இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிருஷ்டிப்பு இடைவெளி


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
சிருஷ்டிப்பு இடைவெளி
Permalink  
 


சிருஷ்டிப்பு இடைவெளி

நூற்தலைப்பு ஆதியாகமம்

ஆசிரியர் – எம்.எஸ். வசந்தகுமார் (பிரபல வேத ஆராய்ச்சியாளர் – இலங்கை)


வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரி



ஆதியாகம புத்தகத்தின் படைப்பு குறித்து பல விதமான சர்ச்சைகள் கிறிஸ்தவ உலகில் உலா வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் சிருஷ்டிப்பு இடைவெளி பற்றியது. இக்கட்டுரை பிரபலமாக இருக்கும் கருத்துக்களை (நேர் மற்றும் எதிர் கருத்துக்களை) வேதாகம சத்தியத்தில் ஆராய்கின்றது.



பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகத்தின் முதல் அதிகாரத்தின் முதலிரு வசனங்கள் பற்றிய இன்றைய கிறிஸ்தவ உலகில் இருக்கும் ஒரு சர்ச்சை இவ்விரு வசனங்களுக்குமிடையே நீண்டகால இடைவெளி இருக்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றியதாகும். சிருஷ்டிப்பின் கால இடைவெளியாகக் கருதப்படும் இவ்விரு வசனங்களுக்கிடையிலான கால இடைவெளி பற்றிய கருத்து, ஸ்கொட்லாந்துநாட்டைச் சேர்ந்த தோமஸ் சாள்மர் என்பவரினால் 1814 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ’இக்கருத்து இறையியல் காரணங்களுக்காக அல்ல. மாறாக அக்காலத்தைய புவியியல் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புக்களின் நிமித்தம் உருவாக்கப்பட்ட ஒரு விளக்கமாகும்” (01) நாம் வாழும் பூமி கோடிக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது எனும் அக்காலத்தைய விஞ்ஞான கண்டுபிடிப்புடன் ஒத்துப்போக வைப்பதற்காக, அதாவது பூமி கோடிக்கணக்கான ஆண்டுகள் பழையானதுயானது என்றே வேதாகமும் கூறுகின்றது என்பதைக் காண்பிப்பதற்காக தோமஸ் சாள்மர் ஆதியாகமம் முதல் அதிகாரத்தின் முதலிரு வசனங்களுக்குமிடையே நீண்டகால இடைவெளி இருக்கின்றது என்னும் புதிய விளக்கத்தை உருவாக்கி, அக்காலத்திலேயே புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போன்ற மாற்றங்கள் பூமியில் ஏற்பட்டன என கூறினார். இவரது கருத்து 1876 ஆம் ஆண்டு ஜோர்ஜ் பெம்பர் என்பார் எழுதிய ”புவியின் ஆரம்பகால யுகங்கள்” என்னும் தலைப்பிலான ஆங்கில நூலில் விரிவுபடுத்தப்பட்டன. அதன் பின்னர் 1917 ஆம் ஆண்டு ஆங்கில மொழியில் வெளிவந்த ஸ்கோஃபீல்ட் வேதாகமக் குறிப்புகளில் இக்கருத்து சேர்க்கப்பட்டமையால், இன்று மக்கள் மத்தியில் பிரபல்யமான ஒரு கருத்தாக மாறிவிட்டது.





ஆதியாகமம் முதல் அதிகாரத்தின் முதலிரு வசனங்களுக்குமிடையே கால இடைவெளி இருக்கின்றது என கருதுபவர்கள் முதலாம் தேவனுடைய ஆரம்ப சிருஷ்டிப்பைப் பற்றியும் இரண்டாம் வசனம் தேவனுடைய ஆரம்ப சிருஷ்டிப்புக்கு ஏற்பட்ட பாதிப்பின் விளைவு பற்றியும் அறியத்தருவதாகவும், இவ்விரு வசனங்களுக்குமிடையே பிசாசின் வீழ்ச்சி ஏற்பட்டதென்றும் இதனாயேயே பூமி பாதிக்கப்பட்டு ”ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிற்று’ என்றும் விளக்குகின்றனர். இவர்கள் தமது கருத்தை நிரூபிப்பதற்காக 2 ஆம் வசனத்திலுள்ள ”இருந்தது” என்பதை ”ஆகியது” என மாற்றியுள்ளனர். (ஸ்கோஃபீல்ட் ஆங்கில வேதாகமத்தில் இந்த மொழிபெயர்ப்பு மாற்றத்தினை அவதானிக்கலாம்) எனினும் பழைய ஏற்பாட்டு மூல மொழியான எபிரேய மொழி இலக்கணத்தில் “இருந்தது“ என்பதை ஆகியது என மொழிபெயர்க்க முடியாது. (02) “இருந்தது” என்பதே சரியான மொழிபெயர்ப்பாகும். (03) இரண்டாம் வசனத்தில் இருந்தது எனும் பதம் முதலாம் வசனத்திலுள்ள குறிப்பிடப்பட்டுள்ள பூமி ஆரம்பத்தில் எத்தகைய நிலையில் இருந்தது என்பதையே அறியத் தருகின்றது. எனவே, அதை பூமிக்கு ஏற்பட்டதாக கூறப்படும் பாதிப்பின் விளைவை விளக்கம் வண்ணம் ”ஆகியது” என நம்மால் மாற்ற முடியாது. அப்படியானால் தேவன் படைத்த பூமி ஏன் ஒழுங்கற்றும் வெறுமையாயுமாய் இருந்தது என நாம் வினவலாம். இதற்கு இவ்விரு வார்த்தைகளினதும் சரியான அர்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். ”தேவன் பூமியை சிருஷ்டித்தபோது அதாவது சிருஷ்டித்த நாளில் இப்போது இருக்கும் ஒழுங்குமுறை பூமியில் இருக்கவில்லை. (04) அதாவது மலைகள், பள்ளத்தாக்குகள், நிலப்பரப்பு, சமுத்திரம், நதிகள் என்பன இருக்கவில்லை. இவை ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேவனுடைய ஆறு நாட்களின் சிருஷ்டிப்பின் செயல்களினால் ஏற்பட்டதாகும். இவை இல்லாத நிலையிலேயே ஆதியாகமம் 1:2 ஒழுங்கின்மையாக குறிப்பிடப்பட்டுள்ளது.



அதேசமயம் பூமியில் எதுவும் இருக்கவில்லை. அதாவது மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், செடி, கொடிகள் எதுவும் இருக்கவில்லை. ”அது குடியிருப்பற்று வெறுமையாய் இருந்தது” (05) தேவனுடைய ஆறு நாட்களின் சிருஷ்டிப்பு செயல்களே வெறுமையை நிரப்பின. எனவே பூமியானது ஒழுங்கின்மையும், வெறுமையாயும் இருந்தது எனும் வார்த்தைகள் ”தேவனுடைய ஆறு நாட்களின் சிருஷ்டிப்பு செயல்களுக்கு முன்பதாக முதலாவது நாளில் பூமி இருந்த அதன் ஆரம்ப நிலை பற்றிய விபரணமாய் இருக்கின்றதே தவிர அவை அழிவினால் ஏற்பட்ட பற்றிய விபரணம் அல்ல(06)



தேவன் பூமியை வெறுமையாய் இருக்க சிருஷ்டிக்கவில்லை” என ஏசாயா 45:18 கூறுவதை ஆதாரமாகக் கொண்டு சிலர் ஆதியாகமம் 1:2 இல் வெறுமாயாயிருக்கும் பூமி தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட பூமியல்ல. மாறாக பிசாசின் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்ட பூமி என கூறுகின்றனர். இவர்கள் ஏசாயா 45:18 ஐ சரியாக விளங்கிக் கொள்ளாதமையாலேயே இவ்வாறு கூறுவதற்கான காரணமாகும். ஏசாயா 45:18 தேவன் பூமியை சிருஷ்டித்த நோக்கத்தை அறியத் தருகின்றது. பூமியை வெறுமையாய் இருக்க சிருஷ்டியாமல் அதை குடியிருப்புக்காக சிருஷ்டித்ததாகவே ஏசாயா 45:18 கூறுகின்றது. பூமியை சிருஷ்டிப்பதில் தேவனுக்கிருந்த இந்நோக்கம் ஆறு நாட்களாக அவருடைய சிருஷ்டிப்பு செயல்களில் நிறைவேறியுள்ளது. ஆதியாகமம் 1:1-2 சிருஷ்டிப்பின் ஆரம்ப நிலை பற்றியே கூறுகின்றது. அவருடைய சிருஷ்டிப்பு செயல்கள் ஆதியாகமம் 1:1-2 இலேயே முடிவடைகின்றது. ” ஆதியாகமம் முதல் 2 ஆம் வசனம் முழுமையடையாத தேவனுடைய சிருஷ்டிப்பின் ஆரம்ப நிலை பற்றிய விபரணமாகும்(07). எனவே அதை சிருஷ்டிப்புக்கு ஏற்பட்ட பாதிப்பாக கருதமுடியாது. ”முதல் நாளில் சிருஷ்டிக்கப்பட்டவை தேவனுடைய ஒழுங்குபடுத்தும் செயலையும் வெறுமையை நிரப்பும் செயலையும் எதிர்பார்த்த வண்ணம் இருந்தன”(02). இத்தகைய ஆரம்ப நிலையைப்பற்றிய விபரணமாக ஆதியாகமம் 1:2 உள்ளது.



ஆதியாகமம் முதல் வசனத்தில் முதலிரு வசனங்களுக்கிடையில் பிசாசின் வீழ்ச்சி ஏற்பட்டது என்பதற்கு வேதாகமத்தில் எதுவித ஆதாரமுமில்லை. பிசாசினதும் அவனைச் சேர்ந்த தூதர்களினதும் வீழ்ச்சி பற்றி வேதம் குறிப்பிட்டுள்ள போதிலும் (யூதா 6, 2 பேதுரு 2:4) அச சம்பவம் நடைபெற்ற காலத்தை வேதாகமம் எமக்கு வெளிப்படுத்தவில்லை. எனவே அச்சம்பவத்தை ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் முதலிரு வசனங்களிடையே திணிப்பது தவறாகும். அதேசமயம் பிசாசின் வீழ்ச்சியினாலேயே பூமி பாதிக்கப்பட்டது என்பதற்கு வேதாகமத்தில் எவ்வித ஆதாரமுமில்லை. உண்மையில் மனிதனுடைய வீழ்ச்சியினாலேயே பூமி பாதிக்கப்பட்டது. (ஆதி 3:17-18) மேலும் பிசாசின் வீழ்ச்சியினால் பூமி பாதிக்கப்பட்டு ஒழுங்கின்மையும் வெறுமையுமாகியது என கூறுபவர்கள் தமது கருத்துக்கு ஆதாரமாகச் சுட்டிக் காட்டும் வெளிப்படுத்தல் 12 ஆம் அதிகாரத்தில் 2 முதல் 7 வரையிலான வசனங்கள் உலக ஆரம்பத்தில் நடந்த சம்பவத்தைப் பற்றியல்ல. அது உலக முடிவில் நடைபெறவிருப்பதைப் பற்றிய தீரக்கதரிசனமாகும். அவ்வதிகாரத்தின் கடைசி வசனம் (அதாவது வெளி 12:17) பிசாசினால் பூமியல்ல மாறாக அங்குள்ள மக்களே பாதிக்கப்படுவர் என்பதையும் அறியத் தருகின்றது. எனவே வெளிப்படுத்தல் 12:7-12 ஐ ஆதியாகமம் 1:1 இற்கும் 1:2 இல் நடைபெற்ற செயலாக கருத முடியாது.



ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் முதலிரு வசனங்களுக்கிடைப்பட்ட காலத்திலேயே பிசாசின் வீழ்ச்சி ஏற்பட்டதென கூறுபவர்கள் 2 ஆம் வசனத்திலுள்ள இருள் அழிந்து என்னும் பதத்தினை பாவத்துக்கான உருவகமாகவே கருதுகின்றனர். பிசாசின் வீழ்ச்சி பூமியை பாதித்து மட்டுமல்லாமல், பாவத்தையும் உலகில் கொண்டுவந்தது என்பதே இவர்களது தர்க்கமாகும். இது உண்மையாயின் ஆதியாகமம் முதல் அதிகாரத்தின் முதலாம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பூமி மட்டுமே பாவற்ற உலகமாக இருக்கும். அதற்குப் பின்னுள்ளவை அனைத்தையும் பாவ உலகமாகவே கருத வேண்டும். அப்படியாயின் 2 ஆம் வசனத்திற்குப் பிறகு தேவன் சிருஷ்டித்த எதையும் அவர் நல்லது எனக் கூறியிருக்க முடியாது. ஆனால் தேவனோ தான் அறு நாட்களில் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தபோது அவருடைய பார்வையில் அவையனைத்தும் நல்லதாகவே இருந்தன (ஆதி 1:31). பாவம் உலகில் இருந்தால் பாவத்தை வெறுக்கும் பரிசுத்தமான தேவனுடைய பார்வையில் உலகம் நல்லதாக தென்பட்டிருக்காது. உண்மையில் ”எல்லாவிதத்திலும் பாதிக்கப்படாத சிருஷ்டிப்பையே தேவன் நல்லது எனக் கண்டுள்ளார். (08). எனவே முதலிரு வசனங்களுக்குமிடையில் பிசாசின் வீழ்ச்சி ஏற்பட்டு உலகம் பாதிக்கப்பட்டது என நம்மால் கூறமுடியாது. அதேசமயம் தேவன் இவ்விடத்தில் இருளைப் பாவம் என்று கூறவும் இல்லை. மாறாக இருளுக்கு இரவு என்றே பெயரிடுகின்றார். (ஆதி 1:5) வேதாகமத்தின் சில இடங்களில் இருள் பாவத்திற்கும் தீமைக்கும் உருவகமாக உபயோகிக்கப்பட்டிருப்பதனால் இருள் என்று இடம்பெறும் இடங்களிலெல்லாம் அது பாவத்தைக் குறிக்கின்றது என கருதுவது தவறாகும். ஏனென்றால் இருள் எனும் பதம் சொல்லர்த்தமாக இரவின் நிலையை வர்ணிக்கும் பதமாகவே உள்ளது. ஆதியாகமம் 1:2 இலும் இருள் சொல்லர்த்தமாகவே உபயோகிக்கப்பட்டுள்ளது. இவ்விருளும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டதொன்றாகும் (ஏசா 45.7) இருளும் தேவனுடைய பார்வையில் நல்லதாகவே இருந்தது. ”அச்சமயம் வெளிச்சம் சிருஷ்டக்கப்படாமல் பூமி இருளில் நிறைந்திருந்தது” (05) ’வெளிச்சத்திற்கு எதிரானதே இருள். தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தபோது இருள் இருந்ததே தவிர பூமியில் பாவம் இருக்கவில்லை.



பிசாசின் வீழ்ச்சியினால் பூமி பாதிக்கப்பட்டது பற்றியே ஆதியாகமம் 1:2 கூறுகின்றது என தர்க்கிப்பவர்கள் தமது கருத்துக்கு ஆதாரமாக எரேமியா 4:23-26 ஐ சுட்டிக் காட்டுவதும் உண்டு. இவ்வசனத்தில் ஏரேமியா ‘பூமியைப் பார்த்தேன். அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது.’ என குறிப்பிட்டுள்ளார். (4.23) ஆதியாகமம் 1:2 இன் வார்த்தைகளையே எரேமியா உபயோகிப்பதனாலும் அவர் நியாயத் தீர்ப்பைப் பற்றி அறிவிப்பதனாலும் ஆதியாகமம் 1:2 இல் பிசாசின் வீழ்ச்சி காரணமாக பூமியின் மீது வந்த நியாயத் தீர்ப்பு பற்றியே எரேமியா 4:23-26 இல் சொல்லப்பட்டுள்ளது என இவர்கள் கருதுகின்றார்கள். எனினும், எதிர்காலத்தில் நடைபெறும் காரியங்களைப் பற்றியதான தீர்க்கதரிசன செய்திகளை இறந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்களாக கருதுவது சரியான வேதவியாக்கியன முறையல்ல என்பதை இவ்விடயத்தில் மறக்கலாகாது. எரேமியாவின் வார்த்தைகள் மக்கள் மனந்திருந்தாவிடில் அவர்கள் நாட்டுக்கு வரவிருக்கும் அழிவைப் பற்றியதே தவிர (எரே 3:27) அவை உலக ஆரம்பத்தின் நிலையைப் பற்றியதல்ல. மேலும் எரேமியா 24 முதல் 27 வரையிலான வசனங்களில் பர்வதங்கள், குன்றுகள், மனிதர்கள், பறவைகள், பயிர்வகைகள் என்பன பற்றியும் குறிப்பிடுகின்றார். ”இவையெல்லாம் ஆதி 1:1 இன் பூமியில் இருந்தவைகள் அல்ல என்பதால் எரேமியா தேவனுடைய ஆரம்ப சிருஷ்டிப்பைப் பற்றியே இவ்வசனங்களில் கூறுகிறார் என கருத முடியாது.



சார்ள்ஸ் டார்வினுடைய பரிணாமக் கோட்பாட்டை ஆதரிக்கும் இறையியலாளர்கள் ஆதி 1:1 இல் குறிப்பிடப்பட்டள்ள பூமியில் மனிதர்கள் மிருகங்கள், மற்றும் மரம், செடி, கொடிகள், இருந்ததாகவும் பிசாசின் வீழ்ச்சியினால் பூமி பாதிக்கப்பட்டபோது அவை அழிந்துபோயின என்னும் இன்று கண்டுபிடிக்கப்படும் உயிர்ச்சுவடுகள் அப்போது அழிந்துபோன உயிரினங்களுடையவை என்றும் கூறுகின்றனர். இவர்கள் தமது கருத்தை நிருபிப்பதற்கு ஆதி 1:28 இல் உள்ள பூமியை நிரப்புங்கள் எனும் பதத்தை ”மறுபடியும் நிரப்புங்கள்“ என மொழிபெயர்த்து, ஆரம்ப உலகில் இருந்த மனிதர்கள் அழிந்துபோனமையால் தேவன் மறுபடியுமாக உலக மனிதர்களால் நிரப்பும்படி ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கட்டளையிடுவதாகவே இவ்வசனத்தில் கூறுவதாக விளக்குகின்றனர். எனினும் இது வேதாகம கருத்துக்கு முரணான கருத்தாகும். இதன்படி மனிதர்களும் தேவனுடைய ஆரம்ப உலகில் இருந்துள்ளனர். இது ஆதாமின் வீழ்ச்சியே உயிரினங்களின் மரணத்திற்கான காரணம் எனும் வேதாகமத்தின் தெளிவான போதனைக்கு முரணான கருத்தாகவே உள்ளது. (01) அதேசமயம் இவர்கள் கூறுவது போல் ஆதியாகமம் 1:28 இலுள்ள “பூமியை நிரப்புங்கள்” என்னும் வார்த்தையை ”பூமியை மறுபடியும் நிரப்புங்கள்” என்று மாற்ற முடியாது. (02). ஆதாமுக்கு முன்பு மனிதர்கள் உலகத்தில் இருக்கவில்லை. ஆதாமே முதலாவது மனிதன். அவனது மனைவி ஏவாளே ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயாவாள் இவர்களே உலகின் முதல் மனிதர்கள். இவர்களுக்கு முன் மனிதர்கள் உலகில் இருந்தமைக்கு வேதாகமத்தில் எவ்வித ஆதரமும் இல்லை.



ஆதியாகமம் முதல் அதிகாரத்தின் முதலிரு வசனங்களுக்குமிடையே நீண்ட கால இடைவெளி இருக்கின்றது எனும் கருத்து விஞ்ஞானிகளைத் திருப்த்திபடுத்துவற்காகவே உருவாக்கப்பட்டது.”(03) விஞ்ஞானிகள் கூறுவதுபோல உலகமும் உயிரினங்களும் உருவாகி இன்றிருக்கும் நிலையை அடைவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் சென்றன எனும் கருத்தை ஆதரிக்கும் இறையியலாளர்கள், அக்கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆதியாகமம் முதல் அதிகாரத்தின் முதலிரு வசனங்களுக்குமிடையில் இருக்கின்றது என கூறுகின்றனர். எனவே இக்கருத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆதியாகமம் முதல் அதிகாரம் ஆறு நாட்களில் தேவன் படைத்தவைகள் பற்றி அறியத்தருகின்றது. அவர் ஆறு நாட்களில் வானத்தையும் பூமியையும் படைத்தார். இதைப் பற்றயே முதலாம் வசனம் கூறுகின்றது. பூமி சிருஷ்டிக்கப்பட்ட முதல் நாளில் எவ்வாறு இருந்தது என்றே 2 ஆம் வசனம் கூறுகின்றது. ”மூலமொழியில் இவ்விரு வசனங்களும் எபிரேய புணரிடைச் சொல்லினால் இணைக்கப்பட்டு ஒரே வசனமாகவே உள்ளது(07) அத்தோடு இரண்டாம் வசனம் முதல் வசனத்தையே விரிவுபடுத்தி விளக்குவதாகவும், இவ்விரு வசனங்ளும் ஒரு வாக்கியத்தின் இரு பகுதிகளாவும் ஒரே சமயத்தில் நடைபெற்ற செயலின் விபரணமாகவும் இருக்கின்றன. (10). எனவே இவ்வசனங்களுக்கிடையில் இடைவெளி இருக்கின்றது என கூறமுடியாது.



Reference
1. How Old Is The Earth by AJ. Monty White.
2. The Rise and Fall of Civilization : From Creation Through the Flood by David Hocking.
3. In the Beginning: The Opening Chapters of Genisis by Henri Blocher
4. Genesis in the Student Bible Commentary by Aalders.
5. Genesis : From Eden to Ur by John Appleby.
6. Systematic Theology by Lous Berkhof
7. The Genesis Record by Henry Morris
8. The Beginning of the World by Henry M. Morris.
9. The God of Creation Volume 1 (Genesis 1-3) by Theodore H. Epp
10. Genesis in the Tyndale OT Commentaries by Derek Kidner


__________________
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. (Ps 42:1)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சகோதர் கொல்வின் அவர்களே தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!
 
தங்களின் இந்த கட்டுரையில் ஆதியாகம் முதல் மற்றும் இரண்டாம் வசனங்களுக்கு இடையில் கால இடைவெளி இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.
 
எனக்கு ஒரே ஒரு விளக்கம் தேவைப்படுகிறது.
 
ஆதி. முதல் அதிகாரத்தில் தேவன் மரம் செடி உயிரினங்களை படைத்தபின் இறுதியாக ஆறாமநாளில் மனிதனை சிருஷ்டித்தார் என்று உள்ளது.
 
1:25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
 
ஆனால் இரண்டாம் அதிகாரத்தில்: 
முதலில் மனிதனை மண்ணால் படைத்து அதன்பிறகு மற்ற உயிரினங்களை மண்ணினால் செய்து ஆதாமிடம் பெயரிடும்படி கொண்டுவந்தார் என்று உள்ளது.
 
2:7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
19. தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.

இதற்குரிய விளக்கம் என்னவென்பதை தங்களால் தர முடியுமா?
   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



புதியவர்

Status: Offline
Posts: 2
Date:
Permalink  
 

நண்பர் சுந்தர் அவர்கட்கு நான் பதில் கூறலாமென்று இருக்கிறேன்,
தேவன் மனிதனை படைத்து,அவனை கிழக்கெ ஏதேன் தோட்ட்த்தில்.வைத்தார்.

அதன் பின்பு தான் தேவன் தான் ஏற்க்கனவே ம்ண்ணிணாலே உருவாக்கின
மிருகங்களையும்,பறவைகளையும், அவன் என்ன பெயரிடுவான் என பார்க்கும்படி
அவனிடத்தில் கொண்டுவந்தார்.

வாசிக்கவும்----ஆதி 2:8 2:15

பயனுடைதாஇ இருந்தால் பதில் பதிவிடவும். நன்றி

__________________


புதியவர்

Status: Offline
Posts: 2
Date:
Permalink  
 

நண்பர் இதனையும் சேர்த்து வாசிக்கவும் ஆதி 2:8 2:15 2:19

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

jprpoint wrote:

நண்பர் சுந்தர் அவர்கட்கு நான் பதில் கூறலாமென்று இருக்கிறேன்,
தேவன் மனிதனை படைத்து,அவனை கிழக்கெ ஏதேன் தோட்ட்த்தில்.வைத்தார்.

அதன் பின்பு தான் தேவன் தான் ஏற்க்கனவே ம்ண்ணிணாலே உருவாக்கின
மிருகங்களையும்,பறவைகளையும், அவன் என்ன பெயரிடுவான் என பார்க்கும்படி
அவனிடத்தில் கொண்டுவந்தார்.

வாசிக்கவும்----ஆதி 2:8 2:15

பயனுடைதாஇ இருந்தால் பதில் பதிவிடவும். நன்றி


 அன்பான சகோதரரே தங்கள் வருகைக்கும்  கருத்துக்கும்  மிக்க நன்றி.

 
தாங்கள் அதியாகமம் இரண்டாம் அதிகாரத்தின்படி உள்ள கருத்தை சரியாக பதிவிட்டுள்ளீர்கள்.
 
நான் விளக்கம் கேட்பது  அதற்க்கு முன்னேயே இருக்கும் ஆதியாகமம் ஒன்றாம்  அதிகாரத்தில் உள்ள வசனங்களை   
 
1: 21. தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
 
1:25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
 

இந்த வசனப்படி தேவன் பட்சிகள் /காட்டு மற்றும் நாட்டு மிருகங்களை படைத்து நல்லது என்று கண்டுவிட்டார் 

 
பின்னர்தான், 
 
27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
 
தாங்கள் குறிப்பிடும் விளக்கம் அதற்க்கு பின்னர்தான் உள்ளது. அதை நான் மறுக்கவில்லை அது சரியே!  
 
முதல் அதிகாரம் சொல்லும் கருத்துக்குதான் நான் விளக்கம் கேட்கிறேன்.    


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard