இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாத்தான் சாதகமாக்கிக்கொண்ட இயேசுவின் இரத்தம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
சாத்தான் சாதகமாக்கிக்கொண்ட இயேசுவின் இரத்தம்!
Permalink  
 


தேவனின் திட்டங்களை  நிறைவேறமுடியாமல் நிர்மூலமாக்கி வருவது "தேவ பிள்ளைகள்" என்றும் "தேவ ஊழியர்கள்" என்றும் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு  அலையும் மனிதர்களேயன்றி வேறுயாரும் அல்ல, என்பதை நான் புரிந்துகொண்ட அனேகநாட்கள் ஆகிறது அதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்!       
  
 சாத்தான் மனிதனை தந்திரமாக ஏமாற்றி வருவது என்பது புதிய கதை அல்ல! ஆதி தகப்பனாகிய ஆதாமிலிருந்து  அடுத்த காலத்து  அனனியா சபீறாள் மற்றும் அண்மை காலத்து பிரன்யாம்வரை அநேகர்  சாத்தானின் தந்திரத்தில் விழுந்து போனார்கள், என்பதை அறிந்துள்ள நமக்கு சாத்தான் தந்திரக்காரன் என்பது நன்றாகவே தெரியும் ஆனாலும்  அவனது புதுப்புது  தந்திரங்களை  புரிந்துகொள்ள முடியாமல்  ஒட்டுமொத்தமாக  ஒரேஇடத்தில் எல்லோரும் விழுந்துபோயவிடுவது என்பதும் வாடிக்கயாகிவிட்ட  ஓன்று.  இதற்க்கு முக்கிய காரணம் விசுவாசிகளின் வாழக்கை தேவனின் வார்த்தைகள்மீது கட்டப்படாததுதான்.   மலைப்பிரசங்கத்தை போதித்த இயேசு மிகதெளிவாக சொல்லியிருக்கிறார்     
 
மத்தேயு 7:24 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு,இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.

நம்மெல்லோருக்கும் ஆண்டவராகிய
 இயேசு கிறிஸ்த்துவின் மேல் அஸ்திபாரம் போடத்தெரியும்
அதுபோல்  "இயேசு மீது அஸ்திபாரத்தை போடுங்கள்" என்று மற்றவர்களுக்கு போதிக்கவும் தெரியும் ஆனால் இயேசு கூரியிருப்பதுப்போல் விழுந்துபோகாத அஸ்திபாரமாகிய அவர் வார்த்தையின்படி வாழதெரியாது. எனவே சாத்தான் ஒரு புது தந்திரத்தை கையாளும்போது ஒட்டு மொத்தமாக விழுந்து ஒன்றுமில்லாமல்  போய்விடுகிறோம்.
 
தேவன் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில்  ஒரு பகுதியை சாதகமாக்கி கொள்வது  என்பது சாத்தனுக்கு கைவந்தகலை.  அந்த தந்திரக்கார  சாத்தானுக்கு இப்பொழுதோ  இயேசுவின் இரத்தத்தை குறித்து மிகுந்த  கரிசனை வந்துள்ளது. காரணம் அந்த இய்சுவின் இரத்தம்தான் அவனை இன்றுவரை வாழ வைத்துக் கொண்டுள்ளது.  அவர் பாங்களுக்காக சிந்திய  அந்த இரத்தத்தையே தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டு இன்று எல்லோரையும் சுலபமாக திசைதிருப்பி  வருகிறான்.
 
ஆச்சர்யமாக இருக்கிறதா?  ஆச்சர்யம்தான் ஆனால் அது உண்மை!  
 
ஆண்டவராகிய இயேசு  தான் வாழ்ந்த காலத்தில் எங்கும் "நான் ஜனங்களின் பாவத்துக்காக மரித்த பின்னர் நீங்கள் எந்த கற்பனையையும் கைகொள்ள வேண்டிய தேவைஇல்லை" என்று போதிக்கவில்லை. அவர் மரித்து உயிர்த்து பலருக்கு தரிசனமான பின்னும்கூட அப்படி தேவனின் கற்பனைகளும் கட்டளைகளும் தேவையற்றது என்று யாருக்கும் போதித்ததாக வார்த்தை இல்லை. 
 
ஆனால் இன்று புறப்பட்டுள்ள நூதன போதகர்கள் பவுலின் உபதேசத்தை தவறாக புரிந்துகொண்டு தேவனின் ஆலோசனை அனைத்தையும் ஏன்  இயேசுவின் வார்த்தைகளைகூட அவரது இரத்தத்தை  காரணம் காட்டி தள்ளிவிடுகின்றனர். அதனால் சாத்தானுக்கு சந்தோஷமோ சந்தோசம்!  இனி தன்னை யாரும் அசைக்க முடியாது  என்றொரு மமதையில் இருக்கிறான்     
 
மிகுந்த சித்த்ரவதையின் மத்தியில்  இயேசுவின் விலைஏறப்பட்ட  இரத்தம் சிந்தப் பட்டதே ஆதியில் இருந்தே மனுஷ  கொலைபாதகனாகவும் பொய்யனாகவும் பொய்க்கு தகப்பனாகவும் இருக்கும் இந்த தீயவனாகிய சாத்தானை ஒழிப்பதற்குத் தான்! அவனை ஒழிக்கவேண்டும் என்றால் தேவனின்  வார்த்தைகளுக்கு கீழ்படிந்து அவனை ஜெயம்கொண்டால் மட்டுமே அது சாத்தியம். ஆனால் அந்தோ பரிதாபம் அந்த இயேசு சிந்திய இரத்தத்தை காரணம் காட்டியே ஜனங்களை பிசாசின் காரியங்களாகிய  பொய்சொல்வது/திருடுவது/ எமாற்றுவது/இச்சை/சுயநலம் போன்ற காரியங்கள் மட்டுமல்ல எந்தஒரு காரியமும் பெரிய பாவமில்லை என்பதுபோல் ஒரு மாயதோற்றத்தை ஏற்ப்படுத்தி கெடுத்து வருகிறான். 
 
பவுல் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் தேவனுக்காக வாழ்ந்து ஆவியினாலேயே நடத்தப்பட்டு தனது ஜீவனை தேவனின் பாதத்தில் ஊற்றியவர். அவர் சொல்கிறார்   
 
ரோமர் 8:1  கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

மாம்சத்தின் கிரியைகள் என்னவென்பதையும் அவர் பட்டியலிடுகிறார்: 
 
கலாத்தியர் 5:19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
20. விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,21. பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே;
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்
.

வஞ்சிக்கப்படாதிருங்கள் தேவனை யாரும் ஏய்த்துவிட முடியாது.  இயேசு மற்றும் தேவனின் கற்பனைகளை கைகொள்ளுவது என்பது கடினம்தான்! அனால் முடிந்த வரை முயற்ச்சிக்கலாமே! நாம் எத்தனைமுறை விழுந்தாலும் நமது தேவன் நம்மை தூக்கி நிலை நிருத்துவார்.ஆனால் சில வஞ்சக
ஆவிகளின் வார்த்தைகளை கேட்டு  "ஆவியில் நடத்தபடுகிறேன்" என்று ஒரு மாய வார்த்தையை பசப்பிக் கொண்டு தேவனின் வார்த்தைகளை கற்பனைகளை தள்ளி விட்ட்டீர்களேயானால் தேவன் உங்களை தனது ராஜ்யத்தில் இருந்து தள்ளிவிடுவார் என்பதை வசனம் தெளிவாக சொல்கிறது.
 
தேவன் புதிய ஏற்பாட்டு  சபைக்கு சொல்லியுள்ள  எச்சரிக்கை செய்தி இதோ!
 
வெளி 3:8 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்            
 
ஒருவரும் பூட்டாத திறந்த வாசல் வேண்டுமா அவரது வசனத்தை  கைகொள்ளுங்கள்!   


-- Edited by SUNDAR on Saturday 20th of November 2010 04:33:58 PM

-- Edited by SUNDAR on Tuesday 23rd of November 2010 09:10:33 PM

-- Edited by SUNDAR on Monday 28th of February 2011 10:02:32 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
RE: சாத்தான் சாதகமாக்கிகொண்ட இயேசுவின் இரத்தம்!
Permalink  
 


எசேக்கியேல் 2:7 கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.

இவ்வசனத்தின்படியே தேவவசனங்களை எடுத்துக் காட்டி போதித்து வரும் சகோ.சுந்தரை தேவநாமத்தில் வாழ்த்துகிறேன், பாரட்டுகிறேன்.

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் கால ஜனங்களைப் போலவே இன்றைய ஜனங்களிலும் பலர் கலகக்காரர்களாகத்தான் உள்ளனர். எனவேதான் உங்களைப்போல் வசனங்களை எடுத்துச் சொல்லி போதிப்பவர்களைப் பார்த்து, நியாயப்பிரமாணப் போதகன் என்றும் கிரியைப் போதகன் என்றும் சொல்லி விமர்சித்து நோகடித்து பரிகசிக்கின்றனர். இவ்வாறு பரிகசிக்கும் சிலரது வார்த்தைகள் வேதாகமத்தின் பின்வரும் வசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நெகேமியா 4:1-3 நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி: அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளிலே முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான். அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்.

அன்று சாதாரணக் கற்களால் எருசலேம் தேவாலயத்தைக் கட்டும் பணியைச் செய்தவர்களைப் பார்த்து, சிலர் இவ்வாறு நிந்தித்து நோகடித்தனர். இன்று தேவவார்த்தை எனும் கற்களால், மனிதனின் சரீரமாகிய தேவாலயத்தைக் கட்டும் பணியைச் செய்கிற உங்களை சிலர் நித்திக்கின்றனர். இதையெல்லாம் நீங்கள் பொருட்படுத்தமாட்டீர்கள் என்பதை நான் நன்கறிவேன்.

தொடர்ந்து தேவ வார்த்தைகளை எடுத்துக் கூறுங்கள், தேவப்பணியை நிறைவேற்றுங்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


இளையவர்

Status: Offline
Posts: 38
Date:
சாத்தான் சாதகமாக்கிகொண்ட இயேசுவின் இரத்தம்!
Permalink  
 


சில்சாம் எழுதுகிறார்:

இயேசு தொழத்தக்க நபரல்ல என்பதில் பெரியன்ஸ் குழுவையும்!!

கோவைபெரெயன்ஸிலிருந்து தன் பதிவுகளை நீக்கி விட்டு இன்னோரு தலத்தில் குறை கூறுவதில் என்ன பயன்!! நாங்கள் ஒரு போதும் இயேசு தொழத்தக்க நபரல்ல என்று சொன்னதில்லை!!  எவ்வுளவாக வேதத்தில் பிரியமாகவும், தேவனின் வார்த்தையை கனப்படுத்தும் நாங்கள் இந்த வசனத்தின் படி சொல்லாமல் இதற்கு விரோதமாக எழுதுவோமா!! ஆனால், கிறிஸ்து பிதாவிற்கு அடுத்தப்படி என்பதை மறுக்க மாட்டோம்!! பிதாவை மகிமைப்படுத்தும்படி நாங்கள் கிறிஸ்துவை கர்த்தர் என்று அறிக்கை செய்கிறோம்!! பிதாவினிடத்தில் பெற்று கொள்கிரோம், கிறிஸ்துவின் மூலமாக!! தருபவர் பிதா, பெற்று தருபவர் கிறிஸ்து என்பதை அறியாமல் இருக்கிறீர்களோ!!

பிலி 2:10. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், 11. பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

பிதாவிற்கு உண்டான மகிமை வேறு யாருக்கும் கிடையாது என்பதில் எந்த தவறும் இல்லை, கிறிஸ்துவே அதை தான் சொல்லியிருக்கிறார்!! ஆனால் பிதாவும் கிறிஸ்துவும் ஒன்று என்போருக்கு இது புரிய வாய்ப்பில்லை தான்!! ஏனென்றால் பிதாவாகிய தேவன் வேறு, குமாரனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்து வேறு என்கிறதான அறிவு இல்லாதவர்களுக்கு இது புரியாது!! (1 கொரி 8:6,7)!! இந்த‌ அறிவு இல்லாத‌வ‌ர்க‌ள் கிறிஸ்த‌வ‌ர்க‌ளே கிடையாது, த‌மிழ் ப‌ண்டித‌க‌ர்க‌ளாக‌ இருந்து எழுத்து பிழையை வேண்டுமென்றால் சுட்டி கான்பித்துக்கொண்டிருக்க‌லாம்!!

சில்சாமின் எச்ச‌ரிப்பு

நான் இறுதியாக எச்சரிக்கிறேன்,இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட தேவ ஜனத்தின் சுயாதீனத்தை உளவு பார்த்து அவர்களை சாத்தானுடன் ஒப்பிட்டு இனியும் தூஷித்தால் இரத்தம் சம்பந்தமான வியாதியினாலேயே அசிங்கமாக செத்துப்போவாய்..!

அடிக்க‌டி இப்ப‌டி பிற‌ரை எச்ச‌ரிப்ப‌தும், ச‌பிப்ப‌தும் தான் த‌ங்க‌ளின் ஊழிய‌மோ!! என்ன‌மோ உங்க‌ளுக்கு சாவே இல்லாத‌து போல் பிற‌ரை இப்ப‌டி ச‌பித்து திரிகிறீர்க‌ளே, இது தான் கிறிஸ்துவின் போத‌னையில் இருப்ப‌தாக‌ தாங்க‌ல் கான்பித்து கொண்டு இருக்கிறீர்க‌ளோ!! அப்ப‌டி என்றால் ஊழிய‌க்கார‌ன் வியாதியே இல்லாம‌ல் தான் ம‌ரிக்கிறார்க‌லோ, இல்லை அவ‌ர்க‌ள் ம‌ரிக்க‌ கார‌ண‌மாக‌ இருந்த‌ வியாதிக‌ள், த‌ங்க‌ளை போன்ற‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் விட்ட‌ சாப‌த்தின் கார‌ண‌மாக‌ தானா!! வாய் இருப்ப‌த‌ற்காக‌ எதையும் பேசி திரிய‌ கூடாது, ஊழிய‌ர்க‌ள் அனைவ‌ரும் உத்த‌ம‌மான‌வ‌ர்க‌ள் என்கிற‌ ம‌ம‌தையிலும் இருக்க‌ வேண்டாம்!! உங்க‌ள் எச்ச‌ரிப்புக‌ள் நீங்க‌ளே சும‌ந்துக்கொள்ளுங்க‌ள்!! ம‌ற்ற‌வ‌ர்க‌ளை பார்த்துக்கொள்ள‌ தேவ‌ன் இருக்கிறார்!!



-- Edited by vedamanavan on Sunday 21st of November 2010 03:53:54 PM

__________________

"உம்முடைய‌ வசனமே சத்தியம்." யோவான் 17:17



இளையவர்

Status: Offline
Posts: 38
Date:
RE: சாத்தான் சாதகமாக்கிகொண்ட இயேசுவின் இரத்தம்!
Permalink  
 


சில்சாம் எழுதிய பதிவிற்கு சுந்தரின் தளத்தில் நான் பதில் தர விரும்பவில்லை, ஒரு வேளை அது நீக்கப்படலாம், ஆகவே என் தளத்திலே அதற்கான பதிலை பதிவு செய்திருக்கிறேன், பிரியப்படுவோர் அங்கு வந்து வாசிக்கலாம்!!

http://kovaibereans.activeboard.com/index.spark?aBID=128972&p=3&topicID=39477766



__________________

"உம்முடைய‌ வசனமே சத்தியம்." யோவான் 17:17



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
இயேசுவின் கற்பனைகளை கைக்கொள்ளுவது குறித்து!
Permalink  
 


இந்த கட்டுரைக்கு  பதிலாக  எனக்கு தனி மடலில் வந்த ஒரு செய்தியும்  அதற்க்கான எனது  பதிலும்  
 
//////|vedamuthu arockiam jeya pragasam to me

show details 10:55 PM (14 hours ago)
fromvedamuthu arockiam jeya pragasadateMon, Nov 22, 2010 at 10:55 PM
subjectRe: righteousness of any of mankind are like menstrual rags to Him.........

நண்பர் சுந்தர், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

காதல் உண்மையானதாகில் துரோகம் செய்ய இயலாது. தேவனை போலியாக அன்பு செய்யும் அநேகர் பாவம் செய்ய துணிகின்றனர். இயேசுவின் இரத்தம் எல்லா காலத்திற்கும் பொருந்தும். எனவே அவரை அன்பு செய்யும் நாம் பாவம் செய்ய துணியாமல் அவரின் அன்பினால் கட்டப்பட்டிருப்போமாக. அவர் மேல் உள்ள அன்பு மட்டுமே தடுக்க முடியுமே தவிர ஒருவனால் பாவம் செய்வதை நிறுத்த இயலாதென்பதை நீர் அறிவீர்.
 
நன்றி
பிரியமுடன்
ஜெ.பி ////
 
அன்பு சகோதரர் வேதமுத்து அவரகளுக்கு கர்த்தரின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்!  
 
தாங்கள்  வார்த்தைகள்  மற்றும் இதற்கொத்த வார்த்தைகள் பலரால் சொல்லப் படுவதை நாம் அடிக்கடி கேட்கமுடிகிறது.  அதாவது "இயேசுவின் கரத்தின்கீழ்  இருப்பதால் நாம் சுயமாக முயற்ச்சிக்க வேண்டிய அவசியம் இல்லை  இயேசுவுக் குள் எல்லாமே பூரணப்படும்" என்பதே இவ்வார்த்தைகளின் நோக்கம்  
 
தாங்கள்  சுட்டியுள்ள எந்த ஒரு கருத்தையும் நான் மறுக்கவில்லை அதாவது சுய பெலத்தால் ஒருவரும் நீதிமான் ஆகமுடியாது என்பதும் நான் அறிந்ததே அடுத்து ஒருவன் தேவனின் கற்பனையை கைகொள்ளாததினால்  அவனை இரட்சிப்பு இல்லை என்பதோ  அல்லது  அவன் கிறிஸ்த்துவில் நிலைத்திருக்க முடியாது என்பதோ எனது கருத்தும் அல்ல என்பதை தாங்கள் தயவுகூர்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.  நான் தேவனின் வார்த்தையை கைகொண்டு நடக்கவேண்டும் என்று போதிப்பதால் ஏதோநான் விசுவாசபிரமாணத்துக்கு விரோதமானவன் என்பதுபோல் கருதவேண்டாம்  

எனது கருத்து என்னவெனில் : 
 
பாவத்தில் கர்ப்பம்தரிக்கப்பட்ட மனிதன்,  பாவம் என்னும் ஊளையான சேற்றில் புரண்டுகொண்டு வெளியில் வரமுடியாமல் தவிக்கிரான். நமது சுயமுயற்ச்சியால் அந்த சேற்றில் இருந்து வெளியில் வரவேமுடியாது. நாம் என்னதான் நீதியினால் நம்மை சுத்தபடுததினாலும் மீண்டும் அந்த சேற்றுகுள்ளேயே இருப்பதால் நாம் நமது முயற்ச்சியால் சுத்தமாகவே முடியாது    
 
ஒருநாள் ஆண்டவராகிய இயேசு தனது இரத்தம் என்னும் கிரயம் கொடுத்து   நம்மை அந்த குழியில் இருந்து தூக்கி எடுத்து வெளியே விட்டு
 
யோவான் 5:14 : இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
யோவான் 8:11  இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
 
அவரது அன்பான எச்சரிப்பை கேட்டு அட்லீஸ்ட் மீண்டும் அந்த  பாவ சாக்கடைக்குள் போய் மூழ்காமலாவது  இருக்கவேண்டியது நமது கடமை அல்லவா?
 
"என்னால் ஒன்றும் முடியாது"  "எனது செயலில் ஒன்றும் இல்லை" என்று சொல்லிக்கொண்டு மீண்டும் அதே சாக்கடைக்குள் போய் விழுந்தால்!  "வேறு ஒரு பலி இல்லை" என்றல்லவா வேதம் சொல்கிறது?
 
விசுவாசித்தவர்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் நீதிகிடைப்பது உண்மை. ஆனால் கிடைத்த இரட்சிப்பையும் நீதியும் காத்துகொள்ளாமல் அலட்சியம் செய்பவர்களுக்கு தண்டனையும் நிச்சயம்  என்பதை வெளிப்படுத்தின விசேஷத்தில்  சபைகளுக்கு தெளிவாக தேவன் சொல்கிறார்.
 
எனவே எனது கருத்து என்னவெனில்: இரட்சிப்பு என்பது இலவசம்! அதை  நமது நீதியால் ஒருநாளும் பெறவே முடியாது! ஆனால் பெற்ற இரட்சிப்பை இழந்து விடாமல்  காத்துகொள்வது என்பது நமது கரத்திலேயே உள்ளது அதற்க்கு முடிந்தவரை தேவனின் வார்த்தைகள்படி வாழ முயற்ச்சிக்க வேண்டும் என்பதே.
 
நீங்கள் எந்தனை முறை  முயன்று முடியாமல் போனாலும்  அதற்க்கு மன்னிப்பு உண்டு! ஆனால் முயற்சிக்கவே மாட்டேன் என்று சொல்வது தேவனின் அறிவுரையை அவமதிப்பது போன்றதே!  

அடுத்து தேவன் சொல்கிறார்:  

எரேமியா 7:23 என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும் படிக்கு நடவுங்கள்
 
அவர் கற்ப்பித்த வழிகள் நமக்கு நன்மை உண்டாக்கவே அருளப்பட்டுள்ளன அதை நாம் ஏன்  நிராகரிக்க வேண்டும்?  நன்மை வேண்டாம் என்று கருதுவோர் அதை கைகொள்ளவேண்டிய தேவை இல்லை!
 
ஒருவன் உண்மையான தேவ அன்பில் பூரணப்பட்டு கிறிஸ்த்துவில் நிலைத் திருந்தால் அவனால் நிச்சயம் பாவம் செய்யமுடியாது என்பது உண்மையே! அப்படிப்பட்டவர்கள் வேண்டுமானால் எனது கருத்தை நிராகரிக்கலாம். ஆகினும்  தேவனின் வார்த்தையை கைகொண்டு நடப்பவர்களுக்கு அதைவிட மேலான நிலை நிச்சயம் உண்டு!

மத்தேயு 5:19
ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்
 
லூக்கா 11:28 அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
மனித சுபாவம் என்பது பாவம் செய்யும் தன்மை கொண்டதுதான் என்னதான் நாம் கிறிஸ்த்துவுக்குள் இருந்தாலும் நமது சரீரம் நம்மை பாவம்செய்ய தூண்டி கொண்டுதான் இருக்கும்.  அந்த பாவசுபாவத்தை மேற்கொள்ள  மற்றும் அந்த பாவத்தை கண்டித்து உணர்த்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளப்பட்டிரு க்கிறார். அவரது கண்டிப்பை கேடடு திரும்பவும் பாவம் செய்யாமல் இருப்பதும் செய்த பாவத்துக்கு தேவனிடம் மனதார மன்னிப்பு கேட்பதும் மிகவும் அவசியம். அது நமது சுயாதீனத்தில்தான் இருக்கிறது.  
 
நன்மையை செய்யவும் தீமையை தவிர்க்கவும் அவரவருக்கு சுயாதீனம் இருக்கிறது.  எனவே பாவத்தை செய்துவிட்டு நாம் ஆண்டவர் மேல் பழியை போடமுடியாது. நீங்கள கிறிஸ்த்துவுக்குள் இருந்தாலும் அவருக்கு வெளியே இருந்தாலும் பாவம் பாவம்தான் அதற்க்கு தண்டனை உண்டு என்பதை வேதம் திட்டவட்டமாக எச்சரிக்கிறது.  ஒரே ஒரு காரியம் என்னவெனில் ஒருவன் கிறிஸ்த்துவுக்குள்  இருந்தால் அவரை எந்த பாவமும் மேற்கொண்டுவிட முடியாது. அதாவது ஒருவரும் அவரை தேவனின் கரத்தில் இருந்து பிடுங்க முடியாது என்பது உண்மை   ஆனால் பாவத்துக்குரிய தண்டனை கிடைக்காமல் போவதில்லை என்பதை அறியவேண்டும்!  
     
நான் மீண்டும் சொல்கிறேன் ஆண்டவராகிய இயேசுவின் அன்பில் பூரணப்பட்டு தேவ நடத்துதலின் அடிப்படையில் காரியங்களை செய்யும் ஒருவர் எந்த ஒரு கற்பனையையும் கைகொள்ள பிரயாசப்பட வேண்டியத் தேவை இல்லைதான் ஆனால் கிறிஸ்த்துவின் மேலுள்ள அன்பை எதனால் அளக்கலாம் என்று வேதம் சொல்கிறது என்பதையும் சற்று பாருங்கள்: .  

யோவான் 14:15
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
யோவான் 14:23  இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்

இப்படி இயேசுவின் மேலுள்ள அன்பை அளக்கும் அளவுகோலே அவரது கற்பனையை கைக்கொல்லுவதன் அடிப்படையில் இருக்க 
அநேகர் அவரிடத்தில் அன்பாயிருக்கிறோம் அவர் அன்பில் பூரணப்பட்டுள்ளோம்  என்று சொல்கிறார்கள்  ஆனால் அவரது வார்த்தைகளையோ கைகொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறார்கள். இவர்கள் யாருடைய போதனையின் அடிப்படையில் அல்லது எந்த வசனத்தின் அடிப்படையில் இவ்வாறு சொல்கிறார்கள் என்பது புரியவில்லை.   

முழுவதும் அன்பில் பூரனப்பட்டு  ஆவியால் நடத்தப்படும் ஒருவரை  பார்ப்பது அரிது! ஒருவளை அப்ப்டியும் சிலர் இருக்கலாம்.    ஆனால் அநேகமாயிருக்கும் பிற சகோதரர்கள் இயேசுவை ஏற்றுகொண்ட பின்னரும் பாவங்களை துணித்து செய்வதால்  அது கிறிஸ்த்துவின் நாமம் தூஷிக்கப்பட காரணமாகிறது. உதாரணமாக பாதிரியார்களின் காம காரியங்களால் கிறிஸ்த்தவமே தவறாக  விமர்சிக்கப்படுகிறது. இப்படிபட்டவர்கள் அநேகர்  உலகில் இருப்பார்கள் என்பதை அறிந்துதான் தேவன் வெளிப்படுத்தின விசேஷம் வரை "உன் கிரியை அறிந்திரு க்கிறேன்" என்று சொல்லி  ஆண்டவர்  கண்டிக்கிறார். 
  
இந்த உலகில் நாம் வாழும் காலத்தில் நமக்கு நன்மைகளை பெறவும் துன்பங்களை தவிர்க்கவும் தேவனின் வார்த்தைகள் நமது கால்களுக்கு தீபமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது! 
 
சங்கீதம் 119:105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
 
அடுத்ததாக கீழ்படியாமையால் சாத்தானிடம் இழந்துபோனதை கீழ்படிதல் மூலமாகவே மீட்க முடியும்! இயேசு மரண பரியந்தம் தேவனுக்கு கீழ்படிந்தார் அதுபோல் நாமும் அவரது வார்த்தைக்கு கீழ்படிதல் அவசியமாகிறது!.  
 
I யோவான் 2:4
அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

இதுபோன்ற வசனங்களுக்கு தங்களில்  பதில் என்னவென்பதை பதிவிட்டால்  நாங்கள் உண்மையை அறிந்துகொள்ள முடியும். எனவே 
சகோதரர் வேதமுத்து அவர்கள் சற்று சிரமம் பார்க்காமல் வசன ஆதாரத்துடன்  தாங்கள் கருத்த்தை இங்கு பதிவிடும்படி அன்புடன் வேண்டுகிறேன்.   


-- Edited by SUNDAR on Tuesday 23rd of November 2010 09:36:03 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

வேதத்தில் எங்குமே கட்டளைகளை கைகொள்ள வேண்டாமென்று சொல்லப்படவில்லையே அதற்குமாறாக வெளிபடுதல் வரைக்கும் என் கட்டளையை கைகொள்ளுகிறவர்கள் பாக்கியவான்கள் என்றல்லவா எழுதப்பட்டுள்ளது.
 
எதனால் கட்டளையை கைகொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று சில சகோதரர்கள் கூறுகிறார்கள் என்றுதான் புரியவில்லை.
 
மத்தேயு : 28  ம் அதிகாரம்

19
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்
.
 
இயேசு கிறிஸ்துவே இந்த வார்த்தைகளை கைகொள்ளும்படி கூறியிருக்கும்போது எதன் அடிப்படையில் கைகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதை கூறினால் நன்றாய் இருக்கும் .  
 
நம்முடைய கிரியைகளினால் நாம் நீதிமான்கள் ஆகா மாறுவதில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே..

இருந்த போதிலும் ஒரு மனுஷன் இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தினால் கழுவபட்டால் மட்டும் போதும் அதற்கு மேல் ஒன்றும் தேவையில்லையா....

ஒருவேளை இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தினால் கழுவபட்டால் போதும் அதற்குமேல் ஒன்றும் தேவையில்லை என்றால் எல்லாருமே மனம் திரும்பி இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தினால் கழுவி பின்பு தன் இஷ்டம் போல் வாழ்வார்களே....
 
பின்பு நம் யாருக்குமே நியாதீர்பு இருக்காதே இயேசு கிறிஸ்துவும் இந்த வசனத்தை சொல்ல வேண்டிய அவசியம் இருக்காதே....
 
வெளி 22  ம் அதிகாரம்
 
 11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

12
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
 
 
எந்த கிரியையுமே மனுஷன் செய்யாவிட்டால் எதன் அடிப்படையில் அவனவனுக்கு பலன் தருவாரோ ....தெரியவில்லையே..
 
எந்த கிரியையுமே செய்யவேண்டாம் என்றால் யாருக்காக எதற்காக இன்னும் நீதிசெய்யட்டும் என்றும் யாருக்காக எதற்காக இன்னும் பரிசுத்தமாகட்டும் என்று சொல்ல வேண்டும்
 
சகோதர்களே கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்

நம்முடைய தேவன் எவ்வளவுதான் இரக்கமுள்ளவராய்  இருந்தாலும் நாம் எந்த வார்த்தையும் கைகொள்ள வேண்டாம் நம் இஷ்டம் போல் இருக்காலம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் நான் சிந்திய ரத்தத்தினால் நீ மறுபடியும் கழுவப்பட்டு என் பிள்ளையாய் மாறிடுவாய் எனவே நீ அதையும் செய்யவேண்டியதில்லை என்றா கூறுகிறார்.
 
விதைகிரவனுக்கு விதையை கொடுக்கிறவரும் அதை விளைய செய்கிறவரும் கர்த்தர்தான் ஆனால் அதற்காக நாம் அந்த விதையை விதைக்காமல் கர்த்தர் விதைய செய்வார் அவர் சர்வவல்ல தேவன் ஆயிற்றே அவரால் கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்று சொல்லிக்கொண்டு எதையுமே  செய்யாமலிருந்தால் எப்படியிருக்கும் என்றே சற்று சிந்தித்து பாருங்கள்
 
நமக்கு வார்த்தைகளை எழுதி கொடுத்ததே...! அதின்படி வாழ வேண்டும் என்பதற்காகத்தானே...!
 
நம்முடைய சுயத்தினால் எந்த கட்டளைக்கோ கற்பனைக்கோ கீழ்படிவது மிகவும் கடினமான ஒன்றுதான்.

ஆனால் நாமக்கு கட்டளையை கொடுத்தவரும் அவர்தான் நாமக்கு கீழ்படிய கற்று தருபவரும் அவர்தான் அதற்கு தேவையான் பெலனையும் தருபவரும் அவர்தான் எல்லாவற்றிலும் அவருடைய கிருபைதான் நம்மை வழிநடத்துகிறது
 
நம்மிடத்தில் எதிர்பார்பதெல்லாம் ஒன்றான்றுதான் கீழ்படிய விருப்பம் இருகிறதா இல்லையா அவ்வளவுதான்
விருப்பம் இருந்தால் உதவி செய்வார்... இல்லை என்றால் கட்டயதினால் தேவன் எதையும் செய்ய விரும்புவதில்லை.
 
கீழ்படிவதும்.... கீழ்படிய தேவையில்லை.... என்பதும் அவரவர் தேவன் மீது கொண்டுள்ள அன்பை பொறுத்தே இருக்கும் என்றே நான் கருதுகிறேன்.
 


-- Edited by Stephen on Tuesday 23rd of November 2010 10:10:07 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard