அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துகொள்கிறேன்.
ஆண்டவராகிய இயேசுவை "தேவனின் ஒரு பகுதி" என்றும் "தேவனின் வார்த்தை" என்றும் திட்டமாக விசுவாசிக்கும் நான், அவரும் தேவனுக்கு சமமானவர் என்றே எனது பதிவுகளில் வாதிட்டு வந்துள்ளேன்.
இந்நிலையில் அவரது தியாகத்தை கொச்சை படுத்தி, எழுதகூட கை நடுங்கும் ஒருபதிவை எனதுபெயரில் பதிவிட்டு, அதற்க்கு என்னுடய தளத்தின் தொடுப்பை கொடுத்திருப்பது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தையும் வேதனையையும் தருகிறது. இப்படி எல்லாம் "சதி செய்து" என்னை கவிழ்ப்பதற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் அல்ல.
இச்செயலை செய்தவர்கள் யார் என்பது நமது தேவனுக்கு நிச்சயம் தெரியும். அவர்கள் யாராக இருந்தாலும் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இவர்கள் செய்த இந்த செயலை மன்னிக்கும்படி தேவனிடம் மற்றாடுகிறேன்
சமீபத்தில் சகோதரர் சில்சாம் எனது தளத்தில் கடுமையான சாபம் ஒன்றை கூட எழுதியிருந்தார். அதை எல்லாம் நாம் பெரிதாக எடுக்கவில்லை. பின்னர் அவராகவே அவரது பதிவுகளை எல்லாம் டிலீட் செய்து தளத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அவரது தளத்தில் இப்படி ஒரு பதிவை யாரோ எழுதி யிருக்கிறார்கள். என்னைபற்றி எந்த அவதூறு வேண்டுமானாலும் எழுதுங்கள் ஆனால் இயேசுவின் தியாகத்தை கொச்சைபடுத்த வேண்டாம் என்று தங்களை அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
அன்புடன்
சுந்தர்
-- Edited by SUNDAR on Saturday 27th of November 2010 05:14:28 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எனக்கும் சகோ. சில்சாமுக்கும் இடையே உள்ள கருத்து மோதல்களை கண்காணித்து பகையை உருவாக்கி மனமடிவாக்க யாரோ செய்த சதிதான் என்பதை சகோ. சில்சாம் அவர்கள் ஆராய்ந்தறிந்து அவரது தளத்தில் விளக்கம் தந்துள்ளார்கள். எழுதியவற்றின் மெயில் id மற்றும் ip அட்ரஸ் அனைத்தையும் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துகொள்கிறோம்!
மனமடிவுகள் உண்டாகும்போது வசனத்தின் அடிப்படையில் தேற்றுதல் வார்த்தைகளை பதிவிட்டு தொடர்ந்து பதிவிகளை தர உற்சாகப்படுத்தும் சகோ. அன்பு அவர்கள்களுக்கும் மற்றும் சகோதரர் எட்வின் சுதாகர், ஸ்டீபன் அவர்களுக்கும் மற்றும் தளத்தில் பங்குபெறும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
ஆண்டவருடைய வார்த்தைகளை உண்மையாய் சொல்லி அவ்வார்த்தையில் நிலைநிற்க்கும்போது இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகள் நிச்சயம் எழும் என்பதற்கு ஆதாரமாக சகோ. அன்பு அவர்கள் சுட்டிய வசனத்தை கருத்தில் கொண்டு மகிழ்ந்து களிகூர்ந்து ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் சொல்லி மன்னித்து மறந்து நமது பணியை தொடர்வோம்!
பிரீயாக கிடைக்கும் நேரத்தை ஆண்டவருடைய வசனங்களை தியானிப்பதில் பயனுள்ளதாக பயன்படுத்திகொள்ளவும் ஆவிக்குரிய வாழ்வில் மேலும் வளரவுமே இந்த தளத்தை பயன்படுத்தி வருகிறேநேயன்றி வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை!
ஆண்டவரின் நாமம் மகிமை படுவதாக!
நன்றி
சுந்தர்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சாத்தானை ஜெயம் கொள்வதற்கான வழிமுறைகள் வேத வசனங்களின் அடிப்படையில் தெளிவாக நமது தளத்தில் சொல்லப்படுவதாலும், அது அநேகரை சென்று எட்டுவதாலும் அதிக ஆத்திரம் அடைந்துள்ள சத்துருவானவன், தனக்கு முடிவு காலம் நெரும்கிவிட்டது என்று அறிந்து, பொய் பொய்யான தகவல்களை நமது பெயரில் பரப்புவது போன்ற அற்ப காரியங்களில் ஈடுபட்டு நமது பெயரையும் கருத்துக்களையும் சிதைக்கும் முயற்ச்சியாக ஈடுபட்டு வருகிறான் என்பதை அறிய முடிகிறது.
இதற்கிடையில் சத்துரு இன்னும் ஏதாவது ஒரு வழியில் நம்மை குழப்ப முயல்வான் என்று நாம் கருதுவதால், யாராவது தனி மெயிலிலோ அல்லது ஏதாவது வழியிலோ தங்களை தோடர்புகொண்டு நமது தளத்தை குறித்து தவறான கருத்துக்களை தருவாராகில் அதற்க்கு செவி கொடுக்கவேண்டாம் என்று இதன் மூலம் கேட்டுகொள்கிறோம்.
இங்கு உண்மை சம்பவங்கள் அடிப்படையில் வசன ஆதாரத்தோடு கருத்துக்கள் சொல்லபடுவதால் கருத்துக்கள் சற்று வித்யாசமாக தோன்றலாம். அனால் நாம் எவ்விதத்திலும் ஆரோக்கியமான கிறிஸ்த்தவ உதேசத்துக்கு முரண் ஆனவர்கள் அல்ல! நாம் யாருக்கும் எதிரியும் அல்ல! யாரையும் நாம் தவறாக விமர்சிப்பதும் கிடையாது! ஆகினும் முகாந்திரம் இல்லாமல் நாம் தவறாக விமர்சிக்க படுகிரோம் என்பதை கருத்தில் கொள்க!
நமது தளத்தில் கொள்கைகள் மற்றும் அடிப்படை விசுவாசம் எல்லாமே தளத்திலேயே இருக்கிறது அதை படித்து நமது நிலைமை என்னவென்பதை அறிந்துகொள்ளுங்கள். மேலும் அதுகுறித்து வசன அடிப்படையில் எவ்வித கேள்வியை முன்வைத்தாலும் வசனத்தின் அடிப்படையில் சரியான விளக்கம் தர நாங்கள் தயாராக இருக்கிறோம்!
இன்னும் அனேக உண்மைகள் இங்கு எழுதப்படவும் அது அநேகரின் ஆவிக்குரிய வாழ்வுக்கு பயனுள்ளதாக அமையவும் ஜெபியுங்கள்!
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
அன்புடன்
சுந்தர்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)