ஒருவர் மிகுந்த பாசத்தோடு வளர்த்த அன்பு மகன் ஒருவன் மிகவும் அசுத்தமான ஒரு டரேய்னேஜ் குழிக்குள் விழுந்துவிட்டான் என்று வைத்துகொள்வோம், அவனை மிகவும் கஷடப்பட்டு அக்குழியில் இருந்து மீட்டுஎடுத்த அவனது தகப்பனார், என்னென்ன காரியங்களை செய்வார் என்பதை நாம் சற்று கற்ப்பனைபண்ணி பார்க்கலாம்.
முதலில் அவன் மேலுள்ள அழுக்குகள் நீங்க அவன் தண்ணீரால் சுத்தமாக கழுவப் படுவான்! பின்னர் அவன் மேலிருக்கும் துர்நாற்றம் எல்லாம் போகும்படி சுத்திகரிக்கப்படுவான் அடுத்து மீண்டும் அதுபோல் ஒரு குழியில் விழுந்துவிடாதபடி ஏதாவது ஒரு வழியில் பாதுகாக்கப்படுவான்!
அதுபோலவே இந்த உலகம் என்னும் பாவம் நிறைந்த துன்மார்க்க ஊளையில் விழுந்து உழன்று கொண்டிருக்கும் ஒருவர், தாங்கள் விழுந்துகிடக்கும் பாவ சேற்றில் இருந்து தூக்கி எடுக்கப்பட்டு ஆண்டவராகிய இயேசுவண்டை வரும்போது இதற்க்கு ஒப்பான மூன்று காரியங்களே தேவனால் நடத்தப்படுகிறது.
1. கழுவுதல் - தண்ணீர் அபிஷேகம் (ஞானஸ்தானம்)
2. சுத்திகரித்தல் - அக்கினி அபிஷேகம் "
3. பாதுகாத்தல் - பரிசுத்த ஆவி அபிஷேகம் "
1. கழுவப்படுதல் - தண்ணீர் ஞானஸ்தானம்:
பொதுவாக ஸ்நானம் என்பது நீரில் குளிப்பதை குறிக்கிறது. குளித்தல் என்பதற்கு நீரினால் கழுவுதல் என்று பொருள்படுகிறது. எனவே அதற்க்கு WASH என்ற ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
ஒருவன் கழுவப்பட வேண்டுமெனில் முதலில் அவன் தன்னை கழுவுகிறவரின் கரத்தில் தனை ஒப்புகொடுக்க வேண்டும். இவ்வாறு தேவனுக்கு கீழ்படுதல் அல்லது தேவனுடைய கரத்தில் நம்மை கழுவுவதற்கு ஒப்புகொடுத்தல் என்ற நீதியை நிறைவேற்றுவதற்கு உடன்பாடாக அல்லது ஒப்பாக இந்த தண்ணீர் ஞானஸ்தானம் எடுக்கப்படுகிறது.
இங்கு நம்மை கழுவுவது நமக்காக சிந்தப்பட்ட ஆண்டவராகிய இயேசுவின் இரத்தமே:
I யோவான் 1:7அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். அப்போஸ்தலர் 22:16ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.
இதை ஆண்டவர் ஏற்கெனவே நமக்காக செய்து முடித்துவிட்டாலும் நாம் நம்மை அவர் இரத்தத்தில் கழுவுவதற்கு ஒப்பு கொடுக்கிறோம் என்ற விசுவாசத்தை செயல் முறையால் காட்டும் ஒரு சடங்காகவே ஜல ஞானஸ்தானம் இருக்கிறது. ஆண்டவராகிய இயேசு வருவதற்கு முன்னர் அவருக்கு ஞானஸ்தானம் கொடுக்க வேண்டும் என்ற ஒரு காரியத்துக்காக தேவன் தனது தூதனை அவருக்கு முன்னமே அனுப்பி அவருக்கான பாதையை செவ்வை பண்ண வைத்தார் என்று வேதம் சொல்கிறது.
மல்கியா 3: 1. இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்
என்ற வசனத்தின்படி இயேசுவுக்கு முன்னமே வந்து இயேசுவை அடையாளம் காட்டி ஞானஸ்தானம் கொடுத்தவர் யோவான் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் பொருள் என்னவெனில் இந்த பாவ உலகத்தில் எவரோருவர் மாமிசத்தில் வந்து பிறந்துவிட்டலும் தேவனுக்கு கீழ்படிதல் என்ற நீதியை நிறைவேற்றுவதற்கு உடன்பாடாக அல்லது ஒப்பாக இந்த தண்ணீர் ஞானஸ்தானம் எடுக்கவேண்டும் என்பதற்கு மாதிரியாக இயேசுவே யோவானிடம் ஞானஸ்தானம் பெற்றார்.
இவ்வாறு தண்ணீரில் நாம் மூழ்கி எழும்பும்போது நமது பழைய ஜன்ம மனுஷன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு மரித்து புதிய மனிதன் மேலெழும்புவதற்கு ஒப்பாக ஜலத்தினால் பிறத்தல் என்று இந்நிகழ்ச்சி கூறப்படுகிறது.
இந்த காரியத்தை நாம் எதற்கு ஈடாக ஒப்பிடலாம் என்றால் எலியாவின் காலத்தில் நாகமான் என்ற சீரிய படைத்தலைவன் எலியாவின் வார்த்தைக்கு கீழ்படிந்து யோர்தானில் மூழ்கி எழுந்து குஷ்டரோகம் நீங்கபெற்ற சம்பவத்துக்கு ஒப்பாக கூறலாம்
II இராஜாக்கள் 5:14அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.
அங்கு யோர்தானின் தண்ணீரிலும் ஒன்றுமில்லை அவன் மூழ்கி எழுந்ததிலும் ஒன்றுமில்லை தேவனுடைய வல்லமையே அவனது குஷ்டத்தை குணமாக்கியது அதற்க்கு அவனது கீழ்படிதல் அவசியமாக இருந்தது.
அதுபோல் இங்கும் ஆண்டவராகிய இயேசு நமக்காக எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார் எனவே அவசியம் நமது கீழ்படிதல் மட்டுமே மற்றபடி வேறு எந்த சிரமமோ கஷ்டமோ இந்த ஜலஞானஸ்தானத்தில் இல்லை கீழ்படிதல் அடிப்படை யிலேயே நமது பாவ குஷ்டம் ஒழியும். மற்றபடி மூள்குவதோ எழும்புவதோ புதிதாக பிறப்பதோ எல்லாம் வெறும் இன்டிகேஷன்தான்!
2. சுத்திகரித்தல் - அக்கினி அபிஷேகம்
அசுத்தத்துக்குள் விழுந்த மகனை என்னதான் கழுவினாலும் கண்ணுக்கு தெரியும் அழுக்குகள் நீங்கிவிடுமேன்யற்றி அவன் மேலிருக்கும் துர்நான்றம் போவதுஇல்லை எனவே கண்ணுக்கு தெரியாத அசுத்தங்கள் துர்நாற்றங்கள் நீக்கப்பட்டு அது சுத்திகரிக்கபட வேண்டும். அக்கினிக்குள் நிற்கும் பொருட்களை அக்கினியில் போட்டு புடமிட்டுதான் சுத்திகரிக்கப்படும்.
நமது தேவனே பட்சிக்கும் அக்கினியாக இருக்கிறார் அத்தோடு வேதாகமத்தில் அக்கினி என்னும் வார்த்தை பல இடங்களில் தேவனுடைய வார்த்தைக்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளதை நாம் பார்க்க முடியும்! .
எரேமியா 5:14 நான் உன் வாயிலிட்டஎன் வார்த்தைகளை அக்கினியும்
எரேமியா 23:29என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்
தேவனுடைய வார்த்தை என்னும் அக்கினியால் இங்கு மனிதன் சுத்திகரிக்கப் படுகிறார்கள் நமது ஆண்டவராகிய இயேசுவே தேவனுடைய வார்த்தையாக இருப்பதால் தன்னிடத்தில் வருகிறவர்களை தேவனுடய வார்த்தைக்குள் கடந்து போகபண்ணி அதற்க்கு தகுந்தால்போல அவர்களை சுத்திகரிக்கும் வேலையையும் சேர்த்தே செய்வதற்கு பூமிக்கு வந்தார் என்று கூறப்படுகிறது
மல்கியா 3:2அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். சகரியா 13:9அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்
இதுவே அக்கினியால் ஞானஸ்தானம் கொடுத்தல் என்று வேதம் போதிக்கிறது.
அதாவது தேவனின் வார்த்தை என்னும் புடமிடும் அக்கினிக்குள் ஒருவரை கடந்து போகபண்ணி, அந்த வார்த்தைக்கு ஏற்றாற்போல் அந்த மனிதனை மாற்றுவதே இந்த அக்கினி ஞானஸ்தானம் என்பது. நியாயபிரமாண எழுத்துப்படி "மரணத்துக்கேதுவான பாவம் செய்தவன் எவனும் கொலைசெய்யப்பட வேண்டும்" என்பது கட்டளை. இவ்வாறு பல பாவங்களை செய்து மரணத்துக்கு நேராக நிற்கும் ஒரு மனிதன் அந்தநாள் வரை தேவனின் வார்த்தைகளாகிய நியாயபிரமாண கட்டளைகளை மீறி செய்த அனைத்து பாவங்களில் இருந்தும் விடுவிக்கபட்டு சுத்திகரிக்கப்படுகிறான்.
3. பாதுகாத்தல் - பரிசுத்தஆவி அபிஷேகம்
அசுத்தத்துக்குள் இருந்து மீட்கப்பட்ட மகனை நீரினால் கழுவி வாசனை பொருட்களால் சுத்திகரித்தபின்னர் அவனோடு கூடவே இருந்து எப்பொழுதும் பாதுகாக்கும்படி அவனது தாய்க்கு கட்டளை இடுகிறார்!
அடுத்ததாக ஒருவனின் பழைய பாவங்கள் கழுவப்பட்டு தேவனுடய வார்த்தைகளின் அடிப்படையில் சுத்திகரிக்கப்ப்ட்டபின்னர் மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பி விடாதபடி அல்லது பழைய பாவங்களை செய்துவிடாதபடி கண்டித்து உணர்த்த பரிசுத்தத் ஆவியானவரின் அபிஷேகத்தை பெறுகிறான்.
I பேதுரு 4:14தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்
யோவான் 14:17அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். யோவான் 16:8அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
நம்முள் தங்கும் ஆவியானவர் ஜீவ தண்ணீருக்கு ஒப்பாக கூறப்படுகிறார்
யோவான் 7:38வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
39. தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்.
ஆவியானவர் தேங்கி நிற்கும் ஜலமல்ல ஊற்றெடுத்து ஓடிகொண்டிருக்கும் தண்ணீர். தண்ணீரானது ஓடும் இடங்களில் உள்ள ஜனங்கள் மிருக ஜீவன்கள் எல்லாம் பிழைப்பார்கள். அதுபோல் ஆவியானால் நிரப்பபட்ட மனிதர்கள் எல்லோரும் நிச்சயம் பிழைப்பார்கள்! .
இத்தோடு தேவனின் மீட்பின் திட்டம் முடிகிறது. இவ்வாறு நம்மோடு வந்து தங்கும் ஆவியானவரே நாம் மீட்கப்பட்டுவிட்டோம் என்பதற்கான அடையாளம் அல்லது முத்திரை.
தேவனின் மீட்பின் இந்த மூன்று திட்டங்களும் மனம்திரும்புதல்ம மற்றும் கீழ்படிதல் என்ற சுலபமான காரியங்களின் அடிப்படையில் இலவசமும் மிகவும் எளிதாக கிடைக்கும் ஒன்றாகவே இருக்கிறது
ஆனால்
இந்த காரியங்கள் முடிந்தபிறகு,
பலிபீடத்தில் எரியும் அக்கினியானது ஒருபோதும் அவிக்க்கபட்டு போகாதபடி எரிந்துகொண்டு இருக்கவேண்டும் என்ற கர்த்தரின் கட்டளைப்படி தேவனின் வார்த்தைகள் என்னும் அணலும் ஆவியானவரின் அபிஷேகமும் நம்முள் அணைந்து போகாதபடி பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு!
அவ்வாறு பாதுகாக்காமல் ஆவியானவரை அவிந்துபோக விட்டவர்களை மீட்பதற்கு வேறொரு பலியில்லை
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இன்றைய நாட்களில் கிறிஸ்த்தவர்கள் எனப்படும் அனேகர்கள் மீட்பின் முழுமையான நிலையை அடையாமலேயே தாங்கள் மீட்கபட்டு விட்டதாக தவறான நினைப்பில் இருக்கிறார்கள்.
தேவனின் மீட்பின் திட்டம் எப்படி நடக்கிறது என்பதை சரியாக தெரிவிக்கும் நோக்குடன் இந்த பதிவு மீண்டும் பார்வைக்கு வைக்கபடுதிறது.
மீட்பின் திட்டத்தில் உள்ள இந்த மூன்று பகுதியில் ஏதாவது தங்கள் வாழ்வில் இன்னும் நிறைவேறவில்லை எனில் அதற்க்கான முயற்சி எடுத்து உடனே செயல்படும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)