இதுபோன்றதொரு தலைப்பை உருவாக்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வேதாகமம் முழுவதுமே தேவஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப் பட்டது என்பது நாம் அறிந்தததே.ஆகினும் இந்த மொத்த வேதவசனங் களிலும் 'நமது மனதை மிகவும் கவர்ந்த வசனம்" என்று ஒரு சில வசனங்கள் நிச்சயம் இருக்க த்தான் செய்யும் என்று நான் கருதுகிறேன்.
ஒருவேளை அந்த வசனத்தின் மூலம் ஆண்டவர் நம்ம்மிடம் பேசியிருக்கலாம் அல்லது ஒரு இக்கட்டான வேளையில் அந்த வசனம் நமக்கு ஆறுதலாக இருந் திருக்கலாம் அல்லது வேதாகமத்தை படித்தபோது அந்த வசனத்தை படிக்கும் போது மட்டும் அது நமக்கே சொல்லப்பட்ட வார்த்தைபோல இருந்திரு க்கலாம் அல்லது யாருடைய போதனயையோ அல்லது தீர்க்க தரிசனத்தையோ கேட்கும் போது அவர் குறிப்பிட்ட அந்தவசனம் நமதுவாழ்வோடு தொடருபுடயதாக இருந்திருக்கலாம்.
இப்படி ஏதாவது ஒரு வகையில் அந்த வசனம் தங்களுக்கு மிகும் பிடித்து போயிருக்கலாம்.
அப்படிப்பட்ட வசனத்தை அதற்க்கான வேதாகம பின்னணியுடனோ அல்லது சொந்த வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் பின்னணியுடனோ விளக்கி இந்த திரியில் பதிவிட்டால் அநேகருக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி இத்த திரியை துவங்குகிறேன்.
தள சகோதரர்கள் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இந்த திரியில் பங்கு பெற்று தங்களை மிகவும் கவர்த்த ஆண்டவரின் வார்த்தையை இங்கு பதிவிடும்படி அன்புடன் கேட்கிறேன்.
நானும் எனக்கு மிகவும் பிடித்த என்னை அப்படியே ஆனந்த உலகத்துக்குள் அழைத்து சென்ற எனக்கு மிகப்பெரிய விசுவாசத்தை கொடுத்த ஒரு வசனத்தை பற்றி விளக்கி விரைவில் பதிவிடுகிறேன்.
-- Edited by SUNDAR on Monday 29th of November 2010 03:24:37 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் ஞானஸ்தானம் எடுத்து இருந்தாலும் இயேசுவை பற்றி ஒன்றும் தெரியாதவனாய் இருந்தேன்
என் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஒரு வாலிப போதகர் ஆண்டவரை பற்றி அதிகமாக என்னிடம் சொல்வார்கள் பல மணி நேரங்கள் இயேசுவை பற்றிஅவர் சொல்வார்
அவர் சொல்ல சொல்ல இயேசு பட்ட பாடுகள் சிலுவை மரணங்கள் என்னை மிகவும் கஷ்டபடுத்தியது
அப்பொழுது வேதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன் வேதத்தில் பழைய ஏற்பாடுகள் படிக்க படிக்க என் குற்றங்கள் பாவங்கள் எல்லாவற்றையும் உணர்ந்து மனதில் வேதனை அடைத்தேன்
அப்பொழுது புதிய ஏற்பாடுகள் படிக்கும்போது அதில் பவுல் அவருடைய
வரலாற்றில் மிகவும் ஈர்க்க பட்டு தேவனுக்கு உண்மையாய் வாழ
வேண்டும் என்று தீர்மானித்தேன் அப்படியே வாழ தொடங்கினேன்
அவர் அன்பு என்னை நெருக்கியதால்
இயேசுவை பற்றி எல்லோரிடமும் சொல்வேன் என்னை பார்த்து லூசு வந்துவிட்டான் என்று திரும்ப ஓடி விடுவார்கள்
(கிறிஸ்தவத்தில் எனக்கு பட்ட பெயர்கள் லூசு, பிலைடு)
எனக்கு மிகவும் கஷ்டமாய் இருக்கும் ஏசப்பா நான் யாரிடமும் சொல்ல கூடாது என்று தான் நினைக்கிறேன் ஆனால் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லையே என்று கஷ்ட பட்டு இருக்கின்றேன்
இப்படி இருக்கும் பொழுது ஒரு முறை ஒரு சகோதரரிடம் ஒரு போன் கால் வந்து அப்பொழுது அவர் ஒரு வசனத்தை சொன்னார் எனக்காக அல்ல அவருக்காக அந்த வசனத்தை சொன்னார் அந்த வசனத்தை கேட்டவுடன் எனக்கு
அளவில்லாத சந்தோசம் ஆண்டவரே எனக்கு சொல்வது போல் இருந்தது
அதை என்னால் இப்பொழுது கூட மறக்க முடியாது இதோ அந்த அற்புத வசனத்தை கிலே பதித்து இருக்கின்றேன்
எரேமியா = 20௦ -9
ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.
-- Edited by EDWIN SUDHAKAR on Monday 29th of November 2010 04:24:05 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
நன் இரட்சிக்கபடுவதற்கு முன்பு வேதத்தின் வார்த்தைகளை அறிவதற்கு முன்பு என்னை நோக்கி வந்த தேவனுடைய வார்த்தையை இங்கு பதிவிடுகிறேன்.
தேவனுடைய சத்தம் வானத்திலிருந்து என்னை நோக்கி வந்தது நான் அந்த சத்தத்தை கேட்டு திடுக்கிட்டேன். இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது. நான் கேட்ட வார்த்தை வேதத்தில்தான் இருக்கிறது என்பதை நான் கண்டுபிடிபதற்கு 3 மாதம் ஆனது.
நம்முடைய தேவன் ஜீவனுள்ளவர் என்பதை நான் அப்போதுதான் அறிந்துகொண்டேன்.
அவர் பேசும் தேவன் என்பதை யாரிடத்திலும் நான் சொல்ல தயாராக இருக்கிறேன்.
நான் அந்த சத்தத்தை கேட்ட விதம் இப்போதும் என்னால் முழுமையாக விவரிக்க முடியவில்லை .
வேதத்திலே சொல்லப்பட்டு இருக்கிற 29 சங்கிதம் முழுவதும் அப்போதுதான் என்னால் விளங்கி கொள்ள முடிந்தது.
என்னை நோக்கி வந்த வார்த்தை..........
ஆதியாகமம் 17 :1 நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
கம்பீரம் , வல்லமை, அதிகாரம், அன்பு, உரிமை, ஆளுகை, தைரியம், கட்டளை, ..........இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
எப்போது நான் அந்த வார்த்தையை படித்தாலும் என் உடல் நடுங்குகிறது. ஒரு பக்கம் நடுக்கம் இன்னொரு பக்கம் எல்லையில்லா சந்தோஷம்.
அவர் என்னோடு பேசின எனக்கு பிடித்த இன்னும் ஒருசில வசனங்களை தொடர்ந்து விரைவில் பதிவிடுகிறேன்.
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
எனக்கு மிகவும் பிடித்த வசனங்களில் எனது சொந்த வாழ்க்கையின் நடைமுறை அடிபடையில் எனக்கு மிகவும் பிடித்த வசனமும் வேதாகம சம்பவங்களின் அடிப்படையில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் இரண்டு இருக்கிறது
முதலில் என்னுடைய வாழ்க்கை அடிப்படையில் என்னை கவர்ந்த வசனம்:
நான் மிகவும் அதிகமான துன்பங்கள்ளூடே கடந்து வந்தவன். சாத்தான் என்னை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்ற நோக்கில் எவ்வளவோ முயன்றான். அவன் என்னிடம் "நீ இந்த உலகத்தில் இருக்கவே கூடாது நீ இருந்தால் எல்லோருக்கும் கேடு எனவே நீ செத்துவிடு" என்று பலமுறை என்னை தூண்டினான் அதன்அடிப்படையில் மூன்றுமுறை நான் தற்கொலைக்கு முயன்று தோற்றிருக்கிறேன்
ஒரு முறை ஒரு பெரிய கிணற்றில் விழுவதற்கு சென்றிருக்கிறேன். இன்னொரு முறை சாவதற்காக தூத்துக்குடி கடலில் நேரே உள்ளேயே நடந்து சென்றிருக் கிறேன் இன்னொருமுறை தூக்குபோட ஆயத்தமாயிருக்கிறேன். அனால் இந்த எல்லா நேரங்களிலும் என்னை அறிந்துகொண்ட ஆண்டவர் எப்படியோ ஒரு விதத்தில் பாதுகாத்திருக்கிறார்.
எல்லாவற்றிக்கும் மேலாக மும்பையில் இருந்து சென்னை வரும்போது ஓடும் ரயிலில் இருந்து குதித்திருக்கிறேன் ஆனாலும் எந்த காயமும் இன்றி தப்பித்து விட்டேன்.
இவற்றை எல்லாம் நான் நினைத்து பார்க்கும்போது எனக்கு அடிக்கடி நியாபகம் வரும் வசனம்:
புலம்பல் 3:22நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
ஆம்! என்னுடைய நீதியல்ல! என்னுடைய நீதியல்ல! கர்த்தரின் கிருபையும் இரக்கமுமே இன்றுவரை நம்மை தற்க்காககிறது. எனது சுய பலனில் நின்றிருந்தால் எனக்கு கொடுக்கப்பட்ட மாந்த்ரீக மருந்தே என்னை சுலபமாக கொன்றிருக்கும். அனால் கர்த்தர் பயங்கரமான பராக்கிரமசாலியாக என்னோடு இருந்ததால் இந்த எல்லா இக்கட்டுக்கும் என்னை நீக்க்லாட்சி இரட்சித்தார்.
இன்று நினைத்தாலும் எனது கண்களில் கண்ணீரை வரவைக்கும் இந்த வசனமே எனக்கு மிகவும் பிடித்தது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தள சகோதரர்கள் தங்களுக்கு பிடித்ததாக குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு வசனமும் அருமை! எனது வசனம் சகோ.ஸ்டீபன் அவர்கள் சொல்லியிருக்கும் வசனத்துக்கு சற்று ஒத்த கருத்து போன்றுள்ளதே
விவிலியத்தில் எனக்கு மிகவும் பிடித்த வசனம்!
ஆதாமை படைத்த நாளில் இருந்து மனிதர்களுக்கு அன்புடனும் ஆத்திரத்துடனும் அரவணைப்புடனும் பல்வேறு வார்த்தைகளை போதித்து வந்த இறைவன், மனிதனானவன் மீண்டும் மீண்டும் வழிவிலகி போவதிலேயே ஆசையாய் இருப்பதை பார்த்து பொருக்க மாட்டாமல் மிகுந்த சலிப்போடு சொல்லுவதும் அதே நேரத்தில் தேவனின் முழு இருதய எதிர்பார்ப்பையும் என்னவென்பதை வெளிப்படுத்தகூடிய இந்த வசனமே எனக்கு மிகவும் பிடித்த் வசனம்:
மீகா 6:8மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்குமுன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்
மனிதனிடம் கர்த்தரின் எதிர்பார்ப்பு என்பது ஒரு மலையை தூக்கி வருவதோ அல்லது சமுத்திரத்துக்கு அப்பால் போய் எதையும் கொண்டுவர்வதோ அல்ல! நமது வாழக்கைகளில் உண்மையும் உத்தமுமாக நடந்து இரக்கத்தோடு காரியங்களை செய்து எல்லா இடங்களிலும் மன தாழ்மையுடன் நடப்பதைதவிர வேறு என்னத்தப்பா உன்னிடம் கேட்கிறேன்?
என்று எரிச்சலோடும்,அதேநேரத்தில் ஆதங்கத்தோடும் சலிப்போடும் சொல்வதுபோலுள்ள இந்த வசனம் என்னை மிகவும் கவர்ந்தது .
இன்றும் மனிதர்கள் எதெல்லாமோ பற்றி கட்டுரை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். எதை எல்லாமோ பற்றி வேதபோதனைகள் ஆராய்ச்சிகள் தியானங்கள் பண்ணுகிறார்கள் ஆனால் இந்த கட்டளைக்கு முழுமையாக கீழ்படிவதர்க்கோ அவர்களுக்கு மனம் வரவில்லை!
இப்பகுதியில் எனக்குப் பிடித்த வசனத்தைப் பதிக்க எண்ணியிருந்தேன்; ஆனால் எனக்கு முன்பாக சகோ.இறைநேசன் முந்திக் கொண்டு, எனக்குப் பிடித்த வசனத்தைப் பதித்துவிட்டார். ஆம், இதுதான் எனக்கும் மிகவும் பிடித்த வசனம்.
மீகா 6:8 மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்குமுன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
வேதாகமத்தின் ஆதி முதல் அந்தம் வரை அடங்கியுள்ள அத்தனை பகுதிகளின் சாராம்சம் நியாயம் அல்லது நீதி தான். இரக்கமுள்ள நம் தேவன், நீதியுமுள்ளவர் என்பதை நம்மில் பலர் மறந்துவிடுகிறோம்.
நம்மில் பலர் நம் அனுதின வாழ்வில், நாம் செய்கிற எந்த ஒரு செயலையும் இது நீதியானதுதானா இல்லையா என்பதை தராசில் வைத்து நிறுத்துப் பார்க்காமால் ஏனோதானோவென்றுதான் இருக்கிறோம். இதற்கு உதாரணமாக ஒன்றைக் கூறுகிறேன்.
நம் அரசாங்கம் முன்னாள்/இந்நாள் ராணுவத்தினருக்கு வரிச்சலுகையில் பொருட்களை வழங்குவதை நாம் அறிவோம். ஆனால் பொதுமக்களில் பலர் தங்கள் உறவினர்/நண்பர்களான முன்னாள்/இந்நாள் ராணுவத்தினர் மூலம் வரிச்சலுகையில் பொருட்களை வாங்குகின்றனர். இது ஓர் அநீதியான செயல் என்பதை சற்று யோசித்துப் பார்த்தாலே அறிந்துகொள்ள முடியும். ஆனால் கிறிஸ்தவ விசுவாசிகள் கூட இந்த அநீதியான செயலை சற்றும் உறுத்தலின்றி செய்கின்றனர்.
இதில் மிகமிக வருத்தத்திற்குரிய செயல் எதுவென்றால், ஒரு சபையை வழிநடத்துகிற “பாஸ்டர்” கூட இச்செயலை செய்வதுதான். புறஜாதியினரான பலர் கடைபிடித்து வருகிற ஒரு சாதாரண சமுதாய நீதியைக்கூட கடைப்பிடிக்காத இவர், எப்படி தன் சபை மக்களை வேதாகமம் காட்டுகிற நீதியின் பாதையில் அழைத்துச் செல்லமுடியும்?
மீகா 6:8-ல் தேவன் கூறுகிற “இரக்கம்” என்பதும் ஒரு விதத்தில் “நீதி அல்லது நியாயம்” தான். எப்படியெனில், பாவிகளாகிய நாம் அனைவரும் தேவனின் இரக்கத்தை அண்டித்தான் நித்தியஜீவனைப் பெறமுடியும். தேவனின் இரக்கத்தை அண்டுகிற நாம், “நியாயப்படி” அதே இரக்கத்தை மற்றவர்களிடம் காட்டத்தானே வேண்டும்?
எனவே “நீதி நியாயம், நீதி நியாயம், நீதி நியாயம்” என்பதுதான் வேதாகமம் முழுமையும் கூறுகிற போதனை. அப்போதனையை மிக எளிமையாக மீகா தீர்க்கதரிசி மூலம் தேவன் சொல்கிறார். அதுவும் மிகவும் கெஞ்சிக் கேட்கும்விதமாக, “இதைத் தானே நான் எதிர்பார்க்கிறேன்” ஏன் இதைச் செய்ய மறுக்கிறீர்கள் என்கிறார்.
இவ்வசனத்துக்கு அடுத்தபடியாக மற்றொரு மிகவும் பிடித்த வசனமும் உண்டு. இதையும் கட்டாயம் சொல்லத்தான் வேண்டும்.
ஏசாயா 1:3 மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது.
மாடு, கழுதை போன்ற மிருகங்கள் தங்கள் எஜமானின் விருப்பம் என்ன எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்து அதன்படி நடப்பவைகளாக உள்ளன என தேவன் கூறுகிறார். தேவனின் இக்கூற்று மிகமிகச் சரியானதே என்பதை மிருகங்களை வளர்ப்பவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.
மிருகங்கள்கூட தங்கள் எஜமானின் விருப்பத்தை/எதிர்பார்ப்பை அறிந்து நடக்கையில், மனிதர்களாகிய நாம், நம் எஜமானனான தேவனின் விருப்பத்தை/எதிர்பார்ப்பை அறிந்து நடக்காவிடில் அது தேவனை எவ்வளவாய் விசனப்படுத்தும்?
அந்த விசனத்தின் விளைவாகத்தான் இஸ்ரவேலரிடம் தேவன் இவ்வசனத்தைக் கூறினார்.
இன்றைய விசுவாசிகளாகிய நம்மில் பலர் வேதாகமத்தை நன்கு ஆராய்ந்து பல விஷயங்களை வியாக்கியானம் செய்கிறோம், இது நல்லதுதான். ஆனால் அடிப்படை விஷயத்தில் நம்மில் அனேகர் கோட்டை விட்டுவிடுகிறோம். அதாவது தேவன் மெய்யாகவே என்ன விரும்புகிறார் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறிய கோட்டை விட்டுவிடுகிறோம்.
நம்மில் சிலர் இயேசுவை ஆராதிக்கத்தான் வேண்டும் என்கிறோம், சிலர் ஊழியர்களுக்குத் தசமபாகம் கொடுக்கத்தான் வேண்டும் என்கிறோம், சிலர் சபை நடத்துனர்களை போதகர் பாஸ்டர் என அழைக்கத்தான் வேண்டும் என்கிறோம், சிலர் ஞானஸ்நானம் எடுத்தால்தான் உண்டு என்கிறோம், சிலர் உபவாசமிருந்தால்தான் உண்டு என்கிறோம்; இப்படியெல்லாம் சொல்கிற நாம் தேவனின் இம்மாதிரி வார்த்தைகளை மறந்துவிடுகிறோம்.
ஏசாயா 58:6-9 அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.
அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார்.
“இது பழையஏற்பாட்டுப் பகுதி, புதிய ஏற்பாட்டில் ‘இயேசு தான் முக்கியம், ஞானஸ்நானம் தான் முக்கியம்’” எனச் சொல்பவர்கள் பின்வரும் வசனங்களைப் படிப்பார்களாக.
மத்தேயு 25:34-36,40 அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள்; ... மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
நாம் தேவனின்/இயேசுவின் எதிர்பார்ப்பை அறிவதற்கு இம்மாதிரி அநேக வசனங்கள் உண்டு. அவ்வசனங்களை அறிந்து அவற்றின்படி நடந்து, தேவனின்/இயேசுவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்.
-- Edited by anbu57 on Thursday 9th of December 2010 08:54:21 AM
சென்னை கடற்கரையில் வியாழன் இரவு தோறும் ஒரு ஜெபம் நடக்கும் இயேசுவை முற்றிலுமாய் அறிந்து ஆவியில் அபிஷேகம் பெற்றவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் அந்த ஜெபம் அப்படி வித்தியாசமானது
நாங்கள் இரவு முடிந்து வீட்டுக்கு வரும் பொழுது இரவு 1 மணி ஆகிவிடும் இப்படி இருக்கும் பொழுது
சில சமயங்களில் போலீஸ் எங்களை கூப்பிட்டு நீங்கள் யார் இந்த நேரத்தில் எங்கு இருந்து வருகின்றீர்கள் என்று எங்களை கேட்பார்
எங்களை வழிநடத்தும் போதகரோ கையில் உள்ள பைபிளை காட்டி நாங்கள் ஜெபத்திற்கு சென்று வருகின்றோம் என்று கூறிய உடனே
சரி செல்லுங்கள் என்று சொல்லிவிடுவார்
ஒரு முறை என்னை இந்த மீட்டிங் அழைத்து செல்லும் போதார் சுதாகர் இந்த படிவத்தை பில் பண்ணி கொடு என்று கூறினார்
நான் இதில் என்ன இருக்கின்றது என்று கேட்டேன் அதற்க்கு அவர் இது ஒரு சங்கம் இதில் நாம் உறுப்பினராக சேர்ந்தால்
நாம் இரவில் எந்த மீட்டிங் போனாலும் கவலை இல்ல இந்த சங்கத்தின் உறுப்பினர் அட்டையை காட்டினால் போலீஸ் பயந்து விட்டு விடுவார்கள் என்று கூறினார்
எனக்கோ மனதில் ஒரே குழப்பம் சரி ஐய்யா எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் நாளைக்கு சொல்கின்றேன் என்று விட்டிற்கு சென்று விட்டேன்
வீட்டிற்கு சென்று ஆண்டவரே ஏன் இவர் இப்படி செய்கின்றார் இவர் ஒரு போதகராய் இருக்கின்றாரே இவர் இப்படி செய்யலாமா
நான் அவருக்கு அறிஉரை கூறவும் முடியாது அவர் ஒரு போதகர் என்பதால்
நான் என்ன செய்வது
தேவனே நீங்களே அவருக்கு நான் சொல்லும் படி எனக்கு ஒரு வசனத்தை சொல்லுங்கள் என்று சொல்லி வேதத்தை எடுத்து வாசித்தேன்
வாசிக்கும் பொழுது தேவன் வசனத்தின் மூலம் பேசுவார் என்று அப்பொழுது தான் அறிந்து கொண்டேன்
கொலேசியர் -2 - 8
லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல
மறுநாள் அந்த போதகரிடம் வசனங்களை பற்றியும் சில காரியங்களையும் நான் சொன்ன பொழுது அந்த போதகர் அப்படியே மனம் வருந்தி
ஏற்றுக்கொண்டு அந்த காரியத்தை விட்டுவிட்டார்....
இந்த வசனமும் இந்த சம்பவமும் என் வாழ்கையில் மறக்க முடியாத ஒன்று
-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 9th of December 2010 08:52:50 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
புலம்பல் 3:22 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
ஆம்! என்னுடைய நீதியல்ல! என்னுடைய நீதியல்ல! கர்த்தரின் கிருபையும் இரக்கமுமே இன்றுவரை நம்மை தற்க்காககிறது. எனது சுய பலனில் நின்றிருந்தால் எனக்கு கொடுக்கப்பட்ட மாந்த்ரீக மருந்தே என்னை சுலபமாக கொன்றிருக்கும். அனால் கர்த்தர் பயங்கரமான பராக்கிரமசாலியாக என்னோடு இருந்ததால் இந்த எல்லா இக்கட்டுக்கும் என்னை நீக்க்லாட்சி இரட்சித்தார்.
இன்று நினைத்தாலும் எனது கண்களில் கண்ணீரை வரவைக்கும் இந்த வசனமே எனக்கு மிகவும் பிடித்தது!
இயேசுவே உம்மை நேசிக்கிறேன்.... இன்னும் அதிகமாக உம்மில் அன்பு கூற கிருபை தாரும்.
ஆம்! என்னுடைய நீதியல்ல! என்னுடைய நீதியல்ல! கர்த்தரின் கிருபையும் இரக்கமுமே இன்றுவரை நம்மை தற்க்காககிறது. எனது சுய பலனில் நின்றிருந்தால் எனக்கு கொடுக்கப்பட்ட மாந்த்ரீக மருந்தே என்னை சுலபமாக கொன்றிருக்கும். அனால் கர்த்தர் பயங்கரமான பராக்கிரமசாலியாக என்னோடு இருந்ததால் இந்த எல்லா இக்கட்டுக்கும் என்னை நீக்க்லாட்சி இரட்சித்தார்
சகோதரரே உங்களுடைய அனுபவங்கள் நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்
நீங்கள் எப்படி இயேசுவை எற்றுகொண்டீர்கள் உங்களுடைய சாட்சியை ஒரு தளைப்பின் மூலம் பதிவிடுமாறு கேட்டு கொள்கின்றேன் ஏனென்றால் சகோ : சுந்தர் மற்று சகோ :ஸ்டீபன் அவர்களுடைய சாட்சி அவர்களை கர்த்தர் சந்திந்த விதம் நான் படித்த பொழுது மிகவும் ஈர்க்கப்பட்டேன் அனேக உண்மைகளை தெரிந்து கொண்டேன்
அதே போல் உங்களுடைய சாட்சிகளை நீங்கள் பதிவிட்டால் எனக்கும் மற்றவர்களுக்கும் கடவுளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள பிரோஜினமாய் இருக்குமென்று கர்த்தருக்குள் நம்புகின்றேன்
-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 11th of December 2010 03:05:47 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
நான் தேவனிடம் மிகுந்த அன்பாய் இருந்து பின்பு சில காரணங்களினால் பின்வாங்கி போனேன்
நான் தேவனை அதிகம் நேசித்ததினால் நான் பாவத்தில் இருக்கும் பொழுது கூட அவரை பற்றியே யோசித்து கொண்டு சிந்தித்து கொண்டு தான் எப்பொழுதும் இருப்பேன் நான் சிந்திப்பது என்னவென்றால்
நான் என் தேவனுக்கு பரிசுத்தமில்லாமல் அசுத்தமாய் இருக்கின்றேனே சாத்தானுடைய வலையில் மாட்டிகொண்டு இருக்கின்றேனே என்று எப்பொழுது இதை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பேன்
இப்படி மிகுந்த கவலையில் இருக்கும் பொழுது என்னை தேற்றி எனக்கு நம்பிக்கையை கொடுத்து என்னை தேவனிடத்தில் சேர்த்து இருக்கும் ஒரு அற்புதமான வசனம் தான் நீங்கள் கிழே வாசிக்கபோகின்ற வசனம்
மீகா : 7
8. என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்
9. நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்.............................
-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 19th of October 2011 02:06:55 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)