இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஊருக்கு உபதேசம்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
ஊருக்கு உபதேசம்
Permalink  
 


ஒரு பால்காரி இருந்தாள். அவள் தினமும் ஆற்றின் மறுகரையில் ஆஸ்ரமம் அமைத்திருக்கும் ஒரு குருவுக்கு பால் கொடுத்து வந்தாள்.

தினமும் அவள் சமயத்துக்கு ஆற்றங்கரைக்கு வந்து விட்டாலும், ஓடக்காரன் தாமதமாகத்தான் வருவான். இதனால், இவளால் உரிய நேரத்துக்கு பால் கொண்டு போக முடியவில்லை.

ஒருநாள் குரு பால்காரியிடம் கடுமையாகக் கடிந்து கொண்டார். நான் என்ன செய்யட்டும் சாமி! படகுக்காரன் தாமதமா வர்றான். அதனாலே தாமதமாகுது, என்றாள்.

அட பைத்தியக்காரி! சக்தி வாய்ந்த கடவுளை மனசுல நினைச்சுகிட்டு ஆற்றைக் கடந்து வா. நேரத்துக்கு வந்துடுவே, என்றார் குரு. பால்காரிக்கு அவள் கொண்டு வரும் பால்போலவே கள்ளமில்லாத வெள்ளை மனசு.

மறுநாள் அவள் கடவுளை மனதில் நினைத்தாள். கடவுளே! என்னை அக்கறையில் சேரும், என்றாள். ஆற்றில் இறங்கினாள். என்ன ஆச்சரியம்! புடவை கூட நனையாமல், அக்கரையை அடைந்து விட்டாள். இப்படியே தினமும் நடந்தது.

ஒருநாள் குரு, பால்காரி! தினமும் குறிப்பிட்ட நேரத்தை விட முன்னாலேயே வந்துடுறே! படகையும் காணலே. எப்படி வர்றே!என்றார்.

நீங்க சொன்ன மாதிரி தான் சாமி, என்றவள் தண்ணீரில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். குரு அசந்து விட்டார். இது எப்படி சாத்தியம்? என நினைத்தபடியே தண்ணீரில் அவர் இறங்கிய போது, தொபுக்கென உள்ளே விழுந்தார்.

பின்னால் திரும்பிய பால்காரி, சாமி! நீங்க தண்ணிக்குள்ளே இறங்கும் போது வேற சிந்தனையிலே இருந்தீங்களா! நான் நீங்க சொன்ன மாதிரி கடவுளை நினைச்சுகிட்டே நடக்கிறேன். நீங்களும் அந்தக் கடவுளை நினைச்சுகிட்டே வாங்க! ஆத்தைக் கடந்துடலாம், என்றாள்.

ஊருக்கு உபதேசம் செய்பவர்களே! நீங்கள் பிறருக்கு புத்தி சொன்னால் போதாது. முதலில் நீங்கள் அதைக் கடைபிடியுங்கள்



__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

 ஊருக்கு உபதேசம் செய்பவர்களே! நீங்கள் பிறருக்கு புத்தி சொன்னால் போதாது. முதலில் நீங்கள் அதைக் கடைபிடியுங்கள்



நல்ல அருமையான கருத்துள்ள ஒரு பதிவு சகோதரரே!

இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த வேத போதகர்கள் அவ்வாறுதான் செய்து கொண்டு இருந்தார்கள். அடுத்தவர்களுக்கு அதிக அதிகமாக போதித்தார்கள் ஆனால் தாங்களோ அதை கைகொண்டு
நடக்க சற்றும்  பிரயாசப்படவில்லை. அவர்களை பார்த்து இயேசு அதிகமாய் கடிந்துகொண்டார்  

மத்தேயு 23:4 சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.

இன்றும் அநேகருடைய போதனைகள் அடுத்தவர்களுக்கு மட்டும்தான்.
அவர்களோ!

27.  வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்., அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.
  
இப்படிபட்டவர்கள் தங்களை தாங்களே பெரிய ஆட்களாக உயர்த்திகொள்வதோடு அடுத்தவர்களை அற்பமாகவும் பார்ப்பார்கள். இப்படிபட்டவர்களை பார்த்துதான் இயேசு      
 
மத்தேயு 21:31  இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.  என்றார்

ஆம்! மனம்திரும்பி குழந்தைபோன்ற களங்கமில்லாத மனதை உடையவர்கள், வேதத்தை பற்றி
ஆழமாக  அறியவில்லை என்றாலும்  பரலோகத்துக்கு போய் விடுவார்கள். ஆனால் "வேத போதனை" என்ற பெயரில் ஆயிரம் பிரிவுகளை உண்டாக்கிக்கொண்டு  "எனக்கு எல்லாம் தெரியும்" என்று அலைபவர்களோ புறம்பான இருளிலே தள்ளப்படலாம்!  
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

1. கிறிஸ்தவர்கள் : பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் (முவேந்தர்கள் )
 
இந்துக்கள் : சிவன் , விஷ்ணு , பிரம்மா (முவேந்தர்கள் )
 
 
 
 
2 . கிறிஸ்தவர்கள் : இயேசுவின் படம் , சிலுவை (உருவ வழிபாடு  )
 
இந்துக்கள் : இவர்கள் வணங்கும் தெய்வங்களுக்கு சிலைகள் உண்டு  
 
 
 
 
3 .கிறிஸ்தவர்கள் : இந்த பங்காளர் திட்டத்தில் சேர்ந்தால் ஆசிர்வாதம் கோட்டே  கொட்டேனு கொட்டும்
 
 
இந்துக்கள் : குபேரன் உருவத்தை வைத்தால் பணம் கோட்டே கொட்டேனு கொட்டும்
 
 
 
 
4 . கிறிஸ்தவர்கள் : உங்களை பற்றி தெரிந்து கொள்ள எங்களுக்கு  எழுதி அனுப்புங்கள் தீர்க்கதரிசனும் என்ற பெயரில் குரிசொல்லுதல்
மற்றும் தலையில் கையை வைத்து குறி சொல்லுதல்
 
 
இந்துக்கள் : குறி சொல்லுதல் மற்றும் ஓலையை பார்த்து கையை பார்த்து குறி சொல்லுதல்
 
 
 
 
 
பார்தீர்கள நண்பர்களே கிறிஸ்தவர்களுக்கும்   இந்துக்களுக்கும் உள்ள ஒற்றுமையை
 
 
ஆனால்   இந்த கிறிஸ்தவர்கள் எங்களுக்கு ஒரே ஒரு தேவன் உங்களுக்கு தான் ஆனேக தெய்வங்கள் இப்படி சொல்லி இந்துக்களை குறை சொல்லுதல் ஆனால் செய்கையில் பார்த்தல்  இவர்களுக்கும் முன்று தெய்வங்கள் வணங்குகின்றனர்
 
 
இந்துக்கள் ஜோசியம் பார்க்கின்றார்கள் ஜாதகம் பார்க்கின்றாகள் என்று அவர்களை பார்த்து கேலி செய்தல் ஆனால் கிறிஸ்தவர்கள் தங்கள் தலையை கொடுத்து ஜோசியம் பார்க்கின்றார்கள் அவர்களாவது பரவாயில்லை கையை தான் கொடுத்து ஜோசியம் பார்க்கின்றார்கள் ஆனால் நம்ம ஆட்கள் தலையையே கொடுத்துறாங்க
 
 
இப்படி செய்கின்ற நாம் முதலில் நம்மை திருத்தி  கொள்ள வேண்டும் அவர்களை செய்ய கூடாது என்று சொல்லி விட்டு அவைகளை நாமே செய்தால் யோசித்து  பாருங்கள் நாம நீயாயதீர்ப்பில்   எப்படி தப்பித்து கொள்வோம் என்று
 
 
ரோமர்  : 2
 
 
 
1"ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத்தீர்க்கிறாய்.

  

2"இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

  

3"இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ?

 
 
ஆதலால் கிறிஸ்தவர்களாகிய நாம் நமக்கு எத்தனை
தெய்வங்கள் உண்டு என்று எண்ணி  நம்மிடத்தில்  சிலுவை, உருவ வாழிபாடு இருக்கின்றதா என்று யோசித்து பார்க்க வேண்டும் 
தீர்க்கதரிசனும் என்ற  பெயரில் நாம் நம் கிறிஸ்தவம் என்ன செய்து கொண்டு இருக்கின்றது என்று யோசித்து பாருங்கள்  பின்பு இந்துக்களை குறை சொல்லுங்கள்..........


-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 29th of February 2012 04:19:17 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரரே!!

பதிவுகளை பதிகிறவர்களையும்,படிக்கிரவர்களையும் சிந்திக்க செய்யும் கருக்குள்ள பட்டயதிற்கொப்பான பதிவு இது என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை..

ஏனென்றால் நாம் அனைவருக்கும் எடுத்து கூறியும், பின்பற்றாத,முழுமையாய் பின்பற்றாத காரியங்கள் நிச்சயம் இருக்கும்..இந்த விஷயத்தில் நான் எப்போதும் குறைவுள்ளவன்,நீசன் என தேவன், முன்பும் மனிதர் முன்பும் அறிக்கை செய்ய வெட்கபடுகிரதில்லை..

ஆனால் தேவனால் அனுதினமும் புதுகிருபை பெற்று முன்னேற்றத்தோடு தொடர்கிறேன்..

நல்லது.,

கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மாதாவை கும்பிடுகிறார்கள்..இந்துக்கள் அனேக அம்மன்களை கும்பிடுவது போல..

மாதாவை போற்றி வான ராக்கினி என்றும் புகழ்கிறார்கள்.பரிசுத்த ஆவியின் வழியியாக ஜெபிக்காமல்,மாதாவை கொண்டு ஜெபிகிறார்கள்..

வானராக்கினிக்கு படைக்கக்கூடாது, பிரதான தூதர்களுக்கு படைக்க கூடாது என்றால் பொங்கல் வெய்த்து,மொட்டை போட்டு கொண்டாடுகிறார்கள்..

பின் வரும் வசனங்களை பாருங்கள்..

எரேமியா 7:18 எனக்கு மனமடிவுண்டாக அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்க்கிறார்கள்; அவர்கள் வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி பிள்ளைகள் விறகுபொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்புமூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள்.

இவ்வசனங்களை காட்டினால் பாரம்பரியம் என பின்வருமாறு இஸ்ரவேலர்கள் கூருகிறதையே கூறுகிறார்கள்..

எரேமியா 44:19 மேலும் நாங்கள் வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்த்தபோது, நாங்கள் எங்கள் புருஷரின் அனுமதியில்லாமல் அவளுக்குப் பணியாரங்களைச் சுட்டு, பானபலிகளை வார்த்து, அவளை நமஸ்கரித்தோமோ? என்றார்கள்.

மிகாவேல் தூதனின் படங்களை வாசலில் தொங்க விடுகிறார்கள்..பிரயோசனமற்ற அனேக குறிஈடுகளையும்,பாரம்பரியங்களையும் பின்பற்றுகிறார்கள்..

கிறிஸ்துவர்கலாகிய நமக்குள் துரும்புகளை பார்க்கிலும் உத்திரங்களே அதிகம் என்பது என்னுடைய கருத்து..இவைகள் நீக்கபடாமல் அடுத்தவரை நோக்கி மனதிரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது என நாம் கூற இயலாது..

தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard