இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மந்தையை சிதறடிக்கும் மேய்ப்பர்கள், ஊழியர்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
மந்தையை சிதறடிக்கும் மேய்ப்பர்கள், ஊழியர்கள்!
Permalink  
 


கடந்த சில நாட்களுக்குமுன்  ஒரு  சகோதரியிடம் பேச நேர்ந்தது. ஒரு காலத்தில் சபை சபை என்று எப்பொழுது பார்த்தாலும் தேவனை ஆராதிப்பதிலும் முழு இரவு ஜெபம் பெண்கள் கூடுகை என்று அலைந்து கொண்டிருந்த அந்த சகோதரி இப்பொழுது சபைக்கு போவதையே நிருத்தி மொத்த ஊழியர்கள் மேலும் ஏதோ ஒரு வெறுப்பில் இருந்தார்கள். 
 
அவர்களிடம் நான் பேச்சு கொடுத்தபோது "எல்லாமே வேஷம் எங்குமே உண்மை இல்லை" என்ற வார்த்தைகள்  மட்டும் வெளியில்வந்தது! மனதளவில் ஏதோ அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை  அறிந்த நான், அவர்களிடம் மெதுவாக பேச்சுகொடுத்து நீங்கள் தேவ ஊழியர்கள்மேல் இவ்வளவு வெறுப்படைய காரணம் என்னவென்று  வினவினேன்.  அவர்கள் சொன்ன 5 காரணங்கள் எனக்கு ஏற்கெனவே தெரிந்ததுதான் என்றாலும் தங்களால் பலர் இடறுகிறார்கள் என்பதை அறியாமல் அதுபோன்ற காரியங்களை செய்து கொண்டிருக்கும் உழியர்கள் பலருக்கு தங்களை திருத்திக்கொள்ள பயனுள்ளதாக அமையும் என்பதால்  அந்த 5 காரியங்களையும் அதை மேற்கோளும் வழி முறைகளையும் இங்கு பார்க்கலாம்:.
 
1. இச்சையின்  ஆவியால் பீடிக்கப்பட்ட ஊழியர்கள்!  
 
ஒருநாள் சபை முடிந்து அநேகர் கிளம்பிவிட்டனர்  நான் முன் வரிசையில் மூன்றாவது பெஞ்சில் அமர்ந்திருந்தேன் அப்பொழுது பாஸ்டர்என்றும் தீர்க்கதரிசி என்றும் அழைக்கப்படும் சுமார் 50 வயது மதிக்கதக்க ஒருவர் மேடையில் இருந்து இரங்கி கீழே வந்தார் அப்பொழுது சுமார் 30௦ வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அந்த பாஸ்டரிடம் எனக்காக ஜெபியுங்கள் என்று கேட்டுகொண்டார். அந்த பெண்ணோ கண்களை மூடிகொண்டு தலையை  சற்று குனிந்துநிற்க ஜெபம் என்ற பெயரில் கண்களை மூடி ஆரம்பித்த அந்த போதகர் சிறிது நேரத்துக்குபின் கண்களை திறந்து அந்த பெண்ணை தலையில் இருந்து கால்கள் வரை இச்சை யோடு பார்ப்பதை என்னால் பார்க்க முடிந்தது. மிகவும் பக்கத்திலேயே நான் அமர்ந்திருந்தால் எனக்கு அது மிகவும் சங்கடமாக இருந்தது அன்றோடு யாரிடமும் ஜெபிபதற்க்கு தலையை கொடுப்பதை நிறுத்திவிட்டேன்.
 
எனது ஆலோசனை:  

சகோதரிமார்களே!
  யாரிடமும் ஜெபிப்பதர்க்கு சீக்கிரத்தில் தலையை கொடுக்க ஓட வேண்டாம். இயேசுவை தவிர மனிதனுக்கும் 
தேவனுக்கும் இடையில் மத்தியஸ்தர் ஒருவரும் இல்லை.  நீங்கள் முழு மனதோடு இயேசுவின் வழியாக தேவனை  தேடினாலே  போதும் ஆண்டவர்  உங்களை அபிஷேகிக்க முடியும் உங்களுக்கு தேவையான நன்மையை வழங்க முடியும். நீங்கள்   சகோதரிகளாக கூடி ஜெபியுங்கள் அதுவும் நல்ல பயந்தரக்கூடியாதே!  பிரபல தேவ ஊழியர்களை  தேடி ஓடாதீர்கள். ஒருபுறம் தான்  பெரிய பரிசுத்தவான் என்று  தங்கள்  ஒரு முகத்தை உலகுக்கு தெரியப்படுத்தினாலும் இன்னொருபுறம் அவர்களும் நம்மைபோன்று பாச/நேசம் இச்சை உள்ள மனிதர்களே.  எனவே பிற ஆண்களுடன் பேசும்போதும் பழகும்போதும் ஜெபிக்கும் போதும் ஆலோசனை கேட்கும்போதும்  அது யாராக இருந்தாலும் சரி கவனமாக நடந்துகொள்ளுங்கள்.   

ஊழியர்களே: இச்சையின் ஆவி உங்களிடம் இருந்தால் தயவு செய்து   
தலையை நீட்டும் பெண்களுக்கு ஜெபிக்க முன்வரவேண்டாம். ஆணுக்கு இயற்கையாகவே பெண்ணின்மேல் ஈர்ப்பு உண்டு என்பதை  நான் மறுப்பதற்கு இல்லை! ஆனால் தவறான இச்சை உருவாக சந்தர்ப்பம் கொடுக்காமல் நம்மால் அதை தவிர்த்து யோசேப்பை போல ஓட முடியும்! கவுன்சிலிங் என்று சொல்லிக்கொண்டு பிற பெண்களிடம் நெருக்கமாக அமர்ந்து பேசுவதையும். அடுத்தவர் வீட்டில் கணவன் மார் இல்லாத நேரத்தில் வீடு விசிட் செய்வதையும் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. நீங்கள் ஒருவளை பரிசுத்தமாக இருக்கலாம் ஆனால் சாத்தானோ மிகவும் தந்திரக்காரன் யாரை எப்படி கவிழ்க்கலாம் என்பதில் அவன் ஒரு கில்லாடி. ஆண்டவரின் வார்த்தைகள் மேல் ஒரு பயமும் "தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி" என்ற எண்ணத்துடன் கூடிய ஒரு பிரத்ஷ்டயான  நிலையும் இல்லைஎனில் ஒருவர்  விழுந்துபோவது நிச்சயம்.         
 
முக்கியமாக நீங்கள்செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் மனிதனின் கண்களை
தவிர மேலும் நான்கு கண்கள் எப்பொழுதும்
கண்காணிக்கின்றன என்பதை மறந்துவிட வேண்டாம்.  
 
மத்தேயு 18:7  இடறல்கள் வருவது அவசியம். ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

இது சம்பந்தமாக மேலும்
ஆலோசனைகள் இருந்தால் தள சகோதரர்கள் தெரிவிக்கலாம்  
 
 


-- Edited by SUNDAR on Saturday 11th of December 2010 11:18:02 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சகோதரிகளுக்கு எனது ஆலோசனை என்னவெனில்  
  
(1 ) ஸ்திரிகள் சபைகளில் பேச கூடாது 
(2 ) ஆண்களுக்கு உபதேசம் செய்ய கூடாது
(3 ) அமைதலோடு இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் 
(4 )  பெண்கள் ஆலயத்தில் ஆராதனையில் முக்காடு இடவேண்டும் 
 
இப்படி அனக வசனங்கள் தெளிவாய் சொல்லி இருந்தும்
இந்த காலகட்டத்தில் அப்படி ஒன்று இல்லாமல் போய்விட்டது
 
ஆலய ஆராதனை  முடிந்ததும் போதகரை சுற்றி ஆண்கள் இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் பெண்கள் அவரை சுற்றி நின்று கொண்டு இருப்பார்கள் அது மட்டும் இல்லாமல் கேலி கிண்டல் போன்ற வார்த்தைகளோடு
 
என்னை பொறுத்தவரை அந்த போதகருக்கு  இச்சையை உருவாக  காரணமாய் இருப்பதே பெண்கள் தான்   
அவர் பக்கத்தில் இன்று கொண்டு இருந்து அவர் பார்வை சரி இல்லை அவர் பேசுற விதமே சரி இல்லை என்று சொல்வதில் நியாம்மில்லை
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சகோ: சுந்தர் கூறுவது போல
ஆணுக்கு இயற்கையாகவே பெண்ணின்மேல் ஈர்ப்பு உண்டு என்பதை  நான் மறுப்பதற்கு இல்லை
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தி உள்ள பெண்களாய் இருந்து எந்த ஆண்களிடமும் மற்றும்  மேய்ப்பர்கள், ஊழியர்கள்  அவர்களிடமும் அதிகமாய் பேசாமல் தன கணவனுடனும் தன பிள்ளைகளுடனும் பேசி மகிழ்ந்து தேவனுக்கு உண்மையாய் இருங்கள்
 
திருமணம் ஆகாதவர்கள் எந்த நேரமும் தேவனுக்கு எது பிரியம் , அவர் விரும்புவது என்ன இந்த காரியம் செய்தால் அவர் சந்தோசம் படுவாரா இந்த காரியத்தினால் அவர் துக்க படுவாரா என்று எப்பொழுதும் யோசித்து கொண்டே இருந்தால் போதும்  ஏனென்றால் ( நல்யோசனை நிச்சயம் உங்களை காப்பாற்றும் )


-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 11th of December 2010 01:22:21 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



இளையவர்

Status: Offline
Posts: 11
Date:
RE: மந்தையை சிதறடிக்கும் மேய்ப்பர்கள், ஊழியர்கள்!
Permalink  
 


[சகோதரிகளுக்கு எனது ஆலோசனை என்னவெனில்

(1 ) ஸ்திரிகள் சபைகளில் பேச கூடாது
(2 ) ஆண்களுக்கு உபதேசம் செய்ய கூடாது
(3 ) அமைதலோடு இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்
(4 ) பெண்கள் ஆலயத்தில் ஆராதனையில் முக்காடு இடவேண்டும் ]


I have a much better suggestion.

KILL ALL THE WOMEN!!!


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Golda wrote:
EDWIN WROTE ////[சகோதரிகளுக்கு எனது ஆலோசனை என்னவெனில்

(1 ) ஸ்திரிகள் சபைகளில் பேச கூடாது
(2 ) ஆண்களுக்கு உபதேசம் செய்ய கூடாது
(3 ) அமைதலோடு இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்
(4 ) பெண்கள் ஆலயத்தில் ஆராதனையில் முக்காடு இடவேண்டும் ]////


I have a much better suggestion.

KILL ALL THE WOMEN!!!

நமது தளத்துக்கு வருகை தந்துள்ள  சகோதரி GOLDA அவர்களை கர்த்தரின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்!
 
தங்களின் பதிவுகளை  பார்க்கும்போது சகோதரிமார்களுக்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்ககூடாது என்று கருதுவதுபோல் தெரிகிறது. கட்டுப்பாட்டினால் எதையும் சாதிக்க முடியாது எனபதுதான் எனது கருத்தும். என்றாலும் சகோ. எட்வின் அவர்கள் வேதத்தில் சொல்லபட்டிருக்கும் கருத்துக்களையே ஆலோசனையாக  முன்வைத்துள்ளார்கள்.    
 
பெண்களுக்கென்று சில கட்டுப்பாடுகளை சொல்லியிருக்கும் பவுல் அதற்க்கு சில காரணங்களையும் சொல்லியிருக்கிறார்
 
I தீமோத்தேயு 2:14 ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.

I கொரிந்தியர் 11:8
புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள்.
I கொரிந்தியர் 11:9 புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.

ரோமர் 7:௨ 
 புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்
 
இன்னும் அனேக வசனங்களில் பவுல் ஸ்திரிகளுக்கு புத்திசொல்லியிருக்கிறார். ஸ்திரிகளுக்கு ஒருவித ஆலோசனைகளை சொல்லியுள்ள வேதம் ஆண்களுக்கு வேறுபட்ட கட்டுப்பாடுகளை வழங்கியுள்ளது! தாங்கள் வேத வசனங்களுக்கு  கீழ்படிந்து நடக்க விரும்பினால் இவைகளை நாம் கருத்தில் கொள்ளதானே வேண்டும்? 
 
தாங்கள் எந்த கருத்தின் அடிப்படையில் இதை ஏற்க்கவில்லை என்று விளக்கினால் நாங்கள் விளங்கிகோள்ளவோ அல்லது அதற்க்கான விளக்கத்தை தரவோ வசதியாக இருக்கும்.

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 11
Date:
Permalink  
 

[I தீமோத்தேயு 2:14 ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்]

It's also written that, both men and women can be deceived by the devil, just as Eve was deceived.

2 Cor. 11:3 says, "But I am afraid, lest as the serpent deceived Eve by his craftiness, your minds should be led astray from the simplicity and purity of devotion to Christ."

[I கொரிந்தியர் 11:8 புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள்.
I கொரிந்தியர் 11:9 புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.]

It is also written:

11 Nevertheless, in the Lord woman is not independent of man, nor is man independent of woman. 12 For as woman came from man, so also man is born of woman. But everything comes from God.

[ரோமர் 7:௨ புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்]

It is also written:

I Corinthians 7:4
In the same way, the husband does not have authority over his own body but yields it to his wife. 5

Ephesians 5
21 Submit to one another out of reverence for Christ.

[தாங்கள் வேத வசனங்களுக்கு கீழ்படிந்து நடக்க விரும்பினால் இவைகளை நாம் கருத்தில் கொள்ளதானே வேண்டும்? ]

Very True. Evil Eve talked to the devil and ate the fruit with her MOUTH. Today's evil women, talk to others in the church and even talk to God in the church with their MOUTH. Extremely evil women preach to men with their mouth. In OT, many verses ask us to remove evil from ourselves. That is why I say evil women must be stoned to death.

[தாங்கள் எந்த கருத்தின் அடிப்படையில் இதை ஏற்க்கவில்லை என்று விளக்கினால் நாங்கள் விளங்கிகோள்ளவோ அல்லது அதற்க்கான விளக்கத்தை தரவோ வசதியாக இருக்கும்.]

Unless God opens the eyes, one cannot see the truth. I would ask you to ask God first.

Anyway, some good links on the topic:

Women in Ministry
http://endtimespropheticwords.wordpress.com/2007/09/30/women-in-ministry-and-female-spiritual-authority/

God asked Lee Grady to defend women
http://www.themordecaiproject.org/welcome/about/about-lee-grady

Ten Lies Church Tells Women!
http://www.etpv.org/2009/tenlies.html

God's word to women.
http://godswordtowomen.org/







__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Golda wrote:

Unless God opens the eyes, one cannot see the truth. I would ask you to ask God first.



சகோதரி  அவர்களே வேதத்தில் இருபுறமும் கருத்து சொல்லும் வசனங்கள் அநேகம் உண்டு என்பதும் அவ்விடையத்தில் சரியான தீர்வு தேவனிடமே உள்ளது என்பதிலும் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.
 
இப்பொழுது நான் சொல்லவந்த கருத்து என்னவெனில்  பெண்களின் தன்மைக்கு
ஏற்ப்ப சில ஆலோசனைகளை சொன்ன பவுல் ஆண்களுக்கும் அனேக ஆலோசனைகளை சொல்லியிருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. அவைகளை கைகொள்ளுவது பற்றியும் வேத வசனத்தின் அடிப்படையில் வாழ்வது பற்றியுமே இங்கு நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
 
இப்பொழுது நான் தங்களிடம் கேட்பது,  சகோதரிகளுக்கு என்று பவுலால் சொல்லப்பட்ட கட்டளைகளையே சகோ. எட்வின் அவர்கள் குறிப்பிட்டிருந்தார் நீங்கள் பவுலின் உபதேசத்துக்கு மதிப்புகொடுத்தால் அதை கைகொள்ள வேண்டியது அவசியமா இல்லையா?
 
எட்வின் wrote 
////சகோதரிகளுக்கு எனது ஆலோசனை என்னவெனில்
(1 ) ஸ்திரிகள் சபைகளில் பேச கூடாது
(2 ) ஆண்களுக்கு உபதேசம் செய்ய கூடாது
(3 ) அமைதலோடு இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்
(4 ) பெண்கள் ஆலயத்தில் ஆராதனையில் முக்காடு இடவேண்டும் ]////
 
இது தொடர்பான வேத வசனம்:-

I தீமோத்தேயு 2:12
உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
கொரிந்தியர் 14:34 சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
I கொரிந்தியர் 11:10
ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.

போன்ற பவுலின் இந்த ஆலோசனைகளையே எட்வின் அவர்கள் எழுதியுள்ளார்கள் அதற்க்கு பதிலளித்த தாங்கள்  
 
"என்னிடம் மேலான ஆலோசனை இருக்கிறது "எல்லா ஸ்திரிகளையும் கொன்றுவிடலாம்"   
 
என்று பதிவிட்டுள்ளீர்கள்.  இதை நாங்கள் எப்படி எடுத்துகொள்வது?
 
பவுலின் ஆலோசனையை கைகொண்டு நடப்பதைவிட ஸ்திரிகளை கொலை செய்துவிடலாம் என்று சொல்கிறீர்களா?   
அல்லது
வேத ஆலோசனையை தள்ளி அதற்க்கு  மாறாக இன்னொரு அல்லோசனையை தேவன் தருவார் என்று கருதுகிறீர்களா?
அல்லது 
இந்த ஆலோசனைக்கும் எதிராக சில வசனங்கள் இருக்கிறது என்று  எடுத்து சொல்ல விரும்புகிறீர்களா?   

தங்களின் விளக்கம் தேவை!  வசனம்தானே நமக்கு அளவுகோல்!  

இப்பொழுது ஒரு சிறிய நடைமுறை காரியத்துக்கு தங்களிடம் பதிலை 
எதிர்பார்க்கிறேன்!
 
சமீப நாட்களில் தொலைகாட்சிகளில் பல ஸ்திரிகள் பிரசங்கம் செய்வதும் பாடல்களில் பல சகோதரிமார்கள் கலர் கலராக டிரஸ் செய்து உலா வருவதும் வாடிக்கை ஆகிவிட்டது.
 
"ஆண்களுக்கு பெண்கள் மீது ஈர்ப்பு உண்டு" அது இயற்க்கை!  அது  அனேக பழய ஏற்பாட்டு சம்பவங்கள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. தேவனின் இருதயத்து ஏற்ற தாவீதுவே மற்றும் சாலமன் போன்றோர் ஒரு முன்
 உதாரணம்.
 
இந்நிலையில்  தாவீது போன்ற ஒருவர்  டி வியை பார்த்து அந்த ஸ்திரியை இச்சித்தால் இங்கு இரண்டு காரியம் நடக்கிறது.
 
1.  "ஸ்திரியை இச்ச்யோடு பார்க்கிறவன் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று" தொடர்ந்து 
அவ்வாறு இச்சித்த விபச்சாரகாரன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது இல்லை. 
 
2. "இடறல் உண்டாவது சகஜம் ஆனால் இடறல் யாரால் உண்டாகிறது அவர்களுக்கு ஐயோ"            
என்ற வசனத்தின் அடிப்படயில் டிவியில் தோன்றி இடரலை ஏற்ப்படுத்திய பெண்ணுக்கு ஐயோ
 
ஆக இரண்டுபேரும் தண்டனை பெற நேரிடும்.  இதற்க்கு அடிப்படை காரணம் யார்?
 
அன்று பத்சேபாள் தனது வீட்டுக்கு பக்கத்தில் நல்ல மறைவான இடத்தில் குளித்திருந்தாள் தாவீதுக்கு அவள் கண்ணில் பட்டிருகவும் மாட்டாள்.  அவள் புருஷன் உரியா செத்திருக்கவும் மாட்டான் தாவீது வாழ்வில் அவ்வளவு பெரிய களங்கம்  வந்திருக்கவும் செய்யாது.
 
இதற்க்கெல்லாம் அடிப்படை காரணம் யார்? 
 
எனவேதான பவுல் இவ்வாறு சில அறிவுரைகளை சொல்லி சென்றிருக்கிறார் என்று நான் கருதுகிறேன். 
 
பெண்கள் ஊழியம் செய்வதற்கோ அல்லது அவர்கள் தேவனால் வல்லமையாக பயன்படுத்தபடுவதர்க்கோ நான் எதிரானவன் அல்ல ஆனால் அவர்கள் பிறருக்கு இடரலை ஏற்ப்படுத்தாத சகோதரிமார்கள்  கூடுகை சிறுபிள்ளை ஊழியங்கள் கூடுகை  மற்றும் எழுத்து போன்ற திரை மறைவான ஊழியங்களை செய்யலாம் என்பது எனது கருத்து.
 
தங்களின் கருத்தில் உள்ள நியாயத்தை தாராளமாக பதிவிடலாம்.  



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 11
Date:
Permalink  
 

[அன்று பத்சேபாள் தனது வீட்டுக்கு பக்கத்தில் நல்ல மறைவான இடத்தில் குளித்திருந்தாள் தாவீதுக்கு அவள் கண்ணில் பட்டிருகவும் மாட்டாள். அவள் புருஷன் உரியா செத்திருக்கவும் மாட்டான் தாவீது வாழ்வில் அவ்வளவு பெரிய களங்கம் வந்திருக்கவும் செய்யாது.]

Bathsheba was abused and you accuse her??

You are the man – God accused David and not Bathsheba.

David accepted his mistake, got punished by God and shed tears in Psalm 51.
Then what did he do? He didn’t accuse Bathsheba but rather he consoled her and I think his guilty conscience made Solomon, son of the woman he took by abusing his power, as his heir.

This would not have happened if David was not lazy and went to the war he was supposed to go. This would not have happened if he exercised some self control and crucified his flesh. 

David was enjoying the breeze in the roof of his tall palace. Bathsheba was taking bath in her home. May be it had an open roof. That’s the way bathrooms are, even now in many Indian villages and small towns. Also Bathsheba might have thought all men including the King went to war and so might have taken a free bath!

[இந்நிலையில் தாவீது போன்ற ஒருவர் டி வியை பார்த்து அந்த ஸ்திரியை இச்சித்தால் இங்கு இரண்டு காரியம் நடக்கிறது.]

When someone knows that they are a "David" they must try to become a Joseph.

In NT, the rules are still very strict. Lod Jesus’s advise for men who have trouble with their eyes is in Matthew 5:28,29. He just asked them to tear out their eyes. He didn’t ask them to put the blame on women or to advise women.

[. "இடறல் உண்டாவது சகஜம் ஆனால் இடறல் யாரால் உண்டாகிறது அவர்களுக்கு ஐயோ"
என்ற வசனத்தின் அடிப்படயில் டிவியில் தோன்றி இடரலை ஏற்ப்படுத்திய பெண்ணுக்கு ஐயோ ]

That is ridiculous.

If someone has problems even in watching decently dressed women , then I think they are in serious trouble. May be they are some sickos or psychos. They need help.

Ministry done by the spirit of God will make the  devil uncomfortable. So if some men don't like such ministry, may be they are in need of some deliverance.

50% of the population is women. May be you switch off the TV and do not even see the decently dressed women but there are women everywhere - on the roads, in the bus, inside hospitals, shops and even in your home! How can you avoid all these women?

[ஆண்களுக்கு பெண்கள் மீது ஈர்ப்பு உண்டு" அது இயற்க்கை! ]

That is a very interesting revelation. There is one more important revelation. That is, women are attracted to men. This is called biology.

[எனவேதான பவுல் இவ்வாறு சில அறிவுரைகளை சொல்லி சென்றிருக்கிறார் என்று நான் கருதுகிறேன். ]

If our dear apostle Paul happen to read all these things you people write about women, I’m 100% sure that he will shed rivers of tears. He never would have imagined his words would be this much misused and used against women.

[பெண்கள் ஊழியம் செய்வதற்கோ அல்லது அவர்கள் தேவனால் வல்லமையாக பயன்படுத்தபடுவதர்க்கோ நான் எதிரானவன் அல்ல ஆனால் அவர்கள் பிறருக்கு இடரலை ஏற்ப்படுத்தாத சகோதரிமார்கள்  கூடுகை சிறுபிள்ளை ஊழியங்கள் கூடுகை  மற்றும் எழுத்து போன்ற திரை மறைவான ஊழியங்களை செய்யலாம் என்பது எனது கருத்து]

I also have the same opinion  about men. Let them do ministry to children or to other men, so that they do not become stumbling blocks to women.

As homosexuality is getting popular let us not even allow men to preach men and women to preach women.

[தங்களின் கருத்தில் உள்ள நியாயத்தை தாராளமாக பதிவிடலாம்.  ]

We see a lot of women doing ministry in OT & NT. So if a verse appears to be contradicting , we must do a prayerful study and research on that verse and find out what exactly that means and why it was written that way.
To help you with the research, I gave you some links. Read them with an open mind.

If one has the mind of Christ, they will come to the right conclusions.

Look at Romas 16, Paul was greeting so many women, he was appreciating many for their ministry. If Paul wanted women to remain silent, why was he appreciating them?Why he wants them to pray and prophesy in the church? 

 Lord Jesus's ministry team included women!

Luke 8:1
After this, Jesus traveled about from one town and village to another, proclaiming the good news of the kingdom of God. The Twelve were with him, 2 and also some women who had been cured of evil spirits and diseases: Mary (called Magdalene) from whom seven demons had come out; 3 Joanna the wife of Chuza, the manager of Herod’s household; Susanna; and many others. These women were helping to support them out of their own means.

Lord Jesus was a friend of a family which had two unmarried women- Mary & Martha!


Neither our Lord nor Apostle Paul were putiing any restriction for women and used them mightily in ministry.

In Christ there is no male and female. Both men and women are made priests and kings by the blood of Jesus. Both men and women are called to preach the gospel to the unsaved souls and to fulfill the great commission. Preventing/ objecting /resisting/ criticizing women in ministry is imo resisting the work of the Holy Spirit of God. Only the devil will do that.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
மந்தையை சிதறடிக்கும் மேய்ப்பர்கள், ஊழியர்கள்!
Permalink  
 


சகோதரி  அவர்களே! 
 
வேத புத்தகத்தில் ஸ்திரிகளின் மேலுள்ள இச்சையால்  தங்கள் மேன்மையான நிலையை இழந்துபோனவர்கள் வரிசையில் சாலமோன், சிம்சோன், சிம்ரி, ஆகாப் போன்ற அநேகர் உள்ளனர். நான் உதாரணமாக தாவீதை சுட்டினேன்.  பதேச்பாள் குளிப்பதை பார்த்து தாவீது இச்சித்தான் ஆனால் தாவீது குளிப்பதை பார்த்து எந்த ஸ்திரியும் இச்சிக்கமாட்டாள். எனவே  இச்சை சம்பந்தமான விஷயங்களில் தவறு என்பது ஆண்களிடம்தான் என்ற தங்களின் கருத்து சரியானதுதான் ஆனால் "திருடனின் பண்பு  திருடுவதுதான்" அவன்  திருட்டுக்கு தண்டனை உண்டு! ஆகினும் நாம் முடிந்தவரை  நமது வீட்டை பூட்டி பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பல்லவா?    

நான் வேத வசனங்கள் அடிப்படையில்தான் எனது பதிவுகளை தருகிறேன்., கீழ்கண்டவை பவுல் சபையில் உள்ள ஸ்திரிகளுக்கு கூறியுள்ள மிக தெளிவான
ஆலோசனை   
 
I கொரிந்தியர் 14:34 சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்
 
I கொரிந்தியர் 14:35  ; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே
 
 I தீமோத்தேயு 2:11 ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.

I தீமோத்தேயு 2:12
உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்குநான் உத்தரவு கொடுக்கிறதில்லை; 
 
தீத்து 2:4 தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு ............... 2:5 தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி,
 
"ஸ்திரிகள் வீட்டில் தரித்திருக்கவேண்டும், உபதேசம்பண்ண அதிகாரம் இல்லை"  மற்றும்  "சபைகளில் ஸ்திரிகள் பேசாமல் இருக்க வேண்டும் பேசும்படி அவர்களுக்கு உத்தரவில்லை அது அயோக்கியாமாக இருக்கும்"
 
உள்ளங்கை நெல்லிக்கனிபோல தெளிவாக இருக்கும் இந்த வார்த்தைகளுக்கான தங்கள் பதில் மற்றும் விளக்கம் என்னவென்பதை மட்டும் தரும்படி அன்புடன் கேட்கிறேன். அதன் பிறகுதான் எனது சரியான  கருத்தை முன்வைக்க முடியும்! .  
 
பவுல் சில ஸ்திரிகளுக்கு வாழ்த்து சொல்லி நிரூபம் எழுதியிருந்தால் அவர்கள் எவ்வித ஊழியம் செய்திருப்பார்கள் என்பது இங்கு வெளிச்சம் அவரது கட்டளையை  மீறி ஊழியம் செய்தவர்களுக்கு அவர் நிச்சயம் வாழ்த்து சொல்லியிருக்கமாட்டார் என்றே நான் கருதுகிறேன்.
 
என்னை பொறுத்தவரை வேத வசனத்தில் அடிப்படையில் இவைகளையே ஏற்க்க முடியும். ஒருவேளை கர்த்தர் விசேஷமாக சிலரை அழைத்து  தனது பணிக்கென்று அபிஷேகம் செய்தால் அதில் இடைபடுவது நமக்கு தகுதியல்ல.
 


-- Edited by SUNDAR on Monday 20th of December 2010 03:04:38 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 11
Date:
RE: மந்தையை சிதறடிக்கும் மேய்ப்பர்கள், ஊழியர்கள்!
Permalink  
 


Sorry, not interested in further discussion. Do not want to bang my head on a brick wall!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Golda wrote:

Sorry, not interested in further discussion. Do not want to bang my head on a brick wall!



மிக்க நன்றி சகோதரியே.

பல ஊழியக்கார சகோதரிகளிடம் நான் கண்ட கசப்பான அனுபவம் என்னை இவ்வாறு எழுத தூண்டுகிறது. மற்றபடி இங்கு எனது முடிவான கருத்து என்ன வேன்பதோ அல்லது தங்களின் கருத்து என்னவேன்பதோ முக்கியமல்ல. நாளை தேவனின் முன்னால்போய் நியாயதீர்ப்புக்கு நிற்கும்போது, எழுதி கொடுக்கப்பட்ட வார்த்தைகளின் அடிப்படையில் அவரால் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடை சொல்லும் அளவுக்கு நமது இருதயம் சுத்தமாகவும் தெளிவாகவும் இருந்தால் எவ்வித ஊழியத்தையும் செய்யலாம் என்பதே எனது கருத்து! 
 
இந்த உண்மையை   மனதில் இருத்தி, தன்னை தானே சோதித்து  நியாயம் தீர்த்து, பிறரின் மனம்திரும்புதல் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பிறருக்காக பரிதபிப்போடு செய்யப்படும் யாருடைய ஊழியமும் தேவனால் அங்கீகரிக்கப்படும் என்றே நான் கருதுகிறேன்.  ஏனெனில் ஒருவர்  நன்மை ஒன்றையே நோக்கமாக கொண்டு செய்யும் எந்த ஒருசெயலையும் பார்த்து யாரும் இடறினால் அதற்க்கு அவர் பொறுப்பல்ல!       
 
கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறவர்!
 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard