வேதாகமத்தை படிக்கும்போது என்னை அதிகம் ஆட்கொண்டு போதித்த ஒரு வசனத்துக்கு அதற்க்கான விளக்கம் மற்றும் அதற்க்கான வேதாகம சம்பவத்தை கொடுப்பது விவரிப்பது அவசியம் என்று கருதி இதை பதிவிடுகிறேன்.
இந்த வசனத்தின் பின்னணி மிகவும் அற்ப்புதமானது. ஒருசமயம் எரேமியா தீர்க்கதரிசி, யூதா ராஜாவின் அரமனையிலுள்ள காவற்சாலையின் முற்றத்திலே காவலிலே அடைக்கப்பட்டிருந்தான்.
காரணம்
எரேமியா -32
இதோ, இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதைப்பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும், 4. யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா கல்தேயருடைய கைக்குத் தப்பிப்போகாமல், பாபிலோன் ராஜாவின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படுவான்; .......... 5. அவன் சிதேக்கியாவைப் பாபிலோனுக்குக் கொண்டுபோவான்; நான் அவனைச் சந்திக்குமட்டும் அங்கே அவன் இருப்பான்; நீங்கள் கல்தேயரோடே யுத்தம் பண்ணினாலும் உங்களுக்கு வாய்ப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறாரென்று
நீ எப்படி தீர்க்கதரிசனம் உரைக்கலாம்? என்று சொல்லி ராஜா அவனை பிடித்து காவற்சாலையில் அடைத்து வைத்தான்.
எரேமியா காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில், கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு மீண்டும் உண்டாகிறது: அதன்படி
எரேமியாவின் பெரிப்பா மகன் அனாமெயேல் என்பவன் ஒரு நிலத்தை விற்கப் போவதாகவும் அதை வாங்கவேண்டும் என்றும் உரைக்கிறது.
7. இதோ, உன் பெரிய தகப்பனாகிய சல்லூமின் குமாரன் அனாமெயேல் உன்னிடத்தில் வந்து: ஆனதோத்திலிருக்கிற என் நிலத்தை வாங்கிக்கொள்; அதைக் கொள்ளுகிறதற்கு உனக்கே மீட்கும் அதிகாரம் அடுத்ததென்று சொல்லுவான் என்று உரைத்தார்.
அவ்வாறு அந்த நிலத்தை வாங்கியதற்கான பத்திரத்தை அநேகநாள் இருக்கும்படி மண்பாண்டத்தில் பத்திரமாய் வைக்கும்படியும் சொன்ன கர்த்தர் தொடர்ந்து
15. இனி இந்தத் தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத் தோட்டங்களும் கொள்ளப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
இப்பொழுது நிலைமையை பார்த்தார் ஒருபுறம் "பட்டணம் முழுவதும் கல்தேயரிடம் ஒப்புகொடுக்கபடும் எல்லோரும் பாபிலோனுக்கு சிறைகளாக போவார்கள்" என்ற தீர்க்கதரிசனம். இன்னொருபுறமோ "நிலத்தை கொள்ளும் படியான கர்த்தரின் கட்டளை மற்றும் இனி தேசத்தில் வீடுகளும் நிலங்களும் கொள்ளப்படும்" என்று நேர் எதிரான தரிசனம்.
எரேயாவுக்கோ ஒன்றும் புரியவில்லை!
தேசம் கல்தேயரால் அழிக்கப்பட போகிறது எல்லோருமே பாபிலோனுக்கு சிறைபட்டு போகபோகிறார்கள் இப்படிபட்ட ஒரு சூழ்நிலையில் கர்த்தர் இந்த தேசத்தில் ஒரு நிலத்தை ஏன் கொள்ள சொல்கிறார் என்பது அவனுக்கு புரியவில்லை! எனவே ஆண்டவரை நோக்கி கீழ்கண்டவாறு விண்ணப்பிக்கிறான்!
24. இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளை
நோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிற கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர்.
25. கர்த்தராகிய ஆண்டவரே, நகரம் கல்தேயரின் கையிலே கொடுக்கப்
படுகிறதாயிருந்தும், தேவரீர் என்னை நோக்கி: நீ உனக்கு ஒரு நிலத்தை விலைக்கிரயமாகக்கொண்டு, அதற்குச் சாட்சிகளை வையென்று சொன்னீரே என்றேன்.
26. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி,
சொல்லிய இந்த வசனம்தான் நமது தியானத்தின் அடிப்படை வசனம்: என்னை மிகவும் ஆட்கொண்ட வசனமும் கூட!
தொடர்ந்து கர்த்தர் சொல்கிறார் நான் சொன்னபடியே கல்தேயர் இந்நகரத்தை பிடிப்பார்கள்
28. இதோ, நான் இந்த நகரத்தைக் கல்தேயரின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் ஒப்புக்கொடுக்கிறேன், அவன் இதைப் பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார்
ஆனாலும் அது நிரந்தரம் அல்ல, விரைவிலேயே நிலைமை முற்றிலும் மாறும் என்றும் கூறுகிறார்
37. இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லாத் தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன். 43. மனுஷனும் மிருகமும் இல்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்தத் தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும்
இந்த சம்பவத்தின் சாராம்சம் என்னவெனில்:
இந்த உலகில் இப்பொழுது என்ன நடக்கிறது நடந்துகொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்காதீர்கள்! இந்த நிலமயையோ நியமனத்தையோ மாற்றவே முடியாது என்றும் எண்ணி கலங்காதீர்கள்! இப்பொழுது நீங்கள் இருக்கும் நிலையை மிகவிரைவிலேயே மாற்றிவிட தேவனால் கூடும்! தேவனின் வார்த்தையும் உங்களுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட வாக்குதத்தமும் நிச்சயம் நிறைவேறும் என்பதில் உறுதியாக இருங்கள் என்பதே!
தேவன் நம்மேல் வைத்திருப்பது நன்மைக்கு ஏதுவான நினைவுகளே!அதாவது இப்பொழுது நடக்கும் நிலைமை தலைகீழாக இருக்கலாம். நமக்கு தேவன் தெரியப்படுத்திய காரியங்கள் நடக்க வாய்ப்பே இல்லாதுபோல்\ இருக்கலாம்! அனாலும் அது தேவனால் நிறைவேற முடியாதது அல்ல! எனவே அவைகளை உறுதியாக விசுவாசியுங்கள்.
உதாரணமாக: "யோவான் 8:51ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை" என்று இயேசு திட்டமாக சொல்கிறார் அத்தோடு சுமார் எழு வசனங்கள் அதற்க்கு ஒத்தாற்போல் வேதாகமத்தில் இருக்கிறது! ஆனால் இன்று நடைமுறை வாழ்வில் நமது கண்கள் காண்கிறபடி ஒருவரும் மரிக்காமல் இருந்ததுகிடையாது. பிறந்தவர் எல்லோரும் மரிக்கின்றனர். அவ்வார்த்தக்க்கு நேர்எதிரான காரியங்களே நமது கண்கள் காண நடக்கிறது. இந்த நிலைமையை பார்த்து ஆண்டவரின் வார்த்தை எப்படி நிறை வேறும்? என்று சந்தேகம் கொள்ளவேண்டியது அவசியம் இல்லை! அல்லது அதற்க்கு வேறுபொருள் போதிக்கவேண்டிய அவசியம் இல்லை! அதை உறுதியாக விசுவாசித்தால் அதற்க்கான நேரம் வரும்போது தேவன் அவ்வார்த்தையை நிச்சயம் நிறைவேற்றுவார்.
மரியாளிடம் தேவதூதன் வந்து லூக்கா 1:31இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக" என்று சொல்லும்போது அவள் "புருஷனை அறியேனே அது எப்படி ஆகும்" என்று சந்தேகத்தில் கேட்கிறாள். ஆனாலும் உடனடியாக தேவனின் திட்டத்தையும வல்லமையையும் விசுவாசித்தாள். எனவே உலக நடைமுறைக்கு மாறாக பரிசுத்த ஆவியானவரால் அது நிறைவேறியது. லூக்கா 1:45விசுவாசித்தவளே பாக்கியவதி என்ற நிலை உருவானது.
அதுபோல் தேவனின் வார்த்தைகள் எல்லாமே உயிருள்ளது! அது விசுவாசத்தின் அடிப்படையில் நிறைவேரக்கூடியது. மற்றவர்களுக்கு அது முடியாததாக தோன்றலாம் அனால் விசுவாசித்தவனுக்கோ அது நிச்சயம் கூடும்!
மத்தேயு 8:13நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது.
மாற்கு 9:23 நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
ஆம்! தேவனுடய வார்த்தைகளை உறுதியாக விசுவாசித்தால் அதிலுள்ள வைகளை நம் வாழ்வில் நிச்சயம் ஒருநாள் நிறைவேறும்! அந்நிய கண்கள் அல்ல நமது கண்களே அவைகளை காணும் என்பது உறுதி!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)