இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மந்தையை சிதறடிக்கும் மேய்ப்பர்கள்-II (பணமே பிரதானம்)


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
மந்தையை சிதறடிக்கும் மேய்ப்பர்கள்-II (பணமே பிரதானம்)
Permalink  
 


இந்த செய்தி மந்தையை சிதறடிக்கும் மேய்ப்பர்கள், ஊழியர்கள்!  என்ற   திரியில் குறிப்பிட்டுள்ள சகோதரியின் விசுவாசத்தை இடற வைத்த  இரண்டாவது குற்றச்சாட்டு.   
 
"எங்கள் வீட்டுக்கு மாதமாதம்  குறிப்பிட்ட  தேதி ஒரு பாஸ்டர் வருவார். வந்து ஒரு ஜெபம் செய்துவிட்டு  எங்களிடமிருந்து ஒரு காணிக்கையை பெற்றுக் கொண்டு செல்வார்.  ஒருநாள் ஒரு கஷ்டபட்ட குடும்பத்துக்கு ஜெபிபதர்க்காக அவரை அழைத்தேன், நான் அழைத்ததற்காக ஒருமுறை வந்து ஜெபித்த அவர், அவர்கள் பணம் எதுவும் கொடுக்காத காரணத்தில் பின்னர் அந்த வீட்டைபோய் எட்டிகூட பார்ப்பது இல்லை. இதேபோல் பணம்தராத இன்னொரு வீட்டுக்கும் அவர்  வர மறுத்துவிட்டார். ஆனால் எங்கள் வீட்டுக்கு மட்டும் தவறாமல் பணம் வாங்க வந்துவிடுவார். எனது வீட்டுகாரரிடம் அவருக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த நான் பணத்தையே குறிவைத்து வரும் வரும்  அந்த  பாஸ்டருக்கு  போன்பண்ணி எங்கள் வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டேன். "
 
எனது கருத்து:
விசுவாசிகளே: எலியாவுக்கு உணவளித்த விதவையை கருத்தில் கொள்ளுங்கள். ஊழியர்களுக்கு காணிக்கை கொடுப்பது நிச்சயம் ஒரு நல்ல செயல். ஆனால் நீங்கள் கொடுக்கும் அந்த காணிக்கையை தேவனுக்காக  சரியான விதத்தில் பயன்படுத்தும் நபருக்கு அதை கொடுங்கள். கொடுக்கும் காணிக்கையை  தனது சுய மேன்மைக்காகவும் கார் வாங்கி ஊர் சுற்றவும் ஆடம்பரமாக செலவு செய்யவும் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு கொடுப்பதை தவிர்த்து  விடலாம்  பலர் போடுவது பணம்பரிபதர்க்கான  வேஷமே அதை நம்பாதீர்கள். பணத்தை மட்டுமே எதிர்பார்த்து ஜெபத்தை பணத்துக்கு வியாபாரம்செய்யும்  பாஸ்டர்களை  இதுபோல் இனி இங்கு வராதீர்கள் என்று சொனாலும் தவறில்லை என்றே கருதுகிறேன். காணிக்கை கொடுக்கும் குடும்பததின் மீது  மட்டுமல்ல  சிறிய அற்பமான ஒரு குடும்பததின்மீது கூட, உண்மையான அக்கறையும் பாரத்தோடுகூட  கரிசனையும் உள்ளவர்களை தெரிவு செய்து தங்கள் காணிக்கையை வழங்கலாம். பைபிளை தூக்கிக்கொண்டு பாஸ்டர் என்று வருபவர்கள் எல்லோரையுமே அழைத்து உபசரிக்கலாம் ஆனால் பணம் கொடுப்பது பார்த்து கொடுங்கள்.          
 
பாஸ்டர்களே:
ஒரு வீட்டில் சென்று அமர்ந்ததும் இந்த வீட்டில் இன்று எவ்வளவு தேறும் என்ற நோக்கில் வீட்டு விஜயம் செய்யாதீர்கள். விசிட் செய்யும் வீடுகளில் வீட்டுக்காரர் வேலை /சம்பளம் போன்றவற்றை விசாரிப்பதை தவிர்க்கவும்.  நீங்கள் வீடுகளுக்கு விசிட் போகும் முன் யாராவது உப பாஸ்டரை அனுப்பி வீடுக்கு வரும் பாஸ்டர் களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று போதனை செய்ய சொல்லாதீர்கள் (இதுபோன்றதொரு கேடானநிலையை நானே பார்த்திருக்கிறேன்) மேலும் மாத மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில்  சென்று மாமூல் வாங்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள் அது அநேகருக்கு இடரலை  ஏற்ப்படுத்துகிறது மேலும் பணம் எதுவும் தேறாத ஏழை வீடுகளில் விசிட் செய்வதை வீணாக எண்ணவேண்டாம். ஆண்டவர்
"சிறியரில் ஒருவருக்கு செய்த உதவியே தனக்கு செய்ததாக" கூறியிருக்கிறார்.
 
பணம் வாங்கும் குடும்பங்களுக்கு உண்மையாக பாரத்தோடு ஆண்டவர் சமூகத்தில் விண்ணப்பித்து அவர்களின் குறைகள் குற்றங்கள் எதுவும் இருக்குமாயின் தயங்காமல் எடுத்து சொல்லுங்கள். பணம் தருகிறார்கள் என்பதற்காக அவர்களின் வசனத்துக்கு விரோதமா போக்கை கண்டு கொள்ளாமல் விடாதீர்கள் அது தேவனுக்கு நிச்சயம் பிடிக்காது    மறுமைக்கு பயனுள்ள காரியத்தை தள்ளிவிட்டு இம்மைக்கு பயனுள்ள காரியத்தை மாத்திரம்
செய்யாதீர்கள் அவ்வாறு செய்பவர்கள் பரிதபிக்கபட்டவர்கள் என்று வேதம் சொல்கிறது.   
 
முழு நேரமும் ஆண்டவரின் ஊழியங்களை செய்யும் சில சுவிசேஷக பாஸ்டர் களுக்கு வீட்டுவிசிட்டில் கிடைக்கும்பணமே அவர்கள் குடும்ப தேவையை பூர்த்தி செய்யும் அடிப்படை வருமானமாக இருக்கலாம். எனவே தாங்கள் பணம் பெறுவதில் தவறில்லை ஆனால் பெற்றுக் கொண்ட ஒவ்வொரு காசும் எவ்வாறு செலவளிக்கப்படுகிறது என்பதை கர்த்தர் கவனிக்கிறார் என்ற பயத்தோடு காரியங்களை செய்யுங்கள்! தவறானவழியில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை அறிந்துவிட்ட இடங்களில் பணம் வாங்காதீர்கள். 
 
முக்கியமாக தங்கள் வாழ்க்கைக்கு உத்திரவாதி நாம் பரலோக தேவ்னேயன்றி இங்குள்ள பாவியான மனுஷன் அல்ல என்பதை கருத்தில் கொண்டு, தேவனை முன்வைத்து ஜெபித்து காரியங்களை செய்யுங்கள். அப்பொழுது எந்த வீடடுக்கு விசிட் போகலாம் எந்தவீட்டுக்கு போககூடாது என்பதை ஆவியானவர் தங்களுக்கு நிச்சயம் உணர்த்துவார்.
 
தள சகோதரர்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளின் அடிப்படயில் இது சம்பந்தமான  மேலும் ஏதேனும்  ஆலோசனை இருந்தால் வழங்கலாம்




-- Edited by SUNDAR on Wednesday 22nd of December 2010 11:35:44 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: மந்தையை சிதறடிக்கும் மேப்பர்கள் - பணமே பிரதானம்!
Permalink  
 


இன்று  உலகில்  பணம்தான்  எல்லா  இடங்களிலும்  முதலிடத்தை பிடித்துள்ளது. மாம்ச உலகில் ஒரு காரணத்தின் அடிப்படையில் என்றால், ஆவிக்குரிய உலகில் வேறொரு காரணத்தின் அடிப்படையில் எல்லோராலுமே பணம் தீவிரமாக  சேரிக்கபடுகிறது.  காரணம்தான் வேறு ஆனால்  திரட்டப்படுவது என்னவோ அதே பணம்தான்.
 
பணம் என்பது சுலபமாக மனிதனை பாழ்படுத்திவிடும்  ஒன்றாக இருக்கிறது. பணம் சேர சேர தானாகவே மனிதனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொம்புமுளைக்க
துவங்கிவிடும். பணத்தையே முன்வைத்து ஊழியம் செய்யும் பல பாஸ்டர்களை  பார்க்க முடிகிறது. பணம் கலக்ட் பண்ணுவதற்கென்றே விசேஷமான வேஷததுடன் இவர்கள் வீடு தோறும் அலைகிறார்கள்.
இவர்களிடம் உண்மையான ஆத்தும பாரமோ அல்லது மந்தைக்காக திறப்பில் நிற்று ஜெபிக்கும் தன்மையோ கிடையாது.  ஆண்டவரால் இவர்கள் பலமுறை கடிந்து கொண்டாலும் தங்கள் பிடரியை கடினப்படுத்தி தங்கள் நோக்கங்கள் நிறைவேறவே ஊழியம் செய்கின்றனர்.  
 
கிரிஸ்த்தவத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் பற்றி பிடித்து கொண்டு வருகிறது என்றே நான் கருதுகிறேன். ஆகினும் ஒருசில உத்தம ஊழியர்கள் அங்கொன்றும் இங்கொன்மாக கர்த்தர் எழுப்பி வருவதை மறுக்க முடியாது. 
 
முக்கியமாக ஆரம்பத்தில் மிக மிக அர்ப்பணிப்புடன் தங்கள் ஊழியத்தை துவங்கும் அநேகர் நாளடைவில் உலகத்தோடு ஒத்து போய்விடுகின்றனர். அதுவும் திருமணம் குழந்தைகள் என்று வந்தவுடன் அவர்கள் தேவைகளை பூர்த்திசெய்ய தங்கள் மாம்ச பெலத்தை  மற்றும்  மூளை திறமையை பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர்.
 
கர்த்தர்தாமே ஒவ்வொருவரும் உண்மையாய் தேவனுக்கு ஏற்றபடி  நடந்து, தேவ ராஜயத்தை சுதந்தரிக்க  வழி செய்யவேண்டி மன்றாடுவோம்!


__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard