உலகில் அநேகவிதமான கிறிஸ்த்தவ உபதேசங்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் தாங்கள் போகும் பாதைதான் சரியானது என்றும் தாங்கள்தான் சரியானபடி கிறிஸ்த்துவை பின்பற்றுகிறோம் என்றும் தாங்கள்தான் சரியான புதிய ஏற்பாட்டு போதனைபடி நடக்கிறோம் என்று தங்களை தாங்களே முன்னிருத்துவ தோடு, அடுத்தவர் சொல்லும் கருத்தில் அனேக குறைகளை சுட்டி சொல்வது என்பது வாடிக்கையாகி விட்ட ஓன்று.
சபைகளுக்கு பெயர் வைப்பதில் ஆரம்பித்து சபைகளில் வாத்திய கருவிகளை பயன்படுத்தலாமா என்பதுவரை அவரவர் சில வசனங்களை பிடித்துகொண்டு எண்ணற்ற கருத்து வேறுபாடுகளை உருவாக்கி அனேக பிரிவினை நிலையில் கிறிஸ்த்தவ சபைகள் இருக்கின்றனர்.
என்னுடய கருத்துப்படி வேதத்தில் இருக்கும் ஒரு உபதேசத்தின் அடிப்படையில் உண்டாகும் கருத்துவேறுபாடுகள் எல்லாம் தேவனின் பார்வையில் ஒன்றுமே இல்லை. "நிறைவானது வரும்போது குறைவானது ஓடிப்போகும்" என்ற வார்த்தையின் அடிப்படையில் தேவன் நிறைவானத்தை கொண்டு வந்து சபைகளில் உள்ள எல்லா குறைகளையும் ஒரு நாளில் சரி செய்துவிடுவார் என்றே நான் கருதுறேன். இயேசுவை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொள்ளுதல் ஒன்றே இங்கு பிரதானமாகும்.
ஆனால் தேவனை சரியாக அறியாதது ஒன்றே மிக முக்கியமான தவறான நிலையாக நான் கருதுகிறேன். அப்படி தேவனை சரியாக் அறியாதவர்கள் என்னதான் முயன்றாலும் தேவனின் இருதய விருப்பத்தை ஒருநாளும் நிறை வேற்றவே முடியாது. இந்தன் அடிப்படையில் தவறான நிலை என்று நான் தீர்மானிப்பது எதுவெனில்.
எவரொருவர் "தேவன் வேண்டுமென்றே தீமையை உலகினுள் அனுமதித்து உலகில் நடக்கும் எல்லா துன்பம்/ துயரம்/ கொடுமை/ தீமை/அழிவு/ நாசமோசம் போன்ற அனைத்துக்கும் காரணமாக இருக்கிறார்" என்று கருதுகிறார்களோ அவர்களே தேவனை அறியவேண்டிய விதமாக அறியாதவர்கள் அல்லது தேவனை பற்றிய சரியான உண்மையை அறியாதவர்கள் என்பது எனது கருத்து. (அதாவது நமது தகப்பனாகிய தேவன் வேண்டுமென்றே ஒரு சோதனைக்காரனாகிய சாத்தானை உருவாக்கி வைத்து நம்மை சோதிக்கிறார் என்று கருதுவது)
இவ்வாறு தேவன் தீமையை (சாத்தானை) வேண்டுமென்றே பூமியில் அனுமதித்தார் என்று கருத்து தெரிவிப்பவர்கள் "தேவன் ஒரு உன்னத நோக்கத்தோடுதான் தீமையை அனுமதித்தார் என்றோ அல்லது மனிதனை சோதித்தறிந்து நித்திவாழ்வை தருவதற்கு என்றோ அல்லது இஸ்லாம் சொல்வதுபோல் சாத்தானின் விண்ணப்பத்தை ஏற்றோ வேறு எந்த நோக்கமாவது கூறி அதற்காக தேவன் தானே
தீமையை உருவாக்கினார் அல்லது அனுமதித்தார் என்றுகூட கூறலாம். ஆனால் இவைகள் அனைத்தும் தேவனை சரியாக அறியாத நிலையே!
(இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பவர்களில் அநேகர் பரிசுத்த ஆவியானவரை பற்றி அறியாதவர்களும் அனுபவம் சார்ந்த நிலையில் இல்லாமல் அறிவு சார்ந்த நிலையில் வேதத்தை ஆராயபவர்களுமாக இருப்பதை நான் அறிந்திருக்கிறேன்)
ஒருவர் கீழ்கண்ட வசனங்களை காட்டி எல்லாவற்றையும் செய்பவர் கர்த்தரே எனவே மேல்கூறிய கருத்து தவறானது என்று வாதிடலாம்.
ஏசாயா 44:24உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்,
இந்த வசனங்கள் உலகில் நடக்கும் அனைத்து காரியங்களுக்கும் மூலகாரணம் தேவனே என்பதையும் அவர் அனுமதியில்லாமல் அவருக்கு தெரியாமல் இங்கு எதுவும் நடக்காது என்பதையே தெரிவிக்கின்றனவே அன்றி அவர் வேண்டுமென்று தீமையை தானே உருவாகின்னார் என்றோ அனுமதிக்கிறார் என்றோ பொருள் தருகிறது என்பது சரியன்று.
நாம் வேண்டுமென்றே விருப்பத்தோடு சில காரியங்களை செய்யலாம் அதே நேரத்தில் வேண்டா வெறுப்பாகவும் வேறு வழியின்றி சில காரியங்கள நடைபெற அனுமதிக்க முடியும். அதுபோல் தேவனும் சில நேரங்களில் சிலரின் விண்ணப்பத்தை ஏற்று தான் செய்ய நினைத்ததை செய்யாது விட்டதும், தேவ மனிதர்களான சிலர் கூட தவறான காரியங்களை செய்தபோது தடுக்காமல் அனுமதித்ததும் சிலநேரங்களில் தான் செய்வேன் என்று சொன்னதை மாற்றி "அப்படி சொல்லியிருந்தாலும் அது எனக்கு தூரமாக இருப்பதாக" என்று திருத்தியதும் போன்ற பல நிகழ்வுகள் வேதபுத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலே உள்ள வசனத்தின் அடிப்படையில் தேவனின் தன்மையை ஆராயும் நாம் கீழ்கண்ட வசனங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்
என்று சொல்லும் வசனம் தீமையை பார்க்ககூட விரும்பாதவர் தேவன் என்பதை நமக்கு தெரிவிக்கிறது.
மேலும் தேவன் ஜனங்களுக்காக மட்டுமல்ல மிருக ஜீவன்களுக்காக கூட பரிதபிப்பவர் என்று கீழ்கண்ட வசனம் சொல்கிறது.
யோனா 4:11வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.
அத்தோடு தேவனது வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் பிசாசின் பிடியில் அகப்பட்டு கிடப்பவர்களை பார்த்து தேவன் கண்ணீர் வடிக்கும் நிலையையும் வேதத்தில் காண முடிகிறது.
எரேமியா 14:17என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.
தேவன் வேண்டுமென்றே சாத்தான் என்னும் ஒரு சத்துருவை உருவாக்கிக்கொண்டு பின்னர் அவனின் கொடுமையால் ஜனங்கள் அவதிப்படும்போது பரிதபிபது என்பதை மனிதன் வேண்டுமானால் செய்து நடிக்கலாம் ஆனால் தேவன் அப்படிபப்ட்டவர் அல்ல!
எனவே தேவன் எந்த தீமையையும் வேண்டுமென்று அனுமதிக்கவும் இல்லை எந்த தீமையையும் வேண்டுமென்று அவர் செய்வதும் இல்லை என்பதை விளக்க சில வேதாகம சம்பவங்களை பார்க்கலாம்....
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
கர்த்தர் யோனாவிடம் "நினிவே மக்கள் கொடிய பாவம் செய்கிறார்கள் இன்னும் நாற்ப்பது நாளில் நினிவேயை அழித்து பெரிய தீங்கை செய்ய போகிறேன் நீ போய் அவர்களை எச்சரி" என்று கூறுகிறார்
யோனா 3 : 1 கர்ர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: 2. நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார். 4. யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான்.
இங்கு நினிவேயை கவிழ்த்துபோடும் தீங்கை செய்யபோகிறேன் என்று அறிவிப்பவர் கர்த்தர்தான் ஆகினும் அவர் நினிவேயில் ஏன் தீங்கை செய்யபோகிறேன் என்று அறிவிக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும்!
யோனா 1 2.;அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.
நினிவே மக்களில் அக்கிரமம் தேவனுடைய சமூகம் வரை போய் எட்டியது அதனாலேயே அவள் தீங்கை கட்டளையிட தீர்மானித்தார். இதேபோல் ஏற்கெனவே சோதாம் கோமரா மக்களின் அக்கிரமங்கள் தேவனின் சமூகம் வரை போய் எட்டவே அந்த இரண்டு ஜாதியினரையும் கந்தகத்தால் அழித்துபோட்டது நினைவிருக்கலாம்.
இங்கு அக்கிரமத்தை செய்யசொன்னதோ அல்லது அக்கிரமத்தை செய்யவைத்ததோ தேவன் அல்ல என்பதை அறிய வேண்டும்.
ஆக, தேவன் தீங்கை ஒரு ஜாதியின்மேலோ அல்லது ஒரு மனிதன் மேலோ கட்டளையிடுவதற்கு முக்கிய காரணம் அவர்களின் அக்கிரமமும் பாவமுமே. தேவன் பாவத்தை முற்றிலும் வெருப்பவர் பாவத்தால் வரும் விபரீதங்கள் என்ன வென்பதை சரியாக அறிந்தவர் எனவே பாவத்தோடு அவர் என்றும் உடன்படிக்க செய்வது கிடையாது. யாராக இருந்தாலும் பட்சபாதம் இல்லாமல் பாவம்செய்தவன் தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என்று தீர்ப்பவர்.
இவ்வாறு நினிவே மக்கள் அக்கிரமம் செய்தபோது அவர்கள் மத்தியில் தேவன் தீங்கை கட்டளையிட எண்ணினார்! ஆனால் தேவன் எவ்வளவு எரிச்சலுள்ளவரோ அதைபோல் ஆயிரம் மடங்கு இரக்கம் உள்ளவர் என்பதை அடுத்து வரும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றனர்.
தேவனின் எச்சரிப்பை கேட்ட ராஜாவில் இருந்து மக்கள்வர் உடனே தங்களை தாழ்த்தி தேவனை நோக்கி இர க்கத்துக்காக் கெஞ்சினர்
6. இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு சாம்பலிலே உட்கார்ந்தான். 8. மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள்.
அவர்களின் கெஞ்சுதலை கேட்ட கர்த்தர் அவர்களுக்கு மனமிரங்கி அவர்களை மன்னித்தார்!
10. அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்
இங்கு தேவன் தீங்கை கட்டளையிடுவேன் என்று சொன்னதன் நோக்கம் ஜனங்கள் தீமை செய்வதில் இருந்து விலகவேண்டும் என்பதே அன்றி, தீங்கை செய்து ஜனங்களை அழிக்க வேண்டும் என்பதக்கு அல்ல. சில தீங்குகளை தேவனே கட்டளையிட்டாலும் அவரது உண்மையான நோக்கம் ஜனங்களை துன்பபடுத்த வேண்டும் எனது அல்ல என்பதை கீழ்கண்ட வசனம் நமக்கு உணர்த்துகிறது.
புலம்பல் 3 33. அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
ஜனங்கள் பாவம் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே சில நேரங்களில் அவர் தீங்கை கட்டளையிடுகிறார் மற்றபடி உண்மையில் தேவன் தீங்குக்கு மனஸ்தாபபடுகிறவர்.
யோவேல் 2:13 ; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.
நமது பிள்ளை ஒரு தவறை அல்லது குற்றத்தை செய்தால் அதை அடித்துவிட்டு அல்லது திட்டிவிட்டு பின்னர் வருத்தப்பட்டு அதை தேற்றுகிரோமோ அதப்போல தான் இரக்கமுள்ள நமது தகப்பனும்
இங்கு தேவன் கட்டளையிடும் "தீங்கு" என்ற வார்த்தைக்கும் ஜனங்கள் செய்யும் "அக்கிரமம்" என்ற வார்த்தைக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு."அக்கிரமம்" செய்தவன் தீங்கை அனுபவிப்பான்" என்பது தேவனின் நியதி. அக்கிரமத்தை செய்ய சொல்பவர் அல்லது செய்ய வைப்பவர் அல்லது அக்கிரமத்தை அனுமதித்தவர் தேவன் அல்ல! அதற்கு காரணம் சாத்தான் மற்றும் அசுத்த ஆவிகளே! அந்த சாத்தானை தேவன் வேண்டுமென்று மனிதர்களை அக்கிரமசெய்ய தூண்டும்படி
அனுமதிக்கவில்லை.
இவ்வாறு ஒருபுறம் வேண்டுமென்றே ஜனங்களை அக்கிரமம் செய்ய தானே தூண்டி விட்டு இன்னொருபுறம் அக்கிரமம் செய்தால் அழிவு வரும் என்று எச்சரிப்பதற்கு தேவன் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுபவர் அல்ல!
அவர் ஜனங்களுக்காக மட்டுமல்ல அவரின் படைப்பாகிய ஒவ்வொரு உயிர்களுக்கும் பரிதபிக்கும் தேவனாக இருக்கிறார்!
யோனா 4:11வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்
இவ்வாறு நம்மேல் மிகுந்த கருணை உள்ள தேவன் சில நேரங்களில் தீங்கை கட்டளை இட்டு தண்டிக்க காரணம் நாம் தவறான வழியில் போய் சாத்தானின் பிடியில் சிக்கிவிட கூடாது என்பதற்காகவேயன்றி வேறல்ல.
அவரின் இரக்க உள்ளத்தையும் அவரது இருதய பரிதபிப்பையும் சரியாக அறியாமல், "தேவன் வேண்டுமென்று மனிதர்களுக்கு மத்தியில் தீமையை அனுமதித்து சோதிக்கிறார்" என்று எண்ணும் நிலையே தேவனை சரியாக அறியாத தவறான நிலை என்பது எனது கருத்து!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)