நிகழ்வு.
 
அதுபோல் நமது இருதயமானது எவ்வளவுதான் பரிசுத்தமாக்கப்பட்டாலும்  இந்த உலகத்தின் பாவ கரைகள் ஒவ்வொருநாளும் உள்ளே ஒட்டிகொள்கிறது. எனவே அனுதினம் அந்த கரைகளை வேதவெளிச்சத்தில் ஆராய்ந்து, உணர்ந்து இயேசுவின் இரத்தத்தால் கழுவி  சுத்தம் செய்யவேண்டியது அவசியமாகிறது. 
 
ஆனால் இந்த சுத்திகரித்தல் என்பது எதற்க்காக?
 
ஒருவர் தன்னை நித்தியத்துக்கு தகுதியுள்ளவராக ஆக்கிகொள்ளவே!
 
மற்றபடி இந்த மாம்சத்தில்  நாம் செய்யும் பாவங்களுக்கும் மீருதல்களுக்கும் இந்த உலகத்தில் நிச்சயம் தண்டனை உண்டு என்பதை அறியவேண்டும்.     
  
ஆண்டவராகிய இயேசுவின் போதனை என்ன?
 
மத்தேயு 4:17  மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது
 
ஆம் பரலோகதுக்கு அதாவது நித்தியத்துக்கடுத்த காரியங்களை குறித்தே இயேசு அதிகம்  போதித்துள்ளார். அத்தோடு     
 
யோவான் 18:36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல,  .......என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல.
என்றும் தெளிவாக சொல்லிவிட்டார்.
 
இவ்வுலத்திலுள்ள பிரமாணம் என்னவென்றும் வேதம் நமக்கு தெளிவாக சொல்கிறது
 
ரோமர் 2:9  பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.
ரோமர் 2:10  எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.
 
ரோமர் 13:4  நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே.

அதாவது: ஒருவன் தீமையையும் பாவத்தையும் செய்துவிட்டு பின்னர் தேவனோடு ஒப்புரவாகி அவருடைய பாவங்கள் கழுவப்பட்டுமாகில் அந்த பாவம் அவரது நித்தையத்துக்கடுத்த காரியங்களை எவ்விதத்திலும் பாதிக்காது! ஆனால் பாவம் செய்த ஒருவர் என்னுடய பாவங்கள் எல்லாம் கழுவப்பட்டுவிட்டது என்று என்னதான் விசுவாசமாக வாழ்ந்தாலும், அவர் தான் மீருதலிநிமித்தம்  இவ்வுல தண்டனையாகிய துன்பங்களில் இருந்து ஒருநாளும் தப்பிவிட முடியாது.  மனுஷன் எதை விதைத்தானோ அதற்க்கான பலனை திருப்பி கொடுப்பதே இந்த உலகத்தின் நியதி.   
 
ஒருவர்  இவ்வுலகில்  தேவனுடய வார்த்தைகளை மீறி பாவம் செய்யும்போது  சாத்தானானவன் அவன்மீது தேவனிடம் குற்றம் சுமத்துகிறான். இரவும் பகலும் அவனுக்கு அதுதான் வேலை என்று வேதம் சொல்கிறது 
 
வெளி 12:10   இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன்
 
மனுஷர்களின் பாவத்தின் பொருட்டு அவர்களுக்கு தண்டனை கொடுக்கும்படி  தேவனிடம் சத்துரு குற்றம் சுமத்துகிறான். சில நேரங்களில் அந்த பாவத்துக்கு தகுந்த தண்டனை கொடுக்க சத்துருவின் கையிலேயே மனுஷன் ஒப்புகொடுக்கப்படுகிறான். .  
 
எசேக்கியேல் 39:23   அவர்கள் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினபடியால், என் முகத்தை நான் அவர்களுக்கு மறைத்து, அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்
   
இந்த் திரியின் தலைப்பை பொறுத்தவரை "வாழ்வின் துன்பங்களுக்கான காரணத்தை கண்டறிதல்" என்பதாகும். இவ்வுலக வாழ்வை பொறுத்தவரை "பாவம் செய்தவன்" அல்லது தேவனின் வார்த்தைகளை மீறி செயல்படுபவர் யாராக இருந்தாலும் அவர்கள் துன்பமடைய நேரிடும் என்பது நடைமுறை  உண்மை!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard