அன்பு சகோதரர்களே நமது தளத்தில் முக்கியமான நோக்கம் பற்றிய பதிவை எல்லோரும் படித்து அறிந்து கொண்டிருப்ப்பீர்கள் என்று கருதுகிறேன்
அதன் அடிப்படையில் நமது குறிக்கோள் என்பது இரண்டே இரண்டுதான்.
1. இயேசுவின் இரட்சிப்பை எல்லோருக்கும் அறிவித்தல்
2. தேவனின் வார்த்தையை கைகொண்டு நடத்தல்
இவை இரண்டுமே இன்றைய நிலையில் அவசர தேவையாக உள்ளது!
இதில் இய்சுவின் வார்த்தைகளை எல்லோருக்கும் அறிவிப்பதில் மிகப் பெரிய கர்த்தரின் சேனை களமிரங்கியுள்ளதால் சுவிசேஷம் எல்லா இடங்களிலும் அதி வேகமாக பிரசங்கிக்கபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. நமது பங்குக்கு நாமும் நமக்கு ஒப்புவிக்கப்பட்டவர்களுக்கு இயேசுவை பற்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் ஆனால் கர்த்தரின் வார்த்தைகளை எல்லாம் கருத்தாய் ஆராய்ந்து கைகொண்டு நடந்திட அநேகர் முன்வருவது இல்லை ஏதாவது சாக்கு போக்கு சொல்லி கட்டளைகளை கைகொள்வதை தவிர்க்கவே விரும்புகின்றனர் காரணம் அது மிகவும் கடினமான ஓன்று!
ஆண்டவர் எனக்கு அடிக்கடி வலியுறுத்தி வருவதுபோல் எதையுமே பேச்சிலோ அல்லது எழுத்திலோ காட்டுவதைவிட பெலத்தில் அல்லது செய்முறையில் காட்டுவதுதான் மிகவும் சிறந்தது! எனவே இந்த இரண்டு அடிப்படை குறிக்கோள் சம்பந்தப்பட்ட பதிவுகளை மட்டும் தொடர்ந்து எழுதிவிட்டு, தேவையற்ற மற்ற பதிவுகளை இனி தவிர்த்துவிடலாம் என்று நான் கருதுகிறேன்.
என்னுடைய எழுத்துக்கள் எத்தனை பேருக்கு பயனுள்ளதாக இருந்தது என்பது எனக்கு தெரியவில்லை. அனால் நான் அநேகமுறை ஆண்டவராலும் பல அன்பு சகோதரர்களாலும் கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன். மிகவும் மனமடிவுக்குள்ளாகி இருக்கிறேன். எனது எழுத்துக்கள் யாரையும் புண்படுத்தியிருக்குமானால் வலை தளத்தில் எழுதுவதன் மூலம் யாருக்கும் என்மேல் மனஸ்தாபம் இருக்குமானால் என்னை தங்கள் சகோதரனாக அல்லது புதிதாக கிறிஸ்த்தவத்தில் சேர்ந்த மாணவனாக நினைத்து மன்னித்து விடும்படி வேண்டுகிறேன்! நான் எதையுமே முறையாக அறிந்து கொள்ளவில்லை. ஆண்டவர் மூலம் அறிந்தது என்று கருதுவதைஅப்படியே எழுதுகிறேன்.
காலம் மிக மிக சமீபித்து இருப்பதால் நான் இன்னும் அதிகம்அதிகமாய் கர்த்தரின் வார்த்தைகளுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடக்கவேண்டிய கட்டாய நிலையில் நான் இருக்கிறேன்.
"சுவிஷேசத்தை பிரசங்கிப்பது ஏன் மேல் விழுந்த கடமை" என்று பவுல் சொன்னது போல கர்த்தரின் வார்த்தைகளை முழுமயாக கைகொண்டு நடக்க வேண்டியதை என்மேல் விழுந்த கடமையாகவே கருதுகிறேன்!
பிரசங்கி 12:13தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே
என்மேல் விழுந்த கடமையை நான் சரியாக நிறைவேற்றாவிடில் நாளை என்னை அபிஷேகித்த கர்த்தர் முன்னால் நிற்கும்போது என்னால் எந்த பதிலும் சொல்ல முடியாது! அதிகம் தாலந்து கொடுக்கப்பட்ட்வனிடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் என்று ஆண்டவராகிய இயேசு சொன்னதுபோல எனக்கு தெரிவிக்கப்பட்டவைகளுக்கு நான் பதில்சொல்லியாக வேண்டிய நிலையில் இருக்கிறேன்.
எனவே வரும் நாட்களில் நான் எழுதுவதை குறைத்து கொள்ளலாம் என்று கருதுகிறேன். காரணம் நான் எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டு சில நேரங்களில் அலுவலக வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போய் அதனால் கம்பனிக்கு இழப்புகளை ஏற்ப்படுத்தும் நிலைவருகிறது. அவரவது போக்கிலேயே ஒருவரை விட்டு அவர் விரும்பும் காரியத்தின் மூலமே ஒருவரை பிடிப்பதுதான் சாத்தானின் தந்திரம் என்று சொல்லி கர்த்தர் என்னை பலமுறை கடிந்துகொண்டுள்ளார்.
மீண்டும் அவர் கடிந்துகொள்ளுதலை தவிர்க்க இனி மிக முக்கியமான பயனுள்ள கட்டுரைகள் மட்டுமே எழுதவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளேன்!
உங்கள் ஜெபங்களில் என்னை நினைத்துகொள்ளவும்!
அன்புடன்
SUNDAR
-- Edited by SUNDAR on Thursday 28th of October 2010 03:28:51 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
// என்னுடைய எழுத்துக்கள் எத்தனை பேருக்கு பயனுள்ளதாக இருந்தது என்பது எனக்கு தெரியவில்லை;ஆனால் நான் அநேகமுறை ஆண்டவராலும் பல அன்பு சகோதரர்களாலும் கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன்;மிகவும் மனமடிவுக்குள்ளாகி இருக்கிறேன். //
அருமை நண்பர் சுந்தர் அவர்களே, தங்களை மனமடிவாக்கின அன்பு சகோதரரில் ஒருவனாக நான் இருந்திருந்தால் என்னை தயவாகப் பொறுத்துக்கொள்ளவும்;
கலந்துரையாடலையும் கருத்தாய்வையும் தவிர்த்து தீர்மானமாக எதையோ அறிவித்து ஏற்பவர் ஏற்கட்டும் , ஏற்காதவர் போகட்டும் என்ற அணுகுமுறையினையே நான் எதிர்க்கிறேன்;
சில வாரங்கட்கு முன்பு தங்களுக்கு ஒரு நட்பின் மடல் எழுத ஆவியானவர் தூண்டினார்;ஆனாலும் நான் தவிர்த்து வந்தேன்;தற்போது அதற்கேற்ற சூழ்நிலை வாய்த்ததால் இதனை எழுதுகிறேன்;
தனி மடலில் நான் தங்களிடம் மனதார கெஞ்ச நினைத்த காரியம்.., சத்தியத்தைக் குறித்தும் ஆவியானவரைக் குறித்தும் மறுபிறவியைக் குறித்தும் இயேசுவின் தெய்வத்துவத்தைக் குறித்தும் திரித்துவத்தைக் குறித்தும் இந்து வேதங்களைக் குறித்தும் முன்னோர்களைக் குறித்தும் இந்து தெய்வங்களைக் குறித்தும் சபைகளைக் குறித்தும் சபைகளின் போதனைகளைக் குறித்தும் ஏன், தங்கள் சொந்த அனுபவங்களைக் குறித்தும் தாங்கள் கொண்டுள்ள தவறான அபிப்ராயங்களை மறுபரிசீலனை செய்வது தான்.
மேற்காணும் தொடுப்புக்கு பதிலளிக்க எண்ணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அந்த குறிப்பிட்ட ஜன்னலை மூடாமல் எனது உலாவியில் அப்படியே வைத்திருக்கிறேன்;ஆனாலும் ஏனோ., உற்சாகமில்லாமல் எழுதவில்லை;வாதிட்டு ஒன்றை நிறுவும் நம்பிக்கை எனக்கு போய்விட்டது;
மீண்டும் சொல்கிறேன், நம்மைப் போன்றோர் இணைந்து செயல்பட்டால் இன்னும் அதிகம் சாதிக்கமுடியும்;ஆனால் அது இயலாத காரியம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள்;
கர்த்தருக்கு சித்தமானால் சந்திப்போம்..!
-- Edited by chillsam on Friday 29th of October 2010 10:12:31 AM
அருமை நண்பர் சுந்தர் அவர்களே, தங்களை மனமடிவாக்கின அன்பு சகோதரரில் ஒருவனாக நான் இருந்திருந்தால் என்னை தயவாகப் பொறுத்துக்கொள்ளவும்;
சகோதரர் சில்சாம் தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
தாங்கள் என்னை பலமுறை மனமடிவுக்குள்ளக்கியிருக்கிரீர்கள் எனது உண்மையே. ஆகினும் தங்களை பாதிக்கும் அளவுக்கு கருத்துக்களை எழுதியதில் என்னுடைய தவறும் இருப்பதுபோல் உணர்கிறேன். இதுவே பழைய ஏற்பாட்டு காலமாக இருந்தால் நான் இவ்வாறு கேட்கவேண்டிய அவசியம் இல்லை ஆனால் இந்த புதிய ஏற்பாட்டு காலத்தை பொறுத்தவரை கீழ்படிதலும் தாழ்மையும் மிக மிக அவசியமாகிறது எனவே எனக்கு யார்மீதும் கொஞ்சமும் கசப்பும் கோபமும் ஏற்ப்படாத அளவு ஒப்புரவாகவே இம்மன்னிப்பை கோரினேன்.
chillsam wrote: ///கலந்துரையாடலையும் கருத்தாய்வையும் தவிர்த்து தீர்மானமாக எதையோ அறிவித்து ஏற்பவர் ஏற்கட்டும் , ஏற்காதவர் போகட்டும் என்ற அணுகுமுறையினையே நான் எதிர்க்கிறேன்;////
////வாதிட்டு ஒன்றை நிறுவும் நம்பிக்கை எனக்கு போய்விட்டது;////
தங்களின் இதே நிலைதான் என்னுடையதும். விவாதத்தின் மூலம் யாரையும் யாராலும் மாற்ற முடியாது என்று அறிந்தபின்னரே அதுபோல் ஒரு பதிவை இட நேரந்தது. நானும் பல சகோதரர்களிடம் முடிந்தஅளவு விவாதித்து பார்த்து விட்டேன். மேலும் வேத புத்தகம் எல்லோருடைய கருத்துக்கும் சாதகமாக சில வசனங்களையாவது தன்னுள் கொண்டுள்ளதால் இறுதியில் நமது அனுபவங்களின் அடிப்படையிலேயே உண்மையை அடையாளம் காணவேண்டியுள்ளது. இந்த அணுகுமுறை நிச்சயம் வெற்றியை கண்டுள்ளது என்றே நான் கருதுகிறேன் காரணம் என்னுடைய எழுத்துக்களை மனதார ஏற்று அதன்படி வாழ தீர்மானித் திருக்கும் சிலசகோதரர்களை நான் கர்த்தருக்குள் சம்பாதித்திருக்கிறேன். அதானால் என் தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். புரியவேண்டியவரளுக்கு என் எழுத்துக்கள் நிச்சயம் புரியும் என்று நான் திட்டமாக நம்புகிறேன்
chillsam wrote: /// தனி மடலில் நான் தங்களிடம் மனதார கெஞ்ச நினைத்த காரியம்.., சத்தியத்தைக் குறித்தும் ஆவியானவரைக் குறித்தும் மறுபிறவியைக் குறித்தும் இயேசுவின் தெய்வத்துவத்தைக் குறித்தும் திரித்துவத்தைக் குறித்தும் இந்து வேதங்களைக் குறித்தும் முன்னோர்களைக் குறித்தும் இந்து தெய்வங்களைக் குறித்தும் சபைகளைக் குறித்தும் சபைகளின் போதனைகளைக் குறித்தும் ஏன், தங்கள் சொந்த அனுபவங்களைக் குறித்தும் தாங்கள் கொண்டுள்ள தவறான அபிப்ராயங்களை மறுபரிசீலனை செய்வது தான்.////
அதாவது ஏறக்குறைய என்னுடைய எல்லா கருத்துக்களையுமே மறு பரிசீலனை செய்ய சொல்லிவிட்டீர்கள் என்று கருதுகிறேன். மிக்க நன்றி. எனக்கு இரண்டே இரண்டு காரியங்களை தாங்கள் தெரியபடுத்த வேண்டும். .
1. நீங்கள் யாருடய அல்லது எந்த போதனையின் அடிப்படையில் என்னுடைய கருத்துக்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
2. பருபரிசீலனை செய்யசொல்லும் என்னுடைய கருத்துக்களின் எந்த கருத்து ஜனங்களை தேவனை விட்டு பிரித்து தவறான பாதைக்கு கொண்டு சென்றுவிடும் என்று தாங்கள் கருதுகிறீர்கள்?
அந்த கருத்துக்கள் பற்றி ஒவ்வொன்றாக சரியான முறையில் தங்கள் (தளத்தில் வேண்டுமானாலும் கூட) வசன ஆதாரத்தின் அடிப்படையில் தாழ்மையான நேர்மையான வார்த்தைகளை பயன்படுத்தி விவாதிக்கலாம். சற்று கோபமான வார்த்திகள் வந்தால் கூட நான் விலகிவிடுவேன்.
தாங்கள் எழுதும் கருத்துக்கள் பற்றிய உண்மைகளை ஆண்டவரிடம் கேட்டுதான் நான் ஆராய்ந்து அறிவேன். தாங்களின் கருத்து சரியான இருந்தால் நிச்சயம் நான் ஏற்றுக்கொள்வேன். சிலர்போல நான் கருதுவதுதான் சரி எழுதியதை மாற்ற மாட்டேன் என்று தவறான கருத்துக்களை எழுதி வைக்க விரும்புகிறவன் நானல்ல வசன அடிப்படையில் தோற்ப்பது பற்றியோ கருத்துக்களை மாற்றுவது பற்றியோ நான் கவலைப்படுவது இல்லை! மாறாக மேலும் ஒரு உண்மையை அறிந்து கொண்டேன் என்று அதற்காக பெருமை படுபவன்.
ஆயிரம் பிரிவுகள் இருந்தாலும் ஒரே ஒரு உண்மைதான் இருக்கிறது அது எது என்று ஆராய்ந்துவிடலாம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
// அந்த கருத்துக்கள் பற்றி ஒவ்வொன்றாக சரியான முறையில் தங்கள் (தளத்தில் வேண்டுமானாலும் கூட) வசன ஆதாரத்தின் அடிப்படையில் தாழ்மையான நேர்மையான வார்த்தைகளை பயன்படுத்தி விவாதிக்கலாம். சற்று கோபமான வார்த்திகள் வந்தால் கூட நான் விலகிவிடுவேன். //
இதுபோல மிரட்டினால் நான் உள்ளேயே வரமாட்டேன்... இது எப்படி இருக்கு?
(இதற்கு மேல் எதையும் எழுதவேண்டிய அவசியமில்லை;அது ஏற்கனவே உங்கள் எழுத்துக்களால் தளத்திலேயே இருக்கிறது;கொஞ்ச ஞானமும் நிறைய பொறுமையும் இருந்தால் அதனை அறிந்துகொள்ளலாம்;மற்றபடி இதை மையமாகக் கொண்டு புதிய விவாதம் தேவையில்லையென்றெண்ணுகிறேன்.)