பரலோகத்தின் சேனைகளை உருவாக்கின தேவன் தன்னுடைய ஏழு ஆவியால், மூன்று பிரதான தூதர்களை உருவாக்கினார். பரலோக சேனைகள் அல்லாமல் இவர்களே தேவனின் முதல் படைப்பு. படைப்பு துவங்கின நேரம் அதிகாலை எனப்படுகிறது. இவர்கள் மூவரும் அதிகாலையில் தோன்றிய விடிவெள்ளி நட்சத்திரம். (இயேசு இருளிலும் பிரகாசிக்கும் விடிவெள்ளி நட்சத்திரம்)
இவர்களின் பெயர் மிகாவேல், லூசிபர், ஊரியேல் என்பவைகளே. மிகாவேல் பிதாவின் அம்சமாகவும், லூசிபர் குமாரனின் அம்சமாகவும், ஊரியேல் பரிசுத்த ஆவியின் அம்சமாகவும் தோன்றினர். இவர்கள் ஒளி சரீரம் உடையவர்களாய் இருந்தனர். இவர்கள் தேவனிடத்திலும், ஒருவருக்கொருவரும் அன்பாக இருந்தனர். இவர்கள் தங்களுக்கென்று உலகத்தை உருவாக்கி கொண்டு சேனைகளையும் உண்டாக்கி கொண்டனர். இவர்களில பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோரின் வல்லமைகள் சரியான விகிதத்தில் இருந்தன. இவர்கள் தேவனை துதித்துக் கொண்டு, தங்கள் படைப்பில் மகிழ்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் அன்போடு இருந்தனர். எல்லாம் மகிழ்ச்சியாய் இருந்தது.
இதில் லூசிபர் என்ற தூதன் அரசாண்ட பகுதி பூமி எனப்பட்டது. அந்த நாட்களில் பூமி 2-டைமென்சன் ஆக இருந்தது. தட்டையாக வாயு மண்டலம் உள்ளதாக ஒளி வடிவமாக இருந்தது. அக்கினி மயமான கற்கள் உடையனவாய் இருந்தது. ஒளி வடிவ ஜீவன்கள் இந்த வாயு மண்டலத்தில் மிதந்து கொண்டு இருந்தனர். (ஒரு சில சினிமாவில் வருவதை போல)
இப்படியே பல யுகங்கள் கழிந்தன. இதில் லூசிபர் என்னும் தூதனுக்கு இந்த ஒரே மாதிரி சந்தோஷமான வாழ்க்கை அலுப்பு தட்ட ஆரம்பித்தது. வித்தியாசமான அனுபவம் பெற வேண்டும் என இந்த தூதன் ஆசைப்பட்டான். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் வல்லமை சரியான விகிதத்தில் இருந்த இந்த தூதன் பிதாவின் வல்லமையை அதிகமாக பெற ஆசை கொண்டான். அதற்காக பரலோகத்துக்கு ஏறி போய் பிதாவின் வல்லமையை அதிகமாக பெற்றான். இதனால் இவனில் இருந்த சமனிலை மாறி அவன் பெற்ற வல்லமை அவனை எரித்தது. இதனால் எரிந்து கொண்டே தன்னுடைய உலகமாகிய பூமியின் மேல் வந்து விழுந்தான். தன் மேன்மையை இழந்து வேறு சரீரம் உடையவனாய் ஆனான். இப்படியாக லூசிபர் என்ற தூதன் தற்கொலை செய்து கொண்டான். இவன் சாத்தானாக ஆனான். சாத்தானுக்கு எடுத்துகாட்டாய் விளங்கும் சவுலும், யூதாசும் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசா 14.12. அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! 13. நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், 14. நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. 15. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
பெரு நெருப்போடு வந்து சாத்தான் விழுந்த இடம் பள்ளமாகியது (முதலில் பள்ளம், மேடு எல்லாம் இல்லை) இது பாதாளம் எனப்பட்டது. இந்த பெரு நெருப்பினால் பூமி அழியும் அபாயம் தோன்றியது. பூமியை அழிவிலிருந்து காப்பாற்ற தேவன் தான் முன்பு முன்னேற்பாடாக சேகரித்து வைத்திருந்த தண்ணீரை வானத்திலிருந்து பொழியப் பண்ணிணார்.
திரளான தண்ணீர் பூமியை சுற்றிலும் மூடிக் கொண்டது. பூமியின் ஒரு பகுதி மாத்திரம் அக்கினி கடலாக இருக்க மற்ற பகுதிகளில் பற்றிய தீ அணைந்து போனது. ஆனால் இன்னொரு ஆபத்து தோன்றியது. பூமி நீரில மூழ்கி போனது. இப்போது தண்ணீரை கட்டுப்படுத்துவது பெரிய விஷயமாகி போனது.
தேவன் பூமியை நீரிலிருந்து எடுத்து அது மறுபடியும் நீரில் மூழ்காதபடி அதை ஆதாரங்கள் மேல் ஸ்தாபித்தார். (இதையே இந்து புராணங்கள் வராக அவதாரமாய் குறிப்பிடுகின்றன)
9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
இந்த வேதி வினையால் கற்களும், மண்ணும் தோன்றியது. பூமி 3-டைமென்ஷன் ஆனதாய் மாறியது. தட்டையான வாயு மண்டலமான பூமி உருண்டை வடிவமானதாய் ஆனது. மேடு பள்ளமாய் ஆனது. flatness problem என்ற தலைப்பில் விக்கியில் இதை பற்றி உள்ளதாக தெரிகிறது. ஆனால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரிந்தவர்கள் இது இதை பற்றிதானா என்பதை உறுதி செய்யலாம்.
யோபு 38.14. பூமி முத்திரையிடப்பட்ட களிம்பைபோல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறதுபோல் காணப்படும்.
சங்கீ 104.5. பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார். 6. அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது. 7. அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று. 8. அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது. 9. அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.