இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம் வார்த்தை


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம் வார்த்தை
Permalink  
 


மத்தேயு - 12  = 30 -31 
 
ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்;
ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.
 
எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த
ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
 
1 யோவான் - 1 =7
அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்
 
இயேசு கிறிஸ்துவின்  இரத்தம்   சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் என்று வேதம் சொல்கின்றதுஆனால் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசினால் அல்லது தூசித்தால்  இந்தபூமியில் மாத்திரமல்ல
மறுமையிலும் மன்னிக்கபடுவதில்லை  என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உறுதியாய் சொல்லி  இருக்கின்றார்  
 
பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம் வார்த்தை   என்றால் என்ன ?
 
எல்லாவற்றையும் மன்னிக்கின்ற தேவன் ஏன் பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம்   வார்த்தை  
இவைகளை இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்க மாட்டேன் என்கின்றார்
 
அப்படி பட்ட தூசனம்  என்ன அப்படி பட்ட வார்த்தை என்ன
 
தெரிந்த நண்பர்கள் எழுதினால் எனக்கும் மற்றவர்களுக்கு நான் சொல்வதற்கும் பிரோஜினமாய் இருக்கும் என்று எண்ணுகின்றேன்
 
ஏனென்றால் இந்த விளக்கத்தை பற்றி தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம்  என்பது என் கருத்து
அநேகர் தங்களுக்கு தெரியாமல் தூசிக்கின்றார்கள்


-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 25th of November 2010 08:39:05 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:
எல்லாவற்றையும் மன்னிக்கின்ற தேவன் ஏன் பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம்   வார்த்தை  

 

இவைகளை இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்க மாட்டேன் என்கின்றார்
 
அப்படி பட்ட தூசனம்  என்ன அப்படி பட்ட வார்த்தை என்ன
 
 

சகோதரர் எட்வின்  அவர்களே தங்களின்  இந்த கேள்விக்கு எனது பதில் எனது அனுபவம் மற்றும் வசன விளக்கத்தோடு கலந்ததாக இருக்கும். இதை ஏற்ப்பதும் நிராகரிப்பதும்  தாங்கள் விருப்பம். 
 
இங்கு ஆண்டவராகிய இயேசு மிக தெளிவாக சொல்கிறார்!
 
எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. (மத்தேயு.12:30,31)
ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை 
 
இங்கு முதலில்"விரோதமாக பேசுதல்" கூட மன்னிக்கபடாது அடுத்து "தூஷணம்" மன்னிக்கப்படாது.  இப்படிபட்ட "விரோதமான" அல்லது "தூஷண"  வார்த்தைகள் என்னவென்பதை அறிந்துகொள்ளலாம்
 
12:31  but for evil words against the Spirit there will be no forgiveness.
 
தூஷணம் என்பது    evil word என்று ஆங்கிலத்தில் உள்ளது  அதை தமிழில் "கெட்ட வார்த்தை" என்று எடுத்து கொள்ளலாம்  அல்லது "தீய வார்த்தைகள்" என்றும் எடுத்து கொள்ளலாம். மனிதர்கள் பேசும் கெட்ட வார்த்தைகள் எவை என்பது தங்களுக்கு தெரியும். உதாரணமாக வேதம் "தூஷணம் "என்று சொல்லும் ஒருசில வார்த்தைகள் கீழ்க்கண்டவசனத்தில் உள்ளது.      
 
II சாமுவேல் 16:7 சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.
 
அடுத்து ஆண்டவர் "பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான் தீயவார்த்தை களுக்கு இம்மையிலும் மறுமையிலும்  மன்னிப்பு கிடையாது"  என்று தெளிவாக சொல்லிவிட்டதால் பின்னர் எந்த ஒரு வசனத்தின் அடிப்படையிலும் அதற்க்கு மன்னிப்பு உண்டு என்பதை நாம் தீர்மானிக்க முடியாது!.
 
பிறகு எப்படி "இயேசு கிறிஸ்த்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்" என்று வசனம் சொல்கிறது?  
 
இங்குதான் என்னுடைய நிலைக்கும் பல கிறிஸ்த்தவ சகோதரர்கள் நிலைக்கும் உள்ள வேறுபாடு இருக்கிறது
 
அதாவது ஒரு மனிதன் ஆண்டவரை அறியாமல் வாழ்ந்து எவ்வளவு பெரிய பாவம் செய்து கொலையே செய்திருந்தால் கூட, அவன் மனம் திரும்பி இயேசுவின் கரத்தினுள் வரும்போது இயேசுவின் இரத்தமானது அவன் பிரவிப் பாவத்தில் இருந்து  அனைத்து   பாவத்தையும் மன்னிதது விட கூடியது.  எனவே தான் இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி  சுத்திகரிக்கும் என்று வசனம் சொல்கிறது. "சகலபாவம்" என்றால்  அதில் எல்லா பாவமுமே அடங்கி விடும். ஆனால் அதன் பிறகு அவன் செய்யும் ஒவ்வொரு  பாவத்துக்கும் "தெரிந்து செய்பவனுக்கு பல அடிகள்" என்ற வார்த்தையின்  அடிப்படையில் இந்த உலகிலேயே தண்டனையோடு கூடிய மன்னிப்புதான் உண்டு! ஆனால் அப்பாவங்கள் நித்தியத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. அவ்வாறு தண்டனையோடு கூடிய மன்னிப்பிலும்,  இந்த "ஆவியானவருக்கு விரோதமான தூஷணத்துக்கு"  மன்னிப்பே இல்லை! எனவே அது நித்தியத்திலும் நம்மை பாதிக்கும் என்பதுதான் ஆண்டவர் கூறியதன் பொருள்.          
 
சரி இந்த இய்சுவின் இரத்தம் முதலில் மன்னிக்கும் "சகல பாவத்தில்" "ஆவியானவரை தூஷித்தல் அடங்குமா? என்று நீங்கள் கேட்கலாம். 
 
இதற்க்கு எனது விளக்கம் என்னவெனில் ஆவியானவர் யார் என்பதை அவரை தன்னுள் கொண்டு  அனுபவித்தவரேயன்றி வேறு ஒருவரும் அறியமுடியாது.    
 
யோவான் 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
  
எனவே ஆவியானவரை  யாரென்றே தெரியாத  ஒருவர் எப்படி  அவரை தூஷிக்கவும்? எனவே  அது நடக்கமுடியாத ஓன்று! அப்படி  என்னவென்றே தெரியாமல் தூஷிப்பவரை தண்டிப்பது தேவனின் நீதியாக இருக்காது என்று
கருதுகிறேன். 
(ஆகினும் புதியதாக சந்திக்கும் நபரிடம் இயேசுவைப் பற்றி அதிகம் பேசுங்கள் ஆனால் நம்பகதன்மையுடயவேர்யன்றி மற்றவர்களிடம் ஆவியானவரைபற்றி அதிகம் பேசாதீர்கள்- இது எனது வேண்டுகோள்)   
   
அடுத்து மன்னிக்கபடாத குற்றம்:  
 
மாற்கு 3:29 ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல் வானாகில், அவன் என்றென்றைக்கும்  மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.
 
ஆவியானவர் மிகுந்த மென்மையான சுபாவம் கொண்டவர்!. அவரை அனுபவித்து உணர்ந்தவர் ஒருவர் அவரை பற்றி  சிறிது  தரக்குறைவான வார்த்தையை  உபயோகித்தலும்  அவர் நம்மைவிட்டு வெளியேறிவிட வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது தூஷணமாக குறிப்பிடுவது என்பது நிச்சயம் அவர் வெளியேற வகை செய்யும். அவ்வாறு ஆவியானவர் ஒருவரைவிட்டு வெளியேறி விட்டால் மீண்டும் அவரை பெறுவதற்கு வேறொரு பலியும் இல்லை அதன் பின்னர் அவருக்கு மீட்பும் இல்லை!  இயேசு சொல்லும் நித்திய ஆக்கினையே கீழ்கண்ட வசனம் போதிக்கிறது.
 
எபிரெயர் 6:4 ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், . மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற் கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
 
அதாவது ஒருவரை தேவனுக்கு ஏற்றவராக மாற்றி இறுதி நாளில் தேவனுக்கு
முன்னால் கொண்டுபோய் நிருத்தப்போகிறவரும், 
நம்முடைய  மீட்பின் நாளுக் கென்று நாம் பெற்ற முத்திரையும் ஆவியானவரே! அவ்வளவு மேன்மையுள்ள ஆவியானவராய் நாம் தரக்குறைவாக பேசி அவர்  நம்முடய தூஷணத்தால் துக்கப்பட்டு முற்றிலும் நம்மைவிட்டு   வெளியேறிவிட்டால் பிறகு அவனுக்கு மன்னிப்பில்லை  நித்திய ஆகினைதான் இவ்வசனத்தின் சாரத்தைதான் இயேசு ங்கே சொல்கிறார்.   
 
எனது அனுபவ செய்தி:
 
எந்தவித வேத அறிவும் இல்லாமல் இருக்கும்போது ஆவியானவர் என்னை அபிஷேகம் செய்துவிட்டார். அதன்பின்   ஒருநாள் ஒரு மன வேதனையிநிமித்தம் மிகவும் துக்கமானபோது சிகரெட் வாங்கி  பற்றவைத்து  ஊதிக்கொண்டு  இருந்தேன். அந்நேரம் பார்த்து அங்கே வந்த எனது பாஸ்டர் தம்பி "என்னண்ணா இப்படி செய்கிறாய்?  ஆவியானவர் உன்னுள் இருக்கும்போது சிகரெட் பிடிக்கிறாய்? உன்னுள் இருக்கும் ஆவியானவர் எவ்வளவு  கஷ்டப்படுகிறார் தெரியுமா? என்று சொன்னான் உடனே மிகவும் மனகஷ்டத்தில் இருந்த நான் சற்றும் கவனிக்காமல் "போடா  பெரிய ஆவியானவர்" என்று ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னேன். சொன்ன. அந்நேரமே என்னில் இருந்த ஏதோ வல்லமை என்னைவிட்டு  துக்கத்தோடு  பிரிந்து போனதை என்னால் அறிய முடிந்தது.          
 
நான் சொன்னது தூஷண வார்த்தை இல்லை! எனவே எனது கெஞ்சுதலுக்கு இரங்கி தாவீதை ஏற்றுக்கொண்டதுபோல  ஆவியானவர் என்னை மீண்டும் ஏற்றுக் கொணடாலும் எனக்கு ஒரு பெரிய தணடனையை அனுமதித்தார் அடுத்ததாக ஆண்டவர் எனக்கு தெரிவித்தபடி  "நித்திய ஆக்கினை" என்பதை ஆங்கிலத்தில் "guilty of an eternal sin" என்று எழுதியுள்ளனர்.  இதை நாம் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசியவர்கள் எல்லோரும் நித்திய நரக அக்கினிக்கு போயவிடு வார்கள் என்று எடுத்துகொள்ள முடியாது. அதை "நித்திய தண்டனை" என்றே எடுக்கவேண்டும்!
 
ஆவியானவர் முற்றிலும் வெளியேறிவிட்டால் நரகாக்கினைக்கும் போக வாய்ப்பிருக்கிறது.  ஆனால் இன்னொருவிதமாக  அவன் ஆவியானவருக்கு விரோதமாக  பேசிய வார்த்தையின் தன்மைக்கு தகுந்தால்போல் அந்த நித்திய தண்டனை இருக்கும்.   "ஒரு காது செவிடாகவோ" அல்லது "ஒரு கண்ணில் பார்வை  மங்கலாகவோ" அல்லது "ஒரு விரலை இழந்தவனாகவோ" கூட தேவனின் ராஜ்யத்துக்குள்  நித்தியத்துக்கு  இருக்க முடியும் என்ற கருத்தையே  ஆண்டவர் எனக்கு விளக்கியுள்ளார். 
 
அதன் அடிப்படையில் நான் ஆவியானவருக்கு விரோதமாக  சொன்ன அந்த
சிறிய வார்த்தைக்கு ஒரு சிறிய தண்டனை எனக்கு நித்தியத்துக்கு 
உண்டு என்றும் ஆண்டவர் எனக்கு சொல்லியிருக்கிறார். அது என்னவேனதும் எனக்கு தெரியும் ஆனால் நான் சொல்ல விரும்பவில்லை.
 
எனவே ஆவியானவரை அறிந்த  அன்பானவர்களே "விளையாட்டுக்கு கூட அவருக்கு விரோதமாக பேசாதீர்கள்" என்று தங்களை அன்புடன்
வேண்டுகிறேன்.  பேலியாளின்  மக்கள் முன்னால் அவரது மகிமையை பேசாதீர்கள். அது பன்றிக்கும் முன்னால் போட்ட முத்துபோல் ஆகிவிடும்          
 
(இவ்வியாக்கீனத்தை ஏற்ப்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்! "இவன் என்ன  இஸ்டத்துக்கு வியாக்கீன பண்ணுகிறான் இதற்க்கு வேறு விளக்கம் உண்டு" என்று  வேதபண்டிதர்கள் கருதினால்  அவர்களுக்கு அப்படியே இருந்துவிட்டு போகட்டும்)



-- Edited by SUNDAR on Saturday 27th of November 2010 01:29:58 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சுந்தர் எழுதியது
-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஆகினும் புதியதாக சந்திக்கும் நபரிடம் இயேசுவைப் பற்றி அதிகம் பேசுங்கள் ஆனால் நம்பகதன்மையுடயவேர்யன்றி மற்றவர்களிடம் ஆவியானவரைபற்றி அதிகம் பேசாதீர்கள்- இது எனது வேண்டுகோள்

பேலியாளின்  மக்கள் முன்னால் அவரது மகிமையை பேசாதீர்கள். அது பன்றிக்கும் முன்னால் போட்ட முத்துபோல் ஆகிவிடும்       
-----------------------------------------------------------------------------------------------------------------------------    

மிக அருமையாக சொன்னீர்கள் சகோதரர் சுந்தர் அவர்களே நான் எல்லோரிடத்திலும் இயேசுவை பற்றி சொல்லும் பொழுது

ஆவியானவரை பற்றியும் சொல்வேன் அப்பொழுது எல்லோரும் கேலி கிண்டல் செய்வார்கள் ஆனால் நானோ  திரும்ப திரும்ப

சொல்லிக்கொண்டே இருப்பேன் இந்த காரணத்தினால் கூட பரிசுத்த ஆவியானவர் என்னோடு அப்பொழுது பேசாததற்கு காரணன் இதுவாககூட இருக்கலாம் என்று இப்பொழுது எண்ணுகின்றேன்

பரிசுத்த ஆவியானவர் எவ்வளவு துக்க பட்டு இருப்பார் (நான் திரும்ம திரும்ப அவர்களிடத்தில் சொல்லிக்கொண்டே இருந்ததால்) ஆவியானவர் என்னை மன்னிப்பாராக  

இந்த தலைப்பை நான் எழுதியதினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்

 

உண்மையாகவே எனக்கு அதிக பிரோஜினமாய் இருந்தது படிக்கின்றவர்களுக்கும் பிரோஜினமாயும் இருக்கும் என்று நம்புகின்றேன்.......



-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 27th of November 2010 01:43:21 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard