இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோபம் தவீர்!


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
கோபம் தவீர்!
Permalink  
 


ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். இரவாகி விட்டது.

மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான். அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது.

அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான். அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது.

அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான். அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.

அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.

இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது.

அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை.  பலராமர் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.

மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.

கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.

பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர்.

அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது.

நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது. வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்.



-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 9th of December 2010 09:46:03 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

மேலேயுள்ளது ஒரு புராணக்கதை அதாவது நம்மிடம் கோபம் அதிகமாக அதிகமாக எதிரியின் (சத்துருவின்)  பெலனும் அதிகமாகும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
 
 
வேத வசனங்களின் அடிப்படியில் பார்த்தால்!  
 
 
யாக்கோபு 1:20 மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.  
 
என்று வேதம் சொல்வதால் கோபம் கொள்வது ஏற்றது அல்ல. அதிக கோபம் கொள்ளும் ஒரு மனுஷனிடம் தேவன் தன நீதியை நடப்பிக்க முடியாது.   
 
 
ஆகினும் 
 
சங்கீதம் 4:4 நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்;  
 
ஏற்று சங்கீதக்காரன் சொல்வதன் மூலம் கோபம் பெரிய பாவம் அல்ல ஆனால் அந்த  கோபம் நம்மை பாவம் செய்ய தூண்டும் ஒரு காரணியாக இருக்கிறது. 
 
கோபம் வரும்போது என்ன பேசுவது என்று தெரியாமல் தலைகால் புரியாமல் அடுத்தவரை காயப்படுத்தி பேசுவதோடு  சிலர் அடிக்கவும் கொலை செய்யவும் கூட துணிகின்றனர்  
 
எனவே  முடிந்தவரை கோபத்தை கட்டுப்படுத்த தேவனிடம் பெலன் கேளுங்கள்.  என்னதான் கோபம் அடைந்தாலும் இரவு படுப்பதற்கு முன்னர் அந்த கோபத்தை முற்றிலும் தவிர்த்துவிட்டு கர்த்தரிடம் மன்னிப்பை பெற்று படுக்க செல்லுங்கள் 
 
எபேசியர் 4:26 நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;  
 
நமக்கு மேலான நிலையில் உள்ளவரிடம் நம்மால் கோபம் கொள்ள முடியுமா என்று சற்று யோசித்து பாருங்கள்.  அவர்களுக்கு நாம் பயப்படுகிறோம் அவர்கள் நம்மை திட்டிவிடுவார்களோ என்று அஞ்சுகிறோம். ஆனால் நம்மைவிட  அற்பமான ஆட்களிடம் நம் கோபத்தை காட்டுகிறோம் அது  நியாயமில்லையே! .
 
அவர்கள் தேவனிடம் முறையிடும்போது தேவன் அது நியாயமானதாக இருந்தால் அது வேறு யார் மூலமாவது உங்களுக்கு மன கஷடங்களை வேதனைகளை கொண்டுவரும்
 
எனவே முடிந்த அளவு சமாதானமாக இருங்கள் நம்மைவிட அவர்கள் பெரியவர்கள் என்று தாழ்மையோடு யாரையும்  பாருங்கள்.
 
நீங்கள் மன வேதனை அடையாதபடுக்கு அடுத்தவர்களை வேதனை படுத்தாதீர்கள் அவ்வளவே!  
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard