யோவான் 3:5 ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
இவ்வசனத்தில் ஜலத்தினால் பிறத்தல் என்பது தண்ணீரில் ஞானஸ்நானம் எடுப்பதையே குறிப்பிடுவதாக தமிழ் கிறிஸ்தவ தளத்தின் ஒரு கட்டுரையில்கூறப்பட்டுள்ளது. இக்கருத்தை இறைவன் தளத்தின் நிர்வாகி இறைநேசன் ஒரு பதிவில் ஆமோதித்துள்ளார். அவற்றின் தொடுப்புகள்:
ஜலத்தினால் பிறத்தல் என்றால் சாதாரண தண்ணீரில் மூழ்கிஎழுகிற ஞானஸ்நானம் எனக் கூறுவோரே, அக்கினியால் ஞானஸ்நானம் என்றால் என்ன? சாதாரண அக்கினிக்குள் மூழ்கிஎழுவதுதான் அக்கினியால் ஞானஸ்நானமா? இந்த ஞானஸ்நானத்தை உங்களில் எத்தனை பேர் பெற்றுள்ளீர்கள்?
anbu57 wrote: //சாதாரண அக்கினிக்குள் மூழ்கிஎழுவதுதான் அக்கினியால் ஞானஸ்நானமா? இந்த ஞானஸ்நானத்தை உங்களில் எத்தனை பேர் பெற்றுள்ளீர்கள்?///
தண்ணீரை "தண்ணீர்" என்றும் அக்கினியை "தேவனின்வார்த்தை" என்ற கருத்திலும் நாம் கையாளுகிறோம் காரணம், தண்ணீர் ஞானஸ்தானம் எப்படிபட்டது என்பதை ஏசுவே நமக்கு எடுத்து காட்டியதோடு வேறு பலருக்கும் முன்மாதிரியாக அந்த தண்ணீர் ஞானஸ்தானம் கொடுத்துள்ளார்கள். இவ்வாறு தெளிவாக செய்து காடடிய பின்னர் நமது விருப்பத்துக்கு அதை நாம் மாற்றமுடியாது. ஆனால் அக்கினிக்குள் சென்று யாரும் ஞானஸ்தானம் பெறமுடியாது! எனவே அக்கினிக்கு ஒப்பானதை வசனத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துள்ளேன்.
-- Edited by SUNDAR on Thursday 28th of October 2010 08:48:46 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)