இன்றைய கிறிஸ்த்தவ விசுவாசிகள் மற்றும் பாஸ்டர்களின் பண்பு நிலையை பார்த்தால் அநேகர் தாங்கள் கடிந்து கொள்ளப்படுதலை சற்றும் விரும்பாமல் ஏதோ மாயையில் உழன்றுகொண்டு இருப்பது என்பது தெரியவருகிறது.
அதாவது தங்களுக்கு இதமான கருத்துக்கள் அல்லது தங்களுக்கு சாதகமான கருத்துக்களை சொல்லும்போது அப்படியே குளிர்ந்து போகும் விசுவாசிகள் தங்களுக்கு பாதகமான அல்லது தங்களின் தவறான நடத்தையை குத்திகாட்டும் கருத்துக்கள் வரும்போது அதை சட்டை செய்வதே இல்லை. அதன் உண்மை தன்மையை ஆராய விரும்புவதும் இல்லை.
"நாம் விசுவாசிகள், நமக்கு பரலோகம் நிச்சயம், நாம் கன்மலைமேல் கட்டபட்ட வீடுகள், நம்மை யாரும் அசைக்க முடியாது, சாத்தான் நமது காலுக்கு கீழே, அவனால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது, நாம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், ஒருவரும் நம்மை கிறிஸ்த்துவின் கையில் இருந்து பிடுங்க முடியாது. நமக்காக பரலோகத்தில் நித்திய வாழ்வு தயாராக இருக்கிறது"
போன்ற நல்ல சாதகமான கருத்துக்களை சொல்லும்போது அதிகமாக மனம் குளிர்ந்து போகிறது.
14. ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு;
என்று ஆண்டவர் யார்மூலமாவது பேசிவிட்டால் "குறையா? என்னிடமா? என்று சுலபமாக அலட்சியம் செய்கிறோம்.
இது ஒரு விபரீதமான நிலையே காட்டுகிறது. கடிந்துகொள்ளுதலை அலட்சியம் செய்பவன் தீங்கை அனுபவிப்பான் என்று அனேக வசனங்கள் சொனாலும் ஓரிரு வசனங்களை தாங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
நமக்கு புகழ்ச்சியாக சொல்லப்படும் வார்த்தைகளில் மனம் குளிருவது இயல்பு ஆனால் அவ்வித வார்த்தைகளால் நமக்கு எந்தபயனும் நமக்கு நிச்சயம் இல்லை. மாறாக ஒருவர் நம்மை கடிந்துகொள்ளும்போது அதில் உள்ள உண்மை தன்மைகளை ஆராய்ந்து நம்மை திருத்திகொள்ள வாய்ப்பு உருவாகிறது!. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாம் திருந்தாமல் "நான் சரியானவன், இவன் யார் என்னை குறைகூற" என்ற நோக்கில் செயல்பட்டு அவரை வெறுப்பது என்பது நமக்கு மரணத்தை கொண்டுவரும் என்று வேதம் சொல்கிறது.
உதாரணமாக நமது முகத்தில் கருப்பாக ஏதோ கரி பூசப்பட்டு இருந்தால் அதை கண்ணாடியின் உதவி இல்லாமல் கண்டுபிடிக்க முடியாது. அந்த கரி பூசப்பட்ட முகத்தோடு சாலையில் போகும்போது நமக்கு வேண்டாதவர் ஒருவர் நம்மை பார்த்து "உன் முகத்தில் கரி இருக்கிறது" என்று கூறுவாராகில் "நீ யார் என் முகத்தில் இருக்கும் கரியை சுட்டிகாட்ட? நீ பெரியவனா? உனக்கு நான் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை! என்பதுபோல் பேசிக்கொண்டு அந்த கரியை துடைக்காமல் அலைவதைவிட, உண்மையில் அப்படி கரி இருக்கிறதா என்பதை ஆராய்ந்து நமது முகத்தில் இருந்து அதை அகற்றுவதுதான் சிறந்தது.
யாருடைய கடிந்துகொள்ளுதலாக இருந்தாலும் அதில் ஏதாவது நியாயம் இருக்கத் தான் செய்யும்! எனவே சரியாக அதை ஆராய்ந்துபார்த்து உண்மையை அறியாமல் அவ்வார்த்தைகளை நாம் அலட்சியம் செய்யகூடாது என்பது எனது கருத்து.
இக்கருத்தை விளக்கும் ஒரு வேத சம்பவத்தை நாம் பார்க்கலாம்... .
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இங்கு கடிந்துகொள்ளப்பட்டத்தை எற்று தன்னை திருத்திக்கொண்ட ஒரு வேதாகம மனிதனை பற்றியும் கடிந்துகொள்ளுதலை நிர்விசாரமாக தள்ளிவிட்டு அதனால் அழிவை சந்தித்த ஒரு வேதாகம மனிதரை பற்றியும் நாம் பார்க்கலாம்:
தாவீது ராஜா - கடிந்துகொள்ளப்பட்டத்தை என்று மன்னிப்பு பெற்றவன்!
தாவீது ராஜா ராஜபோகத்தில் வாழ்ந்துகொண்டு இருந்தபோது இச்சையினால் இழுக்கப் பட்டு பத்சேபாள் என்னும் தன்னுடைய ஊழியக்காரனின் மனைவியோடு சயனித்ததொடு அல்லாமல் அவளின் கணவனாகிய உரியாவை போர் முனையில் கொல்லசெய்து மிகப்பெரிய பாவம் செய்தான்.
(கர்த்தாரால் "தன் இருதயத்துக்கு ஏற்றவன் என்று பாராட்டபட்ட தேவமனிதனாகிய இவன், இப்படி ஒரு பாவம் செய்ததை நினைத்து பார்க்கும்போது சாத்தான் எந்த மனிதனையும் குறிவைத்து வீழ்த்துவதில் கைதேர்ந்தவன் என்பதையும் ஒவ்வொரு மனிதனின் பெலஹீனம் எது பெலம் எனது என்பதை அறிந்தவன் என்பதையும் நாம் அறிந்துகொள்ளலாம். அவனை சாதாரணமாக எண்ணினீர்கள் என்றால் அவனிடம் தோற்ப்பது நிச்சயம்)
இவாறு பாவம் செய்த தாவீது அதை சுலபமாக மறந்து விட்டுவிட்டான். ஆனால் கர்த்தர் கண்ணுக்கு எதுவும் மறைவானது அல்லவே. எனவே அவர் நாத்தான் என்னும் ஒரு தீர்க்கதரிசியை அவனிடம் அனுப்பினார். அவன் தாவீதிடம் வந்து:அவன் செய்த பாவத்தை அவனுக்கு உணர்த்தியதோடு
II சாமுவேல் 12:9. கர்த்தருடையபார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய். 10இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.
என்று கடுமையான எச்சரிப்பை கொடுத்தார்.
அதை கேட்ட தாவீது நினைத்திருந்தால் "நான் செய்த தவறை கடிந்துகொள்ள நீ யார்?" என்று சொல்லி அவனது எச்சரிப்பை அசட்டை செய்து, நாத்தான் என்னும் தீர்க்கனை கொன்றுபோடக்கூட முடியும்! ஆனால் அவனோ உடனே தனது தவறை உணர்ந்து. தன் இருதயத்தை எல்லாம் ஊற்றி தேவனிடத்தில் மன்னிப்புக்காக மன்றாடுகிறான் அதை நாம் சங்கீதம் 51 ல பார்க்கலாம்
சங்கீதம் 51:4தேவரீர்ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.
II சாமுவேல் 12:13. அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.
இவ்வாறு தன்னை தாழ்த்தியதால் தாவீது தான் செய்த மரணத்துக்கேதுவான பாவத்தில் இருந்து சாகாதபடி தப்பித்தான். மீண்டும் பெலனடைத்து முதிர்வயதுவரை அவன் ராஜ்யத்தை ஆள முடிந்தது!
"பாவம் செய்யாத மனிதன் உலகில் இல்லை" என்பது வேதம் சொல்லும் உண்மை. ஆனால் ஒரு பாவத்தை தெரியாமல் செய்துவிட்டோமாகில் அது ஆண்டவரால் நிச்சயம் நமது மனசாட்சிக்கு தெரியும் அளவு கொண்டுவரப்படும். அப்போது நமது நிலை என்னவென்பதுதான் இங்கு முக்கிய கேள்வி.
நீங்கள் பாவம் செய்யும்போதே தெரிந்தே அந்த பாவத்தை செய்தீர்களானால் தண்டனைக்கு தப்பிப்பது மிகவும் கடினம் அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்.
தெரியாமல் செய்துவிட்டால் அது நமக்கு உணர்த்தப்ப்படும்போது அதற்காக மனஸ்தாபபட்டு ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் அதுபோல் பாவம் செய்யமாட்டேன் என்ற உறுதியான முடிவே நமக்கு மன்னிப்பை பெற்றுத்தரும்.
மற்றபடி "இந்த காலத்தில் இப்படியெல்லாம் வாழமுடியாது? உலகத்தில் யார் நல்லவர் இருக்கிறார்? நியாயபிரமாணம் எல்லாம் முடிந்துவிட்டது, இயேசு பாவத்துக்காக மரித்துவிட்டார் எனவே இதேல்லாம் பாவமில்லை" என்று சாக்கு போக்கு சொல்லுவீர்கள் என்றால் தண்டனைக்கு ஒருபோதும் தப்பமாட்டீர்கள்!
இயேசு பாவங்களுக்கு மரித்தது எப்படி உண்மையோ அதுபோல் அடிக்கடி பாவம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்பவர்களுக்கும் கடிந்துகொள்ளுதலை கேட்டு மனம்திரும்பாதவனுக்கு பல அடிகள் உண்டு என்பதும் உண்மை!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)