தாயின் கர்ப்பத்தில் என்னை தயவோடு வைத்த இறைவன் ஏனோ மிகுந்த இரக்ககுணம் உள்ளவனாக படைத்து விட்டார். சிறுவயதில் இருந்தே இந்த உலகில் நடக்கும் துன்பங்கள துயரங்கள் கொடூரங்கள் மற்றும் எல்லோரையும் ஆட்கொண்டு மரணங்கள் இவற்றை எல்லாம் அடிக்கடி நினைத்து வேதனைபடு பவனாகவே வளர்ந்தேன். மனிதனோடுகூட மற்ற உயிரினங்களும் படும் அவஸ்த்தை வேதனைகளை நினைத்து நினைத்து பரிதபித்தேன். துன்பங்களால் நிறைந்த இந்த உலகத்தை முற்றிலும் வெறுத்தேன். துபங்களை உலகில் அனுமதித்த அல்லது துன்பத்தை இந்த உலகில் இருந்து விரட்ட முடியாத கடவுளை வெறுத்தேன். பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் இருந்தபோது பணம் பாசம் வாழ்க்கை எதையுமே நான் விரும்பவில்லை. எந்த கடவுளையும் ஏற்றுக்கொள்ளாமல் மனம்போன போக்கிலே ஒரு அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்தேன்.
ஆனால் இறைவனோ எனக்கு சிறுவயதில் இருந்தே பல்வேறுப்பட்ட வெளிப்பாடு களை கொடுத்து வந்திருக்கிறார். உதாரணமாக எனக்கு சுமார் ஒன்பது வயது இருக்கும்போது பைபிளில் உள்ள எசேக்கியேல் தீர்க்கதரிசி புத்தகத்தில் முதல் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளை நான் தரிசனமாக பார்த்தேன். அதில் கேரூபீன் ஒடித்திரிவதை அப்படியே கண்டிருக்கிறேன்! ஆனால் அப்பொழு தெல்லாம் எங்கள் குடும்பம் இந்துவாக இருந்ததால் எனக்கு அதைப்பற்றி ஒன்றும் புரியவில்லை.
நான் படித்த பள்ளியில் இயேசுவைப்பற்றி சொல்லி கொடுத்திருததால் அவரின் தாழ்மை மற்றும் அமைதியான அன்பு முகம் இவற்றின் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. ஆகினும் என்னுடைய எண்ணமெல்லாம் இந்த உலகத்தைபற்றியே இருந்ததால் அவர் சிலுவையில் மனிதர்களுக்காக மரித்துகூட இந்த உலகில் எந்த மாற்றமும் இல்லையே எல்லாமே அப்படியேதானே இருக்கிறது. எல்லோருக்கும் ஒரேபோல்தானே நடக்கிறது பிறகு இயேசுவை ஏற்றுக் கொள்வதில் என்ன பயன்? அவரது மரணத்தினால் யாருக்கு என்ன லாபம்? என்பது போன்ற பலவேறு கேள்விகளால் நான் எந்த கடவுளையும் ஏற்றுக் கொள்ளாமல் மனம்போன போக்கில் வாழ்ந்தேன்.
இறுதியில் மாம்ச இச்சையால் இழுக்கப்பட்டு ஒரு ஸ்திரியின் மாந்த்ரீக மருந்தால் பாதிக்கப்பட்டு எந்தஒரு மனிதனாலும் என்னை மீட்கமுடியாத, என்னவென்றே தெரியாத் நோயால் பாதிக்கப்பட்டு எனக்கு மரணம் நிச்சயம் என்றொரு நிலை வைத்த போது இறுதியாக யாரென்றே தெரியாத இறைவனை நோக்கி அழஆரம்பித்தேன். உண்மையில் கடவுள் என்று ஓன்று இருந்தால் என்னை காப்பற்றட்டும் இல்லையேல் நான் மரித்துபோகிறேன் என்று இறைவனின் கரத்தில் எனது நிலையை ஒப்புக்கொடுத்தேன்.
எந்த மருந்தும் இல்லாமல் ஒரே இரவில் இறைவனால் ஆச்சர்யமாக மீட்கப்பட்டேன். அதன்பின்னர் அழுது மன்றாடி இறைவன் யார்? என்பதையும் இயேசு யார்? என்பதையும் உண்மையான இறைவேதம் எது என்பதையும் ஆண்டவர் மூலம் அறிந்துகொண்டேன்.
எனக்கு தேவன் கொடுத்த வெளிப்பாடுகள் மற்றும் ஞானத்தின் அடிப்படையில் நான் அறிந்துகொண்டது.
இந்த உலகத்தில் ஆதிமுதலே நன்மை தீமை இரண்டும் கலந்தே இருக்கிறது!
தீமை என்னும் அசுத்தத்திற்கும் நன்மை என்னும் பரிசுத்த தேவனுக்கும் தொடர்ந்து தலைமுறைகள் தோறும் யுத்தம் நடந்து வருகிறது!
வேதாகம வார்த்தைகளின் அடிப்படையில்தான் இந்த உலகமே இயங்குகிறது!
தீமையை ஜெயிக்கவும் நித்திய வாழ்வை பெறவும் நேர்வழியாகிய தேவனின் வார்த்தைகள் வேதாகமம் என்னும் பைபிளில் எழுதப்பட்டுள்ளது.
தேவனின் வார்த்தைகளை மீறுவதே இந்த உலகில் துன்பகளுக்கு காரணம்!
ஒருவன் நித்திய வாழ்வை பெற இயேசுவை ஏற்றுக் கொள்ளுதல் அவசியம்!
மனிதர்களை தவறு செய்ய தூண்டுவது ஆவியாயிருக்கும் சாத்தான் என்னும் விழுந்துபோன தூதனே!
இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர் மரித்தபின் பாதாளம் என்னும் சாத்தானின் இடத்தில் துன்பம் அனுபவிக்கின்றனர்!
சாத்தான் என்னும் அந்த தீயவனை ஜெயித்து ஜெயம்கொள்ள தேனின் வார்த்தைகளுக்கு கீழ்படிதல் வேண்டும்!
தீயவனாகிய சாத்தானை ஒருவர் ஜெயிக்கும்வரை இந்த உலகத்திலிருந்து துன்பங்கள அகற்ற முடியாது!
இயேசுவின் வார்த்தைகளை கைகொண்டு நடப்பவர்களுக்கு மரணமில்ல வாழ்வு உண்டு!
மாம்சமாக இருக்கும் மனிதமுயற்ச்சியால் ஆவியாயிருக்கும் சாத்தானை ஜெயம் கொள்ளமுடியாதுஎன்பதாலே இயேசுவின் மரணத்தின் மூலம் பரிசுத்த ஆவி என்னும் கூடுதல் பெலன் நமக்கு அருளப்பட்டுள்ளது.
ஒருவன் ஆவியின் வல்லமையில் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்து மரணத்தை ஜெயித்து சாத்தானை ஜெயம்கொள்ளும் வரை இந்த உலகம் இப்படியேதான் போய்கொண்டு இருக்கும்! .
இறுதியாக!
தேவன் மஹா பரிசுத்தர் அவர் பரிசுத்தராக இருப்பதால்தான் அவர் தேவனாக இருக்கிறார் நம்மையும் பரிசுத்தராக இருக்கவேண்டும்என்று அவர் விரும்புகிறார் அவர் நமக்காக செய்திருக்கும் தியாகங்கள் கொஞ்சமல்ல! அவர் எந்த தீமையையும் வேண்டுமென்று இந்த உலகினுள் அனுமதிக்கவில்லை.
தேவனின் வார்த்தையே இயேசு கிறிஸ்த்து அதாவது "ஒரே தேவன் தீமைக்கு எதிரான யுத்தத்தில் தன்னை பிரித்து செயல்படுத்துகிறார்" ஆனால் அவர் ஒருவரே!
என்பவைகளும் இன்னும் சிலவும் அடங்கும் அவற்றைப்பற்றி தள பதிவுகளில் பார்த்து அறிந்துகொள்ளலாம்!
நான் தேவனிடம் மற்றாடி அறிந்துகொண்ட உண்மைகளை பல்வேறு உண்மை சாட்சிகள் மற்றும் சம்பவங்கள் அடிப்படையில் விளக்கி இத்தளத்தில் எழுதி வருகிறேன். எனது அனுபவம் வேறு யாருக்கும் இருக்குமோ இல்லையோ தெரியவில்லை நான் எழுதும் அனேக காரியங்கள் வெறும் விளக்க போதனை மட்டுமல்ல நான் உண்மையில் அறிந்து உணர்ந்தது அனுபவித்து எழுதுவது.
தேவன் என்று நான் சொன்னால் அந்த தேவனை நான் முகமுகமாக அறிந்தது போல் அறிந்துள்ளேன் அவர் வார்த்தையை என் இருதயத்தில் அனேகமுறை அதட்டலோடு கேட்டுள்ளேன். வசனம் சொல்லும் கிறிஸ்த்துவின் ஆவியையும் தேவ ஆவியானவரையும் தனித்தனியே தாங்கி இரண்டு ஆவிகளின் மேன்மை யையும் அறிந்திருக்கிறேன். தேவனின் வழி நடத்துதலில் சுமார் ஏழு நாட்கள் உண்ணாமல் உறங்காமல் தேவனின் முழு ஆவியின் பெலனில் மும்பை பட்டணத்தில் நடந்திருக்கிறேன். வேதபுத்தகத்தில்உள்ள தேவனின் வார்த்தைகளை உயிருள்ளதாக கண்டிருக்கிறேன். அபிஷேகத்தால் அடுக்கடுக்காய் நிறப்பபட்டு நானே நானில்லாமல் போயிருக்கிறேன். ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு, இந்த உலகின் உண்மை நிலையையும் மனிதர்களின் உண்மை நிலையையும் பார்த்து பயந்து நடுங்கியிருக்கிறேன். இருதயம் திறக்கப்பட்டு அடுத்தவர் இருதயத்த்தில் நினைக்கும் நினைவுகளை கூட என் இருதயத்தில் தெரிவதை அப்படியே அறிந்திருக்கிறேன். இந்து சாமிகள் யார் என்பதை அறிந்ததோடு அவர்களில் சிலர் என்னோடு பேசியும்யிருக்கிறார்கள். ஆவிகளின் உலகினுள் சென்று திரும்பியிருக்கிறேன். பாதாளம் என்றால் என்னவென்பதை அதன் உள்ளேசென்று பார்த்திருக்கிறேன். நரக பாதாளத்தில் உள்ள வேதனையை என் சரீரத்தில் நான் அனுபவபூர்வமாக அறிந்து துடித்திருக்கிறேன். வசனத்தின்படி வாழ்வேண்டும் என்று சொல்வதொடு கடந்த 15 வருடங்களாக வாழமுயன்று அதனால் வரும் மேன்மையை அறிந்து எழுதுகிறேன்.
பதில்இல்லாத கேள்வி என்று எந்தஒரு கேள்வியும் என்னிடம் இதுவரை இல்லை! அப்படி ஒரு கேள்வி வருமாகின் அதை தேவனின் பாதத்தில் வைத்து மன்றாடி பதிலை அறிந்துகொள்வேன்.
என்னை மேன்மை படுத்துவதற்காக இதை இங்கு எழுதவில்லை. நான் ஒரு பரதேசி போன்றவன்தான் என்னிடம் ஒன்றுமே இல்லை! எத்தனையோ பெரிய கம்பனி வேலையே உதறி தள்ளியிருக்கிறேன் எனக்கென்று நான் எதையும் சேர்க்காமல் யாரிடத்திலும் எதுவும் ஓசியில் வாங்கி பிழைக்காமல் எனக்கு தேவன் தந்த இந்த உலக கடமையை செவ்வனே செய்யவும் எனது வயிற்று பிழைப்புக்காகவும் உலகத்தார்போல ஒரு வேஷம்போட்டு ஒரு வேலையே செய்து எனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன்.
போற்றுவோர் போற்றட்டும தூற்றுவோர் தூற்றட்டும் எந்த மனிதனும் எனக்கு எதிரியும் இல்லை. என் மீது முட்டுவதால் அவர்களுக்கு நோகக்கூடாது என்பதே எனது ஆதங்கம். எனது குறிக்கோள் எல்லாம் தனது அதீத தந்திரங்களால் மனிதர்களை ஏய்த்து இன்றுவரை ஆளுகை செய்துவரும் சாத்தானையும் தீமையையும் எப்படியாவது இந்த உலகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பதுதான். அந்த வெறியான ஆதங்கத்தோடு வேற்று மனிதனாக வாழ்ந்து அதன்படி எழுதுகிறேன். வேதவசனங்களை கைகொள்ளுவதால் வரும் மேன்மைகளை அறிந்ததால் இதை எழுதுகிறேன். ஆண்டவரின் வசனப்படி வாழ்வதில் உருவாகும் விசுவாசத்தின் உயர் நிலையை உணர்த்த இதை எழுதுகிறேன். எனது தரிசனங்கள் என்னோடு முடிந்துவிடக் கூடாது என்பதற்காகவே எழுதிவைக்கிறேன். இதற்க்கு யாருடைய அங்கீகாரமும் தேவையில்லை.
நான் நடைமுறை கிறிஸ்த்தவத்தில் உள்ள ஆரோக்கியமான எந்த ஒரு கருத்தையும் தவறுஎன்றோ அல்லது யாருடைய கொள்கைக்கும் எவ்விதத்திலும் முரண்பட்டவனோ அல்ல! நீங்கள் அதுபோல் பாவித்து என்னை ஏற்க்காவிடில் எனக்கு எந்த நட்டமும் இல்லை. நாம் எழுதும் சொல்லும் எல்லா காரியங் களுக்கும் இறுதி நாளில் ஆண்டவரிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்ற பயத்தோடும் நடுக்கத்தொடுமே எழுதுகிறேன்.
முதலில் எந்த வசன ஆதாரமும் இல்லாம் எழுதிவந்த என்னை பலர் துர் உபதேசம் என்று முத்திரை குத்தினார்கள். அதனால் மனமடிவாகிய நான் இப்பொழுது நான் எழுதும் அனைத்து காரியங்களும் சரியான வசன ஆதாரத்துடன் எழுதி வருகிறேன். ஆகினும் பலரால் எனது எழுத்துக்களை ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. காரணம் என்ன வென்பது எனக்கு புரியவில்லை. "முகாந்திரம் இல்லாமல் என்னை பகைத்தார்கள்" என்ற வேத வார்த்தைக்கு ஏற்ப இது நடக்கிறது!. அதை பற்றி நாம் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
சகோதரர்களுக்கு எனது வேண்டுகோள்கள்:
தளத்தை பார்வையிடும் போதகர்கள் தீர்க்கதரிசிகள் வேத பண்டிதர்கள் மற்றும் விசுவாசிகளுக்கும் பொதுவான அன்பர்கள் அனைவருக்கும் எனது பணிவான வேண்டுகோள்:
என்னுடைய முக்கிய கருத்து நீங்கள் இருக்கும் இதே நிலையில் தேவனின் வார்த்தைகளை கைகொள்ளுங்கள் என்பதுதான்.
இது மூன்று விதத்தில் தங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்
1. இம்மைக்குரிய வாழ்வில் தேவனின் வார்த்தைகள் தங்களுக்கு கேடகமாகவும் கால்களுக்கு தீபமாகவும் இருந்து பாதுகாக்கும்.
2. மறுமை வாழ்விலும் நீங்கள் வார்த்தைகளை கைகொண்டு போதித்ததால் பரலோகத்தில் பெரியவன் எனப்படுவீர்கள்.
3. இயேசுவின் வார்த்தையை கைகொள்ளுவதன் மூலம் நீங்கள் மரணத்தை ஜெயித்து சாத்தானை ஜெயம்கொள்ளவும் வாய்ப்புண்டு.
தேவன் தொடக்கத்தில் இருந்து கடைசிவரை எனது வார்த்தையை கைகொள்ளுங்கள் என்று திரும்பதிருமப் சொல்வதால் அதன் முக்கியத்துவத்தை அறிந்து, தங்களுக்கு கீழ்படிய விருப்பம் இருந்தால் என்னுடைய கருத்துக்களை எற்று சாத்தானை ஜெயிக்கும் போராட்டத்தில் தாங்களும் இணைந்து செயல்படலாம்.
இல்லை, அப்படி ஒன்றும் இல்லை எனக்கு இதெல்லாம் வேண்டாம் நான் இருக்கிற நிலையிலேயே இருந்துகொள்கிறேன் எனக்கு இது போதும் என்று கருதுவீர்களானால் "இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கும்வரை தங்களுக்கும் மீட்பு உண்டு என்பதில் எனக்கு மாற்றுகருத்து இல்லை. தங்களின் அந்த நிலையில் நான் தலையிட எவ்விதத்திலும் விரும்பவில்லை!
என்னுடைய தீர்க்கதரிசனம் மற்றும் கருத்துக்கள் தவறு என்று நீங்கள் கருதினால் ஊரிய முறையில் வசன ஆதாரத்துடன் விளக்கம் கேட்கலாம் அல்லது என்னுடைய உபதேசம் யாரையாவது தவறான வழியில் திருப்புமானால் அதை நிச்சயம் சுட்டிகாட்டலாம் என்னை போன்ற ஒரு சிரியவனிடம் என்ன பேச்சு என்று கருதினால் படித்து சிரித்துவிட்டு சென்று விடலாம்.
மற்றபடி மார்க்க பிரிவினைகள்/ பொறாமைகள்/ தேவையற்ற சர்ச்சைகள்/ சாபங்கள்/ குறைகூருதல்கள்/ நான் பெரியவன்/ நான் போதகன்/ நான் அறிவாளி நான் அனைத்தும் அறிந்தவன் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஆதாரமற்ற எந்த பதிவும் தரவேண்டாம் என்பதை அன்புடன் கேட்டுகொள்கிறேன்!.
ஒரு முக்கியமான குறிப்பு:
நான் எழுதியுள்ளது மட்டும்தான் சரி வேறு எதுவும் உண்மை இல்லை என்பது எனது நோக்கமல்ல. அந்த கருத்து எனக்கு ஒருநாளும் கிடையாது. ஏனெனில் எனக்கு தெரியப்ப்டுத்தியவைகளை நிறைவேற்றவோ அல்லது அதை நிராகரிக்கவோ தேவனாலேயே கூடும். என்னை தள்ளி எனது இடத்தில் யாரையும் தூக்கி வைக்கவும் தேவனால் முடியும். எனவே ஒரு குறிப்பிட்ட நிலைவரை தேவனின் வார்த்தைகளை பின்பற்றுகிறவர்கள், அதன்பின் தேவனின் நேரடி வழி நடத்துதலை பெற்று அதன்படிதான் நடக்கவேண்டும். சாத்தான் தந்திரக்காரன் அவனது சூழ்ச்சியை முரியடிப்பதர்க்கான வழியை தேவன் ஒருவரே நமக்கு தரமுடியும். எனவே அவரையே நோக்கி பார்ப்பது மிக மிக அவசியம்!
-- Edited by SUNDAR on Friday 17th of December 2010 08:03:01 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)