பிரசங்கி = 26 - 2 அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்துபோவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது காரணமில்லாமல் விட்ட சாபம் தங்காது என்று எழுதி இருக்கின்றதே
ஒருவர் மிக நல்லவராய் இருந்க்கின்றார் என்று வைத்து கொள்வோம் அவருக்கு யாரவது ஒருவர் மூலமாக சாபம் வந்தால் அந்தசாபம பலிக்குமா அல்லது மேலே வசனம் சொல்கின்ற படி கரணம் இருந்தால்தான் அந்த சாபம்பலிக்குமா
நல்லவர்களை துன்மார்கர்கள் சாபமிட்டாள் அது அப்படியே நிறைவேறுமா துர்மார்கனை நல்லவர் சாபமிட்டாள் அது பலிக்குமா
ஏனென்றால் மகாபாரதத்தில் இந்திரலோகத்தில் இருக்கும் ஒரு பெண் அர்ஜுனன் அவளின் விருப்பத்திற்கு ஒற்று கொள்ளவில்லை என்றவுடன் ஒரு சாபத்தை விடுகின்றாள் அது அப்பயே நடக்கின்றது.
எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இந்த சாபமானது யார் சொன்னாலும் பலிக்குமா ? சாபம் விட்ட பிறகு அந்த சாபத்தை திரும்ப பெற முடியுமா ?
வேதத்தை நீங்கள் ஆசிவதிக்கின்றீர்களோ இல்லையோ ஆனால் சாபம் மட்டும் இடாதிர்கள் என்று எழுதி இருக்கின்றது. சண்டையில் தாய் மகனை சாபம் விடுகின்றார்கள் தகப்பன் தன் மகன் மகளை சாபம் விடுகின்றார்.
மருமகள் மற்றும் பக்கத்து விட்டில் சண்டை என்று சொல்லி கொன்றே போகலாம். தல நண்பர்களுக்கு தெரிந்தால் தயவுகூர்ந்து தங்கள் கருத்துகளை பதிக்கும்மாறு கேட்டு கொள்கின்றேன்.
அடியேன் தெரிந்து கொள்ளவும் மற்றவர்கள் புரிந்து கொள்ளவும் ப்ரோயோஜனமாய் இருக்கும் என்று நம்புகின்றேன்
-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 23rd of November 2010 06:34:32 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
பிரசங்கி = 26 - 2 அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்துபோவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது காரணமில்லாமல் விட்ட சாபம் தங்காது என்று எழுதி இருக்கின்றதே
ஒருவர் மிக நல்லவராய் இருந்க்கின்றார் என்று வைத்து கொள்வோம் அவருக்கு யாரவது ஒருவர் மூலமாக சாபம் வந்தால் அந்தசாபம பலிக்குமா அல்லது மேலே வசனம் சொல்கின்ற படி கரணம் இருந்தால்தான் அந்த சாபம்பலிக்குமா
அன்பு சகோதரர் அவர்களே நான் இங்கே பதிவிடுவது எனது அன்பவம் மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலான கருத்து. வசன ஆதாரத்துடன் வேறு விளக்கங்கள் இருந்தால் நிச்சயம் மாற்றிக்கொள்ளலாம் முதலாவதாக நாம் கிறிஸ்துவின் கரத்துக்குள் இருப்பதால் எந்தஒரு மனிதனின் சாபமும் நம்மை நித்தியத்துக்கடுத்த காரியங்களில் பாதிப்பை ஏற்ப்படுத்திவிட முடியாது என்பது உறுதியாக்கப்பட்ட ஓன்று!
ஆனால் அசுத்தஆவிகளால் ஆட்டிவைக்கப்படும் இந்த உலகத்தை பொறுத்தவரை "சாபம் இடுவது" மற்றும் "சாபம்பெறுவது" ஆகிய இரண்டு காரியங்களிலும் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது மிக மிக அவசியம்! சாபத்தை எழுதுவதால் எந்த பாதிப்பும் நிகழப்போவது இல்லை (அதனால்தான் நியாயப் பிரமாணத்தில் எழுதப்பட்டவைகளில் கெரிசீம்மலையில் ஆசீர்வாதத்தையும் ஏபால் மலையின்மேல் சாபத்தையும் மலையில்போய் வாயால் சொன்னார்கள் என்று நான் கருதுகிறேன்) அடுத்து ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் மனதில் கருவிகொண்டு சாபம் விட்டுக்கொண்டு இருந்தாலும் அதுவும் பாதிப்பை ஏற்ப்படுத்ததாது. நேரடியாக ஒருவரை பார்த்து வாயால் சொல்லி சாபமிடும் வார்த்தைக்கே வல்லமை உண்டு! ஏனெனில் அந்த வார்த்தைகள் ஆவியாய் இருக்கிறது.
மனிதன் தேவ சாயலில் உருவாக்கப்பட்டிருப்ப்பதால் எந்த ஒரு மனிதனின் வார்த்தைக்கும் ஒரு குறிப்பிட்ட வல்லமை உண்டு என்பதை நாம் நிச்சயம் அறியவேண்டும்:
எனக்கு தெரிந்து ஒரு விசுவாசியல்லாத பெண்ணின் தாயார் அந்த பெண்ணை திட்டும் போதெல்லாம்"நீ திருமணமாகி போனபோக்கில் போய் புதன் கிழமை திரும்பி வந்துவிடுவாய்" என்று திட்டுவது வழக்கம் இறுதியில் அந்த பெண்ணை நல்ல இடத்தில் நல்லவனுக்குதான் திருமணம் செய்து கொடுத்தார்கள் ஆனாலும் அந்த பெண் அந்த தாய் சொன்னதுபோலவே சொற்ப நாட்களில் வேதனையில் திரும்பிவிட்டாள். "கோழி மிதித்து குஞ்சு சாகாது" என்று ஒரு பழமொழி உண்டு! ஆகினும் திரும்ப திரும்ப மிதித்த இடத்திலேயே மிதித்தால் செத்துவிட வாய்ப்புண்டு. அதுபோல் தாயானாலும்கூட ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லி சாபமிட்டால். அது பலித்துவிடுகிறது எனவே முடிந்த அளவு பிள்ளைகளைகூட திட்டும்போது சாப வார்த்தையால் திட்டா திருங்கள் என்பது எனது அன்பு வேண்டுகோள்.
"காரணமில்லாமல் விட்ட சாபம் தங்காது" என்று நீதி மொழிகளில் சொல்லி யிருந்தாலும் அவரவர் சாபமிடுவதர்க்கு ஏதாவது ஒரு நியாயமான காரணம் சொல்வது இயல்புதானே? வேத புத்தகத்தில் பார்க்கும்போது அதில் விடப்பட்ட சாபங்களில் அனேக சாபங்கள் அப்படியே பலித்திருப்பதை நாம் பார்க்க முடியும்.
கர்த்தரின் சாபம்:
ஆதியாகமம் 4:11இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
நோவாவின் சாபம்!
ஆதியாகமம் 9:25கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.
தேமானியனான எலிப்பாஸ் சாபம்:
யோபு 5:3நிர்மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவன் வாசஸ்தலத்தைச் சபித்தேன்.
4. அவன் பிள்ளைகள் இரட்சிப்புக்குத் தூரமாகி, தப்புவிப்பாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
எலிசாவின் சாபம்:
II இராஜாக்கள் 2:24அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது.
சாபம் என்பது நிச்சயமாக அடுத்தவரை பாதிக்க கூடியது என்றே நான் கருதுகிறேன் ஆகினும் சாபமிடும் நபர் மற்றும் அவரது நிலை அதற்க்கான காரணம் அவருக்கு இழைக்கப்பட்ட துரோகம் இவற்றின் அடிப்படையில் சாபத்தின் விளைவுகள் வேறுபடலாம்.
சங்கீதம் 109:28அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக, உமது அடியானோ மகிழக்கடவன்
என்ற சங்கீதக்காரனின் வேண்டுகோள்படி யாருடைய சாபத்தையும் நம்மேல் பலிக்க வைக்கவும் அதை பயனற்றதாக்கிவிடவும் தேவனால் கூடும். பிலேயாமின் சாபம் பலித்துவிடும் என்பதை அறிந்த கர்த்தர் அவனை சபிக்க விடாமல் தடுத்து அதை இஸ்ரவேலருக்கு ஆசீர்வாதமாக மாற்றிகொண்டுத்த நிகழ்வை எடுத்துகொள்ளலாம்.
பாலாக் கூலி கொடுத்து பிலேயாமை அழைத்து
எண்ணாகமம் 22:6அவர்கள் என்னிலும் பலவான்கள்; ஆகிலும், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்
எனவே எனக்காக சபியும் என்று வேண்டிக்கொண்டும், பிலேயாம்
எண்ணாகமம் 23:8தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி?
கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?
என்று சொல்லி சபிக்க மறுத்துவிட்டான் என்பது தெரியும். ஒருவேளை அவன் சபித்திருந்தால் அது பலித்திருக்கலாம் ஆனால் தேவன் இடைபட்டு தடுத்து விட்டார். அதுபோல் எல்லோருக்கும் இடைபட்டு தடுப்பார் என்றும் சொல்ல முடியாது. எனவே முடிந்த அளவு பிறரிடம் சாபம் பெற்றுவிடாதபடி செயல்களை செய்வது நல்லது. அப்படியும் மீறி காரணமின்றியோ அல்லது நாம் செய்த ஏதாவது தவறிநிமித்தாமோ யாராவது சாபம் கொடுத்துவிட்டால் அந்த சாபம் நமது வாழ்வில் நிறைவேறிவிடாதபடி ஆண்டவரிடம் கண்ணீரோடு மற்றாடி ஜெபியுங்கள். தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை!
அடுத்து விசேஷமாக கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டவர்களின் ஆவியில் ஆவியானவர் குடியிருப்பதால் அவர்களது வார்த்தைக்கு விசேஷ வல்லமை இருக்கிறது. எனவே விசுவாசிகளாகிய நாம் முடிந்த அளவு பிறரை எந்த காரணத்தை கொண்டும் சபிக்கவே கூடாது. விரும்பினால் ஆசீர்வதியுங்கள் அல்லது விட்டுவிடுங்கள் சபிக்காதீர்கள்.
என்பதே ஆண்டவர் நமக்கு கொடுத்த கட்டளை. எனவே நாளை ஆண்டவர் சமூகத்தில் நியாயத்தீர்ப்புக்கு நிற்கும் போது நமது சாபத்தால் பாதிக்கப்பட்டவர் என்று யாரும் வந்து நமக்கு விரோதமாக வந்து சாட்சி சொல்லாதபடி நமது வாயை நாம் தர்க்காத்து கொள்வோமாக
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)