இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆண்டவராகிய இயேசு சிலுவையில் கொன்ற பகை!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
ஆண்டவராகிய இயேசு சிலுவையில் கொன்ற பகை!
Permalink  
 


ஆண்டவராகிய  இயேசுவை  பற்றி ஏசாயா சொல்லும் கீழ்கண்ட வார்த்தைகளை சற்று நிதானமாக படிக்கவும்:  
 
ஏசாயா 53 அதிகாரம்
5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

10. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
 
மேல்கண்ட இந்த வசனங்களில் இருந்து மூன்று முக்கிய காரியங்களை நாம் அறிந்துகொள்ளலாம்.
 
1. நாமெல்லோரும் ஆடுகள்போல வழி தவறி அவனவன் வழியிலே 
போனோம்     
2. கர்த்தரோ நம்முடைய அக்கிரமங்களை இயேசு மேல் சுமத்தி அவரை நொறுக்க சித்தமானார் குற்ற நிவாரண பலியாக ஒப்புகொடுத்தார்.
3. நம்முடய மீறுதலுக்காக நம்முடைய சமாதனத்துக்காக  இயேசு காயப்பட்டு பாவத்துக்கான ஆக்கினையை தம்மேல் எற்று நம்மை மீட்டார்.      
 
இந்த வசனங்களை படித்து,   தேவன் எதுவோ மிகப்பெரிய  பெரிய கோபக்காரர் போலவும், பாவம் செய்த  மனிதரை அழித்தே தீருவேன் என்று உக்கிரத்தில் நின்றதாகவும்  அவரது  உக்கிரத்தை எல்லாம் ஆண்டவராகிய இயேசுமேல் சுமத்தியதாகவும்  எண்ணிவிட வேண்டாம். தேவனைபற்றி  சரியாக அறியாத பலர் இதுபோல் எண்ணிக்கொண்டு இருக்கலாம்!   பாவம் செய்த மனிதன் மேல் தேவன் கடும் கோபம் கொள்வது உண்மையே! காரணம் பாவம் என்பது தண்டனையை கொண்டு வரும் என்பதாலும், சத்துரு தூஷிக்க வகை செய்யும் என்பதினாலேயே!
 
ஆனால் அவரது கோபமோ  நிரந்தரமானது அல்ல!  
 
சங்கீதம் 30:5 அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு
ஏசாயா 54:8 அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என்முகத்தை இமைப்பொழுது
உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன்
 
ஆம்! இதுதான் நமது பரம தகப்பனின் கோபத்தின் நிலை.   

பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒருமனிதன் பாவம்செய்யும்போது ஒரு 
பாவமறியா
மிருகம் பலியாக கொடுக்கப்பட்டது அது தேவனின் கோபத்தை சாந்திபடுத்த என்று நீங்கள் கருதினால் அது மிக மிக தவறு. தேவன் தனது கோபத்தை சாந்திபடுத்த,  தான் படைத்த ஒரு உயிரையே பலியாக கேட்டு அதில் திருப்தி கொள்ளுவது இல்லை என்பதை கீழ்கண்ட வசனத்தில் சொல்கிறார்.
 
ஏசாயா 1:11 உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; 
சங்கீதம் 50:13 நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?

அவ்வாறு தேவன் தனது படைப்பின்  மாமிசத்தை புசித்து இரத்தம் குடித்தால்  தேவனுக்கு பிசாசுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் போய்விடும். நமது தேவன் மிகுந்த இரக்கம் உள்ளவர் மிருகங்களுக்காககூட பரிதபிபவர் என்பதை யோனா
புஸ்தக  வசனங்கள் மூலம் அறியமுடியும். . 
 
பிறகு என் அவர் பலியை கட்டளையிட்டார்?   
 
ஆதாமும் ஏவாளும் சாத்தானின் சொல்லைக்கேட்டு  தேவனின் வார்த்தைகளை மீறி கனியை புசித்ததன் காரணமாக ஆடுகளைபோல வழிதவறி  தேவன் போட்ட வட்டத்தை தாண்டி வெளியேபோய், சத்துருவாகிய  சாத்தானுக்கு சொந்தமாகி போனார்கள். அவர்களை பிடித்த சாத்தான், அவர்கள்செய்த குற்றத்திற்கு அவர்கள் உடனடியாக சாக வேண்டும் என்று தேவனிடம்  பிராது செய்கிறான். அவ்வாறு அவர்கள் சாவாது  தப்பிக்கவேண்டும் என்றால் உம்முடைய படைப்புகளில பாவமறியா ஒரு படைப்பை  மனிதனுக்கு ஈடாக(தற்காலிக ஜாமீன்) தரவேண்டும் என்று வாதிடுகிறான். இந்நிலையில் தேவன் ஆதாம் ஏவாளுக்கு  பதில்  தனது படைப்பில் உள்ள பாவமறியா ஒரு மிருகத்தை சாககொடுத்து, ஆதாம் ஏவாளை மீட்டார் அந்த மிருகத்தின் தோல்தான் அதாம் ஏவாளுக்கு உடையாக தேவனால் கொடுக்கபட்டது
 
ஒரு ஆட்டுக்கோ அல்லது மாட்டுக்கோ  ஆண்டவரிடம் "எந்த பாவமும் செய்யாத நான் மனுஷனின் பாவத்துக்கு சாகமாட்டேன்" என்று மறுப்பு தெரிவிக்கதெரியாது அதனால் அது தானாகவே தேவனின் திட்டத்துக்கு கீழ்படிந்து மனிதனின் அக்கிரமத்தை தன்மேல் சுமந்து மனிதனுக்காக பலியானது. இதன் அடிப்படையில் பார்ப்போமென்றால், ஏனென்று கேட்காமல் தேவன் என்ன சொன்னாலும் கீழ்படிந்து நடக்க ஆயத்தமாக இருக்கும் ஒருவர்மேல் எல்லோருடய அக்கிரமத்தையும்  சுமத்தி கீழ்படியாதவர்களையும்கூட  மீட்பது என்பது தேவனின ஒரு திட்டம். அந்த திட்டம்தான் மிருகங்கள்  பலியில் ஆரம்பித்து இயேசுவின் பலியோடு முடிந்தது. 
 
இதே அடிப்படயில் இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தை தனக்கு கீழ்படிந்த எசேக்கியேல் மீது சுமத்தி அவரை சுமக்க சொன்னதை நாம் எசேக்கியேல் 4 ம் அதிகாரத்தில் பார்க்க முடியும்.
 
அடுத்தவர் அக்கிரமங்களை சுமந்த  எசேக்கியேல் மேலேயோ அல்லது அடுத்தவர் அக்கிரமத்துக்காக பலியாகும்  ஒரு ஆட்டின் மேலேயோ அல்லது அனைவர் அக்கிரமங்களுக்காகவும் பலியான இயேசுவின் மேலேயோ எந்த கோபமோ உக்கிரமோ தேவனுக்கு இல்லை. சாத்தானின் கையில்  இருந்து மனிதனை மீட்கும் திட்டத்தின் ஒருபகுதியாக தேவன்தான் இந்த நிர்மாணத்தை ஏற்ப்படுத்தினாரே யன்றி தேவனின்  உக்கிரத்தை இயேசு தாங்கினார் என்ற கருத்து சரியானது அல்ல!
 
"தேவனுக்கு இணையாக சிங்காசனத்தை உயர்த்துவேன்"என்று  லூசிபர் பெருமை அடைந்தபோது, தேவன் அவனை  ஆகாதவன் என்று கீழே  தள்ளியதால் உக்கிர கோபம்கொண்ட சாத்தான், தன்னை ஆகதவன் என்று தள்ளிய  தேவனை எப்படியாவது பழி தீர்க்கவேண்டும் என்று வெறியோடு தந்திரத்தால் ஆதாம் ஏவாளை வஞ்சித்து பாவம் செய்யவைத்தான். அவர்களை மீட்பதற்கு பலியாக  தேவகுமரன் பூமிக்கு வந்த போது, தனது  உக்கிரத்தை, பகையை  எல்லாம்  மாம்சத்தில் வந்த இயேசு மீது தீர்த்துகொண்டான்!

இயேசுவை சித்திரவதை செய்ததும் சிலுவையில் அடித்ததும் கேலி செய்ததும் சாத்தானின் ஆவிகளே. அவன் தனது உக்கிரத்தை தீர்க்க மனிதர்களை  பகடைக் காய்களாக  பயன்படுத்தி கொண்டான்! அதை ஆவியில் அறிந்த இயேசு "இந்த மனிதர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் செய்கிறார்களே" என்று ஆதங்கபட்டு "அவர்களுக்கு மன்னியும்" என்று பிதாவை வேண்டினர்.    
 
சாத்தானின் அந்த கொடூர சித்ரவதையை  இயேசு தன்மீது ஏற்றுக்கொண்டு நம்மை மீட்டு  தேவனோடு நம்மை ஒப்புரவாக்கினார்!   

இதையே  "இயேசு கொன்ற பகை" என்று எபி 2:16 சொல்கிறது  
 
எபேசியர் 2:16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.

ஆண்டவராகிய இயேசு மனிதர்களின் பாவத்தை தீர்க்க தேவநீதியின்படி சாத்தானின் உக்கிரத்தைதான் தன்மீது தாங்கினாரேயன்றி தேவனின் உக்கிரத்தை அல்ல என்பதே இந்த கட்டுரையின் கருத்து!  
 
 

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

sundar wrote:
//பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒருமனிதன் பாவம்செய்யும்போது ஒரு பாவமறியா மிருகம் பலியாகக் கொடுக்கப்பட்டது. அது தேவனின் கோபத்தை சாந்திபடுத்த என்று நீங்கள் கருதினால் அது மிகமிக தவறு. தேவன் தனது கோபத்தை சாந்திபடுத்த, தான் படைத்த ஒரு உயிரையே பலியாகக் கேட்டு அதில் திருப்தி கொள்ளுவது இல்லை ....//

sundar wrote in தேவனின் இருதய நிலையை அறியும் பாக்கியம்!:
//பலியிடுதல் பற்றி எந்த ஒரு கட்டளையோ அல்லது பலி செலுத்துதல் பற்றிய எந்த நியமனமோ இல்லாத, எந்த ஒரு பலியும் செலுத்தப்படாத அந்தக் கால நிலையில், ஜலப்பிரளயத்தில் இருந்து தப்பி பேழையில் இருந்து வெளியே வந்த நோவா என்னும் தேவமனிதன், சில சுத்தமான மிருகங்களைக் கர்த்தருக்குப் பலியாக செலுத்துகிறான்:

ஆதியாகமம் 8:20 அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.

அவ்வாறு தேவனின் எண்ணநிலைகளை அறிந்து செயல்படுவது கர்த்தருக்கு மிகுந்த பிரியமாகையால் கர்த்தர் பலியை அங்கீகரித்ததோடு ஒரு நல்ல வாக்குத்தத்தமும் கொடுக்கிறார்.

ஆதியாகமம் 8:21 சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; .......; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை

இங்கு கர்த்தர் எந்த பலியையும் கேட்கவில்லை; ஆனால் கர்த்தரின் இருதயத்தில் பலியிடும் கட்டளை இருப்பதை முன்கூட்டியே அறிந்த நோவா, இவ்வாறு விசுவாசத்தால் அதைநிறைவேற்றி தேவனின் இருதயத்தை குளிரப்பண்ணினான்.
//

அன்பான சகோதரரே! பலியால் தேவனின் இருதயத்தை நோவா குளிரப்பண்ணினதாக எழுதின நீங்கள், தற்போது தேவன் பலியில் திருப்தி கொள்வது இல்லை என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு? விளக்கம் தரவும்.

மற்றொரு விஷயத்தையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்: நோவாதான் முதன்முதலாகப் பலி செலுத்தினதாகக் கூறுகிறீர்கள். ஆனால் நோவாவுக்கு முன்பாகவே ஆபேல் தனது காணிக்கையாக “மிருகங்களின் தலையீற்றைக்” கொடுத்தான் என்றும் தேவன் அதை அங்கீகரித்தார் என்றும் ஆதி. 4:4 கூறுகிறது.

sundar wrote:
//ஆதாமும் ஏவாளும் சாத்தானின் சொல்லைக்கேட்டு  தேவனின் வார்த்தைகளை மீறி கனியைப் புசித்ததன் காரணமாக ஆடுகளைப்போல வழிதவறி, தேவன் போட்ட வட்டத்தை தாண்டி வெளியேபோய், சத்துருவாகிய சாத்தானுக்கு சொந்தமாகி போனார்கள். அவர்களைப் பிடித்த சாத்தான், அவர்கள்செய்த குற்றத்திற்கு அவர்கள் உடனடியாக சாகவேண்டும் என்று தேவனிடம்  பிராது செய்கிறான். அவ்வாறு அவர்கள் சாவாது தப்பிக்கவேண்டும் என்றால் உம்முடைய படைப்புகளில பாவமறியா ஒரு படைப்பை மனிதனுக்கு ஈடாக (தற்காலிக ஜாமீன்) தரவேண்டும் என்று வாதிடுகிறான். இந்நிலையில் தேவன் ஆதாம் ஏவாளுக்குப் பதில் தனது படைப்பில் உள்ள பாவமறியா ஒரு மிருகத்தை சாகக்கொடுத்து, ஆதாம் ஏவாளை மீட்டார். அந்த மிருகத்தின் தோல்தான் ஆதாம் ஏவாளுக்கு உடையாக தேவனால் கொடுக்கபட்டது//

உங்கள் கூற்றுப்படி பார்த்தால், கனியைப் புசித்த நாளில் ஆதாமும் ஏவாளும் சாகவில்லை என்றாகிறது. அதாவது “கனியைப் புசிக்கிற நாளில் சாகவே சாவாய்” எனும் தேவனின் வார்த்தை பொய்யாகிப்போனது என்றாகிறது. இதற்கு உங்கள் விளக்கம் என்ன?.

சாத்தான் பிராது செய்ததால், ஆதாம்-ஏவாளின் உயிர்களுக்கு ஈடாக ஒரு மிருகத்தைத் தேவன் கொடுத்தார் என்கிறீர்கள். அவ்வாறெனில் தேவன் சாத்தானுக்குப் பலி கொடுத்தார் என்றல்லவா அர்த்தமாகும்? தேவனின் இச்செயல் அஞ்ஞானிகளின் செயலுக்கு ஒத்ததாகிவிடுமே? இதற்கு உங்கள் விளக்கம் என்ன? பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.

1 கொரி. 10:20 அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்;

தேவஜனங்களின் பலிக்கும் சாத்தானுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. தேவஜனங்களின் பலிகள் அனைத்தும் தேவனை மட்டுமே சேரும். பலி என்பது தேவநியமனம். இந்த நியமனத்தை தேவன் ஏன் வைத்தார் எனும் கேள்விக்கு பதில் தெரிந்துதான் ஆகவேண்டுமின்றில்லை. இவ்விஷயத்தில் நீங்கள் ஆராயவேண்டாம் என நான் சொல்லவில்லை. ஆனால் உங்கள் ஆராய்ச்சி மூலம் அறிகிற காரியங்கள் தேவனுக்கு தூஷணத்தைக் கொண்டுவருவதாக இருக்கக்கூடாது. மேலே நீங்கள் கூறியுள்ள காரியங்கள் அனைத்தும் தேவனை தூஷிப்பதாகவே உள்ளன. உங்கள் கூற்றுக்களிலுள்ள தேவதூஷணங்கள்:

1. கனியைப் புசிக்கும் நாளில் சாவீர்கள் எனும் தேவனின் வார்த்தை பொய்யாகிப் போனது.

2. தேவனின் வார்த்தை பொய்யாகிப் போனதற்குக் காரணம்: அவர் சாத்தானின் பிராதுக்கு செவிசாய்த்தது.

3. அஞ்ஞானிகளுக்கு நிகராக தேவன் சாத்தானுக்குப் பலி கொடுத்தது.

கனியைப் புசிக்கும் நாளில் நீங்கள் சாகவே சாவீர்கள்” எனும் கூற்றை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டதுதான் இத்தனை தேவதூஷணங்களுக்குக் காரணம்.

ஒரு பெற்றோர் தங்கள் மகனிடம், “நீ என்னைக்கு பி.ஏ. பாஸ் பண்ணுகிறாயோ அன்னைக்குத்தான் உனக்குத் திருமணம்” எனச் சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்? அவர்கள் மகன் பி.ஏ. பாஸ் செய்ததும் அவனது திருமண ஏற்பாடுகள் தொடங்கி விரைவில் நிச்சயமாக திருமணம் செய்துவைக்கப்படும் என்பதுதானே? அதேவிதமாகத்தான் “கனியைப் புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்றால் கனியைப் புசித்ததும் அவனது சாவு நிச்சயமாகிவிடும் என்பதுதான் அர்த்தம்.

தேவன் தாம் படைத்த அனைத்து உயிர்களின்மீதும் அன்புள்ளவர் என்பது மெய்தான். ஆகிலும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக அல்லது தேவனின் ஒரு நியமனத்துக்காக ஒருவன் அல்லது ஒரு மிருகம் சாவதற்கு தேவன் அனுமதித்தால், அது தேவனின் அன்பை கேள்விக்குறியாக்கிவிடாது.

யோபுவை சோதிக்கையில், சம்பந்தமே இல்லாமல் யோபுவின் வேலைக்காரர் அனைவரும் (ஒருவனைத் தவிர) சாவதற்கு தேவன் அனுமதித்தார். இது தமது படைப்பின்மீது தேவனுக்குள்ள உரிமையைக் காட்டுகிறது. தாம் படைத்த ஓர் உயிரை எந்த நேரத்திலும் எடுத்துக்கொள்ள தேவனுக்கு உரிமை உள்ளது. பிறந்த அனைவரும் ஒரு நாளில் மரிக்கத்தான் வேண்டும். அப்படி மரிக்கவேண்டிய அவர்களில் ஒருவன் குழந்தைப் பருவத்தில் மரிக்கலாம், ஒருவன் வாலிப வயதில் மரிக்கலாம், ஒருவன் முதிர்வயதில் மரிக்கலாம்.

மரணம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தின் மூலம் சம்பவிக்கலாம். வியாதியாலோ, விபத்தாலோ, கொலையாவதாலோ, முதிர்வயதானதாலோ இப்படி காரணங்களால் மரணம் சம்பவிக்கலாம். இவற்றில் முதிவயதாகி மரிப்பதைத் தவிர மற்ற அனைத்து மரணமும் வேதனையுள்ளதாகத்தான் இருக்கும்.

அமலேக்கியரின் குழந்தைகள் உட்பட அனைவரையும் கொல்லும்படி தேவன் சொன்னதை நாம் அறிவோம். இங்கு சாத்தானை சாந்திபடுத்த தேவன் இவ்வாறு சொல்லவில்லை. அமலேக்கியர் முழுமையாக நிர்மூலமாக்கப்படவேண்டும் என்பது தேவநியமனம். அவரது அந்த நியமனத்தை நிறைவேற்ற அவருக்கு முழு உரிமை உள்ளது, அதன்படி அவரது உரிமையை நிலைநாட்டினார், அவ்வளவே. இவ்விஷயத்தில் தேவன் ஏன் இவ்வாறு குழந்தைகளையெல்லாம் கொல்லச் சொல்கிறார் என நாம் கேள்விகேட்க வேண்டியதில்லை. அப்படிக் கேட்பது, தேவனைவிட நம்மை நீதிமானாக்குகிற அல்லது நம்மை இரக்கமுள்ளவராக்குகிற முயற்சியாகும். அம்முயற்சியை நாம் செய்யவேண்டாம்.


-- Edited by anbu57 on Friday 24th of December 2010 06:19:54 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//ஆண்டவராகிய இயேசு மனிதர்களின் பாவத்தை தீர்க்க தேவநீதியின்படி சாத்தானின் உக்கிரத்தைதான் தன்மீது தாங்கினாரேயன்றி தேவனின் உக்கிரத்தை அல்ல என்பதே இந்த கட்டுரையின் கருத்து!//

உங்களது இக்கூற்றும் தவறானதே. பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.

எபேசியர் 2:3 அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

இவ்வசனத்தில் கோபாக்கினை என்பது தேவகோபாக்கினையையே குறிப்பிடுகிறது. தேவகோபாக்கினையின் காரணமாக தேவனுக்கும் நமக்கும் உண்டான “பகையை” கிறிஸ்துவானவர் “சிலுவையில் கொன்றார்”. இதைத்தான் எபே. 2:16 கூறுகிறது.

இருதிறத்தார் என்பது “நியாயப்பிரமாணத்தைப் பெற்றவர்கள்”, “பெறாதவர்கள்” எனும் இருபிரிவினரைக் குறிப்பிடுகிறது. இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டு, அந்த நியாயப்பிரமாணத்தை அவர்கள் மீறியதால் அவர்களுக்கும் தேவனுக்கும் “பகை” உண்டானது. ஆனால் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாத புறஜாதியினருக்கும், தேவனுக்கும் “பகை” இல்லை.

இந்நிலையில், கிறிஸ்துவானவர் தமது சிலுவை மரணத்தின் மூலம் நியாயப்பிரமாணத்தால் உண்டான கோபாக்கினையை ஒழித்தார். எனவே இஸ்ரவேலருக்கும் தேவனுக்கும் நியாயப்பிரமாணத்தால் உண்டான “பகை” கொல்லப்பட்டது. இதனால், “நியாயப்பிரமாணத்தினிமித்தம் தூரமாயிருந்த இஸ்ரவேலர்” எனும் ஒரு திறத்தாரும், “நியாயப்பிரமாணம் இல்லாததால் ஏற்கனவே தேவனுக்குச் சமீபமாயிருந்த புறஜாதியினராகிய” மற்றொரு திறத்தாரும், கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாகி ஒப்புரவாக்கப்பட்டனர். இதைத்தான் இவ்வசனங்கள் கூறுகின்றன.

எபேசியர் 2:13,16,17 முன்னே தூரமாயிருந்த நீங்கள் (இஸ்ரவேலர்) இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே (பிதாவுக்குச்) சமீபமானீர்கள். ... (நியாயப்பிரமாணத்தால் பிதாவுக்கும் உங்களுக்கும் உண்டான) பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் (இஸ்ரவேலராகிய நம்மையும் புறஜாதியினரையும்) ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார். அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும் (இஸ்ரவேலருக்கும்), சமீபமாயிருந்த அவர்களுக்கும் (புறஜாதியினருக்கும்), சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே (கிறிஸ்துவின் ஆவியினாலே) பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் (கிறிஸ்துவின் மூலமாய்ப்) பெற்றிருக்கிறோம்.


-- Edited by anbu57 on Friday 24th of December 2010 06:58:32 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சகோ. அன்பு  அவர்களே தாங்கள் இந்த திரியில் இடைபட்டு தெளிவான சில  விளக்கங்களோடு கூடிய  கேள்விகளையும்  முன்வத்ததற்காக தேவனை  ஸ்தோத்தரிப்பதோடு தங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பலியோடு கூடிய  இந்த காரியத்தில் ஒரு தெளிவை நாம் பெறுவது தேவனை பற்றி அறியும்  அறிவில் வளர மிக  மிக அவசியம் என்றே நான் கருதுகிறேன்.  எனவே முடிந்த அளவு தங்கள் கேள்விக்கு ஒவ்வொன்றாக பதில்தர விளைகிறேன் மாறுபாடுகள் தென்பட்டால் சுட்டவும்:
 
SUNDAR WROTE
இங்கு கர்த்தர் எந்த பலியையும் கேட்கவில்லை; ஆனால் கர்த்தரின் இருதயத்தில் பலியிடும் கட்டளை இருப்பதை முன்கூட்டியே அறிந்த நோவா, இவ்வாறு விசுவாசத்தால் அதைநிறைவேற்றி தேவனின் இருதயத்தை குளிரப்பண்ணினான்.//

Bro. ANBU ASKS
அன்பான சகோதரரே! பலியால்  தேவனின் இருதயத்தை நோவா குளிரப்பண்ணினதாக எழுதின நீங்கள், தற்போது தேவன் பலியில் திருப்தி கொள்வது இல்லை என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு? விளக்கம் தரவும்.
 
"நோவா பலியால் தேவனின் இருதயத்தை   குளிரப்பண்ணினான்" என்று நான் எழுதியது தாங்கள் கருதுவதுபோல் "அந்த மிருகத்தின் சாவு தேவனை  குளிரப் பண்ணியது" என்ற கருத்தில் உருவானது அல்ல, தேவனின் திட்டத்தை முன் கூட்டியே அறிந்து செயல்பட்டதாலேயே தேவனின் இருதயத்தை அவன் குளிரப்பண்ணினான். 
 
உதாரணமாக!

ஒருமுக்கிய வேலையிநிமித்தம் நான் மதுரை போகவேண்டியது இருந்தது அதை குறிப்பால்  அறிந்த எனது மகன் எனக்கு முன்கூட்டியே ஒரு டிக்கட் புக் செய்து விட்டான் அதானால் நான் மிகவும்
மகிழ்ச்சியடைகிறேன். இங்கு நான் மகிழ்ச்சி யடைவது டிக்கக் புக் பண்ணியதர்க்குதான் என்றாலும் எனது முக்கிய நோக்கம் மதுரை  போகவேண்டும் என்பதுவே!
 
அதுபோல் தேவனின் முக்கிய திட்டம் மனிதனை பாவத்தில் இருந்து மீட்க வேண்டும் என்பதுவே!  அது நிறைவேற இடையில்  தற்காலிகமாக பலியிட வேண்டிய அவசியம் இருந்தது, இதை நோவா முன்கூட்டியே அறிந்து பலி செலுத்தியதால் தேவன் மனது குளிர்ந்து என்பதுவே அதன் கருத்து.
 
Bro. ANBU ASKS
 ////மற்றொரு விஷயத்தையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்: நோவாதான் முதன்முதலாகப் பலி செலுத்தினதாகக் கூறுகிறீர்கள். ஆனால் நோவாவுக்கு முன்பாகவே ஆபேல் தனது காணிக்கையாக “மிருகங்களின் தலையீற்றைக்” கொடுத்தான் என்றும் தேவன் அதை அங்கீகரித்தார் என்றும் ஆதி. 4:4 கூறுகிறது.///

ஆபேல் கொடுத்தது கர்த்தருக்கு "காணிக்கை" என்று ஆதியாகமமும் "மேன்மையான பலி" என்று எபிரெயரும்  சொல்வதால் "காணிக்கை" என்று தனியொரு கருத்தாக எடுத்து அதே கட்டுரையில் விளக்கினேன். காணிக்கையாக வரும்  எல்லாமே  பலியிடபடத்தான் வேண்டும்  என்று அவசியமில்லை. சில போக்காடுகளாகவும் விடப்படலாம் எனவேதான்
அவ்வாறு தனி கருத்தாக எழுதினேன். 
 
ஒருவேளை  எபிரெயர்  சொல்வதுபோல் அதுவும்  பலியிடப்பட்டது என்றால் நோவாவுக்கு  முன்னரே, ஆபேல் தேவனின் இருதய நிலையை அறிந்து பலியிட்டு ற்சாட்சி பெற்றான் என்றுகூட எடுத்துகொள்ளலாம். அதனால் அந்த கட்டுரையின் யகருத்து மாறாது என்றே கருதுகிறேன்!    
 
தொடர்ந்து அடுத்த கருத்தை ஆராயலாம்....


-- Edited by SUNDAR on Friday 24th of December 2010 02:52:43 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Bro. ANBU Wrote:.
////உங்கள் கூற்றுப்படி பார்த்தால், கனியைப் புசித்த நாளில் ஆதாமும் ஏவாளும் சாகவில்லை என்றாகிறது. அதாவது “கனியைப் புசிக்கிற நாளில் சாகவே சாவாய்” எனும் தேவனின் வார்த்தை பொய்யாகிப்போனது என்றாகிறது. இதற்கு உங்கள் விளக்கம் என்ன?.////

இந்த கருத்தைபற்றிய  விளக்கத்ததை  கர்த்தருக்குசித்தமானால்  நான் தனியொரு திரியில் தர
முயற்ச்சிக்கிறேன்.  "சிலுவையில் கொன்ற பகை" சம்பந்தமான கருத்தை மட்டும் இங்கு ஆராயலாம்.  
 
Bro. ANBU Wrote:.
////எபேசியர் 2:3 அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

இவ்வசனத்தில் கோபாக்கினை என்பது தேவகோபாக்கினையையே குறிப்பிடுகிறது.///
 
நிச்சயமாக! இதில்  எந்த  மாற்று  கருத்தும் இல்லை நியாயபிரமாணத்தின் அடிப்படையில்  கோபாக்கினை உருவானது என்பதை நான் ஏற்கிறேன்! 
 
Bro. ANBU Wrote:.
////தேவகோபாக்கினையின் காரணமாக தேவனுக்கும் நமக்கும் உண்டான “பகையை” கிறிஸ்துவானவர் “சிலுவையில் கொன்றார்”. இதைத்தான் எபே. 2:16 கூறுகிறது///
 
தேவனின் கோபாக்கினை காரணமாக தேவனுக்கும் நமக்கும் பகை உண்டானது என்ற தங்களின் கருத்தை இவ்வாறு எடுத்து கொள்ளலாம் 
 
"மனிதன் சாத்தானின் வழிநடந்து தேவனின்  நியாயபிரமாணத்தை மீறி  பாவம் செய்ததால், நமக்கும் தேவனுக்கும் இடையே பகை உண்டானது" இந்த"பகையை" மேலோட்டமாக பார்க்காமல்  வேரில்இருந்து பார்க்க வேண்டுகிறேன்!

அதன் அடிப்படையில், இங்கு  நாம்   முக்கியமாகிய பார்க்கவேண்டியது மனிதன் தேவனுக்கு பகஞனா? அல்லது தேவனால் சத்துருஎன்று சொல்லப்படும் சாத்தான் தேவனுக்கு பகஞனா? என்பதுதான்.
 
சாத்தானின் சொல்லுக்கு கீழ்பட்டு பாவம் செய்ததாலேயே மனிதன் தேவனுக்கு பகஞானான். மற்றொரு வழியில் பார்த்தால் தேவனுடைய நீதிக்கு பகைஞனாக
இருக்கும்  சாத்தானுடன் மனிதன்  தொடர்புவைத்து கொண்டததால்  அவனும் தேவனுக்கு பகைஞனாகிரான்!  
 
யாக் 4:4  உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை......   உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.

ரோமர் 8:7
  மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை.

அதாவது இந்த உலகத்தின் அதிபதியாக இருக்கும் சாத்தானின் சிநேகிதம் தேவனுக்கு பகை, மற்றும் நமது மாம்சத்தில் குடிகொண்டுள்ள தீமைகள் தேவனுக்கு விரோதமான பகை! அதாவது ஒரு மனிதன் சாத்தானின் செயலுக்கு உடன்ப்படும்போதுதான் தேவனுக்கு பகஞநேயன்றி  மற்றபடி  அல்ல எனவே பகையின் அடிப்படை  தேவனுக்கும் சாத்தனுக்கும் இடையேயுள்ள பகையே அதுவே மனிதனை தொடர்கிறது! எனவே பகையின் அடிப்படை வேர் சாத்தனிடம்தான் இருக்கிறதேயன்றி மனிதனிடமோ அல்லது தேவனிடமோ அல்ல!  
 
சுருங்க சொல்லின் தேவனின் சித்தத்துக்கு மாறாக செயல்படும் எதுவுமே தேவனுக்கு பகைதான். அவ்வாறு முதல் முதலில் தேவனின் சித்ததத்துக்கு மாறாக செயல்பட்டு தள்ளப்பட்டவனே சாத்தான்! எனவே முதல் முதலில் பகை என்பது சாத்தான் மூலம்  உருவாகி அந்த சாத்தானின்  தந்திரத்தால் மனிதனை தொடர்ந்தது, அந்த பகையே இயேசுவால் கொல்லப்பட்டது என்பதே எனது கருத்து.
   
உதாரணமாக:
ஒரு "வைரஸ் பாதிக்கபட்ட கணினியை"  "பகை நிறைந்த சாத்தானுக்கு" சமமாக எடுத்துகொண்டால்  ஒரு புதிய  கணினி ஓன்று அதோடு  தொடர்பு பண்ணப்ப்படும் போது  பழைய  வைரஸ் அந்த நல்ல கணினியில் தாவுகிறது. இங்கு வைரஸ் என்பது முதலில் உள்ள கணினியில் இருந்ததுதானேயற்றி புதியதாக உருவானது அல்ல! 
 
இப்பொழுது புதிய  கணினியில் உள்ள வைரசை மட்டும்  நீக்க வேண்டுமென்றால் கூட, நான் அந்த பழைய கம்புட்டரில் இருந்த அதே வைரஸ் கூடத்தான் போராட போகிறேன் அனால் அது இருக்கும் இடம்தான் வேறு. 
 
இங்கு ஆண்டவராகிய இயேசு,  மனிதன் மேலிருந்த  "பகை" என்னும் பிசாசின்  வைரசை  நீக்கவே சிலுவையில் பாடுபட்டு "தேவன்" என்னும் இன்னொரு கணினியுடன் "பரிசுத்த ஆவி" என்னும் நெட் கனக்சன் மூலம் ஒரு புது தொடர்பை ஏற்ப்படுத்தி கொடுத்தார்.       
 
இங்கு "பகை" என்பது ஒரேஒரு  பகைதான்!  அந்த "பகை"  தேவனுக்கும் பிசாசுக்கும் உள்ள அடிப்படை பகை மட்டும்தான். அந்த பகையேயன்றி வேறு ஒரு பகையும் இந்த் உலகில் இல்லை! அதையே ஆண்டவராகிய இயேசு தன்மீது தாங்கி மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே ஒப்புரவை ஏற்ப்படுத்தினார் என்பதுதான் எனது கருத்து.  
 
சுந்தர் WROTE 
////ஆண்டவராகிய இயேசு மனிதர்களின் பாவத்தை தீர்க்க தேவநீதியின் படி சாத்தானின் உக்கிரத்தைதான் தன்மீது தாங்கினாரேயன்றி தேவனின் உக்கிரத்தை அல்ல///   
 
இங்கு "சாத்தானின் உக்கிரம்" என்று நான் குறிப்பிட காரணமும் உக்கிரத்தின அடிப்படை என்ன? என்ற ஆராய்தலின்  அடிப்படையிலேயே!
 
ஏசாயா 14:13 தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்   என்று எண்ணிய சாத்தான்   அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனான் 
 
தன்னை  ஆகதவன் என்று தள்ளிய தேவன் மேல் சாத்தான் உக்கிரம் கொண்டான். அதை தீர்த்துக்கொள்ள, தேவனால் படைக்கப்பட்ட மனிதர்களையே ஏமாற்றி தன்வசமாக்கி  தேவனுக்கு எதிரிடையாக திருப்புகிறான் அதனால் தேவன் மனிதன்மேல் உக்கிரம் கொண்டார்!   ஆகினும் அதை உடனடியாக காட்டாமல் அதற்கென்று ஒரு இறுதி நாளை நியமித்து அதற்கக்கிடையில்  அவர்களை மீட்க சித்தம் கொண்டார்!  

எனவே, அந்த உக்கிரத்தை தன்மேல் ஏற்று மனிதர்களை மீட்க  தன் குமாரனாகிய இயேசுவை தேவன் அனுப்பினால் இயேசு யாருடைய உக்கிரத்தை தன்மேல் தாங்கி மனிதனை  மீட்கவேண்டும்?
 
எதிரியாகிய சாத்தானின் உக்கிரத்த்தைதானே? அதையே இயேசு தாங்கினார்!
 
"தனது உக்கிரத்த்தை தாங்குவதற்கு தானே தனதுமகனை அனுப்பினர்" என்பதும், 'தேவனின் உக்கிரத்தை தாங்குவதற்கு தேவனே இரங்கி வந்தார்" என்று சொல்வதும் அடிப்படை காரணமற்ற கூற்றுகள்!
 
உபரி செய்தி:  தேவனுடைய கோபாக்கினை என்பது இனி வருவதாக இருக்கிறது! தேவன் பாவத்துடன் சமாதானம் செய்பவர் அல்ல என்பதும் அவர் பயங்கரமானவர்! பட்சிக்கிற அக்கினி! என்பதும் உண்மையே! அனால் அந்த மகா தேவனின் கோபாக்கினை என்பது இத்தனை பிரயாசங்களை எடுத்தும் அவருக்கு கீழ்ப்படியாதவர்கள் மேல், இறுதி நியாயதீர்ப்பின் போதுதான் நிறைவேறும்!
 
ரோமர் 2:8  சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக் கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.

கொலோசெயர் 3:6
 கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்

வெளி 6:17
அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.


 

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

sundar wrote:
//"நோவா பலியால் தேவனின் இருதயத்தை குளிரப்பண்ணினான்" என்று நான் எழுதியது தாங்கள் கருதுவதுபோல் "அந்த மிருகத்தின் சாவு தேவனை  குளிரப் பண்ணியது" என்ற கருத்தில் உருவானது அல்ல, தேவனின் திட்டத்தை முன் கூட்டியே அறிந்து செயல்பட்டதாலேயே தேவனின் இருதயத்தை அவன் குளிரப்பண்ணினான்.//

சகோ.சுந்தர் அவர்களே! நோவாவின் பலி சம்பந்தமான வசனங்களை சற்று படியுங்கள்.

ஆதி. 8:20,21 நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான். சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார்.

நோவா பலிபீடம் கட்டியதும் கர்த்தருக்கே, பலியிட்டதும் கர்த்தருக்கே. அந்த பலியால் வந்த சுகந்த வாசனையை முகர்ந்தது கர்த்தரே!

கர்த்தருக்கே பலி, கர்த்தரே பலியால் வந்த சுகந்த வாசனையை முகர்ந்தார் என வசனங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கையில், பலிக்கும் சாத்தானுக்கும் ஒரு உறவை ஏன் உண்டாக்குகிறீர்கள்?

நோவாவின் பலி தேவனைக் குளிரப்பண்ணினது என்பது உண்மை. ஒரு மிருகம் கொல்லப்படுவதன் மூலம் பலி நிறைவேற்றப்படுவதால் மிருகத்தின் சாவுதான் தேவனைக் குளிரப்பண்ணுவதாகக் கூறமுடியாது. ஆனால் தேவனைப் பொறுத்தவரை
மிருகத்தின் சாவு என்பது ஒரு பொருட்டான காரியம் அல்ல என நிச்சயமாகக் கூறமுடியும்.

மிருகத்தின் சாவு மட்டுமின்றி மனிதனின் சாவுகூட தேவனுக்குப் பொருட்டான காரியமல்ல. எனவே பலியால் ஒரு மிருகம் சாவதென்பது தேவனுக்கு ஒரு பொருட்டேயல்ல. பலி தேவனைக் குளிரப்பண்ணுகிறது எனும் உண்மை மட்டும் நமக்குப் போதுமானது.

நீங்கள் சொல்வது போல், “பின்னாளில் தேவனின் பலி கட்டளையை முன்னாலேயே நோவா நிறைவேற்றியதால் நோவாவின் பலி தேவனைக் குளிரப்பண்ணியது” என்பதை சரி என வைத்துக் கொண்டாலும், பலி கட்டளையில் பலியை யாருக்குச் செலுத்தும்படி தேவன் கூறினார்? தமக்கா அல்லது சாத்தானுக்கா? அவரது கட்டளைப்படி மனிதன் செலுத்தும்பலியால் உண்டாகும் சுகந்த வாசனையை முகர்ந்து குளிரப்போவது யார்? தேவனா அல்லது சாத்தானா? பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

யாத். 29:18 ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் தகித்துவிடுவாயாக; இது கர்த்தருக்குச் செலுத்தும் சர்வாங்க தகனபலி; இது சுகந்த வாசனையும் கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலியுமாய் இருக்கும்.

லேவி. 1:9 அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; இது ர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.


லேவி. 3:16 ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளைத் தகனிக்கக்கடவன்; இது சுகந்த வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது.

நமது பலிகள் அனைத்தும் கர்த்தருக்கு மட்டுந்தான்; அதற்கும் சாத்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நமது பலியால் உண்டாகும் சுகந்த வாசனையை முகர்வது கர்த்தர் மட்டுமே; அந்த வாசனையில் சாத்தானுக்குப் பங்குமில்லை, பாகமுமில்லை.

பலியின் சுகந்த வாசனையை தேவன் முகர்பவரேயானாலும், அந்த வாசனையைக் காட்டிலும் மேலானதொன்றை அவர் எதிர்பார்க்கிறார். அதுதான் கீழ்ப்படிதல். அந்த கீழ்ப்படிதலை நாடாமல், பலியால் தேவனைக் குளிரப்பண்ணிவிடலாம் என நினைத்து, பலி செலுத்துவதில் மட்டும் நாம் தீவிரமாயிருந்தால், நமது பலிகளை தேவன் ஏற்பதில்லை; அந்த பலிகளின் சுகந்த வாசனை தேவனைக் குளிரப்பண்ணுவதுமில்லை. பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

1 சாமுவேல் 15:22 அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.

எரேமியா 6:20 சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப்பட்டையும் எனக்கு என்னத்துக்கு? உங்கள் சர்வாங்கதகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது.

பலிகளில் கர்த்தர் பிரியமாயிருப்பது மெய்தான்; ஆனால் அதைவிட அவர் அதிக பிரியமாயிருப்பது கீழ்ப்படிதலில்தான்.

சாத்தானை சாந்திபடுத்தத்தான் பலிகள் எனும் உங்கள் கூற்றை சரியென எடுத்துக் கொண்டால், நாம் மீண்டும் மீண்டும் பாவங்களைச் செய்துகொண்டு பலிகளைச் செலுத்தி சாத்தானை சாந்தி பண்ணிக்கொண்டேயிருக்கலாமே!

உங்கள் வாதப்படி பார்த்தால், “பாவம் செய்கிற ஒருவன், தனது பாவத்தால் சாத்தானுக்கு வரும் கோபத்தைத் தணிக்க, (தேவன் மூலம்) சாத்தானுக்கு ஒரு பலியைச் செலுத்தினால் போதுமே”. சாத்தானின் கோபம் தணிந்து விடும், பின்னர் மீண்டும் பாவம்செய்துவிட்டு, மீண்டும் பலி செலுத்தி, சாத்தானின் கோபத்தைத் தணித்துக் கொள்ளலாமே!

உங்கள் வாதம் இப்படிப்பட்ட அபத்தமான முடிவைத்தான் கொண்டுவரும்.

இயேசுவின் மரணம் சாத்தானை சாந்தப்படுத்தியது என்கிறீர்கள். உங்களது இக்கூற்று நிச்சயம் மெய்யாக இருக்கமுடியாது. ஏனெனில் சாத்தானின் நோக்கம், “இயேசுவின் மரணத்திற்கு முன் ஒரு விஷயத்திலாவது அவரைக் கீழ்ப்படிதலிலிருந்து தவறச் செய்யவேண்டும்” என்பதேயன்றி, இயேசுவைக் கொல்வதல்ல.

சிலுவையின் மரணபரியந்தம் இயேசு கீழ்ப்படிந்ததால் (பிலி. 2:8), சிலுவை மரணம் அவருக்கு வெற்றியைத்தான் கொண்டுவந்தது. அதேவேளையில் அவரது மரணம் சாத்தானுக்குத் தோல்வியைக் கொண்டுவந்தது. அத்தோல்வியால் சாத்தானின் உக்கிரம் கூடத்தான் செய்யுமேயொழிய அது எப்படித் தணியும்?

எனவே இயேசுவின் மரணம் அல்லது பலி சாத்தானின் உக்கிரத்தைத் தணித்தது எனும் உங்கள் கூற்று நிச்சயம் தவறே.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

BRO. ANBU WROTE
/////சகோ.சுந்தர் அவர்களே! நோவாவின் பலி சம்பந்தமான வசனங்களை சற்று படியுங்கள்.
ஆதி. 8:20,21 நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான். சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார்.
நோவா பலிபீடம் கட்டியதும் கர்த்தருக்கே, பலியிட்டதும் கர்த்தருக்கே. அந்த பலியால் வந்த சுகந்த வாசனையை முகர்ந்தது கர்த்தரே!
 
கர்த்தருக்கே பலி, கர்த்தரே பலியால் வந்த சுகந்த வாசனையை முகர்ந்தார் என வசனங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கையில், பலிக்கும் சாத்தானுக்கும் ஒரு உறவை ஏன் உண்டாக்குகிறீர்கள்?/////
 
"இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை". பாவம் மற்றும் மரணத்தின் தொடக்கமே  சாத்தான், எனவே அவன் இங்கு சம்பந்தப்படவில்லை என்றால் பலியே உலகினுள் வந்திருக்காது. அவ்வாறிருக்க அவனுக்கு பலிக்கும்
தொடர்பில்லை என்று எப்படி சொல்ல முடியும்?       
 
கர்த்தராகிய  தேவனை தனது படைப்பாகிய ஆடு மாடுகளை தானே பலி வாங்கி இன்பம் காணும் ஒரு தேவனாக தாங்கள் சித்தரிப்பது தேவனின் மிகுந்த  இரக்க தன்மையை மட்டுபடுத்துவதாக உள்ளது. தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனங்களை
சொல்லும் அதே வேதமே 
 
ஏசாயா 66:3 மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும்......  இருக்கிறான்
 
ஏசாயா 1:11 உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது
 
மத்தேயு 12:7 பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.

"வெட்டி பலியிடுவதும்" "இரக்கமும்" நேர் எதிரான செயல்கள்  "பலியை அல்ல"  "இரக்கத்தைதான் நான் விரும்புகிறேன்" என்று சொல்பவர் ஓரிடத்தில் "பலியிடு" என்று எதிரிடையாக  சொல்கிறார் என்றால் அதன் உண்மை தன்மை என்பதை நாம் ஆராய வேண்டும்.      

பாவத்தில் வீழ்ந்து மனிதன்  சாத்தானின் அடிமையாகிப்போனான்   

கலாத்தியர் 4:8 நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள் 

மனிதனை மீட்க சித்த்தம்கொண்ட தேவன், தன் குமாரனை  மனிதனாக பாவ பரிகார பலியாக அனுப்பினார்!   இயேசு தனது மாசற்ற இரத்தத்தை சிந்தி மனிதர்களை  சாத்தானின் பிடியில் இருந்து   மீட்டார் அவர் பாவத்தால் மாசு பட்டிருந்தால் அவர் இரத்தம் பாவத்தை போக்க முடியாது எனவே சாத்தான் அவரை எப்படியாவது பாவம் செய்யவைக்க முயன்றான் ஆனால் இயேசு ஜெயம் கொண்டு பரிகார பலியாக எல்லோரையும் மீட்டார்.  இதுதான் நான் அறிந்த உண்மை.  

இங்கு இயேசுவின் இரத்தம் தேவனுக்கா அல்லது சாத்தனுக்கா என்று நோக்குதல் இல்லை. பாவமன்னிப்புக்காக இரத்தம் சிந்தப்படுதல் வேண்டும் என்பது நியமனம். அந்த இரத்தம் இயேசுவால் சிந்தப்பட்டது என்பதே.     

BRO. ANBU WROTE
///எனவே இயேசுவின் மரணம் அல்லது பலி சாத்தானின் உக்கிரத்தைத் தணித்தது எனும் உங்கள் கூற்று நிச்சயம் தவறே.///

 
இயேசு சிலுவையில் சாத்தானின் பகையே சுமந்தார் என்பதற்கு ஆதாரமாக இயேசு குறிப்பிட்ட  தோட்டக்காரன் உவமையை சற்று ஆராய்ந்து பார்ப்போம்: .
 
மத்தேயு 21:33.  வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.
37. கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
38. தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
9 அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக்கொலை செய்தார்கள்
 
இங்கு வீட்டெஜமான் தேவனாகவும்,  குமாரனாக குறிப்பிடப்பட்டவர் இயேசுவாகவும் இருக்கிறார். அவரை புறம்பே தள்ளி கொலை செய்த பகை யாருடையது?  பிசாசினாலுண்டான கொலைபாதகர்களுடையது.  
 
யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்
 
போன்ற வசனங்கள் பிசாசுதான் கொலைபாதகன் என்றும்! அதுதனது இச்சையை
செய்ய மனிதனை பயன்படுத்தியது என்பதையும் தெளிவாக
போதிக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------- 
 
சரி சகோதரரே! உங்களுடைய கருத்துதான்  என்ன? தேவன் தனது உக்கிரத்தை  தாங்குவதற்கு தானே  தன் மகனை அனுப்பினாரா? 

இயேசுவை அத்தனை முறை சாட்டையால் அடித்து முள்முடிசூட்டி  சிலுவையில் துடிக்க துடிக்க ஆணி அடித்து  தொங்க வைத்து தேவன் தன் உக்கிரத்தை தீர்த்து கொண்டாரா?  

இன்னொருமுறை நியாத்தீர்ப்பின்போது தேவனின் உக்கிர கோபம் எல்லோரின் மீதும் வருமா?  
 
எப்பொழுதும் உக்கிரத்தை காண்பிக்கும் தேவனை எதன் அடிப்படையில் இரக்கம் உள்ளவர் என்று கூறுகிறீர்கள்?    
 


-- Edited by SUNDAR on Tuesday 28th of December 2010 09:20:54 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சகோதரர் அன்பு அவர்களே, பலியைபற்றி வசனத்தின் அடிப்படையில் தாங்கள் கூறியுள்ள விளக்கங்கள் எதையும் நான் மறுப்பதற்கில்லை ஆனால் அவை அனைத்தும் தேவனின் ஒரு புறத்தை மட்டுமே காண்பிக்கும் வசனங்கள். பலிக்கான காரணத்தின் இன்னொரு புறமும் அதற்காக பல வசன ஆதாரங்களும் உள்ளது, அதை கர்த்தருக்கு சித்தமானால்  நான் விரைவில் விளக்கத்துடன் பதிவிட முயல்கிறேன்.
 
இந்த திரியில் "பகை எவ்வாறு உருவானது?" "யாருடைய பகை இயேசுவை சிலுவையில் தூக்கி கொலை செய்தது?"  என்ற கேள்விகளுக்கு மட்டும் பதிலை ஆராயலாம்.      


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

sundar wrote:
//இந்தத் திரியில் "பகை எவ்வாறு உருவானது?" "யாருடைய பகை இயேசுவை சிலுவையில் தூக்கிக் கொலை செய்தது?" என்ற கேள்விகளுக்கு மட்டும் பதிலை ஆராயலாம்.//

சரி சகோதரரே!

சில பதிவுகளுக்கு முன் நான் எழுதினது:

//எபேசியர் 2:3 அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

இவ்வசனத்தில் கோபாக்கினை என்பது தேவகோபாக்கினையையே குறிப்பிடுகிறது. தேவகோபாக்கினையின் காரணமாக தேவனுக்கும் நமக்கும் உண்டான “பகையை” கிறிஸ்துவானவர் “சிலுவையில் கொன்றார்”. இதைத்தான் எபே. 2:16 கூறுகிறது.

இருதிறத்தார் என்பது “நியாயப்பிரமாணத்தைப் பெற்றவர்கள்”, “பெறாதவர்கள்” எனும் இருபிரிவினரைக் குறிப்பிடுகிறது. இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டு, அந்த நியாயப்பிரமாணத்தை அவர்கள் மீறியதால் அவர்களுக்கும் தேவனுக்கும் “பகை” உண்டானது. ஆனால் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாத புறஜாதியினருக்கும், தேவனுக்கும் “பகை” இல்லை.
//

எனது இப்பதிவில் ஒரு தவறு உள்ளது. “நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாத புறஜாதியினருக்கும் தேவனுக்கும் “பகை” இல்லை” எனும் எனது கூற்று தவறாகும்.

எபேசியர் 2-ம் அதிகாரத்தில் பவுல் கூறுகிற காரியங்களை சற்று ஆழமாக ஆராய்ந்து கோர்வையாக எழுதவேண்டியதுள்ளதால், இப்பதிவில் ஏற்கனவே பதித்த சில பகுதிகளை நீக்கியுள்ளேன்.



-- Edited by anbu57 on Thursday 30th of December 2010 12:20:29 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

இத்திரியின் ஒரு பதிவில் நான் பதித்த சில விஷயங்கள் தற்போது எனக்குத் தவறாகத் தெரிவதால், அப்பதிவில் சில திருத்தங்களைச் செய்ய ஆசிக்கிறேன்.

எனது பதிவில் நான் திருத்தம் செய்ய ஆசிக்கும் பகுதி:

//
எபேசியர் 2:3 அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

இவ்வசனத்தில் கோபாக்கினை என்பது தேவகோபாக்கினையையே குறிப்பிடுகிறது. தேவகோபாக்கினையின் காரணமாக தேவனுக்கும் நமக்கும் உண்டான “பகையை” கிறிஸ்துவானவர் “சிலுவையில் கொன்றார்”. இதைத்தான் எபே. 2:16 கூறுகிறது.

இருதிறத்தார் என்பது “நியாயப்பிரமாணத்தைப் பெற்றவர்கள்”, “பெறாதவர்கள்” எனும் இருபிரிவினரைக் குறிப்பிடுகிறது. இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டு, அந்த நியாயப்பிரமாணத்தை அவர்கள் மீறியதால் அவர்களுக்கும் தேவனுக்கும் “பகை” உண்டானது. ஆனால் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாத புறஜாதியினருக்கும், தேவனுக்கும் “பகை” இல்லை.

இந்நிலையில், கிறிஸ்துவானவர் தமது சிலுவை மரணத்தின் மூலம் நியாயப்பிரமாணத்தால் உண்டான கோபாக்கினையை ஒழித்தார். எனவே இஸ்ரவேலருக்கும் தேவனுக்கும் நியாயப்பிரமாணத்தால் உண்டான “பகை” கொல்லப்பட்டது. இதனால், “நியாயப்பிரமாணத்தினிமித்தம் தூரமாயிருந்த இஸ்ரவேலர்” எனும் ஒரு திறத்தாரும், “நியாயப்பிரமாணம் இல்லாததால் ஏற்கனவே தேவனுக்குச் சமீபமாயிருந்த புறஜாதியினராகிய” மற்றொரு திறத்தாரும், கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாகி ஒப்புரவாக்கப்பட்டனர். இதைத்தான் இவ்வசனங்கள் கூறுகின்றன.

எபேசியர் 2:13,16,17 முன்னே தூரமாயிருந்த நீங்கள் (இஸ்ரவேலர்) இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே (பிதாவுக்குச்) சமீபமானீர்கள். ... (நியாயப்பிரமாணத்தால் பிதாவுக்கும் உங்களுக்கும் உண்டான) பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் (இஸ்ரவேலராகிய நம்மையும் புறஜாதியினரையும்) ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார். அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும் (இஸ்ரவேலருக்கும்), சமீபமாயிருந்த அவர்களுக்கும் (புறஜாதியினருக்கும்), சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே (கிறிஸ்துவின் ஆவியினாலே) பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் (கிறிஸ்துவின் மூலமாய்ப்) பெற்றிருக்கிறோம்.
//

எபேசியர் 2-ம் அதிகாரத்தில் பவுல் கூறியவற்றின் அடிப்படையிலேயே மேற்கூறிய விஷயங்களை நான் பதித்திருந்தேன். இப்பதிப்பிலுள்ள தவறுகளைக் களையும்வண்ணம் எபேசியர் 2-ம் அதிகாரத்தின் முழுப்பகுதியையும் நாம் விரிவாகத் தியானிப்பது நல்லதெனக் கருதுகிறேன். அப்போதுதான் சகோ.சுந்தரின் கேள்விக்கும் சரியான விடை கிடைக்கும். எனவே எபேசியர் 2-ம் அதிகாரம் முழுவதையும் தொடரும் பதிவுகளில் ஓரளவு விரிவாகத் தியானிப்போம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

புறஜாதியாரின் தேசங்களில் ஒன்றான துருக்கி தேசத்திலுள்ள ஒரு பட்டணம்தான் எபேசு பட்டணம். அப்பட்டணத்தில் சபையை ஸ்தாபித்த பவுல், எபேசு சபையாருக்கு எழுதின நிருபம்தான் எபேசியர் நிருபம். எனவே அந்நிருபத்தில் பவுல் எழுதின யாவும் புறஜாதியினரான எபேசியருக்கே உரித்தானதாகும்.

இனி எபேசியர் 2-ம் அதிகாரத்தைத் தியானிப்போம்.

எபேசியர் 2:1-5 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.
தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.


எபேசு சபையைச் சேர்ந்த விசுவாசிகள்: முன்னொரு காலத்தில் சாத்தானின் ஆவிக்கேற்றபடி நடந்து அக்கிரமங்களாலும் பாவங்களாலும் மரித்த நிலையில், கோபாக்கினையின் பிள்ளைகளாக இருந்தனர். 3-ம் வசனத்தில் “மற்றவர்களைப் போல” எனப் பவுல் கூறுவது  “சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாத” மற்றவர்களைக் குறிப்பிடுகிறது. அந்த “மற்றவர்கள்” எப்படி கோபாக்கினையின் பிள்ளைகளாக இருந்தனரோ அதுபோலவே எபேசு சபையைச் சேர்ந்த விசுவாசிகளும் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிவதற்குமுன் கோபாக்கினையின் பிள்ளைகளாக இருந்தனர்.

இவ்வாறு கோபாக்கினையின் பிள்ளைகளாக மரித்த நிலையில் இருந்த அவர்களை, இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் தம்முடைய மிகுந்த அன்பினால் சுவிசேஷத்தின் மூலம் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். தேவனுடைய கிருபையினால் அவர்கள் இரட்சிக்கப்பட்டனர்.

எபேசியர் 2:6,7 கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.

இவ்வசனங்களில் பவுல் கூறுகிற பாக்கியங்கள் வருங்காலத்தில் விளங்கப்போகும் பாக்கியங்களாகும். பின்னாளில் கிறிஸ்துவுடனேகூட எழுப்பி அவரோடே உட்காரும் பாக்கியத்தையும் தேவன் தருவார் எனப் பவுல் கூறுகிறார்.

எபேசியர் 2:8,9 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

தேவன் வருங்காலத்தில் தரப்போகிற அந்த பாக்கியங்கள் விசுவாசிகளின் கிரியைகளால் உண்டாகாமல், தேவனின் கிருபையினாலேயே உண்டானது என்பதால், இதைக் குறித்து யாரும் மேன்மை பாராட்டக்கூடாது.

எபேசியர் 2:10 ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டியாக சிருஷ்டிக்கப்பட்ட அனைவரும் நற்கிரியைகளைச் செய்வதற்கென்றே ஆயத்தம் பண்ணப்பட்டவர்கள். எனவே அவர்கள் உன்னத பாக்கியங்களைப் பெறப்போவதற்குக் காரணம் அவர்களின் நற்கிரியைகள் அல்ல; தேவனுடைய கிருபையேயாகும்.

தொடரும் ...


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

எபேசியர் 2:11,12 ஆனபடியினால் முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள், அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.

எபேசு சபையார் ஒரு காலத்தில் மாம்சத்தின்படி புறஜாதியாராகத்தான் இருந்தனர். புறஜாதியாரான அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக இருந்ததால், விருத்தசேதனமுள்ள இஸ்ரவேலரால் “விருத்தசேதனமில்லாதவர்கள்” என அழைக்கப்பட்டனர்.

விருத்தசேதனமில்லாத அவர்கள் கிறிஸ்துவைச் சேராதவர்களாகவும், இஸ்ரவேலரின் காணியாட்சிக்குப் புறம்பாகவும், உடன்படிக்கைக்குள் வராத அந்நியர்களாகவும் இருந்தனர்; உடன்படிக்கைக்குள் வராத அவர்கள் நம்பிக்கையில்லாதவர்களாகவும் தேவனற்றவர்களாகவும் இருந்தனர். ஆனால் தற்போது தேவனுடைய கிருபையினாலே, உன்னத பாக்கியங்களைப் பெறும் நிலைக்கு அவர்கள் வந்துள்ளனர். எனவே, அவர்கள் தங்களது பழைய நிலையை நினைத்துக்கொள்ள வேண்டும் எனப் பவுல் கூறுகிறார்.

தொடரும் ....


-- Edited by anbu57 on Thursday 30th of December 2010 02:29:17 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

எபேசியர் 2:13-17 முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். 14 எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, 15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, 16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார். 17 அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.

விருத்தசேதனம் எனும் நியாயப்பிரமாண உடன்படிக்கை இல்லாத காரணத்தால், எபேசியர் உட்பட அனைத்து புறஜாதியினரும் தேவனுக்குத் தூரமாகத்தான் இருந்தனர். ஆனால் கிறிஸ்துவானவர் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றி, தமது ஒரே பலியினாலே நியாயப்பிரமாணத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததால், தூரமாக இருந்த புறஜாதியினருங்கூட தேவனிடம் கிட்டிச் சேருவதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.

தூரமாயிருந்த புறஜாதியினர் யாவரும் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே தேவனுக்குச் சமீபமாகும் வாய்ப்பைப் பெற்றனர் (வசனம் 13). ஆனால் தேவனைக் கிட்டிச் சேரவேண்டுமெனில், புறஜாதியினரான அவர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தப்படியே, எபேசு சபையார் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டதால், தேவனை கிட்டிச் சேர்ந்தனர் (வசனம் 13,17).

இப்போதுதான் சகோ.சுந்தரின் கேள்விக்கு நாம் பதிலைக் காணப்போகிறோம்.

புறஜாதியார் தேவனைக் கிட்டிச்சேர்வதற்குத் தடையாக இருந்த தடுப்புச் சுவர்: நியாயப்பிரமாண சட்டதிட்டங்களே (வசனம் 14,15). எனவே நியாயப்பிரமாணமாகிய இந்தத் தடுப்புச்சுவர்தான் புறஜாதியார் மற்றும் இஸ்ரவேலர் எனும் இரு திறத்தாருக்கும் பகையாக நின்றது.

எனவே சிலுவையில் இயேசு கொன்றுபோட்ட “பகை” என்பது நியாயப்பிரமாண சட்டதிட்டங்களேயாகும். இதை 14-16 வசனங்களில் பவுல் மிகத்தெளிவாகவே கூறுகிறார்.

நியாயப்பிரமாண சட்டதிட்டங்கள் எனும் தடுப்புச் சுவர் இருக்கும்வரை, புறஜாதியார் தேவனுக்குத் தூரமானவர்களாகவும், இஸ்ரவேலர் தேவனுக்குச் சமீபமானவர்களாகவும் கருதப்பட்டனர். ஆனால் இந்த இரு திறத்தாருக்கும் இடையே பகையாக இருந்த அந்த தடுப்புச்சுவரை கிறிஸ்துவானவர் தகர்த்து, தமது இரத்தத்தினாலே அதைக் கொன்று போட்டபின், புறஜாதியாரும் இஸ்ரவேலரைப் போலவே தேவனுக்குச் சமீபமாயிருக்கும் சிலாக்கியத்தைப் பெற்றனர்.

இதன்விளைவாக, அந்த இரு திறத்தாரும் கிறிஸ்துவின் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாயினர் (வசனம் 16).

தூரமாயிருந்த புறஜாதியினருக்கும் சமீபமாயிருந்த இஸ்ரவேலருக்கும் சமாதானம் எனும் சுவிசேஷத்தை தேவன் அறிவித்தார் (வசனம் 17). அந்த சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் இரு திறத்தாரும் ஒரே ஆவியாகிய கிறிஸ்துவின் ஆவியினாலே பிதாவினிடத்தில் கிட்டிச் சேரும் சிலாக்கியத்தைப் பெற்றுள்ளனர் (வசனம் 17).

sundar wrote:
//இந்தத் திரியில் "பகை எவ்வாறு உருவானது?" "யாருடைய பகை இயேசுவை சிலுவையில் தூக்கிக் கொலை செய்தது?" என்ற கேள்விகளுக்கு மட்டும் பதிலை ஆராயலாம்.//

சகோ.சுந்தரின் 2 கேள்விகளுக்குமான பதில்கள் மேற்கூறிய விளக்கத்தில் அடங்கியுள்ளன.

1. நியாயப்பிரமாண சட்டதிட்டங்களால் “பகை” உண்டானது.

2. எந்தப் பகையும் இயேசுவை சிலுவையில் தூக்கிக் கொலை செய்யவில்லை; இயேசுதான் தமது சிலுவை மரணத்தின் மூலம், நியாயப்பிரமாண சட்டதிட்டங்கள் எனும் பகையைக் கொன்று போட்டார்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சகோ. அன்பு அவர்களே எபேசியர் இரண்டாம் அதிகாரத்தை மிக ஆழமாக ஆராய்ந்து விளக்கம் எழுதியுள்ளீர்கள். நான் இவ்வளவு ஆழமாக இதுவரை ஆராய்ந்தது  கிடையாது.  பல காரியங்களி புரிந்துகொள்ள முடிந்து நன்றி!
 
தங்கள் கருத்தில் அல்லது விளக்கத்தில் எந்த குறையும் நான் கூற விரும்பவில்லை அதிலிருந்து என்னுடைய பதிவிருக்கு தங்களின் பதிலை பார்ப்போம்.   
 
 sundar wrote:
//
இந்தத் திரியில் "பகை எவ்வாறு உருவானது?" "யாருடைய பகை இயேசுவை சிலுவையில் தூக்கிக் கொலை செய்தது?" என்ற கேள்விகளுக்கு மட்டும் பதிலை ஆராயலாம்.
//

BRO. ANBU WROTE
சகோ.சுந்தரின் 2 கேள்விகளுக்குமான பதில்கள் மேற்கூறிய விளக்கத்தில் அடங்கியுள்ளன.
1. நியாயப்பிரமாண சட்டதிட்டங்களால் “பகை” உண்டானது.////

உண்மை! நானும் ஏற்கிறேன். அனால் இந்த நியாயபிரமாணம் ஏன் உண்டானது?
ஆதியில் தேவன் எச்சரித்த  "கனியை புசிக்காதே" என்றே ஒரேஒரு கட்டளையை  ஆதாம் மீறி பாவம் செய்து நன்மை தீமையை அறிந்ததால்தான் பின்னர் அது நியாயப்பிரமாணம் என்னும் அனேக கட்டளையாகி போனது. எனவே நியாயப் பிரமாணத்தின் அடிப்படை மனிதனின் பாவம்! பாவத்தின் அடிப்படை தேவனின் கட்டளையை மீற தூண்டிய சாத்தான்! அந்த சாத்தானால்தான் பகை உண்டானது அதாவது சாத்தானே தேவனுக்கு  ஒரே சத்துருவானவன்  அவனாலேயே பகை உண்டானது அவன் மூலமாகவே மனிதனுக்கும் தேவனுக்கும் பகை உருவானது. மனுஷனானவன் தேவனுக்கு  பகயாளியோ சத்துருவோ அல்ல! சாத்தானின் தூண்டுதலால் தேவனுக்கு பகையாளி ஆனான்  எனவே பகையின் அடிப்படை சாந்த்தானிடமிருந்து உருவானதுத்தான் என்பதே எனது கருத்து.
 
உதாரணமாக எனக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் பழைய பகை உண்டு!  அந்த பக்கத்து வீட்டுக்காரன் எனது மகனை தந்திரமாக என்னை விட்டு பிரித்து எனது வார்த்தைக்கு செவிகொடாதபடி திருப்பிவிட்டான். எனக்கு என்மகன்மேல் நிச்சயம் கடும் கோபம் வரும் ஆனால் அந்த கோபம் வருவதற்கான அடிப்படை காரணம், பக்கத்து வீட்டுகாரனிடம்  எனக்கு இருந்த பழைய பகையே!   
 
தாங்கள் மரத்தின் கிளையில் இருந்து பூ வந்தது என்கிறீர்கள், நான் அந்த கிளையின் அடிப்படை "வேர்" தான்.  அந்த வேர் மூலமாகத்தான் பூ உண்டாக முடியும் என்று கூறுகிறேன். இதுதான் வேறுபாடு!     இரண்டும் உண்மைதானே?  (இதற்குமேல் எனது புரிதலை விளக்க தெரியவில்லை)    
 

BRO. ANBU WROTE
///2. எந்தப் பகையும் இயேசுவை சிலுவையில் தூக்கிக் கொலை செய்யவில்லை; இயேசுதான் தமது சிலுவை மரணத்தின் மூலம், நியாயப்பிரமாண சட்டதிட்டங்கள் எனும் பகையைக் கொன்று போட்டார்.///
 
இந்த கருத்து எப்படி உண்மையாகும் சகோதரரே?  சிலுவையில் இயேசு தன்னை தானே அடித்துக்கொள்ள வில்லையே! பிசாசினால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்களால்தானே இயேசு சிலுவையில் அடிக்கபட்டார்!    
 
அப்போஸ்தலர் 2:23 இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.

எந்த பகையும் இல்லாமல் யாரும் ஒருவரை பிடித்து சிலுவையில் அடிப்பார்களா?   
 
இயேசு நியாயப்பிரமாணம் மூலம் உண்டான பகையை கொன்றார் என்பது எவ்வளவு  உண்மையோ அதேபோல் மனுஷ கொலைபாதகர்கள் இயேசுவை சிலுவையில் தூக்கி கொலை செய்தான் என்பதுவும் உண்மைதானே?  அந்த மனுஷ கொலைபாதகன் சாத்தானே!
 
சாத்தானின் பகை  =  இயேசு கொலை அதன் மூலம் சாத்தானின் பகை கொல்லப்பட்டது
   
இந்த உலகில் கீழ்படிதல் மட்டும் விட்டுகொடுத்தல் மூலம் மட்டுமே எந்த ஒரு பகையையும் எவ்வளவு பெரிய சத்துருவையும் ஜெயிக்க முடியும்! அதன் அடிப்படையில் மரண பரியந்தம் கீழ்படிந்த இயேசு அந்த கீழ்படிதலின் மூலம் சாத்தானின் ஆதி  பகையை கொன்றார் என்பது எனது புரிதல்!
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

அன்பான சகோதரரே! எபேசியர் 2-ம் அதிகாரத்தில் பவுல் கூறுகிற “பகை” தேவனுக்கும் மனிதருக்கும் இடையேயானதல்ல. இஸ்ரவேலருக்கும் புறஜாதியாருக்கும் நியாயப்பிரமாண சட்டங்களால் உண்டான பிரிவினைதான் அவ்வதிகாரத்தில் பவுல் கூறுகிற “பகை”.

நியாயப்பிரமாண சட்டங்களின்படி நடந்தால்தான், குறிப்பாக விருத்தசேதனம் செய்தால்தான் தேவனிடம் வரமுடியும் என இஸ்ரவேலர்கள் கருதினர். எனவே விருத்தசேதனம் இல்லாத புறஜாதியினரை அற்பமாக எண்ணியதோடு அவர்களோடு ஐக்கியம் கொள்ளவும் மறுத்தனர். பேதுருவுங்கூட ஆரம்பத்தில் புறஜாதியாரோடு கலந்துகொள்ள தயங்கவேசெய்தார். அதைப் பவுல் கண்டித்ததை பின்வரும் வசனங்களில் காணலாம்.

கலாத்தியர் 2:11 பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ் சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன். 12 எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான். 13 மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான். 14 இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்?
15 புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம். 16 நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.

இந்த வேதபகுதி இஸ்ரவேலருக்கும் புறஜாதியாருக்குமிடையே இருந்த “பகையை” தெளிவாகக் காட்டுகிறது.

இஸ்ரவேலர், குறிப்பாக யூதர்கள் புறஜாதியாருடன் சாப்பிடக்கூட மறுத்தனர். இதற்குப் பிரதான காரணம் நியாயப்பிரமாணம் கூறுகிற விருத்தசேதனமே (வசனம் 12). பேதுருவைப் பொறுத்தவரை புறஜாதியாரை விலக்காமல் அவர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நன்றாக அறிந்துதான் இருந்தார் (அப். 10-ஐ படித்துப் பார்க்கவும்). ஆனாலும் யூதர்களின் விரோதத்தை சம்பாதிக்க மனதில்லாமல் யூதர்களை திருப்திபடுத்துவதற்காக, அவரும் புறஜாதியாரோடு ஐக்கியம் கொள்ள மறுத்தார். இதைத்தான் “மாயம்பண்ணுதல்” எனப் பவுல் குறிப்பிடுகிறார்.

கிறிஸ்துவானவர் தமது சிலுவை மரணத்தின் மூலம் நியாயப்பிரமாண சட்டதிட்டங்களாகிய விருத்தசேதனம், பலி, காணிக்கை போன்றவற்றை ஒழித்துவிட்டார். எனவே கிறிஸ்துவின் மரணத்திற்கு முன்பாக இஸ்ரவேலருக்கும் புறஜாதியாருக்கும் இருந்த வேறுபாடு (அல்லது பகை), கிறிஸ்துவின் மரணத்தோடு ஒழிந்துபோனது. இதைத்தான் “பகையைச் சிலுவையினால் கொன்று” என எபேசியர் 2:16-ல் பவுல் கூறுகிறார்.

எனவே எபேசியர் 2:16-ல் பவுல் கூறுகிற “பகைக்கும்” நீங்கள் நினைக்கிற “பகைக்கும்” சற்றும் சம்பந்தமில்லை.

நியாயப்பிரமாணத்தினிமித்தம் இஸ்ரவேலருக்கும் புறஜாதியாருக்குமிடையே உண்டான “பகை” கிறிஸ்துவின் மரணத்திற்குப் பின்னரும் தொடர்ந்ததைக் குறித்துதான் கலாத்தியர் 2:11-16-ல் பவுல் கூறுகிறார். கிறிஸ்துவின் சுவிசேஷம் வந்தபின்னர் நியாயப்பிரமாண சட்டதிட்டங்கள் யாவும் ஒழிந்துபோயின. இதைத்தான் “சுவிசேஷத்தின் சத்தியம்” என கலாத்தியர் 214-ல் பவுல் கூறுகிறார். இதே “சத்தியத்தைத்தான்” எபேசியர் 2:17-லும் பவுல் கூறுகிறார்.

இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உண்டு.

கிறிஸ்துவானவர் சிலுவையில் கொன்ற பகை நியாயப்பிரமாணத்தின் சட்டதிட்டங்களாகிய விருத்தசேதனம், பலி, காணிக்கை போன்றவற்றையே. எனவே விருத்தசேதனம், பலி, காணிக்கை சம்பந்தமான கிரியைகளைத்தான் நாம் செய்யவேண்டியதில்லை. மற்றபடி அன்பு, நீதி, நியாயம் சம்பந்தமான நற்கிரியைகளைச் செய்யத்தான் வேண்டும். கிரியைகள் நம்மை நீதிமானாக்குவதில்லை என்பது மெய்யேயாயினும், எபேசியர் 2:10-ன்படி “நற்கிரியைகளைச் செய்வதற்கு நாம் கிறிஸ்துவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டுள்ளதால்”, நற்கிரியைகளைச் செய்தால்தான் நாம் கிறிஸ்துவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம் என்பது உண்மையாகும். மாறாக, நற்கிரியைகளை நாம் செய்யவில்லையெனில், “நாம் கிறிஸ்துவுக்குள் சிருஷ்டிக்கப்படவில்லை” என்றாகிவிடும்.

எபேசியர் 2:16 கூறுகிற “சிலுவையில் இயேசு கொன்ற பகை” என்பது இஸ்ரவேலருக்கும் புறஜாதியாருக்குமிடையே நியாயப்பிரமாணத்தல் உண்டான பகையேயன்றி வேறெதுவுமில்லை. எனவே எபேசியர் 2:16 கூறுகிற “பகையின்” அடிப்படையில் “யாருடைய பகை இயேசுவை சிலுவையில் தூக்கிக் கொலை செய்தது” எனும் கேள்வியைக் கேட்டால், அக்கேள்விக்கு “யாருடைய பகையும் இயேசுவை சிலுவையில் தூக்கி கொலை செய்யவில்லை” என்றுதான் பதில் சொல்லமுடியும்.

ஆயினும் எபேசியர் 2:16 கூறுகிற “பகையின்” அடிப்படையில்லாமல், வேறு வகையில் “யாருடைய பகை இயேசுவை சிலுவையில் தூக்கிக் கொலை செய்தது” எனும் கேள்வியைக் கேட்டால், அதற்கு பின்வரும் பதிலைச் சொல்லலாம்.

வேதபாரகர், பரிசேயர் மற்றும் ஆசாரியருக்கு கிறிஸ்துவின்மீது உண்டான பகைதான் அவரை சிலுவையில் தூக்கிக் கொலை செய்தது (மத்தேயு 16:21; 21:15; 23:13-29; 26:3,4; மாற்கு 3:22; 11:18; லூக்கா 5:21).

வேதபாரகர், பரிசேயர் மற்றும் ஆசாரியருக்கு கிறிஸ்துவின்மீது உண்டான பகையின் பின்னணியில் சாத்தான் இருந்தான் எனச் சொல்லலாம்தான். ஆனால் சாத்தானின் நோக்கம் இயேசுவைக் கொல்வதுதான் எனக் கூறமுடியாது.

இயேசுவை பல பாடுகளுக்குட்படுத்தி மரணவாசல் வரைக் கொண்டுசெல்வதன் மூலம் அவரைத் தேவனுக்குக் கீழ்ப்படியாதபடி செய்துவிடவேண்டும் என்பதே அவனின் நோக்கம். இயேசுவின் மரணம்வரை அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்துவிட்டால், அது சாத்தானுக்குத் தோல்வியாகிவிடும்; அதுதான் நடக்கவும் செய்தது.

எனவே இயேசுவின் மரணத்தால் தேவனுக்கும் சாத்தானுக்கும் இருந்த பகை முடிவுக்கு வராமல், மீண்டும் தொடரத்தான் செய்கிறது. கிறிஸ்துவுடன் போராடித் தோற்ற அவன், கிறிஸ்துவை அண்டிச் சேருகிற மனிதர்களுடன் போராடி, அவர்களைத் தன்பக்கம் இழுக்க முயற்சிக்கிறான். இதுதான் தற்போது நடந்து வருகிறது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard