இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இரட்சிப்பை பெற்றவர்கள் நரகம் செல்ல வாய்ப்புண்டா?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
இரட்சிப்பை பெற்றவர்கள் நரகம் செல்ல வாய்ப்புண்டா?
Permalink  
 


மனம்திரும்பி ரட்சிப்பை பெற்று ஆண்டவராகிய இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பரிசுத்த ஆவியைபெற்ற ஒரு விசுவாசியோ அல்லது போதகர்களோ நரகம் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
 
பவுல் அப்போஸ்த்தலர் கூற்றுப்படி:
 
ரோமர் 6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால்
பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.

கிருபைக்கு கீழ்பட்டிருக்கும் ஒருவரை எந்த பாவமும் மேற்கொள்ள முடியாது. அவ்வாறு எந்த பாவமும் மேற்கொள்ள முடியாத பட்சத்தில் ஒருவர் நரகம் செல்ல வாய்ப்பில்லை என்றே பொருள்படுகிறது
 
மேலும் இயேசு கிறிஸ்த்து இவ்வாறு கூறுகிறார்  
 
யோவான் 10:28 நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.

யோவான் 10:29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
 
போன்ற வசனங்கள் இயேசுவின் கரத்தினுள் சென்றவர்களை ஒருவரும் பறித்து கொள்ள முடியாது என்று போதிக்கின்றன
 
நாம் இயேசுவின் இரத்தத்தால் கிரயத்துக்கு கொள்ளப் பட்டவர்கள் என்றவசனத்தின் அடிபடையில் பார்த்தால்
 நாமே நமக்கு சொந்தமல்ல என்றும் நாம் கிறிஸ்த்து வுக்கு சொந்தமானவர்கள் என்று வேதம் சொல்கிறது. 
 
அவ்வாறு இருக்க, நம்முடைய எந்த பாவமோ அல்லது எந்த செயலோ நம்மை  நித்திய ஜீவனில் இருந்து பிரித்துவிட முடியுமா?       
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: இரட்சிப்பை பெற்றவர்கள் நரகம் செல்ல வாய்ப்புண்டா?
Permalink  
 


இறைநேசம் wrote:
 
நாம் இயேசுவின் இரத்தத்தால் கிரயத்துக்கு கொள்ளப் பட்டவர்கள் என்றவசனத்தின் அடிபடையில்
பார்த்தால் நாமே நமக்கு சொந்தமல்ல என்றும் நாம் கிறிஸ்த்து வுக்கு சொந்தமானவர்கள் என்று வேதம் சொல்கிறது. 
 
அவ்வாறு இருக்க, நம்முடைய எந்த பாவமோ அல்லது எந்த செயலோ நம்மை  நித்திய ஜீவனில் இருந்து பிரித்துவிட முடியுமா?       
 

இந்த  கேள்வியானது  மிக  முக்கியமான  ஒன்றும் எளிதில் பதில் சொல்ல முடியாத தன்மையுடயதுமானது. ஏனெனில் "தேவனின்  இரக்கங்களுக்கு முடிவில்லை"என்று வேதம் சொல்வதால் நாம் எடுத்த எடுப்பில் யாரையும் நியாயம் தீர்த்து, ஒரு முடிவை கூறிவிட முடியாது.

ஆகினும் வசனம் என்ன சொல்கிறது என்பதை மட்டும் இங்கு சற்று ஆராயலாம்:

பவுலின் கூற்றுப்படி இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒருவன் கிருபையின்கீழ் இருப்பதால் எந்த பாவமும் அவனை மேற்கொள்ள முடியாது என்பதை அறிய முடியும்.
 
ரோமர் 6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.

பாவம் ஒருவனை மேற்கொள்ள முடியாத பட்சத்தில் அவனுக்கு மீட்பு என்பது நிச்சயம் ஆகிறது.
 
அதாவது ஜலப்பிரளயம் வந்தபோது நோவாவின் பேழைக்குள் இருந்தவர்களுக்கு
அதனால் எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்த முடியவில்லை. அதுபோல் இயேசுவின் இரட்சிப்பு என்னும்  அரணுக்குள் இருப்பவர்களை எந்த பாவமும் மேற்கொள்ள
முடியாது என்பது உண்மையே.  
 
யாக்கோபு 4:5 நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?
   
நம்மில் வாசம் பண்ணும் ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சை உள்ளவராக இருப்பதால் இயேசு இவ்வாறு சொல்கிறார்: 
 
யோவான் 10:28 நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை
  
இயேசுவின் கரத்தின் கீழ் வந்தவர்களை யாரும் அவரிடமிருந்து  பறித்துகொள்ள முடியாது எனவே மீட்பு என்பது சர்வ நிச்சயம் ஆகிறது. 
 
ஆகினும் இங்கு ஒரு காரியத்தை கவனிக்க வேண்டும். வேறு ஒருவர் வந்து இயேசுவின் கரத்தில் இருந்து நம்மை பிடுங்கி கொள்ளமுடியாது. ஆனால் நாமாக அவர் பாதுகாப்பாகிய அரணில் இறுதி விலகி  நித்திய அழிவை நோக்கி செல்ல முடியும் என்பதை மறந்துவிட கூடாது.
 
அதாவது இயேசுவின் இரட்சிப்பை பெற்று பரிசுத்த ஆவியானவரின் அனுபவத்துக்குள கடந்து வந்தபின் ஒருவன் பாவம் செய்வானாகில் ஆவியானவர் மிகுந்த துக்கம் அடைவதோடு அந்த பாவம் குறித்த உணர்த்துதலை நமக்கு கொண்டுவருவார். ஆவியானவரின் அந்த உணரதுதலுக்கு நாம் செவிகொடுத்து
உணர்ந்து மனம்திரும்பாத பட்சத்தில் ஓரிரு முறைக்கு பின்னர்  ஆவியானவர் சைலன்ட் ஆகிவிடுவார்.
 
இவ்வாறு ஆவியானவரை அசட்டைசெய்து அவருக்கு விரோதமான காரியங்களை தொடர்ந்து செய்யும் பட்சத்தில் ஆவியானவர் நம்மை விட்டு வெளியேறும் வாய்ப்பிருக்கிறது.  அவ்வாறு ஆவியானவர் ஒருவரைவிட்டு வெளியேறிவிட்டால் பின்னர்  அவனுக்கு மீட்பு இல்லை என்பதை வேதாகமம்  திட்டமாக சொல்கிறது
 
எபிரெயர் 6:4 ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும் எபி 6:6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
 
இவர்கள் செய்யும் காரியம் தேவனின் குமரனை மீண்டும் சிலுவையில் அடித்ததற்கு ஒப்பாகி புதுப்பிக்க முடியாத ஒரு நிலையை அடைகின்றனர்.       
 
II பேதுரு 2:17  என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது
 
எனவே சகோதரர்களே ஆவியைபெற்ற ஒருவர்  எவ்வளவு பெரிய பாவம் செய்து விட்டு,  பின்னர் உண்மையாய்  மனம்திரும்பி மனஸ்தாபபட்டு மன்னிப்பு கேட்கும் பட்சத்தில், எந்த ஒரு பாவமும் நம்மை கிறிஸ்த்துவின் அன்பில் இருந்து நம்மை பிரிக்க முடியாது. ஆனால் நம்முள் இருக்கும்  ஆவியானவரை துக்கப்படுத்தி அனேக கடிந்து கொள்ளுதலுக்கு அப்புறமும் செவிகொடாமல்  துணிகரமாக நடக்கும் பட்சத்தில் ஆவியானவர் நம்மில் இருந்து வெளியேறி விட்டால் அதன் பின்னர் அந்த ஆத்துமாவுக்கு மீட்பும் இல்லை  அப்படிபட்டவர்களை மீட்க வேறொரு பலியும் இல்லை! 
 
எபிரெயர் 10:26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,

இது எனது புரிதல்! இறுதி முடிவோ தேவனின் கரத்திலேயே
உள்ளது!  

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard