ஒரு ஈயின் காலில் சுமார் 3000 நோய் கிருமிகள் ஒட்டிக்கொண்டு இருக்குமாம். அப்படிப்படட் அருவருப்பான "ஈ" நாம் புதியகாக தயாரித்து வைத்திருக்கும் ஏதாவது ஒரு பானத்தில் விழுந்து செத்துபோனால் அது அசிங்கமான குடிக்க முடியாத ஒரு பானமாகிவிடும்.
அதாவது பரிமள தைலம் தயாரிப்பது என்பது மிக கடினமான வேலை. அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது யாத்திராகமம் புத்தகத்தில் சொல்லப் பட்டுள்ளது. அவ்வாறு கஷ்டப்பட்டு தயாரித்து வைத்திருக்கும் பரிமள தைலத்துக்குள் அதன் வாசனையை மூலம் ஈர்க்கப்படும் சில ஈக்கள் விழுது செத்துபோனால் அந்த தில்லை முழுவதும் கேட்டுபோகுமாம்
அதுபோல்
ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.
ஞானத்திலும் கனத்திலும் பெயர்பெற்ற மனிதனை ஒருசிறிய மதியீனம் அல்லது ஒரு சிறிய முட்டாள் தனமான செயல் அனமது மேன்மை அனைத் தையும் கெட்டுபோகபண்ணிவிடும் என்று வசனம் சொல்கிறது.
இதற்க்கு ஒப்பாக இந்த வசனத்தை நமக்கு எழுதிகொடுத்த சாலமோன் ஞானியே தேவனிடமிருந்து விசேஷித்த ஞானத்தை பெற்றவனாக இருந்தும் கடைசி காலத்தில் அந்நிய ஜாதி ஸ்திரிகளுக்காக அவர்களது தேவர்களுக்கென்று கோவில்களை கட்டுவித்து சொற்ப மதிஈனத்தால் கர்த்தரைவிட்டு பின்வாங்கி போனான் என்பது வேறு விஷயம்.
தற்போதுள்ள நிலை என்னவென்பதையும் தற்போது எது ஒருவருடைய பரிமள தைலமாகிய ஞானத்தை கெட்டுபோன ஈயாக முற்றிலும் கெடுத்து வருகிறது என்பதையும் நான் பார்ப்பது அவசியம்.
ஒருவர் மிகப்பெரிய வேத பண்டிதராக இருக்கலாம், வேத வியாகீனத்தில் வல்லவராக இருக்கலாம், பைபிளை பதினேழு முறை படித்தவராக இருக்கலாம், வேதத்தை ஆராய்ந்து டாக்டர் பட்டம் வாங்கியிருக்கலாம், பிறவியில் இருந்தே கிறிஸ்த்தவராக இருக்கலாம், அதிபெரிய அற்ப்புதங்கள் செய்பவராக இருக்கலாம் அனேக ஆத்துமாக்களை ஆண்டவரிடம் சேர்ப்பவராக இருக்கலாம், அவர் அறிந்து கொண்டது எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மையாக கூட இருக்கலாம்! ஆனால் அவருக்கு எப்பொழுது 'தான் பெரியவன் தான் தெரிந்து கொண்டதற்கு மேல் ஒன்றுமில்லை" என்ற ஒரு அற்பஎண்ணமாகிய "பெருமை" மனதில் தோன்றுகிறதோ அப்பொழுதே அவரது அத்தனை ஞானம் எல்லாம் கெட்டுபோன தைலமாகமாறி நாறிவிடும். அதற்குமேல் ஒன்றுமே அறிந்துகொள்ள முடியாதபடி அவரது இருதயம் அடைபட்டுபோய்விடும் அவருடய ஞானத்தை எல்லாம் பயித்தியமாக மாற்றிவிட தேவனால முடியும்.
வேத புத்தகத்தில் அகித்தோப்பேலை பற்றி வாசிக்கிறோம் அவன் தாவீதின் ஆலோசனைகாரனாக இருந்தவன். அவனது வாக்கு தேவவாக்கை போல இருந்தது என்று வேதமே சொல்கிறது
II சாமுவேல் 16:23அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை யெல்லாம் தேவனுடைய வாக்கைப்போல இருந்தது,
ஆனால் இறுதியில் அவனது ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டு அவன் நான்று கொண்டு செத்து போனான்
II சாமுவேல் 17:14இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும்பொருட்டு, அகித்தோப்பேலின் நல்லஆலோசனையை அபத்தமாக்குகிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்.
அதுபோல் யாருடைய ஆலோசனையை நிலை நிறுத்தவும் யாருடைய ஆலோசனையையும் அபந்தமாக்கவும் அவரால் முடியும்! தேவனின் செயல்பாடுகளை யாரும் இதுதான் என்று தீர்மானித்துவிட முடியாது! அவருக்கு யாரும் ஆலோசனை காரராக இருக்கவும் முடியாது!
அவர் கொடுத்த அறிவை வைத்து அவரை இவ்வளவுதான் என்று நம்மால் தீர்மானித்து விட முடியாது! எனவே நாம் பெற்றிருக்கும் ஞானத்ததை குறித்து பெருமை என்ற எண்ணம் உருவானால் அதை தோற்றத்திலேயே கிள்ளி எரிந்து எப்பொழுதுமே நம்மைவிட அடுத்தவரை மேன்மையாக நினைத்து அடிபணிவோமாக!
-- Edited by SUNDAR on Thursday 25th of November 2010 07:23:06 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)