தேவனால் தெரிந்துகோள்ளபட்ட சில தேவ மனிதர்கள், தேவன் பின்னாளில் கட்டளையாக/ நியமணமாக கொடுக்கபோகும் காரியங்களையும் தேவனின் இருதய நிலையையும் முன்கூட்டியே அறிந்து, அதன் அடிப்படையில் தாங்களே மனமுவந்து செய்த பல்வேறு காரியங்கள் பரிசுத்த வேதாகமத்தில் பதிவாகி யுள்ளது. அவைகளில் சிலவற்றை இங்கு நாம் பார்க்கலாம்.
1.ஆபேலின் காணிக்கை!
"காணிக்கை" என்பதை அதற்க்கு முன் யாருமே கர்த்தருக்கு செலுத்தியிராத நிலையில், காணிக்கை பற்றி எதுவுமே அறியாத ஆதாமின் முதல் சந்ததியாகிய ஆபேல், தேவனின் இருதய விருப்பங்களை அறிந்து விசுவாசத்தினால் சரியான காணிக்கையை படைத்தான் .
ஆதியாகமம் 4:4ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.
யாத்திராகமம் 35:5உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்
2. நோவாவின் பலி!
பலியிடுதல் பற்றி எந்த ஒரு கட்டளையோ அல்லது பலி செலுத்துதல் பற்றிய எந்த நியமணமோ இல்லாத எந்த ஒரு பலியும் செலுத்தப்படாத அந்த கால நிலையில். ஜலப்பிரலயத்தில் இருந்து தப்பி பேழையில் இருந்து வெளியே வந்த நோவா என்னும் தேவமனிதன் சில சுத்தமான மிருகங்களை கர்த்தருக்கு பலியாக செலுத்துகிறான்:
ஆதியாகமம் 8:20அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.
அவ்வாறு தேவனின் எண்ணநிலைகளை அறிந்து செயல்படுவது கர்த்தருக்கு மிகுந்த பிரியமாகையால் கர்த்தர் பலியை அங்கீகரித்ததோடு ஒரு நல்ல வாக்குதத்தமும் கொடுக்கிறார்.
ஆதியாகமம் 8:21சுகந்த வாசனையைக் கர்த்தர்முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; .......; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை
இங்கு கர்த்தர் எந்த பலியையும் கேட்கவில்லை ஆனால் கர்த்தரின் இருதயத்தில் பலியிடும் கட்டளை இருப்பதை முன்கூட்டியே அறிந்த நோவா இவ்வாறு விசுவாசத்தால அதைநிறைவேற்றி தேவனின் இருதயத்தை குளிரப்பண்ணினான்.
பின்னாளில் பலியிடுதல் என்பது முக்கியமான பிரமாணமாக நியாயபிரமாணத்தில் கொடுக்கப்பட்டது.
யாத்திராகமம் 20:24மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக
லேவியராகமம் 1:2நீ , உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்.
3. ஆபிரஹாமின் தசமபாகம்
தசமபாக கட்டளையோ அல்லது அதை பற்றி எந்த செய்தியோ அல்லது கட்டளையோ நியமணமோ கர்த்தரால் அறிவிக்கபடும் முன்னமே ஆபிரஹாம் என்னும் தேவமனிதன், மேல்கிசெத்க்கு என்னும் தேவனுடைய ஆசாரியனுக்கு தசமபாகம் செலுத்தினால்
ஆதியாகமம் 14:20 உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
பின்னாளில் அது நியாயபிரமாணத்தில் கட்டளையாக சேர்க்கப்பட்டது
லேவியராகமம் 27:30தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது. உபாகமம் 14:28மூன்றாம் வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.
இவ்வாறு தேவனுடன் நெருங்கிய தொடர்பு நிலையில் இருப்பவர்களுக்கும் தேவனை சரியான முறையில் அறிந்தவர்களுக்கும் தேவனால் எழுதி கொடுக்க்ப்படாத காரியங்களில் கூட அவரின் மனநிலை என்னவென்பதை முன்கூட்டியே அறிந்து அதனை சரியாக நிறைவேற்றும் பாக்கியம் கிட்டும்!
ஆனால் அவரோடு நெருங்கிய தொடர்பு நிலை இல்லதவர்களுக்கோ அல்லது தேவனை அறியவேண்டிய விதமாக அறியாதவர்களுக்கோ ஒரு காரியத்தை குறித்து என்னதான் தெளிவாக எழுதிகொண்டுத்தாலும் அதை கைகொண்டு நடக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படாது! அதை பற்றி பட்சபாதம் பண்ணி பல்வேறு குற்றம் கண்டுபிடித்து குழப்பிக்கொண்டு சரியான நிலையை எட்டாது இடறலடைந்து போவார்கள்!
(மேற்கூறிய காணிக்கை/பலி/ தசமபாகம் போன்ற காரியங்கள் இன்றும் நடை முறையில் இருக்கிறதா இல்லையா? என்பதை ஆராய்வதற்காக இந்த பதிவை நான் தரவில்லை. இன்றைய நிலையில் இந்த கடைசி காலங்களில் தேவனின் மனதில் இருப்பது என்ன? மற்றும் தேவன் ஒரு மனிதனிடம் எதிர்பார்ப்பது என்னவென்பதை தேவனோடு நெருங்கிய தொடர்பு நிலையில் உள்ளவர்களால் மட்டுமே முன்கூட்டியே சரியாக அறியமுடியும் என்பதை தெரிவிக்கவே எழுதியுள்ளேன்.)
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)