பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தில் இயேசுவை சேவிக்கும்படி கூறப்பட்ட வசனம்:
தானியேல் 7:13 14. இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும்அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.
புதிய ஏற்பாட்டு சபையில் இயேசுவை தொழுதுகொண்டார்கள் என்பதற்கு ஆதார வசனம்:
அப்போஸ்தலர் 7:59அப்பொழுது.கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
I கொரிந்தியர் 1:2எங்களுக்கும் தங்களுக்கும்ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிறஅனைவருக்கும் எழுதுகிறதாவது:
பரிசுத்த ஆவியை பெற்றவர்களுக்கு மட்டுமே இயேசு கர்த்தரென்று சொல்லமுடியும் என்பதை தெரிவிக்கும் வசனம்.
I கொரிந்தியர் 12:3பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
பிதாவாகிய தேவனை எல்லோரும் அறிந்துகொள்ள முடியாது என்பதை தெரிவிக்கும் வசனம்:
மத்தேயு 11:27சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப் பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.
இந்த வசனப்படி பிதாவை யாரென்று இயேசு ஒருவருக்கு வெளிப்படுததாதவரை அவர்கள் இயேசுதான் பிதா என்று சொல்லிக் கொண்டுதான் இருப்பர்கள் இவ் வார்த்தைகளை நாம் தவறு என்றும் சொல்லுவதற்க்கில்லை. ஏனெனில் சென்னை பக்கத்தில் உள்ள "வங்க கடலை" அறிந்த ஒருவர் இதுதான் பசிபிக் பெருங்கடல் என்று சொன்னால், வங்க கடல் ஒருபுறம் இந்துமாக சமுத்திரத்தில் சேர்ந்து அந்த இந்துமகாசமுத்திரம் பசுபிக் கடலில் சேர்ந்துள்ளதால் அதிலும் சில உண்மைகள் இருப்பதுபோல் இக்காரியம் உண்மையாகிறது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து யாரென்பதை நிதானிக்கயில் நாம் மிகவும் ஆராய்ந்து நிதானிப்பது அவசியம். காரணம் அவர் ஒருபுறம் மனுஷதன்மையோடு மனுஷனாக வந்தவர், ஆனால் இன்னொரு புறமோ உன்னதத்தில் இருந்து தேவனின் குமாரனாக வந்தவர். எனவே இரண்டு நிலைக்கும் ஏற்ற வசனங்கள் வேத புத்தகத்தில் இருப்பதை நாம் காண முடியும்
இயேசுவானவர் ஆதியிலே தேவனோடு வார்த்தையாக இருந்து பின்னர் அவரில் இருந்து மனுஷனாக வந்தாலும், பிதாவாகிய தேவனும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவும் தனித்தனி ஆள்தத்துவம் உள்ளவர்கள். இதை இயேசு அனேக இடங்களில் மிக விளக்கமாக் குறிப்பிட்டதோடு தான் பிதாவைவிட பெரியவர் அல்ல என்பதையும் பிதா தனைவிட மேலானவர் உறுதியாக கூறியிருக்கிறார்.
யோவான் 13:16 ,அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
பிதாவினால் ஜெனிப்பிக்கப்பட்டு குமாரனாகி அனுப்பபட்ட இயேசுவானவர், மரித்து உயிர்தெழுந்த பின்னர் தேவனின் வலது பாரிசத்தில் சென்றுதான் அமர்ந்தாரே தவிர பிதாவோடு ஐக்கியமாகி விடவில்லை என்பதை வசனம் பல இடங்களில் தெளிவாக சொல்கிறது:
அந்த தேவன் யார் என்பதை வெளிப்படுத்தின விசேஷம் தெளிவாக சொல்கிறது
வெளி 4 :2.உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். 8. : இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவரு மாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன.
அவருக்கு முன்னால் ஜெயம்கொண்டு வந்து நின்ற ஆட்டுக்குட்டி யானவரே ஆண்டவராகிய இயேசு!
5. இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக் கிறார் என்றான். 7. அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். அடுத்து ஆண்டவராகிய இயேசுவை ஒரேயடியாக தூதன் நிலைக்கோ அல்லது தேவனால் உருவாக்கப்பட்ட ஒருமனுஷன் என்ற நிலையிலும் நாம் நிச்சயம் பார்க்க முடியாது. காரணம் ஆவர் உன்னதத்தில் இருந்து இரங்கி வந்தவர்
யோவான் 3:31உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; ...... பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். அடுத்து அவர் தேவனால் படைக்கப்படவர் அல்ல தேவனான் ஜெனிப்பிக்கப் பட்டவர்.
எபிரெயர் 1:5எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன்
உருவாக்குதலுக்கும் ஜெநிப்பித்தலுக்கும் வேறுபாடு தெரியும் என்று நினைக்கிறேன்வேறு யாரையுமே ஜெனிப்பித்ததாக வசனம் சொல்லவில்லை
தேவன் வேதபுத்தகத்தில் பலரை தன்னுடைய குமாரன் என்று சொல்லியிரு ந்தாலும் இயேசுவை பற்றி மட்டுமே பிதா பகிரங்கமாக உலகுக்கு சாட்சி கொடுக்கிறார்
மத்தேயு 17:5அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
அடுத்து இயேசுவை மனுஷனாக பாவித்து பல வசனங்கள் பழைய புதிய ஏற்பாட்டில் இருந்தாலும் அவரை தேவனாக பாவித்து பல வசனங்கள் இரண்டு ஏற்பாட்டிலும் உண்டு.
ஏசாயா 9:6நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்
சங்கீதம் 110:1கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.
(இங்கு என் ஆண்டவர் என்பது இயேசுவை குறிக்கும் வார்த்தை)
ரோமர் 9:5மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்
மத்தேயு 1:23அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
நம்முடைய பாவங்களுக்காக மரிப்பதர்க்காக தேவனால் ஜெனிப்பிக்கபட்டு அனுப்பபட்டவரே இயேசு! அவர் பிதாவிலும் பெரியவர் அல்ல என்பதை அவரே சொல்கிறார். இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்க வேண்டியது நமது கடமை! எனவே அவரை தேவனுக்கு மேலாக உயர்த்தாமல் தேவனுடய குமாரனாக பாவித்து அவருக்கு கொடுக்க வேண்டிய கனத்தையும் மகிமையையும் செலுத்த வேண்டியது அவசியம்!
சுருக்கமாக சொன்னால் தேவன் தன் வார்த்தையை மாம்சமாக்கினார் அதுவே இயேசு:
யோவான் 1:1ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி யது அவரே இயேசு!
வெளி 19:11. பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். 13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
இயேசு யார்? அவர் தேவனுடய வார்த்தை! என்பது பற்றிய உண்மை நமக்கு தெளிவாக தெரிந்த ஓன்று! அதற்க்கான விளக்கம் நமது தளத்தில் இருக்கிறது அதை குழப்பிவிடுவதற்கு முயலும் சிலர் "நானும் புரியும்படி சொல்லமாட்டேன் அடுத்தவனையும் எதுவும் சொல்ல விடமாட்ட்டேன்" என்ற முடிவான நிலையில் இருப்பது புரிகிறது. தேவன் வெளிப்படுத்தினால் புரிகிறவனுக்கு எனது எழுத்துக்கள் சாதரணமாக புரியும். மற்றவர்களுக்கு எனது எழுத்துக்கள் புரிவது கடினமே! எனவே நான் எழுதியவற்றில் விளக்கம் கேட்பவர்களுக்கு ஏற்ற விளக்கம் நிச்சயம் தரப்படும். மற்றபடி தெளிவாகதெரிந்த இந்த உண்மையை பற்றி இனிமேலும் விவாதிப்பது நமக்கு மற்ற உண்மைகளைபற்றி ஆராய காலதாமத்தையே ஏற்ப்படுத்தும். அதுவும் ஒரு சாத்தானின் திசைதிருப்பும் தந்திரமே!
-- Edited by SUNDAR on Monday 6th of December 2010 03:39:38 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இயேசுவுக்கு ஜனங்கள் தன்னை யாரென்று சொல்கிறார்கள் என்பதை அறியவேண்டும் என்ற ஆவல் இருந்தது எனவே ஒருநாள்
மத்தேயு 16:13இயேசு ...., தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 14. அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
ஜனங்களுக்கு இயேசுவைப்பற்றி சரியாக தெரியவில்லை போலும்! இயேசு அவர்களைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் தம்முடன் இருக்கும் சீஷர்களை நோக்கி.
15. : நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
அங்கு பல சீஷர்களுக்கு அவர் யாரென்பது சரியாக தெரியவில்லை எனவே ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் பேதுரு மட்டும்
16. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
அதைகேட்டு பரவசமடைந்த இயேசு "பிதாவாகிய தேவனே உனக்கு இதை வெளிப்படுத்தியிருக்கிறார்" என்று கூறி பாராட்டுகிறார்.
17. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
ஆனால் அவர் மற்ற சீஷர்களை பார்த்து என்னை நீங்கள் என் சரியாக கணிக்கவில்லை என்று பெரிதாக எதுவும் கடிந்துகொண்டதாக தெரியவில்லை.
இவ்வாறு பரலோக பிதாவினடத்தில் இருந்து இயேசுவை பற்றிய சரியான வெளிப்பாட்டை பெற்ற பேதுருவே, இயேசு சிலுவைப்பாடுகள் குறித்து பேசும் போது "அது சம்பவிக்க கூடாது" என்று கூறும்போது இயேசு சற்றும் தயங்காமல் "அப்பாலேபோ சாத்தனே!" என்று கடிந்துகொண்டார். அவன் தனைப்பற்றி சரியான வெளிப்பாட்டை பெற்றவன் என்பதற்காக் எந்த தயவு தாட்சண்யமும் காட்ட வில்லை. அவனை சாத்தான் என்று வெளிப்படையாக சொல்லி கடிந்துகொண்டார். ஏனெனில் அவருக்கு எல்லாவற்றையும்விட பிதாவின் சித்தம் நிறைவேற்றுவது தான் முக்கியமாக இருந்தது.
இதை நன்கு ஆராய்ந்தால், இங்கு யார் இயேசுவை சரியாக கணித்தார்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல, நம் எல்லோரையும் விட சாத்தானுக்கு இயேசு யார அவரின் நிலை என்னவென்பது மிக நன்றாகவே தெரியும். எனவே இவ்வுலகில் யார் சரியான வெளிப்பாட்டை பெற்றார்கள் என்பது கணக்கே அல்ல! யார் தேவனின் சித்தத்துக்கு தங்களை ஒப்புகொடுக்கிரார்கள் என்பது மட்டும்தான் நிலை நிற்கும்.
ஆண்டவராகிய இயேசு தேவனால் அனுப்பபட்டு நம்முடைய பாவத்துக்காக பலியான கிருபாதார பலி என்பதை ஏற்றுக்கொண்டு அவரை விசுவாசித்து பாவ மன்னிப்பை பெற்று தேவனுக்கு ஏற்ற பரிசுத்த ஜீவியம் செய்வதில்தான் முக்கியத்துவம் இருக்கிறதே தவிர மற்ற காரியங்களை விவாதித்து சண்டை போட்டு சாபம்விடுவதில் அல்ல!
இயேசுவின் தாயார் ஒருமுறை அவரை பார்க்க வந்தபோது இயேசு மிக தெளிவாக சொன்ன இவார்த்தை:
மத்தேயு 4:10உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
சங்கீதக்காரன், பவுல் மற்றும் இயேசுவின் வழிகாட்டுதலை கருத்தில் கொண்டு கர்த்தரை தொழுகோள்வோம்! சில சகோதரர்கள் சொல்வது போல அந்த கர்த்தர்தான் இயேசுவாக இருந்தால் அத்தொழுகை அவருக்கே போய் சேரட்டும்
அல்லது
யோவான் 4:24தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்
வெளி 22:9 , இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.
ஆண்டவராகிய இயேசுவும் பவுலும் தேவ தூதர்களும் சொல்வதுபோல் தேவனை தொழுதுகொண்டு ஆராதனை செய்து, கிறிஸ்த்துவுக்கு கொடுக்கவேண்டிய கனத்தையும் மகிமையையும் செலுத்துவோம் ஒருவேளை சில சகோதரர்கள் சொல்வதுபோல் இயேசுவே தேவனாக இருந்தால் அதுவும் அவருக்கே போய் சேரும். அல்லது கர்த்தராகியஇயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற வர்களாக இருந்தாலும் சரி
இங்கு இயேசு எந்தஒரு வருத்தமும் படப்போவது இல்லை! மாறாக குழப்பத்தை உண்டுபண்ண வேண்டும் என்று எண்ணி இயேசுவின் தேவத்துவத்தை ஒரு அஸ்திரமாக பயன்படுத்துகிறவர்களுக்கு மட்டும்தான் இங்கு வேதனையும் வருத்தமும் உண்டாகும்!
-- Edited by SUNDAR on Thursday 9th of December 2010 08:58:08 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சங்கீதம் 110:1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.
(இங்கு என் ஆண்டவர் என்பது இயேசுவை குறிக்கும் வார்த்தை)
இங்கு கர்த்தர் என்பது இயேசுவையும், ஆண்டவர் என்பது பிதாவையும் குறிக்கும் என்று ஒருமுறை என் போதகர் சொல்லிக்கொடுத்திருந்தார்.
இங்கு கர்த்தர் என்பது இயேசுவையும், ஆண்டவர் என்பது பிதாவையும் குறிக்கும் என்று ஒருமுறை என் போதகர் சொல்லிக்கொடுத்திருந்தார்.
தயவு செய்து விளக்கவும்.
சகோதரர் அவர்களே! இந்த வசனத்துக்கான சரியான பொருளை அறிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் இயேசுவுக்கும் பரிசேயருக்கும் இடையே இந்த வசனம் குறித்து நடந்த சம்பாஷனையை பார்க்கலாம்.
மத் 22: 42. கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று (இயேசு) கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள். 43. அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
இந்த சம்பாஷணையில் தாவீது பரிசுத்த ஆவியாலே கிறிஸ்த்துவைதான் ஆண்டவர் என்று சொன்னான் என்று இயேசுவே சொல்வதை அறியமுடிகிறது
மேலும் இரண்டு காரியங்களின் அடிப்படையிலும் "ஆண்டவர்" என்ற இந்தவார்த்தை இயேசுவைதான் குறிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
தேவனின் வலது பாரிசத்தில் இயேசு இருக்கிறாரா? இயேசுவின் வலது பாரிசத்தில் தேவன் இருக்கிறாரா என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
சங்கீதம் 110:1கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.
கர்த்தராகிய தேவன், ஆண்டவராகிய இயேசுவை தன்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும்படி பணிந்தார்! வசனத்தில் அடிப்படையில் தேவனின் வலதுபாரிசத்தில் அமர்ந்திருப்பது யார்? அவ்வாறே சிலுவை பாடுகளை முடித்து உயிர்தெழுந்த இயேசு அவரின் வலது பாரிசத்தில் சென்று அமர்ந்துவிட்டார்.
அடுத்து சத்துருக்களை இயேசுவின் பாதப்படியாக்கி போடுவதற்காக தற்போது பூமியில் கிரியை செய்து கொண்டிருக்கும் பரிசுத்த ஆவியானவர் என்பவர் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இத்தொடுப்பை சொடுக்கவும்.
II கொரிந்தியர் 3:17கர்த்தரே ஆவியானவர் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
அதாவது பழைய ஏற்பாடு காலத்தில் கிரியைசெய்த கர்த்தரின் ஆவியானவரே தற்போது சத்துருக்களை பாதப்படியாக்கி போடுவதர்க்கு கிரியை செய்து கொண்டிருக்கிறார்.
சகரியா 4:6பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
சகலமும் அவருடைய ஆவியாலேயே ஆகும் !
நாம் இரட்சிக்கப்படுவதற்கு "இயேசுவின் நாமம்" மட்டுமே கட்டளையிடப் பட்டுள்ளது ஆனால் நாம் மீட்கப்படுவது பரிசுத்தஆவியானவராலே ஆகும். அவரே மீட்கப்படும் நாளுக்கென்ற முத்திரை.
மேலும் எதுவும் விளக்கம் தேவைபட்டால் தயங்காமல் முன் வைக்கவும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சகோ. அன்பு wrote... ////இவரைத் தொழுவதாக இருக்கட்டும், அவரைத் தொழுவதாக இருக்கட்டும் என நாம் நம் விருப்பத்திற்குத் தக்கதாக எடுக்கமுடியாது. உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லும்படி இயேசு கூறியுள்ளார். எனவே “சமரசம்” என்ற பேச்சுக்கே இடமில்லை///. ///ஒரே தேவன், ஒரே மத்தியஸ்தர் என்ற கோட்பாட்டை மட்டுந்தானே கூறினார்கள். மூவரில் ஒருவர் ஒருவரில் மூவர் எனும் கோட்பாட்டைச் சொன்னார்களா, அல்லது திரித்துவத்தைச் சொன்னார்களா? அவர்கள் எதுவும் சொல்லாதிருக்கையில், வேதாகம காலத்திற்குப் பின்வந்த சபையார் அவர்களாக ஆராய்ச்சி செய்து திரித்துவத்தைச் சொல்லி, பிதா தான் இயேசுவாக வந்தார் எனச் சொல்லி, தற்போது “இயேசுவை ஆராதிப்போம்” என்ற நிலை வரை வந்துள்ளனர்./// ////பிதா, இயேசு இருவரின் நிலை பற்றி சகோ.சுந்தரின் கருத்தை ஆமோதித்துள்ளீர்கள். ஆனால் சுந்தரின் கருத்தை என்னால் ஏற்கமுடியவில்லை. சுந்தர் தந்துள்ள உதாரணம், பொருந்தாத உதாரணம்.////
சகோதரர் அன்பு அவர்களே தங்களின் பல கருத்துக்கள் என்னுடைய கருத்தோடு ஒத்திருந்தாலும் நான் சொல்லியிருக்கும் கடல் மற்றும் சமுத்திரம் உவமையை தாங்கள் ஏற்காத பட்சத்தில் நமது இருவருக்கும் இடையில் அடிப்படைகருத்தில் வேறுபாடு உண்டாகிறது இயேசு யார் என்ற விஷயத்தில் தாங்கள் உண்மையை அறியாமல் சில கருத்துக்களை முன் வைக்கிறீர்கள் என்றே நான் கருதுகிறேன். வேதத்தின் அடிப்படையில் நான் அறிந்தபடி பிதாவாகிய தேவன் ஆண்டவராகிய இயேசு மற்றும் ஆவியானவர் இம்மூவரும் மீட்பின் திட்டத்தில் வெவ்வேறு பணிகளை செய்யும் ஒருவரே. இவ்விதமான தேவனின் செயல்பாட்டுக்கு திரித்துவம் என்று விசுவாசிகளால் பெயரிடப் பட்டுள்ளது. திரித்துவம் என்ற அந்த வார்த்தை வேதத்தில் இல்லை என்பது மட்டும்தான் உண்மையே தவிர தேவனின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இயேசுவின் மூலம் தேவனை மட்டும் ஆராதிக்கலாம் என்ற கருத்தை வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் இயேசுவை தொழுவது சரியல்ல என்ற கருத்தை என்னால் ஏற்க்க முடியாது. காலம் வரும்வரை அவரை சேவிப்பதற்கு அவருக்கு தேவனால் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதையே தானியேல் புத்தகம் சொல்கிறது. மேலும் "தேவன் தனி" "இயேசு தனி" என்று நாம் முற்றிலும் தனியாக பிரித்து பார்க்கமுடியாது. எனவேதான் பவுல்கூட சில இடங்களில் இயேசுவையே அந்த மெய் தேவனாக குறிப்பிடுகிறார். ரோமர் 9:5மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். 1.தீமோ 3:16தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், இயேசுவையும் ஒரு தேவன் என்று சொல்லும் நீங்கள் ஒரு பெரிய தேவன் இன்னொரு சின்ன தேவன் என்று இரண்டு தெய்வ கோட்பாட்டுக்கு கொண்டு செல்கிறீர்கள். தேவன் ஒருவரே! அந்த ஒரே தேவனின் மூன்று நிலைகளே பிதா ஆவியானவர் மற்றும் இயேசு. சகோ. அன்பு wrote... ////ஏனெனில் ஆராதனை முறைமைக்கு முக்கியமான தேவை “பலி” (யாத்திராகமம் 12,29,30 அதிகாரங்களைப் படிக்கவும்). இயேசுவானவர் தம்மையே ஒரே பலியாகக் கொடுத்ததன் மூலம் “அந்த ஆராதனை முறைமை” தற்போது ஒழிந்து போய்விட்டது. அப்படியிருக்க, ஆராதனைக்குரிய பலியான இயேசுவை ஆராதிப்போம் எனக் கூறுவது பொருத்தமானதா?/// பாவங்களுக்கு பலியாவதற்கு தேவனால் படைக்கப்பட்ட ஒரு பலி இயேசு அல்ல! இக்கருத்து மிகவும் தவறானது. அவர் பாவங்களுக்கு பலியாக வந்தாலும் அவர் தேவனின் வார்த்தையானவர். ஆராதனைக்கு முக்கிய தேவை பலி என்று கருதும் நீங்கள் அந்த பலியிடும்செய்கை ஏன்உருவானது என்பதையும் ஏன் "இயேசு தவிர வேறு ஒரு பலி இல்லை" என்று வேதம் சொல்கிறது என்பதையும் தீர ஆராய்ந்தால்தான் இயேசு யார் என்பதை அறியமுடியும்.
அதாவது இந்த உலகம் பாவத்தில் விழுந்தபோது எந்த வார்த்தைகளால் இந்த உலகத்தையும் அதிலுள்ளவைகளையும் தேவன் படைத்தாரோ, அந்த வார்த்தையையே மாமிசமாக்கி அதற்க்கான பலியாக கிரயத்தை செலுத்தி மீட்டார். அதைதான் யோவான் "வார்த்தை மாம்சமானது" என்று சொல்கிறார் பின்னர் அவர் பாடுகளை முடித்தபின்னர் தேவனோடு சேர்ந்து ஐக்கியம ஆகிவிடாமல் தேவனின் வலது பாரிசத்தில் அமர்ந்துவிட்டார் "என் மகிமையை வேறொருவருக்கு கொடேன்" என்று சொன்ன கர்த்தரே "கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாக காணும்" என்று ஏசாயா மூலம் குறிப்பிட்டார். வேறொருவருக்கு கொடுக்கா விட்டால் மாம்சங்கள் யாவும் காணும்படி மகிமையின் பிரகாசமாய் வந்த இயேசு யார்? அதுவும் அவராகத்தானே இருக்க முடியும்? இவ்வாறு தேவனின் வார்த்தையுடன் சேர்ந்து வெளிப்பட்ட கர்த்தரின் மகிமையே தேவனின் தர்ச்சொரூபமான இயேசு. எபிரெயர் 1:3இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து திரித்துவத்தை நம்பும் பலருக்கு அதன் உண்மை பொருள் மற்றும் நோக்கம் போன்றவை சரியாக தெரியாத காரணத்தால் அவர்களால் விளக்க முடிய வில்லையே அன்றி மற்றபடி அந்த தத்துவம் உண்மையே!
கர்த்தர்தான் இயேசுவா - ஆம் / இல்லை தேவன்தான் இயேசுவா - ஆம் / இல்லை
இதுவே எனது பதில்!
அற்ப மனிதனே இரண்டு மூன்று வேடங்களில் நடித்து நம்மை அசர வைத்துவிடுகிறான் அவ்வாறு இருக்க தேவனின் இந்த நிலைக்கு மனித அறிவுக்கு எட்டும்படி விளக்கம் கூற முடியவில்லை.
நான் குறிப்பிட்ட "கடல் உவமையில்" எப்படி எங்கோ இருக்கும் வங்காள விரிகுடா கடலில் இரங்கி பயணித்தால் நம்மால் பசுபிக் சமுத்திரத்தை அடைந்துவிட முடியுமோ அதே போல் இயேசு என்னும் அவருக்குள் இறங்கி திறந்த மனதோடு தேடினால் தேவத்துவத்தின் அனைத்தையும் அறிந்துவிட முடியும் என்பதே உண்மை!
இப்பொழுது ஆராதனை என்பதும் தொழுகை என்பதும் சேவிப்பது என்பதும் எனக்கு மூல பாஷை வரை சென்று ஆராயதெரியாது அதற்க்கு அவசியமும் இல்லை எனவே அதற்க்கான சரியான விளக்கத்தை கொடுக்க முடியவில்லை. ஆகினும் ஒரு விளக்கத்தை என்னால் கொடுக்க முடியும். வெளி 5 12. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். இந்த காரியத்தைத்தான் இன்றைய சபைகளில் செய்துகொண்டு இருக்கிறார்கள், ஆண்டவராகிய இயேசுவுக்கு ஸ்தோதிரத்தையும் கனத்தையும் மகிமையையும் செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் ஜெபிக்கும்போது இயேசுவின் மூலமாக பிதாவிடத்தில் ஜெபத்தை ஏரெடுக்கிறார்கள். இதைதான் தொழுதல் ஆராதித்தல் என்று நான் கருதுகிறேன் மற்றபடி இதில் தவறு என்று நீங்கள் சுட்ட இங்கு ஒன்றும் இல்லை!
-- Edited by SUNDAR on Thursday 16th of December 2010 07:49:55 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)