பக்தியுடன் பரிகாரங்களை பல செய்தும், பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கு படையெடுத்தும், காசி, கங்கையில் மூழ்கி எழுந்தும் ஜன்ம பாவங்களை தீர்க்க முடியாமல் தவிக்கும் மனுஷர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து நமது பாவங்களுக்காக கிரயம் செலுத்தி சிலுவையில் மரித்ததன் அடிப்படையில், ஒரு மனிதன் அவரை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு மனம்திரும்பி அவரது கரத்தின் கீழ் வரும் பட்சத்தில் கீழ்கண்ட மூன்று காரியங்கள் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது .
1. தண்ணீர் ஞானஸ்தானம் ---> ஜலத்தினால் பிறத்தல் --> இயேசுவின் இரத்தத்தால் மாமிச பாவங்கள் அனைத்தும் கழுவப்படுதல் ---> பழைய மனிதன் மரித்தல் புதிய மனிதனாக பிறத்தலுக்கு ஒப்பான நடவடிக்கைகள்
2. அக்கினி ஞானஸ்தானம் --- > வார்த்தை ஞானஸ்தானம் --> தேவனின் வார்த்தைகளுக்கு ஏற்ற மனிதனாக மாற்றப்படுதல் ---> எழுத்தாகிய நியாயபிரமாண பாவங்களில் இருந்து விடுதலை
3. ஆவியில் பிறத்தல் - பரிசுத்த ஆவியின் அபிஷேகம் ---> தேவ ஆவியானவர் நம்முள் வந்து தங்குதல் ----> நம்மை கண்டித்து உணர்த்தி தேவனுக்கேற்ற வழியில் நடத்துதல்.
இயேசுவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களுக்கு இவை மூன்றும் இலவசம்! இலவசம்! இலவசம்!
இவற்றை இலவசமாக பெறுவதற்கு எந்த சிரமமும் இல்லை விசுவாசம் மற்றும் கீஷ்படிதலே போதும்!
ஓடி வாருங்கள்! OFFER கிருபையின் காலம் முடியும் வரையில் மட்டுமே!
-- Edited by SUNDAR on Tuesday 2nd of November 2010 08:48:49 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தயவுசெய்து தலைப்பை மாற்றவும்;ஜன்ம பாவங்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடையாது;போலியான வாக்குறுதிகளை பொதுமக்கள் நம்பவேண்டாம்;ஏனெனில் கிறித்தவ விசுவாசத்திலோ பரிசுத்த வேதாகமத்திலோ ஜன்ம பாவங்கள் சம்பந்தமான எந்த போதனையும் கிடையாது;இங்கே "ஜன்மம்" சம்பந்தமான இருவித விளக்கங்களுக்கும் பொதுவான கருத்தையே நான் முன்வைத்துள்ளேன்.
தயவுசெய்து தலைப்பை மாற்றவும்;ஜன்ம பாவங்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடையாது;போலியான வாக்குறுதிகளை பொதுமக்கள் நம்பவேண்டாம்;ஏனெனில் கிறித்தவ விசுவாசத்திலோ பரிசுத்த வேதாகமத்திலோ ஜன்ம பாவங்கள் சம்பந்தமான எந்த போதனையும் கிடையாது;இங்கே "ஜன்மம்" சம்பந்தமான இருவித விளக்கங்களுக்கும் பொதுவான கருத்தையே நான் முன்வைத்துள்ளேன்.
சகோதரர் சில்சாம் அவர்களே எழுதப்பட்ட கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும்போது கொஞ்சமாவது விளக்கம் கொடுத்து, எந்த வசனத்தின் அடிப்படையில் எந்த கருத்து தவறு என்பதை கொஞ்சம் விபரமாக தெரிவிக்கும்படி மீண்டும் உங்களை தாழ்மை யுடன் கேட்டு கொள்கிறேன்.
இப்பொழுது தங்களின் மறுப்புக்கு வருவோம்:
முதலில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவால் நீக்க முடியாத பாவம் ஓன்று இருக்கிறதா? என்பதை தெரியப்படுத்தவும். (இயேசுவால் குறிப்பிடப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான தூஷணம் தவிர)
அடுத்து "ஜன்ம" என்ற வார்த்தை வேதத்தில் பிறந்த நாளை குறிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது
எனவே "ஜன்ம பாவம்" என்பதை "பிறவி பாவம்" என்றும் எடுத்து கொள்ளல்லாம்.
இப்பொழுது அது பற்றிய விளக்கத்தை தருகிறேன்: :
தேவனால் உருவாக்கப்பட்ட முதல் மனிதனாகிய ஆதமும் ஏவாளும் தேவனுடைய கட்டளையை மீறி விலக்கப்பட்ட கனியை புசித்ததால் பாவம் செய்தார்கள். ஆண்/ பெண், நன்மை/தீமை அறியாமல் இருந்த அவர்கள் அந்த கனியை புசித்ததன்மூலம் கண்கள் திறக்கப்பட்டு ஆண் பெண் வேறுபாட்டை அறிந்தனர். அதனால் அவர்களுக்கு சந்ததி உருவானது. இவ்வாறு இந்தபூமியில் சந்ததி உருவாக காரணம் பாவமே! பாவத்தினால் உருவான சந்ததி பாவத்திலேயே பிறக்கிறது.
அதாவது இந்த பூமியில் பிறப்பதற்கு தகுதியற்ற கூட்டம், ஆதாம் ஏவாள் செய்த பாவத்தில் உருவாகி பிறந்துள்ளது எனவேதான் தாவீது நான் உருவாகும்போதே துர்குணத்தில் உருவானேன் என்றும்
என்றும் தாவீது கூறுகிறார். நாம் கர்ப்பத்தில் உருவானதே பாவம்! பிறகு நாம் பிறந்ததும் பாவமே. அதுவே பிறவி பாவம் அல்லது ஜன்ம பாவம்!
பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒரு பாவம்செய்தவன் பாவமறியா இன்னொரு உயிரை அதாவது ஆட்டுக்கடா அல்லது புறா/காளை போன்ற மிருகங்களை பலிகொடுப்பதன் மூலம் தான் செய்த பாவங்களில் இருந்து மன்னிப்பை பெற முடியும்.
ஆனால் "நாம் பிறந்ததே பாவம்" அந்த பாவத்தை போக்க எந்த ஒரு மிருகத்தாலும் முடியாது இருந்தது. எனவேதான் பூமியில் பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் மரணத்தை சந்திக்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்தனர்.
அதாவது பாவநிவர்த்தி செய்ய கடா பலியிடவேண்டும் என்று கீழ்கண்ட வசனம் சொல்கிறது
எண்ணாகமம் 28:22உங்கள் பாவநிவர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
அனால் கீழ்கண்ட வசனம் கடாவின் இரத்தம் பாவத்தை நிவர்த்தி செய்ய முடியாது என்று சொல்கிறது
எபிரெயர் 10:4அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.
இதில் முதல் வசனம் சொல்லும் பாவம் வேறு இரண்டாம் வசனம் சொல்லும் பாவம்தான் ஜன்ம பாவம் அல்லது பிறவி பாவம் அதை எந்த ஆட்டுகடாவின் இரத்தமும் நிவர்த்தி செய்யமுடியாது!
எனவேதான் பூமியில் பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் மரணத்தை சந்திக்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்தனர். இந்த "பிறவி பாவத்தை" (ஜன்ம பாவத்தை) மட்டுமல்ல அனைத்து பாவங்களையும் போக்கவே ஆண்டவராகிய இயேசு பூமிக்கு இரங்கி வந்தார்.
I யோவான் 1:7அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
I யோவான் 2:2நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின்பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
இங்கு சகலபாவம் என்பது எல்லா பாவங்களையும் குறிக்கிறது அது ஜன்ம பாவமாக இருந்தாலும் சரி, பிறந்த வளரும்போது செய்த பாவமானாலும் சரி, நியாயபிரமாணத்தை மீறி செய்த பாவமானாலும் சரி!. சகல பாவத்தையும் நீக்க வல்லதுதான் இயேசுவின் இரத்தம்.
இவ்வாறு அவரது இரத்தத்தின்மூலம் பிறவி பாவத்தில் இருந்து சகல பாவங்களும் நீக்கப்படுதால் ஒரு மனிதன் மரணத்தில் இருந்து விடுபட வாய்ப்பு உண்டாகிறது.
எனவேதான் இயேசு
யோவான் 8:51ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 11:26உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்
என்று சொன்னதோடு, அன்றாடம் மரணத்தை சந்திக்கும் மனிதர்கள் இதை நம்புவது கடினம் என்று அறிந்து
"இதை விசுவாசிக்கிறாயா என்றார்".
ஆனால் நாமோ அவரது வார்த்தையை விசுவாசிக்காமல் அதற்க்கு வேறு பொருள் போதித்து வருகிறோம்.
(நீங்கள் எந்த பொருளின் அடிப்படையில் மறுப்பு தெரிவித்தீர்கள் என்பதே எனக்கு புரியவில்லை அதற்க்கான எந்த வசன ஆதாரமும் . இல்லை. எனக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அளவுக்கு நான் ஒரு பெரிய ஆள் அல்ல என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆகினும் இப்படி ஓரிரு வரியில் "தவறு" "தலைப்பை மாற்று" என்று நீங்கள் எழுதியதை ஏற்று தலைப்பை மாற்றுவதற்கு நீங்கள் யார்? எவ்வளவு பெரிய ஆள்" என்ற விளக்கம் அல்லது சரியான வேத ஆதாரம் எனக்கு அவசியம் தேவை அல்லவா?)
-- Edited by SUNDAR on Wednesday 10th of November 2010 04:00:32 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஜன்ம நாளை பிறந்தநாள் என்ற பொருளில் கொள்ளாமல் அல்லது மறுபிறப்பு என்ற பொருளில் கொள்ளாமல் ஏற்கனவே பிறந்து வாழ்ந்து மறைந்தோரே மீண்டும் மீண்டும் பிறப்பதாகவும் அல்லது தங்கள் முன்னோர்களின் பாவச் சுமைகளை அதாவது நல்வினை தீவினை எனப்படும் கர்மபாபங்களைத் தாங்கள் சுமப்பதாகவும் சிலர் எண்ணி அதற்காகவும் முழுகிக் கொண்டிருக்கிறார்கள்;இந்த குழப்பத்தைத் தவிர்க்கவே, தலைப்பை மாற்றவும் என்று கோரிக்கை மட்டும் வைத்தேன்;கட்டளையிடவில்லை; ஆணவத்துடன் செயல்படுவது நானில்லை என்றே எண்ணுகிறேன்.